சமீபத்தில் டி.வி.யில் திரைப்படம் ஒன்றைப் பார்த்-தேன். நாயகனிடம் சண்டை-யிட்டுத் தோற்றுவிடுகிறான் வில்லன். அவனுக்குத் தலை-யில் பூ வைத்து, வளையல் அணிவித்து, அவமானப்-படுத்துவதுபோல் ஒரு காட்சி அப்படத்தில் இடம் பெற்றி-ருந்தது.
இந்தக் காட்சி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. தோல்வி அடைந்தவர் தலை-யில் பூ வைத்து, வளையல் அணிந்து கொள்ள வேண்டும் என்றால், வளையல் அணி-பவர் எதற்கும் உருப்படாதவர் என்று அர்த்தமா? பல திரைப்படங்களில், இதுபோன்ற காட்சி இடம் பெற்று வருவது வருத்தத்தையே ஏற்படுத்து-கிறது.
சினிமாக்காரர்களே, சேலை கட்டுவது, பொட்டு வைப்-பது, வளையல் அணி-வது போன்ற பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷ-யங்களை, தோல்வியின் அடையாளங்களாக சித்திரிக்-காதீர்கள், ப்ளீஸ்! - த. மாஸ்கோராணி, அறந்தாங்கி
இதில் உள்ள தகவல்-களை எடுத்துக் கொள்ளலாம். கடிதம் எழுதியவருக்குக்கூட தெளிவு இல்லை. அரை-குறையாகத்தான் கருத்து-களைக் கூறிட முயற்சி செய்துள்ளார்.
தோல்வி அடைந்த வில்-லனின் தலையில் பூ வைப்-பது, வளையல் அணிந்து கொள்ளச் செய்வதன் மூலம் எதை வெளிப்படுத்துகிறார்-கள்? பூவையும், வளையல்-களையும் அணிந்து கொள்-பவர்கள் பெண்கள்தானே?
கோழை என்று ஒருவரை சித்திரிப்பதற்கு இந்த பொருள்களை அணிவிக்கி-றார்கள் என்றால், இதன் பொருள் பெண்கள் என்றால் கோழைகள் என்பதுதானே?
சிலர் சண்டை போட்டுக்-கொள்ளும்போதும் கூட ஒரு சில சொற்களைப் பயன்-படுத்துவதைக் கேட்க முடிகிறது.
என்னை என்ன பொட்-டச்சி என்று நினைத்துக் கொண்டாயா?
நான் என்ன சேலையா கட்டியிருக்கிறேன்?
என் கையில் வளையலா போட்டிருக்கிறேன்? என்று ஆண்கள் பேசுவது அவர்-களின் அகம்பாவத்தையும், பெண்கள் என்றால் பேடிகள் என்று நினைக்கும் ஆதிக்க மனப்பான்மையையும்தான் இவை காட்டுகின்றன.
இந்தக் கடிதத்தை எழுதியிருப்பவர் என்ன சொல்கிறார்? பொட்டு வைப்-பது, வளையல் அணிவது பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்கள்; இவைகளையே தோல்வியின் அடையாளங்களாக சித்தரிக்-காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறார்.
இந்தச் சின்னங்க-ளெல்-லாம் உண்மையில் பெண்-களுக்குப் பெருமை சேர்ப்ப-தில்லை என்பதை முதலில் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களை இது மாதிரி-யான அணிகலன்கள் என்கிற கூண்டுக்குள் சிக்க வைத்து, அவர்களின் அறிவுத் திறனை-யும், உடல் வலிமையையும் பலவீனப்படுத்துகிறார்கள் என்பதை நினைக்க வேண்-டும்.
இப்படி பூவும், பொட்டும், வளையல்களும் அணிந்து கொள்ளும் பெண்களின் கணவன்மார்கள் இறந்து-விட்டால், இவற்றையெல்லாம் துறந்துவிட வேண்டும் என்ப-தன் பொருள் என்ன? விதவை என்ற முத்திரை குத்தி அவ-மானப்படுத்தும் ஏற்பாடு-தானே? அதே நேரத்தில் மனைவி மரணம் அடைந்-தால் கணவன் இழக்கவேண்-டியது ஒன்றும் இல்லையே! ஆண்_-பெண்களுக்கிடையே இருக்கும் இந்த வேறுபாடு-களைத் தெரிந்து கொண்டால் இந்த அடையாளங்கள் எல்-லாம் பெண்கள் ஆண்-களின் உடைமைகள் என்-பதை அறி-விக்கும் விளம்பரப் பலகை அல்லாமல் வேறு என்னவாம்?
2 comments:
//பெண்களை இது மாதிரி-யான அணிகலன்கள் என்கிற கூண்டுக்குள் சிக்க வைத்து, அவர்களின் அறிவுத் திறனை-யும், உடல் வலிமையையும் பலவீனப்படுத்துகிறார்கள் என்பதை நினைக்க வேண்-டும். // -please think again.. Now, women are not as you mentioned..
Mr.Kanna. Now some women (not all) are not like that. Bot most men are like that only.
Post a Comment