வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, November 14, 2009

நாத்திகத்துக்கான விளக்கம் (எஸ்.சி. ஹிச்காக்)


சொற்களுக்கான விளக்கங்கள் பற்றி தர்க்க சாத்திரம் அதிகமாகவே கையாள்கிறது. ஒரு பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெறவேண்டுமானால் பேசப்படும் பொருள் பற்றிய நிபந்தனை-களை அனைவரும் ஒப்பி ஏற்றுக் கொள்ளவேண்டும். ஆனால் இந்த எளிய அடிப்படை விதிகள் அடிக்கடி ஊடகங்களால் அலட்சியப்படுத்தப்-படுவ-தால், அது குழப்பத்தையே தூண்டி-விடுகிறது. இதுபற்றி விளக்குவதற்காக, நாம் அடிக்கடி பயன்படுத்தும் இரண்டு சொற்கள் பற்றிய விளக்கத்தை நான் இங்கு அளிக்கிறேன். அவை : மததீவிர-வாதி மற்றும் நாத்திகர். இந்த இரு சொற்களும் என்ன பொருள் தருகிறது என்பதை நுணுக்கமாகப் பகுத்தாய்ந்து அளிக்கப்படும் தெளிவான விளக்கம் பொது மக்கள் மனதில் நமது நிலை-யைப் பற்றிய தெளிவான கருத்தை உரு-வாக்க சுயசிந்தனையாளர்களுக்கு உதவும்.மதத் தீவிரவாதம்

மதத் தீவிரவாதி என்ற சொல்லே வியப்பளிப்பதாக இருப்பது மட்டு-மன்றி ஒருதலையான விருப்பு வெறுப்பு கொண்டதுமாகவும் இருக்கிறது. பைபிள் அல்லது குரானில் கட்டளை-யிட்டுள்ளபடி சில கிறித்துவர்களும், முஸ்லிம்களும் தங்களது பெரும் செல்வத்தை அறச் செயல்களுக்காக வழங்குகின்றனர். சில மதக்கட்டளை-களை அளவுக்கு மீறி கடைப்பிடிப்ப-வர்கள் அவர்கள் என்று கூறலாம். என்றாலும், அவர்கள் தீவிரவாதிகள் என்று அழைக்கப்படுவதில்லை. தங்கள் மதத்தைப் பின்பற்றுபவர்களை வன்முறைச் செயல்களில் ஈடுபடவும், அறச்செயல்களுக்கு செல்வத்தை அளிக்கவும் கட்டளையிடுகின்றன. ஆனால் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் மதவாதிகளை மட்டுமே நாம் தீவிரவாதிகள் என்கிறோம். ஏன்?


தீவிரவாதி அல்லாத மத நம்பிக்கையாளரின் சுயசிந்தனை ஆற்றல்

இந்த வினாவுக்கு விடையளிக்க வேண்டுமானால், வேறு ஒரு வினாவை நாம் எழுப்ப வேண்டும். தீவிரவாதி அல்லாத மதநம்பிக்கையாளர் ஒருவரை நாம் எவ்வாறு விவரிப்போம்? வன்-முறைச் செயல்களில் ஈடுபட வலியுறுத்-தும் கட்டளைகளுக்குக் கீழ்படியாத ஒருவரை தீவிரவாதி அற்ற மதநம்பிக்-கையாளர் என்று கூறலாம். அப்படி-யானால், வன்முறைச் செயல்களைச் செய்ய தங்களின் புனித நூல்கள் கட்டளையிட்ட போதும், அவற்றைச் செய்யாமல், அறச்செயல்களுக்கு செல்-வம் அளிக்கவேண்டும் என்ற கட்ட-ளையை மட்டும் நிறைவேற்றுபவர்-களை, சுயமாக சிந்திப்பவர்கள் என்று நாம் பாராட்டுவதில்லையா? வேறு சொற்களில் கூறுவதானால், தீவிரவாதி அல்லாத நம்பிக்கையாளரான அவர் மதக்கட்டளைகளை விட சுயமாக சிந்திப்பதை மேலாகக் கருதி போற்று-பவர் அல்லவா? வன்முறையில் ஈடுபடக் கூறும் மத நூல்களின் கோட்பாட்டை அந்த மதநம்பிக்கையாளரின் ஏதோ ஒரு சிந்தனை நடைமுறை பின்பற்றாமல் இருக்கச் செய்கிறது. அப்படியானால், மத நம்பிக்கையாளரின் சுயமாக சிந்திப்பதற்கான ஆற்றல் பாராட்டப் படாமல், அறச்செயல்களுக்காக அவர் செல்வம் அளிப்பது மட்டுமே பாராட்-டப்படுவது ஏன்?

மேலும், மதத் தீவிரவாதிகள் எனப்-படும் பலர் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது மட்டுமன்றி, அறச்செயல்-களிலும் ஈடுபடுகிறார்கள். அவர்களின் புனித நூல்கள் கூறுவதை அவர்கள் முழுமையாகப் பின்பற்றுபவர்கள் அல்லவா? அப்படியானால், அவர்கள் ஏன் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்? தூய்மையான-வர்கள் என்று அவர்களை அழைப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்காதா?

நாத்திகம் என்றால் என்ன என்று தெளிவுபடுத்துவதற்கு நான்இரண்டு விளக்கங்களைத் தருகிறேன்.

கடவுள் நம்பிக்கை கொண்டவரும் கடவுள் இல்லை என்ற ஊகத்தில் செயல்படுகிறார்

முதல் விளக்கம் என்னவென்றால், நாம் அனைவருமே பயன்படுத்தும் ஒரு கருவிதான் நாத்திகம் என்பது. சில செயல்களைச் செய்யும் போது மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவரும் கூட, கடவுள் இல்லை என்ற ஊகத்திலேயே அச் செயல்களைச் செய்கிறார். தன் காருக்கு கடவுள் வந்து பெட்ரோல் போடமாட்டார் என்று கருதும் ஒரு கிறித்துவர்தானே பெட்ரோல் போடச் செய்கிறார். விமானத்திலிருந்து பாரா-சூட்டின் மூலம் குதிப்பவர் தன்னை எந்த தேவனோ, தேவதையோ வந்து காப்பாற்றும் என்று கருதாமல் பாரா-சூட்டை நம்பியே குதிக்கிறார். இத்-தகைய வடிவிலான நாத்திகம் என்பது அவரவர் செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. மதஅமைப்-புகள் கூட இதனை வெளிப்படுத்து-கின்றன. மற்ற மத மக்களைத் தங்கள் கடவுள் வந்து மதம் மாற்றுவார் என்று எதிர்பார்க்காமல், அவர்களே மற்றவர்களைத் தங்கள் மதத்துக்கு மாறச் செய்கின்றனர். இதே போன்றது-தான் மத அமைப்புகளுக்கு அளிக்கப்-படும் நன்கொடைகளும். கடவுள் வந்து தங்களுக்கு பொருளுதவி செய்யப் போவதில்லை என்பதால்தான் மத-அமைப்பாளர்கள் மக்களிடம் நன்-கொடை பெறுகின்றனர். இவ்வாறு கூறு-வதைக் கேட்டு மதநம்பிக்கையாளர்கள் கோபம் கொள்ளலாம். ஆனால், இந்த உலகில் எந்த ஒரு உருப்படியான செயலை செய்து முடிக்க வேண்டுமா னாலும், இயற்கையைக் கடந்த அனைத்து ஆற்றலும் பெற்ற ஒரு கடவுள் மீதான நம்பிக்கையின்மையை ஏதோ ஒரு வழியில் வெளிப்படுத்தியே தீரவேண்டும் என்ற உண்மையை எந்த விதத்திலும் மறுக்கமுடியாது.


தர்க்க, நியாய ரீதியிலான சுயசிந்தனை

‘சுயசிந்தனை’ என்ற ஒரு அகண்ட தலைப்பின் கீழான ஒரு தனிப்பட்ட துறையாக நாத்திகத்தைக் காட்டுவது இரண்டாவது விளக்கமாகும். தர்க்க நியாய வழியிலான ஆதாரங்களைக் கேட்டு, கடவுள், மத நம்பிக்கைகளுக்கு எதிராக சிந்திக்கும் ஒரு வழியான சிந்-தனைதான் சுயசிந்தனையாகும். இத்-தகைய தர்க்க, நியாய ரீதியிலான சிந்-தனையை எல்லா விஷயங்களிலும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக பறக்கும் மாபெரும் விலங்கு ஒன்று இருப்பதாக தான் நம்புவதாக என்னிடம் ஒருவர் கூறிவதாக வைத்துக் கொள்-வோம். அது பற்றி தர்க்க நியாய ரீதியில் சிந்தித்தபின் அதனை நம்பப் போது-மான காரணங்கள் இல்லை என்று நான் கருதினால், நான் பறக்கும் மாபெரும் விலங்கை நம்பாதவன் என்று ஆகிவிடுகிறது. அது போலவே காரல் மார்க்சின் கோட்பாடுகளில் அதிக அளவு தர்க்க ரீதியான உடன்பாடு எனக்கு இல்லை என்றால், நான் கம்யூ-னிஸ்ட் அல்லாதவன். மதம் பற்றிய விஷயங்களில் எனது சுயசிந்தனையை நான் மேற்கொள்ளும்போது, கடவுள் இருக்கிறார் என்பதிலோ மற்ற ஆன்மிக அறிவிக்கைகளிலோ நம்பிக்கை கொள்வதற்குப் போதுமான தர்க்க நியாய ரீதியிலான காரணங்கள் இல்லை என்று நான் காண்கிறேன். அதனால் நான் ஒரு நாத்திகன். மதப் பிரச்சாரம் பலமாக நடைபெற்று வரும் ஒரு நாட்டில் நான் வாழ்வதால் எனது நாத்திகத் தன்மை மந்தையிலிருந்து தனியாகத் தெரிகிறது. நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்லது நாஜி நாட்டில் வாழ்ந்திருந்தால், எனது நாத்திகத் தன்மையை விட அதிகமாக கம்யூனிசம் அல்லது நாசிசத்திற்கு எதிரான எனது நிலைப்பாடு தனியாகத் தெரியும்.

தாங்கள் இருப்பதைப் பற்றி அல்லாமல் கடவுள் இருப்பதைப் பற்றி என்று வரும்போது, மதநம்பிக்கை கொண்டவர்களும் கூட நாத்திகர்-களாகவே இருக்கிறார்கள் என்பதை புகழ்பெற்ற சுய சிந்தனையாளர்கள் சிலர் கவனித்திருக்கிறார்கள். ஒருவர் நாத்திக-ராக இருக்க வேண்டுமானால், அனைத்து வகையான ஆன்மிகக் கருத்துகளிலும் சிறிதும் நம்பிக்கை அற்றவராக இருக்க வேண்டும். வேற்று மத நம்பிக்கை கொண்டவர் நாத்திகர் அல்ல

யேசுவை அன்றி வேறு ஒரு கடவுளை நம்புபவராக இருந்தாலும், ஓர் இந்துவை ஒரு கத்தோலிக்கர் நாத்திகர் என்று அழைக்கமுடியாது. அந்த இந்துவை யேசுவை நம்பாதவர் என்று வேண்டுமா-னால் கூறலாம். அனைத்து கிறித்துவர்-களையும் முஸ்லிம்களை அல்லாவை நம்பாதவர்கள் என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் அவர்களை நாத்தி-கர்-கள் என்று அழைக்க முடியாது.


நாத்திகத்தைவிட சுயசிந்தனை மேலானது

மேலே கூறிய விளக்கங்களின் மூலக் கருத்தில் இருப்பது சுயசிந்தனையாகும். நம்பிக்கையாளர்களை அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் உண்மைத்தன்மை காரணமாக நாம் பாராட்டா விட்டாலும், மத போத-னைகளில் அவர்கள் கொண்டு வரும் சுயசிந்தனை என்ற அளவிலாவது அவர்-களைப் பாராட்டலாம். நாத்திகத்திற்-கும்கூட இரண்டு வேறுபட்ட வழி-களில் விளக்கம் அளிக்கலாம். விளக்கத்-தின் முதல் பகுதி செயல்பாடுகளைப் பற்றிக் கூறுவதாகும். இரண்டாவது, சுயசிந்தனை என்ற பெரிய கட்டமைப்-பில் உள்ள ஒரு சிறிய கட்டமைப்பாக நாத்திகத்தை மாற்றிவிடுகிறது என்ப-தாகும். அந்த ஒரு காரணத்துக்காகவே, எனது நாத்திகத்தை விட சுயமாக சிந்திக்கும் எனது ஆற்றலை நான் மேலானதாக மதிக்கிறேன். நமது அனைத்து விளக்கங்களின் மய்யத்திலும் சுயசிந்தனையை வைத்துக் காண-வேண்டிய நேரமிது. இறுதியில் அனைத்து பொது வாதங்களின் மய்யத்தி-லும் இதுவே வைக்கப்படவேண்டும்.

நன்றி விடுதலை 14.11.04

1 comment:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]