வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, November 18, 2009

ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு! ஏன்? எதற்காக?

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக சென்னையில் நேற்று (17.11.2009) அன்று மாலை சமூகநீதிக் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


1. பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் காணவும், அந்த மக்களின் நலனுக்கான அரசின் திட்டங்கள் உரிய மக்களுக்கு சென்றடையவும், மேம்பாடு அடைந்த மக்களை பிற்படுத்தப்பட்-டோர் பட்டியலில் இருந்து நீக்கிடவும், ஜாதி வாரியான கணக்கெடுப்பு அவசியம் என நீதிமன்றங்கள் அறிவுறுத்தியதைக் கருத்தில் கொண்டு, வரும் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரியான கணக்கெடுப்பையும் நடத்திட உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக தொடங்கிடவேண்டும்.

2. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் நலத் திட்டங்கள் அந்த மக்-களுக்கு முறையாக சென்றடைவதைக் கண்-காணித்திட பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளு-மன்றக் குழு மத்திய அரசு அமைத்திட-வேண்டும்.

3. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்-திற்கு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்திற்கு உள்ளதுபோன்று அதிகாரம் மத்திய அரசு அளித்திடவேண்டும்.

சமூகநீதிக் கண்ணோட்டத்திலும், பிற்படுத்தப்-பட்டோரின் இட ஒதுக்கீடு கண்ணோட்டத்திலும் இம்மூன்று தீர்மானங்களும் இக்காலகட்டத்தில் மிகவும் முத்தாய்ப்பானவை என்பதில் அய்ய-மில்லை.

பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 1931_க்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்-போடு ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட-வில்லை.

இந்திய அரசமைப்புச் சட்ட ரீதியாக ஜாதி ஒழிக்கப்-படாத நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது மிகவும் அவசியமாகும்.

ஜாதி அமைப்பு வேரூன்றி நிற்கும் இந்திய சமூக அமைப்பில் தாழ்த்தப்பட்டவர்கள், மலை-வாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பது சட்டப்படி நடைமுறைப்-படுத்தப்பட்டு வருகிறது.

அந்த இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக-வும், கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்டவர்-களுக்கு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படு-கிறது. சமூகநீதி என்பதில் ஜாதிதான் முக்கிய அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு எத்தனை விழுக்காடு என்பதை நிர்ணயம் செய்திட ஜாதி வாரியான கணக்கெடுப்பு என்பது அடிப்படையில் தேவையான புள்ளி விவரமாகும்.

நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் வரும்போதுகூட, நீதிபதிகள் தொடுக்-கும் வினா_ எந்த அடிப்படையில் இத்தனை சதவிகிதம் (சிக்ஷீவீtமீக்ஷீவீஷீஸீ) இட ஒதுக்கீடு என்பதே!

1931 ஆம் ஆண்டு ஜாதி வாரி கணக்-கெடுப்பை அரசு தரப்பில் சொல்லும்போது நீதிபதி-கள் அதில் குறை காண்கின்றனர். நீண்ட காலத்-திற்கு முன்னெடுக்கப்பட்ட புள்ளிவிவரக் கணக்கு தற்போது எப்படி பொருந்தும் என்று வினா எழுப்புகின்றனர்.

அப்படியிருக்கும்போது, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி வாரி புள்ளி விவரமும் இணைத்துக் கொள்ளப்படவேண்டும் என்று இந்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கறாராக ஏன் ஆணை பிறப்பிக்கக் கூடாது என்பதுதான் நமது முக்கிய வினாவாகும்.

இரண்டொரு வழக்குகளில் மறைமுகமான முறை-யில் இதற்கான அறிவுறுத்தலை உச்சநீதி-மன்ற-மும், சென்னை உயர்நீதிமன்றமும் காட்டி-யிருக்கின்றன என்று கருதப்பட்டாலும், இன்னும் தீர்க்கமாக அறுதியிட்டுக் கூறவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்.

இட ஒதுக்கீடுக்கு மட்டுமல்ல; தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பல்வேறு சமூக, பொருளாதார வளர்ச்சிகளுக்காக ஜாதிவாரி புள்ளி விவரம் என்பது மிகவும் தேவையானதே!

அதுவும், ஜாதியை சட்டப்படி ஒழிக்கும் காலம் வரைக்கும் இந்த விவரம் ஒவ்வொரு முறையும் திரட்டப்பட வேண்டியதே!

ஜாதி வாரி கணக்கெடுப்பால் ஜாதி உணர்ச்சி வளர்ந்துவிடும் என்பதெல்லாம், ஜாதி வாரி புள்ளி விவரம் எடுக்கப்படக்கூடாது என்று கருதுபவர்-களின் தந்திரப் பேச்சாகும்.

நன்றி விடுதலை தலையங்கம் 18.11.09

3 comments:

nerkuppai thumbi said...

சரியான கோரிக்கை.
சங்கங்கள் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மைய அரசுக்கு ஆணை இட செய்ய வேண்டும்
1931 க்கு பிறகு, எனில் 1. பிறப்பு/இறப்பு சதவீதம் சமூக, தொழில், கல்வி அறிவு, சமூக "அந்தஸ்து" காரணமாக வெவ்வேறு வீதங்களில் மாறியிருக்கும். இந்த பிரிவினர் இப்போது அதிகமாக அல்லது மிக அதிகமாக் இருப்பார் என்பதே பொது எதிர்பார்ப்பு.
2. தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு அரசியல் அமைப்பில் கொடுத்த ஒதுக்கீடு முறை, தலித்துக்களுக்கு பயன் அளித்த அளவுக்கு பிற்படுத்தொர்க்கு மண்டல் ஒதுக்கீடு சென்றடையவில்லை என்றும் தோன்றுகிறது. (தமிழ்
நாட்டைப் பொறுத்தவரை ஒதுக்கீடு ஓரளவு பயன் அளித்திருக்கிறது; அந்த அளவுக்கு கூட வட மாநிலங்களில் பயன் தர வில்லை என்பதும் கண்கூடு)
3. 2011 இல் சாதி புள்ளி விவரம் எடுத்தால் ஒதுக்கீடு முறையை மறு பரிசீலிக்கவும், மாற்றி அமைக்கவும் ஏதுவாகும்.

Anonymous said...

//பணமும் பதவியும் பகுத்தறிவை கண்டால் நடுங்கும். பக்தியை கண்டால் கொஞ்சும். - தந்தை பெரியார் //


இதன்படி யாரவது இவ்வுலகில் இன்று இறுக்கிறார்களா நன்பரே, உதாரணம் செல்லுங்கள்.

Anonymous said...

//ஜாதியை சட்டப்படி ஒழிக்கும் காலம் வரைக்கும் ஜாதி வாரி கணக்கெடு எடுக்கப்பட வேண்டியதே! //

//பெரியார் - சக்கிலியன், பறையன், பஞ்சமன், செட்டி, முதலி, நாய்க்கன் என்னும் ஜாதிப் பெயர்களெல்லாம் சூத்திரன் என்னும் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதால், அந்த இழிவு நீங்குவதற்காகத்தான், மொத்தத்தில் ஒரே இனப் பெயரான திராவிடன் என்று சொல்ல வேண்டுமென்கிறேன். அதற்காகத்தான் திராவிடர் கழகமும் வேலை செய்து வருகிறது.//


ஐயே ஐயே ஐய்ய்யே இவர்கள் என்னபா செல்ராங்க, தயவு செய்து யாராது செல்லுங்கள்?

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]