வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, June 15, 2010

ரமண மகரிஷி, நித்தியானந்தா..எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்..

மக்களைச் சொர்க்கத்-துக்கு அழைத்துச் செல்வ-தாகக் கூறி நாள்தோறும் காமக் களியாட்ட சொர்க்கத்-தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நித்யானந்தா என்ற ஆசாமி சிறை என்னும் நரகத்தில் வாசஞ் செய்து இப்பொழுது ஜாமீனில் வெளியே வந்-துள்ளார்.

இவருக்கு ஜாமீன் கேட்டு, அவரின் வழக்குரைஞர் பி.வி. ஆச்சாரியார் நீதிமன்றத்தில் வாதாடினார்.

சாமியார் என்று கூறிக் கொள்ளும் நித்யானந்தா தன்னுடன் பெண்களைக் காரில் அழைத்துச் செல்லுவது அவருடைய பக்தர்களின் மனதைக் காயப்படுத்தாதா? என்று நீதிபதி சுபாஷ் கேட்டார்.

அதற்கு நித்யானந்தாவின் வழக்குரைஞர் சொன்ன பதில் அனைவரையும் தூக்கி வாரிப் போடச் செய்தது. இந்தக் காவி வேட்டிகளின் கபடத்தனத்தை-யும் ஒரு வகையில் தோலுரித்-தும் காட்டியது.

அப்படி என்னதான் சொன்னார் நித்யானந்தாவின் வழக்குரைஞர்?
நித்யானந்தா சாமியார் அல்ல. அவர் தன்னை ஒரு-போதும் சாமியார் என்று சொல்லிக் கொண்டதும் கிடை-யாது. சில ஆசிரமங்களில் குடும்ப வாழ்க்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே, நித்யானந்தாவையும் சாதாரண மனிதராகத்தான் ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த வழக்கையும் சாதாரண விஷயமாகத்தான் எடுத்துக்-கொள்ளவேண்டும் என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.

இதுவரை நித்யானந்-தாவை ஆண்டவனிடத்தில் வைத்துப் பார்த்தனர் _ அவர் சாதாரண மனுஷன்தான் என்று அவரது வழக்குரை-ஞரே முகத்திரையைக் கிழித்துக் காட்டிவிட்டார்.

பக்தி சமாச்சாரங்கள் இந்த யோக்கியதையில்தான் உள்ளன என்று பக்தர்கள் என்றுதான் புத்தியைப் பயன்-படுத்தி உணரப் போகிறார்-களோ என்று தெரியவில்லை.

ஏதோ நித்யானந்தாதான் இப்படி என்று இல்லை. ரமண மகரிஷி ரமண மகரிஷி என்று பூதாகரப்படுத்துகிறார்களோ, அந்தப் பெரிய மனுஷன் என்ன செய்தார் தெரியுமா?

தொடக்கத்தில் முற்றும் துறந்த முனிவர்போல, பற்-றற்றவர்போல காட்டிக்-கொண்ட இந்த வெங்கட ரமண பார்ப்பனருக்குச் சொத்துக்கள் குவியக் குவிய சொந்த பந்தங்களும் சுற்றி வந்து சூழ்ந்துவிட்டன.

கடைசியில் என்ன செய்-தார்? தன் தம்பிக்குச் சொத்-துக்களை எழுதி வைத்து-விட்டார்.

ரமண ரிஷியின் அந்தரங்-கச் சீடராகவிருந்த பெருமாள்-சாமி என்பார் நீதிமன்றம் சென்றார்.

நித்யானந்தாவின் வழக்-குரைஞர் நித்யானந்தா சாமியாரே இல்லை என்று சொன்னதுபோல _ ரமண ரிஷி-யின் விஷயத்திலும் நடந்தது.
நீங்கள் சந்நியாசியாயிற்றே, எப்படி அண்ணன், தம்பி பாச-மெல்லாம்? என்ற கேள்வியை நீதிபதி எழுப்பியபோது, நான் எப்பொழுது சந்நியாசம் வாங்கினேன்? என்று எதிர்க்-கேள்வியைப் போட்டாரே பார்க்கலாம், இதுதான் சாமி-யார்களின், ரிஷிகளின் யோக்கியதை!

பூரி சங்கராச்சாரியார் மனைவி மக்களுடன் குடும்-பம் நடத்துகிறாரே, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிகூட அதிகாரப்பூர்வ-மாகக் குடும்பம் நடத்தாவிட்-டாலும், ஏராளான வைப்பு-களை வைத்துக்கொண்டு சல்லாபம் செய்யவில்லையா? சிறைக் கம்பிகளை எண்ணி ஜாமீனில் நடமாடவில்லையா?
சாமியார்களில் காமியார்-கள் என்ற பெயரில் ஒரு சங்கத்தைக் கூட ஆரம்பிக்க-லாமே!

இதற்கு மேலும் பக்தியா? ஆன்மீகமா? வெண்டைக்காயா?

- விடுதலை(14.06.2010) மயிலாடன்

12 comments:

Sathyan said...

“தாத்தா கட்ட இருந்த தாலி!”

ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய(பெரியார்) இரண்டாவது திருமணம் 09-07-1949 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26. மணியம்மையை விட 46 வயது அதிகம் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு. இந்த இரண்டாவது திருமணம் நடக்கும்முன் ஈ.வே. ராமசாமி நாயக்கர், திருமணங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் தெரியுமா?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்துவிட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்கின்ற நிர்பந்த முறையில் நடப்பது சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்”
(குடியரசு 03-06-1928)


“தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்புக் கொடுத்து அண்ணாதுரை 1940-ல் விடுதலையில் இவ்வாறு எழுதுகிறார்:

“தொந்தி சரிய மயிரே வெளிர நிறை தந்தமனைய உடலே” படைத்த 72 வயதான ஒரு பார்ப்பனக் கிழவர், ”துள்ளுமத வேட்கைக் கணையாலே” தாக்கப்பட்டு கலியாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்.

வயது 72 ஏற்கெனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளைக்குட்டியும் பேரன் பேத்தியும் பெற்றவர். இந்தப் பார்ப்பனக் கிழவர். ஆயினுமென்ன? இருண்ட இந்தியாவில், எத்தனை முறை வேண்டுமானாலுந்தான் ஆண்மகன் கலியாணம் செய்து கொள்ளலாமே!

பெண்தானே, பருவ மங்கையாயினும் பட்டாடை உடுத்திக் கொண்டு பல்லாங்குழி ஆடி விளையாடும் சின்னஞ்சிறு சிறுமியாயினும், மணமாகிப் பின்னர் கணவன் பிணமானால் விதவையாகிவிடவேண்டும்.

இளமை இருக்கலாம். ஆனால் இன்பவாழ்வுக்கு அவள் அனுமதி பெற அந்தக் கூட்டம் அனுமதிப்பதில்லை. அவளது விழி, உலகில் உள்ள வனப்பான வாழ்க்கைச் சித்திரங்கள் மீது பாயலாம்.

Unknown said...

மகனை வாரிசாக்கும் உம்முடைய தலைவர், எந்த குட்டையில் ஊறி மட்டையானார்?

Kannan said...

பேத்தி வயசுல இருக்குற பெண்ணை பெரியார் கட்டிகிட்ட உடனே அவரை துரத்தி விட்டார்கள் இந்த பகுத்தறிவு வாதிகள் , இல்லையா?

பரணீதரன் said...

பெரியார் மணியம்மை திருமணம் ...புரட்டுகளும் உண்மையும் என்ற நூலினை படித்து தெரிந்து கொண்டு பிறகு முடிவுக்கு வரலாமே ....யாரோ சில பார்ப்பான்கள் எழுதியதை சூரியா பிரசுரம் செய்துள்ளார்.............உங்களுக்கு இந்த நூல் பதில் சொல்லும்....கண்ணனுக்கும் சேர்த்தே.

பரணீதரன் said...

என்னங்க ரம்மி அய்யா......வீட்டுல இருக்குற உறுப்பினர்கள் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினால் ....வாரிசு .....அப்படி வரவில்லை என்றால்..உன் வீட்டில் உள்ளவர்களே இயக்கத்துக்கு வரவில்லை...நீ ஊருக்கு உபதேசம் பண்ண வந்துட்டியா.......என்ற கேள்வி....தமிழர்கள் (திராவிடர்) எப்போதும் இப்படிதான்.....

Unknown said...

ரமணர் நல்லவர் அல்ல, நித்தியானந்தா நல்லவர் அல்ல. அவ்வை நல்லவர் அல்ல, பிறர் குறைக்காணும் நீரே நல்லவர்;வல்லவர்.

Unknown said...

பெரியவர குறை சொன்னால் இந்த புக்க படி அந்த புக்க படினு சொன்னா போதுமா? ரம்மியோட கேள்விக்கு பகுத்தறிவு விளக்கம் என்னவோ? பெரியவர எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா அவர் பேர சொல்லிட்டு ஊர ஏமாத்துர நிறைய பேர என்னனு சொல்றது. உங்க ஊர்ல அப்பா இல்லனா மகந்தான் ஆட்சிக்கு வரணுமா? வேர திறமசாலி இல்லையோ பகுத்தறிவே?

பரணீதரன் said...

ஊரை ஏமாத்தி உங்களிடம் ஓட்டு பிச்சை கேட்கவா வந்தோம்..........
திராவிடர் கழகம் ஒன்னும் கட்சி அல்ல இது ஒரு இயக்கம்....இங்கு பதவி என்பது கழுத்தில் கத்தியை வைத்து பயிற்சி எடுப்பது போன்றது......யார் வேண்டுமானாலும் வரலாம் ...அவ்வளவே......யாரும் அதற்க்கு முன் வரவும் மாட்டார்கள்......ஒரு மாவட்ட தலைவர் பதவி கொடுத்தால் கூட...அதனை தயங்கி எற்பவர்களே திராவிடர் கழக தோழர்கள்.....ஏன் என்றால் பொறுப்பு அதிகமாகிறதே என்ற பயம்...இருந்தாலும் ஒரு மகிழ்ச்சி ...பெரியாரின் இயக்கத்தில் ...அவர் கொள்கையை பரப்ப ஒரு நல்ல வாய்ப்பு என்று.......ஒரு பொதுக்கூட்டம் போட்டால் எவளவு செலவு என்று உங்களுக்கு தெரியுமா? அத்துணையும் அவரவர் பொறுப்பே.......உற்றுநோக்குங்கள் புரியும்.......எனவே யார் பொறுப்புக்கு வந்தாலும் செயல்பாடே முக்கியம்....

Unknown said...

நல்ல சமாளிப்பு தம்பி சங்கமித்ரன்! ஸ்டாலினைப் போல் 40 வருடஙள் பாடுபட்டு படிப்படியாக மேலெ வரலாமே! தி.க என்ன ப்ரைவேட் லிமிடட் கம்பனியா? தந்தைக்குப் பின் தனயன் சொத்தை ஆளுவதற்கு?

Vasu said...

About Ramana maharishi issue we can refer this links

http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=5059.0

http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=5059.0

Kartheesan said...

கட்டுரையில் குறிப்பிடப்பட்ட நித்யானந்தா போன்றவர்களை பற்றி சொல்ல தேவையில்லை, நம்பும் பக்தர்களை ஏமாற்றிய பிறகு இந்த நாய்கள் இருப்பதை காட்டிலும் சாவதே மேல்.
எனது கேள்வி,
நாம் அனைவரும் நமது குழந்தைகளுக்கே சம்பாதித்து சேர்த்து வைத்து அவர்களுக்கு கொடுக்கிறோம், அது தனிப்பட்ட சொத்து. இயக்கங்கள், கழகங்கள் என்பது பல்லாயிரம் மக்களின் சொத்து, அது எப்படி வீரமணியின் மகனுக்கு போய் சேரும். முன்னவர் ரிடையர்மென்ட் வயதை நெருங்கி விட்டால் அவரது வாரிசு (சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகி???) அந்த இயக்கத்தில் தலைமை நிலைய செயலாளர் பதிவிக்கு வந்து விடுவார். இதுதான் மிகமுக்கியமாக ஒழிக்கப்படவேண்டிய குலகல்வி திட்டமும். ஸ்டாலின் மட்டுமா தடா சட்டத்தில் அவதி பட்டார்,வேறு யாருமே தி.மு.க.வில் இல்லையா? அல்லது தி.க.வில் இல்லையா? முதலில் தி.க.வில் உள்ள களைகளை புடுங்குங்கள்,பிறகு அடுத்தவர் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கலாம்.

நம்பி said...

Kartheesan said...
//நாம் அனைவரும் நமது குழந்தைகளுக்கே சம்பாதித்து சேர்த்து வைத்து அவர்களுக்கு கொடுக்கிறோம், அது தனிப்பட்ட சொத்து. இயக்கங்கள், கழகங்கள் என்பது பல்லாயிரம் மக்களின் சொத்து, //

அப்பறம் எப்படி தனி நபர் கேள்வி கேட்கமுடியும்...? இதை கேட்பது தனி நபர் தானே.?.இயக்கத்தை சார்ந்தவர் இல்லையே?...இல்லை பொதுக்குழு உறுப்பினரா?..

அப்படியென்றால் பொதுக்குழுவில் தான் கேட்க வேண்டும். பொதுவில் விமர்சிக்க முடியாதே...? கட்சி கட்டுபாட்டை மீறிய செயலாகிவிடுமே...

இப்படியெல்லாம் கேட்காமலா இதெல்லாம் நடைபெற்றது.

Kartheesan said...
//ஸ்டாலின் மட்டுமா தடா சட்டத்தில் அவதி பட்டார்,வேறு யாருமே தி.மு.க.வில் இல்லையா? அல்லது தி.க.வில் இல்லையா? முதலில் தி.க.வில் உள்ள களைகளை புடுங்குங்கள்,பிறகு அடுத்தவர் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கலாம்.
4:51 AM //

இருந்தார்கள் எல்லோருக்குமா? மக்கள் செல்வாக்கு இருந்தது...கலைஞருக்கு முன்பே கடசியில் இருந்தவர்கள் பேராசிரியர் அன்பழகனும், நாவலர் நெடுஞ்செழியனும்.

அவர்கள் தான் கட்சியில் கலைஞரை விட மூத்தவர்கள். ஏன்? அவர்களை விட்டு விட்டு கலைஞருக்கு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது?

அவருக்குத்தான் மக்கள் செல்வாக்கு இருந்தது. மற்றவர்களுக்கு இல்லை.

இது அறிஞர் அண்ணாவுக்கும் தெரியும் பேராசிரியர் அன்பழகனுக்கும் தெரியும், நெடுஞ்செழியனுக்கும் தெரியும்.

கலைஞருக்கு மூத்த மகன் இருக்கிறாரே அவருக்கு ஏன் கொடுக்கவில்லை?. செயல்படவில்லை அதனால் செல்வாக்குமில்லை, அதனால் கொடுக்கவுமில்லை.

இதையும் பொதுக்குழுவில் தான் நாம் கேட்க முடியும். தனிநபராக கேடகமுடியாது. கேட்பதற்குத்தான் கட்சிப் பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்களே?...இதெல்லாம் கேட்காமலா நடக்கிறது?

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]