வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, November 30, 2009

பாபர் மசூதியை இடித்தவர்களை சிறையில் தள்ளுக!


பாபர் மசூதி இடிப்பு தொடர்பான நீதிபதி லிபரான் ஆணையத்தின் அறிக்கை வெளி-வருகின்ற நிலையில் இந்தியா முழுமையும் பேரலைகளை அது ஏற்படுத்தி விட்டது.


இந்தப் பிரச்சினை அவ்வளவுதான். ஆறிய கஞ்சி பழங்கஞ்சி தான் என்ற ஒரு பொதுக் கருத்தும் கூட உருவாக்கப்பட்டுவிட்டது.

எதை எதைப் பற்றி எல்லாருமே விட்டேனா பார்! என்று தோளை முறுக்கிக் கொண்டு பேனா வாலை யாட்டும் ஊடகங்கள் மதவெறி உணர்வுடனும், உயர்ஜாதி ஆதிக்கத் தன்மையிலும் பாபர் மசூதி இடிப்பு அநீதி பற்றியோ குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நியாயத்தைப் பற்றியோ எழுத ஒரு சொட்டு மையைச் செலவழிக்கத் தயாராக இல்லை.

ஆனால், கீழே தள்ளிய குதிரை குழியைப் பறித்தது போலவே இன்று வரை நடந்து கொண்டும் வருகின்றனர். இன்றைக்குக் கூட முன்னாள் பிரதமர் வாஜ்பேயியை பாபர் மசூதி இடிப்பில் சேர்த்துப் பேசக்கூடாது என்று கூறப்படும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடும் முறையைப் பார்த்தாலே அவர்களுக்கு உள்ளத்தில் பீறிட்டுக் கிடக்கும் உணர்வின் நிறம் என்ன என்பதை அறியலாம்.

68 பேர் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்ற, பி.ஜே.பி. யின் முன்னாள் தலைவரும், மனித வள மேம்பாட்டுத் துறை முன்னாள் அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷி இது பற்றி என்ன கூறியுள்ளார் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

ராமரின் கோயிலைக் கட்ட வேண்டும் என்று சாமியார்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டபோது, வாஜ்பேயி உடனிருந்தார். எனினும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் அவர் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்குள் குத்திட்டு நிற்கும் சன்னமான உண்மையைக் கவனிக்க வேண்டும். சாமியார்-களின் கூட்டத்தில் ராமன் கோயிலைக் கட்டிடத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, வாஜ்பேயி உடனிருந்தார் என்று கூறியுள்ளாரே தவிர, அதனை எதிர்த்ததாகக் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும்.

அது போலவே விசுவ இந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கால் கூறியுள்ள கருத்தும் மிகவும் முக்கியமானதாகும்.

ராமன் கோயில் விவகாரம் தொடர்பாக வாஜ்பேயி லக்னோவில் கைது செய்யப்பட்டார். ராமன் கோயில் விவகாரத்தில் வாஜ்பேயிக்கு தொடர்பில்லை என்று கூறமாட்டேன் என அழுத்தம் திருத்தமாகவே கூறியுள்ளார்.

இந்த நிலையில் வாஜ்பேயி ஜென்டில்மேனாக இருந்தால், தன் நிலையை தெளிவு படுத்தியிருக்க வேண்டாமா? ஏன் வாயைத் திறக்கவில்லை?

பாபர் மசூதி இடிப்புப் பிரச்சினையில் அத்வானிக்கு ஒரு கருத்து, வாஜ்பேயிக்கு இன்னொரு கருத்து என்று இருக்க முடியுமா? இருந்தால் அது எப்படி கட்சியின் நிலைப்-பாட்டிற்கான மரியாதையைக் காப்பாற்றும்?

இப்பொழுது கூட அக்கட்சியின் பெரிய தலைவர்கள் என்று சொல்கிறவர்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்டஇடத்தில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்றுதானே கூறுகிறார்கள். முரளி மனோகர் ஜோஷி மிகவும் வெளிப்படையாக வாரணாசியில் செய்தியாளர்களிடம் கூறி-யுள்ளாரே.

ராமன் கோயில் கட்டுவது எங்களின் நிகழ்ச்சி நிரலில் இருந்து இன்னமும் எடுக்கப்படவில்லை. இப்போதும் எங்களின் மய்யமான பிரச்சினை இதுதான் என்று வெளிப்படையாகக் கூறியிருக்-கிறார். அயோத்தியில் மட்டுமல்ல, மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி, காசியில் விசுவநாதர் ஆலயம் ஆகிய இடங்களிலும் முசுலிம்கள் தங்கள் கோரிக்கைகளைக் கைவிடவேண்டும் என்று விசுவ இந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கால் கூறியுள்ளார்.

இதற்கெல்லாம் முடிவு கட்டப்பட வேண்டு-மானால் பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்ட-னையை விரைவாகப் பெறச் செய்யவேண்டும். இல்லையெனின் இந்துத்வா வெறிக் கூட்டத்தின் வால் வாளாகச் சுழன்று தங்கள் நிகழ்ச்சி நிரலில் (அஜண்டா) உள்ள சிறுபான்மையினர் கோயிலின் மீது கை வைத்துதான் தீருவார்கள்.

ஒரு பக்கம் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். இன்னொரு பக்கத்தில் இந்தப் பிரச்-சினையை மதவெறியாக மாற்றி மக்களை ஈர்க்க முயலும் இந்தப் பிற்போக்குக் கூட்டத்தின் முகத் திரையைக் கிழிக்கும் வகையில் பிரச்சாரமும் நடை பெற்றாக வேண்டும். மதச்சார்பற்ற சக்திக்கு கூடுதல் கடமை உணர்வு உண்டு.

டிசம்பர் 3ஆம் தேதி மாவட்டத் தலை நகரங்-களில் திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டம் இந்த வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தோழர்களே எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடத்துவீர்! நடத்துவீர்!

விடுதலை தலையங்கம் 30.11.09

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]