வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, November 01, 2009

தமிழர் நிலை மாறவேண்டும்


தமிழர்களான கவிஞர்கள், கட்டுரையாளர்கள், அறிவுப் பிரச்சாரம் செய்பவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நடிப்புத் துறையில் உள்ளவர்கள், முதலில் யாவரும் தங்கள் கலைகளை மக்களுக்குப் பயன்படும் வகையில் அவற்றைக் கையாள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழர்கள் புரட்சிகரமான மாறுதலடைய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

தமிழர்களைக் கைதூக்கிவிட எந்தக் கலையும் எந்தக் கவிஞரும் இல்லை. உள்ளவர்கள்-எல்லோ-ரும் பத்தாம் பசலிக்காரர்கள் என்ற சொல்லும்படி, பழைமையைக் கண்டே தங்கள் கலைகளைப் பயன் படுத்துகிறார்கள்.

தமிழர்களைத் தாழ்த்தியதும் தலை தூக்க வொட்டாமல் அழுத்தியதும் தமிழறிஞர், கலைஞர், கவிஞர், புலவர் முதலியவர்கள் கையாண்ட சமய இலக்கியமும் முன்னோர்களைப் பின்பற்றி வந்த நடப்புகளும், தமிழர்களைக் குலைத்து உருவாக்கிய அரசியலுந்தான்.

தமிழன் வளர்ச்சிக்கு, அறிவிற்கு, கலைகளுக்கு, சமயத்திற்கு, அரசியலுக்கு - பார்ப்பான் காட்டிய வழியைத் தவிர, ஒரு தமிழன் காட்டிய வழி என்று சொல்ல இன்று என்ன இருக்கிறது? நமது கலைஞர்கள், கவிஞர்கள், புலவர்கள், அரசியல்-வாதிகள் பார்ப்பானைக் குறை மட்டும் சொல்லிக் கொண்டு, அவன் கலாச்சாரத்தில் மூழ்கி, அவன் காட்டிய வழியில் நடந்து கொண்டு வாழ்கிறவர்-களாகத்தான் இருந்து வந்தார்கள்; வருகிறார்கள் என்பதல்லாமல் தமிழர் நலனுக்கு, வளர்ச்சிக்கு, இழிவு நீக்கத்திற்கு என்று யாராவது எந்த அளவுக்காவது பாடுபட்டார்கள் என்று ஒரு விரலை-யாவது நீட்ட முடிகிறதா?

எல்லாத் தமிழ் உணர்ச்சியாளரும், எப்படிப் பட்ட பார்ப்பன வெறுப்பாளரும் சுயநலத்திற்கு வேண்டு-மான அளவுதான் வெறுப்பைக் காட்டிக் கொள்-கிறார்களே தவிர, தமிழ் நலத்திற்கு, தமிழர் சமுதாய நலத்திற்கு என்பதாகக்காட்டிக் கொண்டவர்கள் தமிழர்களில் மிகமிக அரிதாகவே இருந்து வருகிறார்கள்.

தமிழ்ப் பெரியோர்கள், கல்வியாளர்கள், மேதாவி-கள், பெரும் பதவியாளர்கள் யாவரும் தமிழர்களின் கேட்டிற்கும், இழிவிற்குமே பார்ப்பனர்களால் கற்பனை செய்து உண்டாக்கப் பட்ட கதைகள், காவியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவைகளில் புகுத்தப்பட்ட கடவுள்கள் - கந்தன், சிவன், விஷ்ணு, கணபதி, இராமன், கிருஷ்ணன் முதலியவற்றைக் கும்பிடு-கிறவர்களாகவும் இவர்களது பெண்டு பிள்ளைகளையும் பின்பற்றி நடப்பவர்களாகவும் இருக்-கிறார்களே தவிர - அறிவைப் பற்றியோ, மானத்தைப் பற்றியோ, இன நலத்தைப் பற்றியோ சிந்தித்தவர்கள் என்று சொல்லி ஒருவரையும் குறிப்-பிடமுடியவில்லையே!

எந்தப் பெரிய மனிதன் - அறிஞர், கவிஞர், வித்துவான், மேதாவி என்பவர் யாரானாலும் - அவர், திவசம், திதி முதலிய பார்ப்பனக் காரியங்களைச் செய்-ப-வரும்; இவை சம்பந்தமான நெற்றியில் சாம்பல், செம்மண், சுண்ணாம்பு, பூச்சுப்பட்டை அடித்துக் கொள்பவர்களும்தான் இருக்கிறார்களே ஒழிய, இவை எதற்கு, இவற்றால் பலன் என்ன என்று சிந்தித்தவர்கள், சிந்திக்கிறவர்கள் ஒருவரையும் காண முடியவில்லையே!

இன்னும் தமிழன் சூத்திரனாக இருக்கிறான் என்றால் - இருந்து கொண்டு திவசம், திதி செய்து கொண்டு, சாம்பல் மண்ணைநெற்றியில் அடித்துக் கொண்டு கோவில் குளங்களுக்குப் போய்க் கொண்-டி-ருக்கிறான் என்றால் - தமிழன் எந்த வகையில் முன்-னேறத்-தக்கவன் என்பது புரியவில்லை. பார்ப்பானைக் கூப்பிட்டுத் திதி கொடுக்கிற தமிழன், எப்படித் தன்னைச் சூத்திரன் அல்லன் என்று சொல்லிக் கொள்ள முடியும்?

இன்னும் தமிழனுக்கு மானம், வெட்கம், பகுத்தறிவு வரவில்லையென்றால் மற்ற எந்த நூற்றாண்டில் வரமுடியும்? சமுதாயப் புரட்சிக்கு உண்மையாகவே இந்தச் சமயம் மிகவும் பொருத்தமான காலம் என்பது எனது கருத்து.

இன்று நமக்குப் பெரும் சனியாக அய்க்கோர்ட் ஒன்று இருக்கிறது. மற்ற ஸ்தாபனங்களும் பெரிதும் நமக்கு அனுகூலமாக இருக்கிறதென்றே சொல்லலாம். எனவே தமிழனுக்குப் புத்தி, மானம் இருக்க வேண்டும்; இருந்தால்தான் எளிதில் மாற்றம் உண்டாக்கிக் கொள்ள முடியும்.

கல்வி இலாகாவில் பகுத்தறிவு புத்தகங்களையும், பகுத்தறிவு ஆசிரியர்களையும் நல்ல வண்ணமாக ஆக்க வேண்டும்.

உத்தியோக இலாகாவில் பெரிதும் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைப் புகுத்த வேண்டும், மேன்மேலும் கிராமக் கணக்கு, மணியம் பதவிகளை தாழ்த்தப்-பட்டவர்கள் அதிகமாகப் பார்க்க வேண்டும்.

மற்றும் நிருவாகத் துறையில் அய்.ஏ.எஸ். ஒழித்துக் கட்டியாகவேண்டும். வெள்ளையன், தன் ஜாதியாரிடமே நீதித்துறை, நிருவாகத் துறை இருக்க வேண்டுமென்று செய்த சூழ்ச்சியேயாகும். ஆகவே இவை தமிழர்களைத் தலையெடுக்கவொட்டாமல் செய்து வரும் காரியங்களுக்காக இருந்து வருகின்றன.

இந்தக் காரியங்களை இன்றைய ஆட்சி செய்து விடுமானால், இந்த ஆட்சியை எவரும் அசைக்க முடியாது என்பதோடு, தமிழர் நிலை நல்ல அளவுக்கு முன்னேற்றமடையக் கூடும் என்பதுதான் எனது கருத்து.

தந்தை பெரியார்



(விடுதலை: தலையங்கம்: 7.10.1972)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]