வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, November 05, 2009

இவன்தான் பிள்ளை - யார்!


திருவிராகம் பண் வியாழக் குறிஞ்சி, 1ஆம் திருமுறை திருவலிவலம் திருங்கனசம்பந்தர் (தேவாரம்)

"பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே"

இப்பாடலின் கருத்து:

சிவபெருமானின் மனைவியாரான உவமையால் பெண் யானை வடிவத்தை மேற்க்கொள்ள இளமை மிகுந்த ஆண் யானையின் வடிவத்தை சிவபெருமான் மேற்க்கொள்ள இருவரும் கூடினர். அப்படிக் கூடியதால் கணபதி பிறந்தார். சிவபெருமான் தன்னுடைய அடியை வழிபடும் அடியவர்களின் துன்பங்களை போக்க கனபதியயை பெற்றுடுத்தனர். அத்தகைய சிவபெருமான் திருவலம் என்ற ஊரில் உள்ளவர், தங்களிடத்து வந்து இரந்தவர்கு இல்லை என்னாது இயன்ற உதவிகளை செய்யும் கோடை பண்புடைய மக்கள் வாழும் ஊர் வலிவலம் ஆகும் என்பது கருத்து.

உயிரினங்களின் பெரிதும் வலிவுடயதும் யானையாகும். ஆணும் பெண்ணுமாக கூடி ஆபவிக்கும் உயிரின இன்பங்களில் யானையும் யானையும் கூடி அனுபவிக்கும் உயிரின் இன்பம் பெரிதாக இருக்கலாம் என்னும் நினைப்பில் சிவபெருமானும், பார்வதியும் யானை வடிவு கொண்டு கூட, அதன் விளைவாக யானை முகத்தோடு யானை கன்று ஆகிய பிள்ளையார் பிறந்தார் என்று பாடியுள்ளார்.

திருகனசம்பந்தர் எழுதிய இந்த தேவார பாடல் தஞ்சை மாவட்டம் வலிவலத்தில் உள்ள கோயிலிலும் வடிக்கப்பட்டுள்ளது. மும்மலமும் கடந்த கடவுள் என்று ஒரு பக்கம் கூறி கொண்டு காமவெறியுடன் காட்டு யானைகளாக உருவெடுத்து அம்மையும், அப்பனும்(சிவனும் பார்வதியும்) கலவி செய்தார்கள் என்பதும், அதன் காரணமாக விநாயகர் என்கிற பிள்ளையார் பிறந்தார் என்பதும் எவ்வளவு பெரிய காட்டுமிரண்டித்தனம்!

சும்மாவா, சொன்னார் பெரியார் கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று....சிந்தியுங்கள் தோழரே!!!

2 comments:

கபிலன் said...

பல நாட்களாக பிள்ளையாரின் கதை தெரியாமல் இருந்தது. மிக்க நன்றி.
இப்படிப்பட்ட பல பக்தித் தொடர்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் தோழரே : )

Muthukumara Rajan said...

காமம் என்பது உயிரின் அடிப்படை .

ஹிந்து மதம் காமம் ஒரு உயரிய கோட்பாடாக கருதுகிறது .
ஹிந்து மதம் காமத்தை இல்லற வாழ்வில் விலக்க சொன்னது இல்லை

இது இறைவனுக்கும் பொருந்தும் .

இறைவன் இதை ஒரு விளக்கவே இந்த் நிகழ்வு

தயவு செய்து முழுமையாக அறிந்த பின் இனணயத்தில் வெளியடவும்

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]