வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, November 04, 2009

மரகத லிங்கத்துக்கு மறுவாழ்வா?திருத்துறைப்பூண்டி மருந்தீசுவரர் கோயிலில் மரகத லிங்கம் திருட்டுப்போன கதை ஊர் சிரித்தது. அதன் மதிப்பு ரூ.50 கோடி என்-றெல்-லாம் கூறப்பட்டது.முகூந்த சக்ரவர்த்தியால் தேவர்களின் தலை-வரான இந்திரனிடம் கொடுக்கப்பட்டது என்றும், இந்திரனே வழிபட்ட மரகதலிங்கம் என்றும் பெருமையாகவும் பேசப்பட்டது.

2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி அந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 48 நாள்கள் சிறப்புப் பூஜைகள் எல்லாம் தட-புடலாக நடத்தப்பட திட்டமிடப்பட்ட நிலையில், பிப்ரவரி 10 ஆம் தேதி இரவு (கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட எட்டாம் நாளில்) அக்கோயிலின் மரகதலிங்கம் களவு போய்விட்டது. ஆமாம், இந்திரனால் வழிபட்ட சக்தி வாய்ந்த லிங்கம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட அதிக விலைமதிப்புள்ள அந்த மரகதலிங்கத்தை இருவர் திருடிச் சென்றுவிட்டனர். சர்வசக்தி வாய்ந்த சாமியை சாதாரண ஆசாமிகள் திருடிக்கொண்டு சென்றுவிட்டனர்.

எட்டு மாதங்கள் கழித்து காவல்துறையின் திறமை--யால் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு; மூலச் சரக்கான மரகதலிங்கம் கைப்பற்றப்பட்டது.
கடவுள் சக்தி என்பதெல்லாம் கவைக்கு-தவாதது _ அது அடித்து வைக்கப்பட்ட சிலை _ அவ்வளவுதான் என்று பகுத்தறிவுவாதிகள் பிரச்சாரம் செய்ததெல்லாம் மாபெரும் உண்மை-யென்று பாமர மக்களும் தெரிந்துகொள்ளக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.

வெட்கம் கெட்டவன் வெறுமனே உடலோடு செல்லத் தயங்கமாட்டான் என்பதுபோல, காவல்துறையினரால் திரும்பக் கொடுக்கப்பட்ட அந்தப் பொம்மையான மரகதலிங்கத்தை மேள-தாளத்துடன் வீதிஉலா நடத்தி கோயிலுக்குக் கொண்டு சென்றார்களாம். வெள்ளிப் பெட்டியில் வைத்து 24 மணிநேரமும் துப்பாக்கி சகிதத்துடன் காவல்துறை பாதுகாப்பாம்!

மரகதலிங்கத்துக்குச் சக்தியில்லை _ காவல்துறைக்கும், துப்பாக்கிக்கும் தான் சக்தி உண்டு என்பதற்கு இதைவிட அப்பட்டமான ஆதாரம் வேறு ஒன்றும் தேவையோ!

இது ஒரு பச்சையான நாத்திகச் செயல்தானே? கடவுளை மற, மனிதனை நினை என்றார் பகுத்-தறிவுப் பகலவன் தந்தை பெரியார். இப்பொழுது கோயிலில் தர்மகர்த்தாக்களே தங்கள் கோயில் கடவுள் சிலையைக் காப்பாற்ற காவல்துறையை _ அதாவது மனிதர்களை நாடிவிட்டனரா இல்லையா?

இதில் இன்னொரு கோமாளித்தனத்தையும் கவனிக்கத் தவறக்கூடாது.
சிலை திருடப்பட்டுச் சென்றதால் தோஷம் ஏற்பட்டுவிட்டதாம். யாருக்கு? கடவுளுக்கு! அப்படியென்றால் தோஷம் பெரியதா? கடவுள் பெரியதா? என்ற கேள்வி எழுகிறதா இல்லையா?

சரி, தோஷம் நீக்கப்படுவதற்குப் பரிகாரங்கள் செய்யப்படவேண்டாமா? அதன்மூலம் புரோகிதப் பார்ப்பனர்களின் தொப்பை நிரம்பவேண்டாமா? சுரண்டல் வியாபாரம் ஜாம்ஜாமென்று நடக்க-வேண்டாமா?

வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்-தாலும் அவற்றின் பலாபலன் என்பது பார்ப்பனர்-களுக்கு இலாபம் _ வரும்படி என்கிற ஒரு வட்டத்-துக்குள் பக்தி, கோயில், மதச் சமாச்-சாரங்கள் அடங்கிவிடும். இது பார்ப்பனியத்தின் அலாதியான சூட்சுமமான ஏற்பாடாகும்.

அந்த முறையில் திருடப்பட்டு கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள மரகதலிங்கத்தின் தோஷம் கழிப்பதற்காக பூஜை புனஷ்காரங்கள், பரிகார செயல்கள் தொடங்கப்பட்டுவிட்டன. 108 லிட்டர் பாலாபிஷேகமாம்! தேனாபிஷேகமாம். சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதிட ருத்ர ஹோமமாம்.

ஹோமம் (யாகம்) என்றால் பார்ப்பனர்களுக்கு எல்லா வகையான தானங்களும் தடபுடலாக நடக்குமே!பக்தி ஒரு வியாபாரம். அதுவும் பார்ப்பனர்-களுக்கு மூலதனம் தேவையில்லாத ஒரு வியா-பாரம் என்பதைத் தமிழர்கள் என்றைக்கு உணரப் போகிறார்களோ!

2 comments:

prabakar.l.n said...

nanbare neengal kadavulai saadukireekala illai paarpanarkalai saadukireerkala thelivaaga kooravum , kadavul illai unmaithan , aanal namaiyum meeri oru sakthi aatukirathu enbathu appattamaana unmai atharku peyar enna ? mutinthaal vilakkam koorunkal www.sathuragirisundaramahalingam.blogspot.com

மானமுள்ள சுயமரியாதைக்காரன் said...

இதனை பற்றி சொல்லவேண்டுமானால் பெரிய வரலாறே சொல்லலாம். நீங்கள் பெரியாரின் நூல்கள் ஆராய்ந்து படித்தல் உண்மை விளங்கும்.

இரண்டுமே சமுகத்திலிருந்து விரட்டப்பட வேண்டிய ஒன்று. பார்பனியமும் பிறந்ததே இந்த வீனா போன மேல ஒரு சக்தி இருக்குன்னு நம்புகிறவர்களை வைத்து இன்னும் மூடம் ஆக்க பார்ப்பான் பயன்படுத்தி கொண்டது. எனவே பார்பனியமும், கடவுள், வேதம் எல்லாம் ஒன்று மற்றொன்றை சார்ந்ததே. இதில் ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை.

இதனை பற்றி சொல்லவேண்டுமானால் பெரிய வரலாறே சொல்லலாம். நீங்கள் பெரியாரின் நூல்கள் ஆராய்ந்து படித்தல் உண்மை விளங்கும்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]