வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, June 28, 2010

பார்ப்பனர்களே பதில் கூறுங்கள்..

கோவை_ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கருத்தரங்குகளும், ஆய்வரங்கங்-களும், கவியரங்குகளும், பட்டிமன்றங்களும் நடைபெற்றன. பெருந்திரளாகக் கூடிப் பொது மக்கள் அவற்றை ரசித்து மகிழ்ந்தனர்.

குறிப்பாக நேற்று முற்பகல் (27.6.2010) நடிகர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற வித்தாக விளங்கும் தமிழர் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் குறிப்பிடத்தக்கதாகும்.

நடிகர் சிவகுமார் அவர்களின் உரையும் முத்-தாய்ப்பாகவே ஒலித்தது.
நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஆனால், கோவிலுக்குச் செல்வதில்லை. தஞ்சை பெரிய கோவிலில் கட்டிய மேஸ்திரிக்கும், சித்தாளுக்கும் குடமுழுக்கின்போது உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. கோவில் சாமி சிலையைச் செதுக்கிய சிற்பியும்கூட வெளியி லேயே நிற்கும் நிலைதான்.

இது என்ன நியாயம்? பணம் இருப்பவன் குளிக்காமலேயே திருப்பதி கோவிலுக்குள் சென்று விடுகிறான்.

ஆனால், எல்லா நடைமுறைகளையும் கடை பிடித்து நடந்துவரும் அப்பாவி பக்தன் 2 நாள் காத்திருந்து சாமி கும்பிடுகிறான். இதன் பெயர் சாமி தரிசனமாம். இதனால்தான் கோவி லுக்குச் செல்ல நான் விரும்புவதில்லை.

தந்தை பெரியாரும், கோவிலையும், சாமி யையும் வெறுத்தார். தனது 95 வயதிலும் மூத்திரக் குழாய் வழியும் நிலையில்கூட உழைத் தார். அவர் காண விரும்பிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் _என்று நடிகர் சிவகுமார் ஓர் அருமையான கருத்தை சொல்லவேண்டிய இடத்தில் மிக அழுத்தமாகவே பதிவு செய்தார்.

மொழி மனிதனுக்காகத்தான். தமிழ் பேசும் தமிழரின் அவல நிலையைத்தான் நடிகர் சிவகுமார் எடுத்துரைத்தார். அவர் கூறியதில் ஓர் எழுத்தைக்கூட மறுக்க முடியாது.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களோ, தி.மு.க. தலைவர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களோ இந்தக் கருத்தைச் சொல்லும்பொழுது அதற்கு வேறு வண்ணம் தீட்டக்கூடும். ஆனால், சொல்லியி ருப்பவரோ கடவுள் நம்பிக்கை உள்ளவர் _ திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவரும் அல்லர்.

கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் கோவிலில் வழிபாட்டு மொழி குறித்தும், அர்ச்சகர் பிரச்சினை குறித்தும் பேசலாமா? என்று கேள்வி கேட்கும் சில மேதாவிலாசங்கள் உண்டு.
பகுத்தறிவுவாதிகள் எழுப்பிய அதே வினாவை ஆன்மிகவாதியான ஒருவரே எழுப்பி-யிருக்கிறாரோ, இதற்குப் பதில் சொல்ல அவர்கள் கடமைப்பட்டு இருக்கவில்லையா?
நடுநிலையில் இருந்து தந்தை பெரியார் அவர்-களின் கருத்துகளைச் சிந்திக்கும் எவரும் உண்-மையை ஒரு நாள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

தந்தை பெரியார் அவர்களின் இறுதி ஆசை-யான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதைச் செயல்படுத்தும் வகையில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு சட்டம் இயற்றி இருந்தும்கூட, அதன் அடிப்படையில், அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி அளித்து, ஆணை பிறப்பிக்கும் நிலையில், மீண்டும் உயர்-ஜாதிக் கூட்டம் உச்சநீதிமன்றம் சென்றுள்ளது என்றால், இதுபற்றி கடவுள் நம்பிக்கையுள்ள பார்ப்-பனர் அல்லாதார் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

நடிகர் சிவகுமார் அவர்கள் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டார் என்றாலும், அதற்குள் புதைந்திருக்கும் உண்மை என்ன?

இன்றைக்கும் கோவிலுக்கும் மூல விக்கிரத்-தின் அருகில் சென்று அர்ச்சனை செய்வ-தற்கோ, வழிபடுவதற்கோ முட்டுக்கட்டை போடுபவர்கள் பார்ப்பனர்கள் என்பதை இன்னும் வெளிப்-படையாகச் சொல்லத் தயக்கம் ஏன்?

நீதிமன்றங்களும் இந்தப் பிரச்சினையில் மனித உரிமையின் அடிப்படையில் அணுகித் தீர்ப்பு அளிப்பதில் காலதாமதம் செய்வது ஏன்?_ என்பதெல்லாம் கேட்கப்படவேண்டிய நியாயமான கேள்விகள்.

இதில் காலம் மேலும் மேலும் கடத்தப்படுமேயானால், நேரடியாகவே கருவறைக்குள் நுழையும் ஒரு நிலை ஏற்பட்டால் அதனை யார்தான் தடுக்க முடியும்?

-------------- நன்றி விடுதலை தலையங்கம் (28.06.2010)

7 comments:

சாணக்கியன் said...

/* இது என்ன நியாயம்? பணம் இருப்பவன் குளிக்காமலேயே திருப்பதி கோவிலுக்குள் சென்று விடுகிறான் */

இந்த நிலையை எந்த பார்ப்பனரும் விரும்புவதாகத் தெரியவில்லை. இதை ஏன் உங்கள் கலைஞர் மாற்ற சட்டம் இயற்றவில்லை? ஏனெனில் கோடிகோடியாக இந்துக்களிடம் வசூலித்து(இது போண்ற கட்டணங்கள் மற்றும் உண்டியல் காசு) அதை வேறு தண்டச்செலவுகளுக்கோ அல்லது சிறுபான்மையினரை மகிழ்ச்சிப்படுத்தவோ செய்ய வேண்டும். இந்துக் கோயில்கள் சரியான பராமரிப்பில்லாமல் பணியாளர்கள் போதிய வருமானமில்லாமல் கஷ்டப்பட வேண்டும்!!... உண்மையான அக்கறை உள்ளவர்களானால் முதலில் இந்த கட்டணங்களை அகற்ற போராட்டம் நடத்துங்கள்.. உங்கள் தலைவர் இதற்கு சட்டம் இயற்றிக் காட்டட்டும்..

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

சிவக்குமாரின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.

அரசு கோவில்களிலிரு்ந்து வருமானம் கிடைக்க வரி வசூலிக்கிறது. இதற்கு இந்து மத்த்தினை சேர்ந்தவர்கல் ஒன்றும் செய்ய முடியாது.



- ஜெகதீஸ்வரன்

http://sagotharan.wordpress.com/

Thamizhan said...

கலைஞரைப் பாராட்டியவர்கள் செம்மொழி மாநாடு இவ்வளவு சிறப்பாக,இத்துணை அறிஞர்கள்,ஆய்வுகள்,ஆக்கபூர்வ கருத்துக்கள் என்று பாராட்டினார்கள்.
வசை பாடியவர்கள் ஈழத்தில் இழவு இங்கே கொண்டாட்டமா என்று ஆரம்பித்து இன்னும் பலவற்றைச் சொன்னார்கள்.
பார்ப்பனர்கள் கலந்து பேசுகிறார்களே என்று நொந்துகொண்டவர்கள் கூட-
வாலியை வைத்து சோமாரியையும்,
பூணூல் சேகரையே வைத்துக் கொடை நாட்டையும்
கிண்டல் செய்ததைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்.
தமிழர்கள் இவ்வளவு பேர் உவப்பக் கூடிப் பிரிந்ததையேப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
இனி நடக்க இருக்கும் செயல்கள் இன்னும் நிறைய பயனுள்ள செயல்களாக இருக்கட்டும்.

ப.கந்தசாமி said...

ஒரு பார்ப்பனர் கூட இந்த மகாநாட்டில் என் கண்ணில் தென்படவில்லை. (S.V.சேகர் பேச்சாளராக வந்தது தவிர)

கோவி.கண்ணன் said...

//ஒரு பார்ப்பனர் கூட இந்த மகாநாட்டில் என் கண்ணில் தென்படவில்லை. (S.V.சேகர் பேச்சாளராக வந்தது தவிர) //

தினமலர் கூடாரம் போட்டு இருந்ததே

பரணீதரன் said...

அவளவு ஏன் அய்யா ...இல கணேசன் , வாலி எல்லாம் யாரோ?

Kartheesan said...

சிவகுமாரின் இந்த கருக்கள் உண்மை,
சிலை வடிக்கும் சிற்பி கல்லை கடவுள் சிலையாக மாற்றும்போது வராத கடவுள், இவர்கள் சொல்லும் பலனற்ற சொற்களினால் வரபோகிறாரா? சிலை வடித்த சிற்பி மற்றும் கோவிலை கட்டியவர்கள் உள்ளே போககூடாது என்று சொல்லும் இவர்கள் நிச்சயம் தண்டிக்கபடவேண்டியவர்கள்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]