வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, June 02, 2010

அட, அக்கிரமமே உன்பெயர்தான் அக்கிரகாரமா?

இறைவா, இது என்ன சோதனை? இது நாம் கொடுத்த தலைப்பு அல்ல! தினமலர் பார்ப்பன ஏடு கொடுத்த தலைப்பு!

காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்து வீழ்ந்தது அல்லவா! இடிந்து வீழ்ந்து சுக்கல் நூறாகச் சிதறிக் கிடக்கும் படங்களைப் போட்டு அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புதான் இறைவா இது என்ன சோதனை?

ராஜ கோபுரம் இடிந்து வீழ்ந்தது. இறைவனுக்குத் தான் சோதனையே தவிர மற்றவர்களுக்கு அல்ல! நியாய-மாக இந்தக் கேள்வி மாற்றித் தலை கீழாகக் கேட்கப்பட்டு இருக்க வேண்டும்.

இறைவா உனக்கு ஏன் இந்த சோதனை? என்று கேட்டு இருந்தால் தினமலர் கூட்டத்துக்குப் புத்தி கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பித்-திருக்கிறது என்று கருத இடம் உண்டு.

பஞ்ச பூதத்தலங்களில் ஒன்று என்று பகவானை ஆகாயத்தில் தூக்கி வைத்துக் கொஞ்சுவது. இறைஞ்சுவது. அந்தப் பகவானின் சக்திக்குச் சவால் வந்து விட்ட பிறகு பகவான் சோதிக்-கிறான் என்பது பச்சையான பசப்புத்-தனம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

பக்தியின் பரிதாபப் பள்ளத்தாக்கில் வீழ்ந்து கிடக்கும் பாமரர்கள் விழித்த விடக் கூடாது. வீழ்ந்த பள்ளத்திலேயே மீண்டும் மீண்டும் உருண்டு புரள வேண்டும் என்ற சூழ்ச்சிதான் இதில் அடங்கியிருக்கிறது.

ஒவ்வொரு கோயிலுக்கும் தலப் புராணங்களை எழுதிக் குவித்து வைத்துள்ளார்களே. அதில் குடி கொண்ட பகவானின் பராக்கிரமங் களையெல்லாம் பத்தி பத்தியாக குவித்து வைத்துள்ளார்களே!

கோயில் திருக்குளத்துக்குப் பதிகங்கள் பாடி வைத்திருக்கிறார்களே! மதுரைப் பொற்றாமரைக் குளத்தில் குளித்தெழுந்தால் தாயைப் புணர்ந்த பாவமும் கூடப் போடும் என்று தங்களின் பார்ப்பனக் கோரப் புத்தியைப் பதிவு செய்து வைத்துள்ளார்களே.
முதலையுண்ட பாலகனை மீட்டது எது? எலும்பைப் பெண்ணுருவாக்கியது எது?
இந்தக் கடவுள் சக்திகள் எல்லாம் காணாமல் போனது ஏன்?

காளஹஸ்தியில் கோயில் அருகே ஓடும் நதியில் குளித்தால் ராகு _ கேது படித்த பாவங்கள் போகுமாம்.

ஜெகன்மோகினி என்ற திரைப்-படத்தில் விட்டலாச்சாரியார் காட்டிய காட்சி அது! நாயும், ஆடும் தோஷம் நீங்கப் பெற்றனவாம். அந்தத் திரைப்படம் வெளிவந்ததற்குப் பிறகு அக்கோயி-லுக்குப் பக்தர்கள் திரள ஆரம்பித்தார்-களாம். நல்ல வசூலாம் -_ இடிந்து கிடந்த கோயிலைச் செப்பனிட்டார்-களாம். பல ஆண்டுகளுக்குப்பின் அந்தப் பகுதிக்கு விட்டலாச்சாரியார் சென்றபோது கோயில் பார்ப்பனர்களும், பக்தர்களும் சூழ்ந்து கொண்டு நன்றி தெரிவித்தார்களாம்.

காளஹஸ்தி கோவிலுக்குப் புனர்-வாழ்வு வந்ததுகூட, ஜெகன்மோகினி திரைப்படத்தின் மூலம்தான் என்பது காளஹஸ்தி அப்பனுக்குப் புகழ் சேர்க்-குமா? விட்டலாச்சாரியார் அல்லவா சாதனையைத் தட்டிக்கொண்டு போகிறார்!

அதுவும் கோபுரம் என்றால் சாதாரணமா? கோபுரம் இறைவனின் திருவடிகளைக் குறிக்கிறதாம். அதனால் கோபுரத்தரிசனம் விசேஷமானது என்கிறார்கள் ஆகமவாதிகள்.
அந்த இறைவனின் திருவடி உடைந்து சுக்கல் நூறாகிப் போய் விட்டதே! இதற்கு எந்தக் கட்டுப் போடப் போகிறார்கள்? புத்தூர் கட்டுதானா?

ஆமாம், வாஸ்து பார்த்துத்தானே கோயிலையும், கோபுரத்தையும் கட்டி-யிருப்பார்கள்? அப்படி இருக்கும்போது ராஜ கோபுரம் தலைகுப்புற வீழ்ந்தது ஏன்?
வாஸ்துவின் வண்ட வாளமும் தாண்டவாளத்தில் ஏறிவிட்டதே! இனி எதை வைத்துக் கோயிலையோ, கோபுரத்தையோ, கோயிலுக்குள் குந்த வைக்கப்பட்டுள்ள கடவுளையோ காப்பாற்றப் போகிறார்கள்?

பக்தி பெருகிவிட்டது; பக்தி பெருகிவிட்டது. பகுத்தறிவாளர்களே, நீங்கள் தோல்வி அடைந்து விட்டீர்கள் என்று பம்மாத்துப் பேசும் பக்தர்கள், காளஹஸ்தி அப்பனின் கோபுரம் குப்புற வீழ்ந்து மீசையில் மண் ஒட்டிய பிறகு உங்கள் பக்தியை ஒருமுறை புரட்டிப் போட்டுச் சிந்திப்பீர்களா? கடவுள் கல் என்று கறுப்புச் சட்டைக்-காரர்கள் சொன்னது சரியாகப் போய்விட்டது என்று ஒப்புக்கொள்ளும் அறிவு நாணயம் உங்களுக்கு உண்டா?
பிழைப்புக் கெட்டுப் போய்விடுமே. பகவானுக்கு ஒரு ஹானி என்றால் அது பார்ப்பனர் வயிற்றுச் சோற்றுக்கு வந்த திண்டாட்டமாயிற்றே! உயர்ஜாதி மமதையின் மீது விழுந்த மண்வெட்டி அடியாயிற்றே!

விட்டுக் கொடுத்து விடுவார்களா? உடனே ஜோதிடக்கட்டை எடுத்துப் புறப்பட்டு விட்டார்கள்.

ஏதோ.. ஏதோ தெரியவில்லை; நாட்-டுக்குச் சோதனை! உடனே பரிகாரம் காணப்பட வேண்டும்; அல்லா விட்-டால் ஆபத்துக்கு அணை கட்ட முடி-யாது என்று தோல்வியையும் வெற்றிக்-கான தோரணையாக மாற்றி விடு-வார்கள்.

மக்களிடம்தான் பயபக்தி (பயமும் பக்தியும்) பயங்கரமாகக் இருக்கிறதே! இந்த முதலீடு ஒன்று போதாதா பிழைக்கத் தெரிந்த பிர்மாவின் முகத்தில் பிறந்த பிரிவினருக்கு?
பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோயில் ராஜகோபுரம் இடிந்து வீழ்ந்த-தால் சில ராசிக்காரர்களுக்கு குறிப்பாக, ராகு, கேது ராசிக்காரர்களுக்குச் சோதனை ஏற்படுமாம். அரசியல் தலைவர்களுக்கும் ஆபத்து நேரிடுமாம்.

இந்த இரு கிரகங்களுக்கும் உரியவர்கள் உடனே பரிகாரப் பூஜைகளில் ஈடுபட வேண்டுமாம். பரிகாரப் பூஜை செய்தால்தானே பார்ப்பான் வீட்டுக் கல்லாப் பெட்டி நிரம்பி வழியும்?

அரசியல்வாதிகளுக்கு ஆபத்து என்று சொன்னால்தானே கனமான வருமானம் கணக்கில் காட்டாத கறுப் புப் பணக் கத்தைகள் வந்து குவியும் (பரவாயில்லை ஜெயலலிதா முந்திக் கொண்டார்; கடந்த வாரம்தான் காளஹஸ்தி சென்று பூஜைகள் நடத்திக் கனமான வகையில் கவனித்து விட்டு வந்தார்).

ஜோதிடர் பூவை நாராயணன் கூறுகிறார் கேளுங்கள்:

பொதுவாக கோயில் கோபுரம் இடிந்து விழுதல், கொடிமரம் எரிதல் போன்ற நடக்கக்கூடாத வினோத சம்பவங்கள் ஏற்படுவது தேச நலனைப் பாதிக்கும்.
இதற்கு வைரணாச கல்ப சூத்திரத் தில் கூறியுள்ளபடி பஞ்ச சுக்தங்களைப் படித்து அற்புத சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

புரிகிறதா! ஹோமத்திலேயே அற்புத ஹோமமாம். தொகை அதிகம் என்று பொருள். கோபுரம் இருந்தாலும் கொள்ளை! கோபுரம் இடிந்து வீழ்ந்தாலும் கொள்ளை! இப்படி எது நடந்தாலும் சுரண்டல் கொள்ளைக்கு வசதி செய்து வைத்துள்ள பார்ப்பன சூழ்ச்சி _ உலகில் வேறு எங்கும் கேள்விப்பட்டிட முடியாத ஒன்று.

அண்டப் புளுகு ஆகாயப் புளுகு என்பதற்கு மேலாக இன்னொன்று இருக்கிறது!
அதுதான் இந்துமதப் புளுகு! பார்ப்பனீயப் புளுகு!

ராகு கேது கிரகதோஷம் என்கிறார்களே, அப்படி ஏதாவது கிரகங்கள் உண்டு என்று எந்த விஞ்ஞானத்தில் கூறப்பட்டுள்ளது? இல்லாத கிரகங்களுக்குத் தோஷமாம். யாகமாம். பூஜையாம். அட, அக்கிரமமே உன்பெயர்தான் அக்கிரகாரமா?

-------  மின்சாரம், விடுதலை ஞாயிறு மலர் (29.05.2010)

4 comments:

Nanthini Pages said...

நீங்கள் எதைப் பேசினாலும் முழுவதும் உணர்ந்து, அறிந்து பேசுங்கள்..
பெரியாரின் கொள்கைகள்தான் என்றுமே உயர்ந்தது என்று இவ்வளவு காலமும் மக்களிடம் அடித்துச் சத்தியம் பண்ணிய உங்கள் பிரசாரப் பீரங்கி பெரியார் தாசன் இப்போது அப்துல்லாவாக (அல்லா தாசன்) மாறிய மர்மம் என்னவோ? உங்களுக்கு பிராமணர்கள் தீங்கு செய்திருந்தால் அது பற்றி தாராளமாக எழுதுங்கள் மத நம்பிக்கையினையும் உண்மையினையும் உங்களுக்கு மட்டும் எட்டிய அறிவைக் கொண்டு இழிவு படுத்தாதீர். சைவ சமயம் யாரோ சில வழிப்போக்கர்களால் உருவாக்கப் பட்டதாக எண்ணி நீங்கள் பிதற்றுவது
பொறுக்கமுடியவில்ல

hai said...

Nanthini -- Please answer the specific points in the article?
1. Is God incapable of guarding his own temple?
2. What happened to Vasthu, according to which this gopuram was built?
3. If some fools built the temple gopuram faultily, how its falling down is a bad omen for the entire humanity?

நம்பி said...

//Nanthini Pages said...

நீங்கள் எதைப் பேசினாலும் முழுவதும் உணர்ந்து, அறிந்து பேசுங்கள்..
பெரியாரின் கொள்கைகள்தான் என்றுமே உயர்ந்தது என்று இவ்வளவு காலமும் மக்களிடம் அடித்துச் சத்தியம் பண்ணிய உங்கள் பிரசாரப் பீரங்கி பெரியார் தாசன் இப்போது அப்துல்லாவாக (அல்லா தாசன்) மாறிய மர்மம் என்னவோ? உங்களுக்கு பிராமணர்கள் தீங்கு செய்திருந்தால் அது பற்றி தாராளமாக எழுதுங்கள் மத நம்பிக்கையினையும் உண்மையினையும் உங்களுக்கு மட்டும் எட்டிய அறிவைக் கொண்டு இழிவு படுத்தாதீர். சைவ சமயம் யாரோ சில வழிப்போக்கர்களால் உருவாக்கப் பட்டதாக எண்ணி நீங்கள் பிதற்றுவது
பொறுக்கமுடியவில்ல
2:31 PM //

இது அவருடைய (பெரியார் தாசன்) சொந்த விருப்பம்...பகுத்தறிவு திணிப்பு அல்ல,இயற்கையிலே வழங்கப்பட்ட சுயஅறிவால் ஆராய்வது...ஆன்மீகம் மட்டுமே திணிக்கப்படுவது...ஆன்மீகம் அவருக்கு திணிக்கப்பட்டிருக்கலாம்...அதற்கு அவர் ஆட்பட்டிருக்கலாம்...இல்லை காசுக்கு ஆசைப்பட்டிருக்கலாம் (தொலைக்காட்சி ஜோதிட விளம்பரங்கள்)...இல்லை மரணபயம் வந்திருக்கலாம். (நம்பிக்கையிலிருந்து பகுத்தறிவாளராக மாறுவது தான் வாடிக்கை...இது எப்போதாவது ஒன்றிரண்டு நடைபெறுவது. பால்தாக்கரே கூட நாத்திகராயிருந்து...ஆத்திகராக மாறியவர்....தீவிர ஆத்திகராயிருந்து...நாத்திகராக மாறியவர்கள் ஏராளம்...பெரியார் உட்பட)

மதம் தனிநபர் சொத்தல்ல...அதை பற்றி எழுதினால் அதன் தார்மீக உரிமையாளர் தான் கோபப்படவேண்டும்...அப்படியென்றால் இதன் தார்மீக உரிமையாளர் யாரோ...? .அதில் பல சமூகத்தினரைப் பற்றிய இழிவுகள் இருக்கின்றன...பெண்களை பற்றிய இழிவுகள் அதிகம் இருக்கின்றன...இவர்கள் எல்லாம் யாரைக்கேட்டு சமூகத்தை இழிவு படுத்தினார்கள்...மனித நேயமற்ற செயல்கள் இருக்கின்றன...ஒழுக்க மீறல்கள் இருக்கின்றன..வர்க்க பேதம், வர்ணபேதம் இருக்கின்றன..பாரப்பன ஜாதியை உயிர்த்தி மற்ற அனைவரையும் தொழில் அடிப்படையில் இழிவுப்படுத்தப்பட்டிருக்கின்றன....இதை ஒரு சாராருக்கு அதாவது ஆரிய பார்ப்பனருக்கு சாதகமாகவே இதை எழுதி அதை ஆனைவரும் பின்பற்ற வேண்டும் என்று இணையத்திலும் எழுதப் படுகிறது...பாரதியார் பெயரால் எழுதப்படுகிறது...இன்னும் திராவிட மக்களை இழிவுபடுத்துகிறது....தீண்டாமையை வழியுறுத்துகிறது...இது ஒரு பெருங்குற்ற செயலாகும்...தீண்டாமை ஒரு பெருங்குற்றம்...இதையெல்லாம் கேட்க நீ யார்...? இதற்கு வக்காலத்து வாங்க நீங்கள் முன்வரும்போது...இதை எதிர்க்கவும் பெருவாரியாக, பாதிக்கப்பட்டவர்கள்,பாதிக்கப்படாதவர்கள், சமூதாய நோக்கர்கள் வருவார்கள்...? அதை தடுக்க நீ யார்? என்ற கேள்வியும் வரும்...இதை பெரியார் மட்டும் சொல்லவில்லை...அவருக்கு முன்பே ஒருவர் சொல்லியிருக்கிறார்...அது கீழே....

நம்பி said...

விவேகானந்தர் நியுயார்க்கில் 1896 இல் ஜனவரி 5 ஆம் நாள் ஆற்றிய கிளைம்ஸ் ஆப் ரிலிஜியன் (The claims of Religion) என்ற பெயரில் ஆற்றிய சொற்பொழிவு...



மதம் ஒரு தேவையா...?.

விவேகானந்தர்...
குருட்டு நம்பிக்கை என்ற பொருளில் எந்த நம்பிக்கையும் உண்மையான மதத்தில் கிடையாது. எந்த பெரிய போதகரும் அப்படி போதித்ததில்லை. சீரழிவின் காரணமாகத்தான் இது நிகழ்கிறது. மூடர்கள் தாங்கள் யாராவது ஒரு பெரிய மகானின் சீடர்கள் என்று சொல்லிக்கொண்டு, அவர்களுக்கு அதற்குரிய அதிகாரம் இல்லாவிட்டாலும்கூடக் கொள்கைகளை அப்படியே நம்பும்படி மக்களுக்கு உபதேசிக்கிறார்கள். எதை நம்புவது? கண்மூடித்தனமாக நம்புவது மனிதனை கீழ்நிலைக்கே கொண்டு செல்லும். வேண்டுமானால் நாத்திகர்களாக இருங்கள், ஆனால் கேள்வி கேட்காமல் எதையும் நம்பாதீர்கள். ஏன் உங்களை மிருக நிலைக்கு இழிவு படுத்த வேண்டும்? அதனால் நீங்கள் உங்களை மட்டும் கெடுத்துக் கொள்ளவில்லை, சமுதாயத்தையும் கெடுக்கிறீர்கள், உங்கள் பின்னால் வரப்போகிறவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள்.

எழுந்து நில்லுங்கள், பகுத்தறிவுடன் பாருங்கள், கண்மூடித்தனமாக எதையும் நம்பாதீர்கள், நம்புவதல்ல மதம். மதம் என்பது இருப்பதும் ஆவதும். அதுதான் மதம். அந்த நிலையை அடைந்தால் தான் உங்களுக்கு மதவுணர்வு இருக்கிறது என்பது பொருள். அதற்கு முன்பு நீங்கள் மிருகங்களை விட உயர்ந்தவர்கள் அல்ல. புத்தர் பெருமான் கூறியது போல், நீங்கள் கேட்டதை நம்பாதீர்கள், தலைமுறை தலைமுறையாக உங்களிடம் வந்த கொள்கைகள் என்பதற்காக நம்பாதீர்கள், பலர் கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள் என்பதற்காக நம்பாதீர்கள், யாரோ ஒரு மகான் சொன்னார் என்பதற்காக நம்பாதீர்கள், பழக்கத்தால் உங்களுக்கு பிடித்துப்போனவை என்பதற்காக நம்பாதீர்கள், உங்கள் ஆச்சாரியர்களும் பெரியவர்களும் சொல்கிறார்கள் என்பதற்காக நம்பாதீர்கள். சிந்தித்து பாருங்கள் சீர்தூக்கிப் பாருங்கள், அதனால் வருகின்ற முடிவு பகுத்தறிவுக்கு ஒத்ததாக இருக்குமானால், அது எல்லோருக்கும் நன்மை பயக்குமானால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள் அதன்படிச் செல்லுங்கள்.


பெரியாருக்கு முன்னாடியே விவேகானந்தர் முழு லைசன்ஸ் இருப்பதாக கூறிவிட்டார்..இப்படி வக்கலாத்து வாங்குபவர்களையும் நம்பாதீர்கள் என்று கூறிவிட்டார்.....(அவர் கூறவில்லை என்றாலும் விடப்போவதில்லை...அது வேறு விஷயம்)

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]