வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, June 05, 2010

பெரியார் ஒருவரே! அய்யாவின் கொள்கைகளை தமிழர் தலைவர் வீரமணி தலைமையில் பரப்புவோம்

அலைகடல் வெற்றிகொண்டான்
நத்தம் சி.பி. கண்ணு,
முகம் மாமணி - மூவர் உதிர்த்த கருத்துகளின் அடிப்படையில் அமைந்தது இக்கட்டுரை
ஒருவார காலத்தில் மூவர் ஆற்றிய உரை - அதில் செறிந்த கருத்-துகள் கவனத்துக்கு உரியவை.

குறிப்பாக 28.5.2010 அன்று வடசென்னை திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நடத்தப்-பட்ட சிறப்புக் கூட்டத்தில் சொற்-பொழிவுக் களத்தில் அரை நூற்-றாண்டு கால் பதித்த அலைகடல் வெற்றி கொண்டான் ஆற்றிய 75 மணித் துளிகள் உரையில் மின்னித் தெறித்த ஒரு கருத்து. இப்போது நினைத்தாலும் மின்னல் வெட்டாகவே தோன்றுகிறது.
ஓடுகிற ஓட்டத்தில் உதிர்ந்த கருத்தாக அது சொல்லப்பட்டிருந்-தாலும் ஊன்றிப் பார்த்தால் ஆழ-மான உண்மையின் வீரியம் அதில் பளிச்சிடுவதை அறியமுடியும்.
தந்தை பெரியாரும் - வீரமணி யாரும் என்று சொல்லும்போது இரு வரையும் பிரித்துப் பார்க்கக் கூடாது. பிரித்துப் பேச ஆரம்பித்தால் உள்ளே எதிரி புகுந்துவிடுவான். இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தந்தை பெரியார் தத்துவத்தை-யும், சித்தாந்தத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். அந்தக் கருத்துகளைப் பரப்பும் கடமையையும் தம் தலையில் தூக்கிச் சுமந்தார். அதைச் செயல்படுத்தும் களங்களையும் அமைத்து, முதல் தொண்டனாகத் தன்னையே முன்னிறுத்தினார். சிறைவாசம் என்று வந்த போது சிரித்த முகத்துடன் அதனை மேள தாளத்தோடு வரவேற்றார். அதற்காக எதிர் வழக்காட வில்லை.

பார்ப்பன நீதிபதிகள் ஆசனத்தில் அமர்ந்து தீர்ப்புக் கூறும் நிலையில் இருந்த போதும் கூட, பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு - கடும் புலிகள் வாழும் காடு என்று கர்சித்தார்.
தனக்குப் பின், தன் கொள்கைகளே, நூல்களே வாரிசு என்று சொல்லியிருந்-தாலும்-கூட தனக்குப் பின் இந்தக் கொள்-கையைக் கொண்டு செலுத்தி, இயக்கத்தை நடத்த ஒருவன் வருவான் என்றார். அவன் எத்தகைய நிலையில் இருப்பான் என்பதை-யும் சொல்லத் தவறவில்லை அந்தத் தத்துவ ஆசான்.

சிவகங்கை பொதுக் கூட்டத்தில் (10.4.1965) பேசிய பொழுது, அத்தகைய கருத்-தொன்றைப் பதிவு செய்தார் பகுத்தறிவுப் பகலவன்.

தலைவர் அவர்கள் தனது உரையில், தனக்குப் பின் தனது புத்தகங்களே வழி-காட்டும் என்று குறிப்பிட்டார். இந்தத் தொண்டும், பிரச்சாரமும் அறிவை சேர்ந்த-தல்ல; உணர்ச்சியைச் சேர்ந்தது. அந்தப் பக்குவம் உள்ள ஒருவன் இருந்தால், அவன் அடுத்துத் தலைமை ஏற்க வருவான் என்று குறிப்பிட்டார்.

முகம்மது நபியைப் பார்த்து உங்களுக்குப் பின் யார்?என்று கேட்டதற்குஅவர், எனக்குப் பின் வேறு யாருமில்லை என்று கூறிவிட்டார். நான் அப்படிக் கூறவில்லை. அறிவும், உணர்ச்சியும், துணிவும் உள்ள யார் வேண்டுமானாலும் வரலாம் என்று குறிப்பிட்டார். (விடுதலை 23.4.1965).

அறிவு - உணர்ச்சி, - துணிச்சல் மூன்றும் சேர்ந்த ஒருவன் தலைமையேற்க வரக்கூடும் என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் கருத்தும் - கணிப்பும்.இந்த மூன்றும் நிறைந்த முழு மனிதராக -_ தந்தை பெரியார் கணிப்பு என்ற கொள்கலனில் பொருந்தக்கூடிய ஒருவராகத் திகழ்பவர்தான் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு இயக்கம் இருக்குமா என்று வினா
தொடுத்தவர்களுக்கு நெற்றியடி கொடுத்து இருக்கும் - _ வேகமாக இருக்கும் _- புலிப் பாய்ச்ச-லாக இருக்கும் என்று நிரூபித்துக் காட்டி வருகிறார். இந்தியாவின் தலை நகரிலேயே ஜெசோலாவில் 5 அடுக்குக் கட்டடத்தில் பெரியார் கொள்கையை மய்யம் கொள்ளச் செய்துள்ளார்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் பெரியார் பன்னாட்டு மய்யம் என்ற அமைப்-பின் மூலம் பெரியார் கருத்துகளை மய்யம் கொள்ளச் செய்திருக்கிறார்.

பெரியார் மறைவுக்குப் பிறகு, அவர் இருந்த இடத்தை வெறி சோடிப்-போகாமல் காப்பாற்றி விட்டார் வீரமணி என்ற கருத்தின் மூலம் (மறைந்த) தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தமிழர் தலை-வர் மானமிகு வீரமணி அவர்களின் தொண்டிற்கு அங்கீகாரம் அளித்-துள்ளார்.

இந்த நிலையில் தான் தந்தை பெரியாரையும், வீரமணியையும் பிரித்துப் பார்க்காதே என்கிறார் தோழர் வெற்றிகொண்டான்.இதன் மூலம் வீரமணி அவர்களை இன்னொரு பெரியார் என்றே அவர் குறிப்பிடுவதாகப் பொருள் கொள்ளக்கூடாது.


கழகத்தலைவர் அதனை ஏற்றுக் கொள்பவரும் அல்லர். பெரியார் ஒருவரே!
கொள்கை அளவில் பெரியார் சொன்னதை மானமிகு வீரமணி திடமுடன் தெளிவாக நிறைவேற்றி வருகிறார் என்பது நிறுவப்படுகிறது.

இதில் குழப்பம் வேண்டாம் - குற்றம் காண வேண்டாம். தந்தை பெரியார் கொள்கைகளை தமிழர் தலைவர் வீரமணி தலைமையில் பரப்புவோம்; செயல்படுத்துவோம் என்பதைத்தான் அலைகடல் வெற்றிகொண்டான் கூற வரு-கிறார்.

பெரியார் வேறு வீரமணி வேறு என்று பிரிக்க ஆரம்பித்தால், நமது எதிரி மித்திரபேதம் செய்து விடுவான். அந்தக் கலையிலேதான் அவர்கள் கை தேர்ந்தவர்களா-யிற்றே!
பெரியார் நல்லவர்; வீரமணி தான் மோசம் என்று பேச ஆரம்பிப்பார்கள். இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படி சொல்பவர்கள் பெரியார் காலத்திலும் காதொடிந்த ஊசி முனை அளவுக்குக்கூட காரியம் செய்யாதவர் களே.

இந்தக் கண்ணோட்டத்தில் ஒரு வழிகாட்டி உணர்வோடு, கெட்டிப்-படுத்-தும் தன்மையோடு, அய்யா கொள்-கைகள் ஒரு சரியான தலைமையின் கீழ் கொண்டு செலுத்தப்-பட வேண்டும் என்ற தரத்தோடு, பொறுப்புணர்ச்சி-யோடு கோடிட்டுக் காட்டப்பட்ட கருத்தாகும்.

தமிழர்களிடம் ஒரு பெரிய குறை பாடு உண்டு. அது-தான் ஸ்தாபன ரீதி யாக தன் முனைப்பின்றி, கட்டுப்-பாட் டுடன் பணியாற்றக் கற்றுக் கொள்-ளாமை-யாகும். விளம்பரமும், கைதட்ட-லும் கிடைக்கும் போது கிறுகிறுத்துத் தடுமாறும் போதை ஒன்று கட்டித் தழுவும். அதனைத் தட்டிவிட்டால் தப்பித்தான்; ஆலிங்கனம் செய்தால் அழிந்துவிட்டான்.

பொய்யா? மொழியா? என்று தலைப்பிட்டு விடுதலையில் (19.2.1953 பக்கம் 1) பெட்டிச் செய்தி ஒன்றை வெளி-யிட்டார் தந்தை பெரியார்.

பிள்ளை தான் வயதில் மூத்தால் பிதாவின் சொற்புத்தி கேளான். பிரசாரகன் பேச்சாளன் ஆனால் தலைவனைக் கவிழ்த்துவிட்டுத் தலைவனாகவே பார்ப் பான் என்பதுதான் அந்தப் பெட்டிச் செய்தி.

குறிப்பிட்ட ஒரு கட்சி அல்லது குறிப்பிட்ட ஒரு அமைப்புக்கு மட்டும் பொருந்தக் கூடியதல்ல இது. பொதுவாக மனித சுபாவத்தைச் சேர்ந்த நாட்டில் நாளும் பார்க்கக்கூடிய அனுபவ நிலைதான் இது.

ஓர் அமைப்புக்குள்ளேயும், தமிழர்-கள் தம் இனத்துக்குள்ளேயும் இப்படிப் பிளவு படுவதுதான் எதிரிகளைத் தோல்வி அடையச் செய்யாமல் கெட்டி-யாகக் காப்பாற்றுவதாகும்.

அரையாண்டு சொற்பொழிவு அனுபவத்தில் அலைகடல் வெற்றி-கொண்டான் உரையில் தெறித்த ஒரு குன்றி மணிக்கு குன்று அளவுக்கு விளக்கங்களைக் கொடுக்கலாம்.
நத்தம் சி.பி.கண்ணு

நாகை மாவட்டம் நத்தம் முது-பெரும் தொண்டர் _ கருஞ்சட்டைத் தீரர் விவசாயப் பெருங்குடியின் மானமிகு சி.பி.கண்ணு. அவரின் மகன் சி.பி.க. நாத்திகன்தான் மாவட்ட திராவிடர் விவசாயப் பிரிவின் செயலாளர்.

அவர்களால் உருவாக்கப்பட்ட புதிய இல்லம் அறிமுக விழாவில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்றார் (31.5.2010).
அந்த விழாவில் பெரியார் பெருந்-தொண்டர் சி.பி. கண்ணு அவர்கள் சுருக்-க--மாக சில வார்த்தைகள் சொன்னாலும், அவை சுருக்கென்று தைக்கக் கூடி-யவையாக அமைந்துவிட்டன.

எங்கள் அய்யா மறைந்த பின் எங்கள் கெதி என்ன என்று திகைத்-தோம். அந்தச் சுமையை யார் சுமக்க முடியும் என்று விசனப்பட்டோம். அந்த சுமை சாதாரணமானதன்று. இமய-மலையைத் தூக்கிச் சுமப்பது போன்றது அது. அதை வெற்றிகரமாகச் சுமந்து வருகிறது இந்தச் சிறிய உருவம் - எங்கள் அய்யா வீரமணி என்றாரே பார்க்கலாம்.
தமிழர் தலைவரே ஆச்சரியக் குறியாக நின்றார். ஒரு குக்கிராமத்திலே, வயல், வாய்க்கால்தான் தன்னுலகம் என்று கொண்டாடும் ஒரு விவசாயத் தோழர், பொறி தட்டும் வகையிலே பளிச்சென்று சின்ன சின்ன வார்த்தை-களால் புரட்சிகரமான ஓர் இயக்கத்தின் கதையை வெகு கச்சிதமாகத் தறி நெய்து கொடுத்துவிட்டாரே!
அவரின் கருத்துரையைக் கருத்திலே கொண்டு அவ்விழாவிலே தமிழர் தலை-வர் கூறினார்,

இமயமலையை நான் சுமப்பது உண்மைதான். அது என்னுடைய பலத்தால் அல்ல! அய்யா சி.பி. கண்ணு போன்ற எந்த வித சபலங்களுக்கும் ஆளா-காத பெரியார் பெருந்தொண்-டர்கள், கருஞ்சட்டைக் குடும்பத் தோழர்களின் தோள் மீது நின்றல்லவா அந்த இமயமலையைச் சுமக்கிறேன் என்றார். (கரவொலி அடங்க வெகுநேரமாயிற்று).
முகம் மாமணி

1.6.2010 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம். ஆர். இராதா மன்றத்தில் திராவிடர் கழகத்-தின் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதி-தாசன் அவர்களின் 31 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

அறிவுச் சுரங்கம் - அப்பாதுரையார் எனும் நூலை எழுதிய முகம் ஆசிரியர் மாமணி அவர்களுக்கு பேராசிரியர் வெள்ளையன் பகுத்தறிவு அறக்கட்-டளையின் சார்பில் ரூபாய் பத்தாயி-ரத்தை அளித்தார் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள்.
அவ்விழாவில் ஏற்புரை வழங்கிய முகம் மாமணி அவர்கள் சுருக்கமாக ஒரு கருத்தை வெளிப்படுத்தினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி யார் என்றால் உலகப் பந்தைத் தன் தோளில் சுமந்தபடி பாய்கின்றானே அந்த ஹெர்குலிசை ஒத்தவர்.

தந்தை பெரியார் என்ற அந்த மாபெரும் புரட்சியாளர் விட்டுச் சென்ற அந்த ஒப்புயர்வற்ற கருத்துகளை உள்-ளத்தில் ஏந்தி, பல்வேறு பொறுப்புகள் என்ற கடமையைத் தம் தோளில் சுமந்து வெற்றிகரமான மாமனிதராக - ஹெர்-குலிசாக நம்மிடம் வாழ்ந்து வருகிறார் என்று குறிப்பிட்டார்.

நேரடியாக இயக்கத்தைச் சாராத-வர்கள் கூட சரியான மதிப்பீட்டையும் கணிப்பையும் நமது தலைவர் மீது வைத்துள்ளார்கள், பெரியாருக்குப்பின். இந்த இயக்கம் செப்பனிட்ட முறையில் வெற்றிகரமாகப் பயணிக்கிறது என்ற அங்கீகாரம் நத்தத்திலிருந்து சிகாகோ வரை கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

மேலும் செழுமைப்படுத்துவோம்! ஸ்தாபன ரீதியாகப் பணியாற்றும் பண்பைக் கற்றுக் கொள்வோம்!

கடமையாற்றுவோம்! வெற்றி நமதே!

---------- விடுதலை (05.06.2010) கலி.பூங்குன்றன் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
                                                                                                                                                           
                                                                                                                                                                    

1 comment:

இறைகற்பனைஇலான் said...

தோழரே, பெரியார் நடத்தியது தி.க என்ற கட்சியை. துணைக்கு வைத்துக்கொண்டது அறக்கட்டளை என்கிற நற்பணி மன்றங்களை. வீரமணி அதை டிரஸ்ட் டாக மாற்றியது கழகத்தினை நற்பணி மன்றமாகவும் அற்க்கட்டளைகளை தீவிரமாகவும் நடத்துவது பெரியார் பணியல்ல. நிருவனரீதியான துரோகம். கழகத்தையும் டிரஸ்ட் ஆக்கியது எத்தனை தி.க. தோழர்களுக்குத் தெரியும்.பாவம் அவர்கள்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]