வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, November 05, 2009

பெரியாரால் என்ன பயன்?


சில தோழர்களுடன் நான் உரையாடி கொண்டிருக்கும்பொழுது அவர்கள் கேட்பது பெரியார் என்ன செய்து கிழித்துவிட்டார். அவரால் ஒரு நன்மையும் கிடையாது. இதுதான் இந்த தோழர்களின் வசைபாடக உள்ளது. இப்படி கேட்பவர்கள் மேலும் சொல்லுவார்கள் பெரியாரும் அவருடைய ஆட்களும் இந்து கடவுள்களை மட்டும்தான் விமர்சிக்க முடியும் உங்களால் மற்ற இஸ்லாமிய, கிருஸ்தவ கடவுள்களை விமர்சிக்க முடியாது என்று.

பெரியாரும் அவரை சார்ந்தவர்களும் ஒன்றும் தானாக எதனையும் பேசவில்லை. இந்து மதத்தில் பார்ப்பார்கள் கடவுள் கதைகளை எழுதி இந்த கூமுட்டைகளை அடிமையாக்கிய யோகிதயைதான் சொல்ளிஇருக்கிரர்கள்.மற்ற இரண்டிலும் இவளவு அபசமோ மற்ற மனிதர்களை அடிமைகளாக நடத்துவதோ கிடையாது. இது ஒரு அடிப்படை கருத்துதான் என்றாலும் நிறைய தோழர்களுக்கு இது புரிவதில்லை. இதனை விளக்குவது என்றல் இன்னும் எழுதி கொண்டே போகலாம்.

சரி விசயத்துக்கு வருகிறேன். அப்படி என்னதான் பெரியார் செய்து கிழித்து விட்டார். இவரால் ஒன்றும் பயன் கிடையாது இனியும் கிடக்க போவதில்லை என்று உதட்டை பிதுக்கும் கூமுட்டைகளுக்கு அடிபடியிலேயே ஒன்றும் புரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

இப்படி கூறும் கூமுட்டைகளின் வீட்டிலேயே இட ஒதுக்கீடை அனுபவித்து அவரோ மற்றும் அவருடைய சகோதரர்களோ, சகோதரிகளோ ஒரு மருத்துவராகவோ,பொறியியல் வல்லுனர்களவோ, ஆசிரியர்களாகவோ வந்து இருப்பார்கள். இது அவர்களுக்கு தானாக ஏற்பட்ட மாற்றம். இனிவரும் காலத்திலும் அதனை அனுபவிக்க IIT,IIM போன்ற இடங்களில் காத்திருப்பார்கள். அனால் என்ன பயன் ஒன்றும் கிடையாது என்று மீண்டும் இந்த கூமுட்டைகளின் கூவல். இந்த கூமுட்டைகளுக்கு புரியவில்லை என்றால் நமக்கு ஒன்றும் கவலை இல்லை.

பெரியாரின் தாக்கத்தை பார்ப்பனர்கள் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறார்கள். அனால் எதிரிகள் புரிந்து வைத்திருக்கும் அளவிற்கு இவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இவர்களுக்கு பெரியார் பற்றியும் ,திராவிட இயக்கம் பற்றியும் அவர் போராட்டம் பற்றியும் ஒரு கடுகளவு கூட படிதிருக்கவோ அல்லது கேட்டிருக்கொவோ வாய்ப்பே இல்லை.(இவர்கள் தினசரி பத்திரிக்கையை ஒப்புக்குதானும் எட்டி பார்ப்பது கிடையாது அப்புறம் எப்படி இதனை எதிர்பார்க்கமுடியும். ஒருவேளை ஏதேனும் அகவிலைப்படி உயர்வு என்று வந்தால் பத்திரிக்கை எட்டி பார்பார்கள்).

பெண்கள் முன்னேற்றம் பற்றி பெரியார் கூறியது எல்லாம் இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. பெண் அடிமை (இதில் பார்ப்பன பெண்களும் அடங்குவர் , பெரியார் பார்பன எதிரி என்றல் இதில் பார்பனரல்லாத பெண்களுக்கு மட்டும்தான் போராடியிருக்க வேண்டும் ஆனால் அவர் அப்படி யல்ல மனித அடிமை தனத்திற்கு எதிராக போராடியவர் என்பதை இதன் மூலமாவது சில கூமுட்டைகள் புரிந்து கொள்ளவேண்டும் ) பற்றி பெரியார் செய்த செயல்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை.

ஆண்களுக்கு நிகராக ஆக்குவதற்கு அவர்கள் பட்ட பாடு இவர்களுக்கு எங்கு புரியபோகிறது. பெண்களுக்கு கல்வியில் ஆண்களுக்கு நிகராக வர 50% பெண்களுக்கு இடம் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடியபொழுது எல்லோரும் கேட்டார்கள் ஆண்கள் சண்டைக்கு வரமாட்டார்களா என்று அதற்க்கு அய்யா அவர்கள் ஏன் அவருடைய தங்கை, மகள்,மனைவி போன்றவர்கள் பயனடைவர்களே என்று. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மனித இனத்தின் அடிமைத்தனத்தை ஒழிக்க எவளவோ செய்து இருக்கிறார்கள். பெரியாரை பற்றி நன்கு தெரிந்தவர்கள் நினைக்கலாம் ஏன் பெரியாரை பற்றி இந்த அடிப்படி செய்தி கூட தெரியாத என்று. அனால் இந்த மிக மிக அடிப்படை செய்தி கூட தெரியாத கூமுட்டைகளும் இந்த தமிழகத்தில் வாழ்ந்துகொண்டு விதண்டாவாதம் பேசிக்கொண்டு தானிருக்கிறார்கள்.

கவியரசு வைரமுத்து கூறியது போல

புத்தர் வந்தார் அவர் ஒரு வாழ்க்கை சாவி தந்தார்
நபிகள் வந்தார் அவர் ஒரு வாழ்க்கை சாவி தந்தார்
இயேசு வந்தார் அன்பு எனும் சாவி தந்தார்
காந்தி வந்தார் அகிம்சை எனும் சாவி தந்தார்
பெரியார் வந்தார் பகுத்தறிவு எனும் சாவி தந்தார்
அனால் இன்று இவை அனைத்தும்
ஈயம்,பித்தளைக்கு கொடுத்து பேரிச்சம்பளம்
வாங்கி விட்டார்கள்.
(நினைவில் இருந்த வரிகள் மட்டும் கூறியிருக்கிறேன்)

இவர்களை நினைக்கும் போது மேலும் ஒரு கவிதை தான் நினைவுக்கு வருகிறது.

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்

“பெரியாரின்
முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
இதுமுடி
வெட்டும் தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.

“என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
பிரமணனும் மனுசந்தாங்க.
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?”

இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன்
பிணம் எரித்துக் கொண்டிருக
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.

ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?


இனியாவது பெரியாரைப்பற்றி அடிப்படை அறிவை வளர்த்துக்கொண்டு சிந்தித்து செயல் படுவோம் .......

20 comments:

Thamizhan said...

டிசம்பர் 24 பெரியார் நினைவு நாள்.

அடிமையாய்க் கிடந்த சமுதாயத்திற்கு-விடுதலை,மனிதனாக நடத்தப்பட வேண்டிய உரிமை.

மூட நம்பிக்கையில் கிடந்த படித்தவர்க்கும்,படிக்காதவர்க்கும்-
பகுத்தறிவு.
அடிமையிலும் அடிமையாய் இருந்த பெண்களுக்கு-உரிமைகள்.படிப்பு,வேலை வாய்ப்பு.
ஓயாமல் 24 மணி நேரமும் உழைத்துக்
கொண்டிருந்த கடவுள்களூக்கு-
விடுமுறை.
சாமி,சாமி என்று எல்லாம் அவன் செயல் சொன்னோர்க்கு-வெறும் கல்
தான் ,பயந்து சாவாதீர்கள்,படித்து,
உழைத்து முன்னேருங்கள் பாடம்.
குலத் தொழில் செய்வது தான் கர்மா என்றோர்க்கு-இனி கோவில் தேவடியாள்களாக உங்கள் பெண்களை
அனுப்புங்கள்,நாங்கள் படிக்கிறோம்.

குடும்பக்க்கட்டுப்பாடு,தமிழ்,திருக்குறள்
மாநாடுகள்,பெர்ட்ரண்டு ரஸ்ஸல்,இங்கர்சால்,கார்ல் மார்க்சு,
பகத் சிங்,அம்பேத்கர் இவர்களை
தமிழர்க்கு குறைந்த விலையில்
அறிமுகப் படுத்தியவர்.
வர்ணாசிரம தர்மத்தை நம்பிய காந்தியாருடன் வாதிட்டு நாட்டுச் சுதந்திரத்தை விட மனித சுதந்திரமும்,
சாதி ஒழிப்பும் வேண்டும்,இல்லா விட்டால் British Aristocracyக்குப்
பதிலாகப் Brahminocracy தான் வரும்
என்று சொன்னவர்.
இதெல்லாம் இளைய தலைமுறைக்குத்
தெரியாமல் இருப்பது நமது தவறு,
யார் சொல்கிறார்கள் இதையெல்லாம்.

தமிழ் ஓவியா said...

பெரியாரால் என்ன பயன்? பதிவு பல உண்மைகளை வெளிப்ப்டுத்தியிருக்கிறது.

பெரியார் போராடியிருக்காவிட்டால் சிந்தித்துப் பார்க்கட்டும் ?

படித்திருக்க முடியாது.

வேலைக்கு போயிருக்க முடியாது.

ஜாதிக் கட்டுமானம் சரிந்திருக்காது.

அப்பன் தொழிலயே மகன் செய்திருப்பான்.

பெண்களை சக மனுசியாகவே மதித்திருக்க மாட்டார்கள்.

தர்ப்பைபுல்லால் தமிழனின் கழுத்தில் சுருக்கு மாட்டியிருப்பான் பார்ப்பான்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

மக்களைச் சிந்திக்க வைத்துவிட்டால் போதும். அந்தப் பணியை தொடர்ந்து செய்வோம்.
நன்றி.

மானமுள்ள சுயமரியாதைக்காரன் said...

தமிழ் ஓவியா மற்றும் தமிழன் அவர்களின் பின்னுடதிர்க்கு மிக மிக நன்றி.

பிரபு said...

பாராட்டுக்கள்
தொடர்க

செந்தழல் ரவி said...

தொடருங்கள்,,,,,,,,,

Career Helper said...

நான் கேட்கும் சில கேள்விகள்..,

1. பெண்கள் முன்னேற்றம் பற்றி கூறிய பெரியார்.., ஏன் 30 வயது பெண்னை திருமணம் செயது கொண்டார்?.

2. இட ஒதுக்கீடை உரூவாக காரனமாக இருந்தவர் அம்பேத்கர், அவரையும் சாடியவர் தான் பெரியார்.., இல்லை?

3. பிற்படுத்தபட்டேருக்கு இட ஒதுக்கீடை உரூவாக்கியாவர் V.P. Singh., இதற்க்கும் பெரியார்ருக்கு என்ன சம்பந்தம்?

4. பார்ப்பனர் மட்டுமா தழ்த்தபட்டேரை இழியுபடுத்தினார், பிற சாதி மக்களால் இழியுபடுத்தப்பட்டார்களே.., இதுக்காக பெரியார் அல்லது உங்கள் கூட்டம் என்ன செய்தது கூறுங்கள்?
5. பார்ப்பனர் போல் திராவிட மாயை உருவாக்கி, பெரியார் மற்றும் அவர் வழி கழகங்கள் தங்கள் குடும்மத்தை, எப்படி செழிப்பாக மற்றி கொண்டார்கள் என்பது உமக்கு தெரியுமா?.

6. இலங்கையில் என்ன நடக்கிறது(உண்மையைக) என்பதை கவி எழதி கவியரசு வைரமுத்து, திராவிட தலைவன் முன் பட தைரியம் உண்டா?

நிங்கள் சுயமரியதக்காரர்கள் என்றாள் பதில் கூறுங்கள்..,

முனைவர்.இரா.குணசீலன் said...

நன்றாகச் சொன்னீர்கள்...

முனைவர்.இரா.குணசீலன் said...

நறுக்கென்று சொன்னீர்கள்..

கபிலன் said...

கடைசி வரைக்கும் பெரியார் அப்படி என்ன தான் செய்தார் என்பதை சொல்லவே இல்லீங்களே !
இந்த கூமுட்டைகளுக்கு சரியா புரியல... பெரிய பெரிய பகுத்த்றிவாளிகள் நீங்களெல்லாம் கொஞ்சம் சொல்லுங்களேன்!

மானமுள்ள சுயமரியாதைக்காரன் said...

tholar carrer helper avarkale,

பெரியாரும் அவர் இயக்கமும் செய்த வேலையால் தான் எல்லா இழிநிலையும் விலகி இன்று ஓரளவுக்காவது உங்களை போன்றவர்கள் இந்த அளவுக்கு உங்க கருத்துகளை கூற சுதந்திரம் வந்தது. இன்னும் எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது உங்களை போன்ற இந்த அறியாமை கேள்வியால் நிறைய தூரம் பயணிக்கவும் வேண்டியவர்களாக ஆகப்ட்டுள்ளோம் நாங்கள். நீங்கள் பெரியாரின் நூல்களை நன்றாக படியுங்கள் புரியும்.

கபிலன் said...

பெரியாரின் நூல்களை தான் இங்கு பல பதிவர்கள் CTRL+C CTRL+V செய்கிறார்களே. அதை தினந்தோறும் படித்துக் கொண்டு தான் இருக்கிறோம் . வெங்கடேசன் எழுதிய, "ஈ.வெ.ராமசாமியின் மறுபக்கம்" என்ற நூலையும் நீங்கள் கொஞ்சம் படித்துப் பாருங்களேன்!

Samuthran said...

ஐயா, நீங்கள் சொல்வது உண்மை என்றே இருக்கட்டும். அப்படியானால் இதே அவாள்தான் நமது அண்டை மாநிலங்களிலும் அப்போது ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தன‌ர். உமது பெரியார் அங்கேயும் போய் அவாளை பொளந்துகட்டிவிட்டு மற்ற இனத்தவற்கு பகுத்தறிவை அள்ளி ஊட்டிவிட்டு வந்தாரா? பெரியார் சொன்னது நல்ல கருத்தாகவே இருந்தாலும் அவரை இந்த அளவு தூக்கி வைத்துக் கொண்டாட அவர் ஒன்றும் கிழித்துவிடவில்லை.

//என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்//

ஆந்திராவில், கர்நாடகத்தில், கேரளாவில் இதே பனை ஏறும் தந்தை தொழிலில் இருந்து தப்பித்து தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் யாருமே இல்லை பாவம். ஏனென்றால் அவர்களுக்குதான் நமக்கு கிடைத்த மாதிரி ஒரு பெரியார் இல்லையே.

ஐயா, இந்த திராவிட கட்சிகளின் வரலாற்றை வாய்பிளந்து கேட்டுக் கேட்டு உம்மைப் போன்றவர்கள்தான் மூடர்களாகி கிடக்கிறீர்கள். கொஞ்சம் பொறும், 'இலங்கைத் தமிழரின் துயர் துடைக்க தன் உயிரையும் கொடுத்த கலைஞர்' என்று உன் மகன் வரலாறு படிப்பான், அவரையும் இப்படி பதிவு போட்டு துதி பாடும்.

மானமுள்ள சுயமரியாதைக்காரன் said...

//பெரியார் சொன்னது நல்ல கருத்தாகவே இருந்தாலும் அவரை இந்த அளவு தூக்கி வைத்துக் கொண்டாட அவர் ஒன்றும் கிழித்துவிடவில்லை.//

அய்யா ஒன்றும் கிழிக்கவில்லை என்றால் ஏன் ௧௯௬௭ இழந்த ஆட்சியை இன்னும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் பிடிக்கமுடியவில்லையே ஏன்?. இன்னும் நிறையா பெரியாரை பற்றி சொல்ல எனக்களுக்கு நிறைய வேலை இருக்கு. நான் எழுதி இருப்பது அடிப்படை பெரியார் பற்றிய சிந்தனை இதற்க்கு கூட நான் விளக்க வேண்டிய நிலைமைகள் நம்வர்கள் உள்ளார்கள் என்னுன் பொது கொஞ்சம் கஷ்டமாகவும் உள்ளது. கபிலன் அய்யா சொல்லுவது போல கட் பேஸ்ட் மட்டும் படித்தால் பத்தாது.

veerapandian said...

Dear Mr black shirt son of a bitch,
The bearded swine did not achieve anything substantial in his life;he was a third rate swine throuhout his life. other than havinga a big ego and a beard he did not have anything big in him.Yet the low IQ tamils call him Periyaar.tamils are a pathetic race.

கபிலன் said...

"veerapandian said...
.............."

This is not fair veerapandian. We need to tackle DK guys in an ideological and diplomatical manner by putting forth our thoughts on it. Sarcastic and stringent comments do not serve any purpose.

கபிலன் said...

நீங்கள் சொல்கின்ற பிரச்சினைகள் இந்தியா முழுவதும் அக்காலத்தில் இருந்தது. எல்லா ஊரிலும் பெரியாரா இருந்தார் ? பெரியார் தான் தமிழகத்தில் இந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்தார் என்றால், மற்ற மாநிலங்களில் இந்தப் பிரச்சினை இன்னும் இருந்திருக்க வேண்டுமே ? ஏன் இல்லை ?

காலத்தினால் நடந்த சமூக மாற்றம் அது. அதனால் தான் இந்தியா முழுவதிலும் இப்பிரச்சினை நீங்க வழிவகை செய்தது. பெரியார் என்கின்ற தனி மனிதரின் பங்கு இதில் இருக்கிறது என்பது மறுக்க முடியாது. ஆனால் நீங்கள் சொல்லும் உயரங்களில் வைத்துப் பார்க்க முடியாது. இந்து சமயத்தை பழிப்பது, பார்ப்பன எதிர்ப்பு என்பதில் மட்டுமே அவர் பெரும்புள்ளி. சமுதாய மாற்றத்திற்கு அல்ல.

Jawahar said...

ஒரு சாராரின் உரிமைக்காகக் குரல் கொடுக்கிறவர்கள், பிறிதொரு சாராரை இழிவாகப் பேசுவதும் நடத்துவதும் அவர்களது சமூகத் தொண்டின் பரிமாணத்தைக் குறைத்துக் காட்டும்.

காந்தி ஆங்கிலேயர்களை தரக்குறைவாக விமரிசித்திருந்தாரானால் அவரது தியாகம் மறக்கப் பட்டிருக்கும்.

திரு. ஈ.வெ.ரா தன் பணிகளை யார் மனதும் புண் படாத வகையில் செய்திருந்தால் அவரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராக இருந்திருப்பார்.

http://kgjawarlal.wordpress.com

சித்திரபுத்திரன் said...

/*********Samuthran said...
ஐயா, நீங்கள் சொல்வது உண்மை என்றே இருக்கட்டும். அப்படியானால் இதே அவாள்தான் நமது அண்டை மாநிலங்களிலும் அப்போது ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தன‌ர். உமது பெரியார் அங்கேயும் போய் அவாளை பொளந்துகட்டிவிட்டு மற்ற இனத்தவற்கு பகுத்தறிவை அள்ளி ஊட்டிவிட்டு வந்தாரா?
********/

கேரளா வில் வைக்கத்தில் போராடி தெருக்களில் ஒரு குறிப்பிட்ட சமுக மக்கள் நடமாட வழி செய்து வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டது யார் என்று தெரியுமா?/***********கபிலன் said...
நீங்கள் சொல்கின்ற பிரச்சினைகள் இந்தியா முழுவதும் அக்காலத்தில் இருந்தது. எல்லா ஊரிலும் பெரியாரா இருந்தார் ? பெரியார் தான் தமிழகத்தில் இந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்தார் என்றால், மற்ற மாநிலங்களில் இந்தப் பிரச்சினை இன்னும் இருந்திருக்க வேண்டுமே ? ஏன் இல்லை ?

காலத்தினால் நடந்த சமூக மாற்றம் அது. அதனால் தான் இந்தியா முழுவதிலும் இப்பிரச்சினை நீங்க வழிவகை செய்தது. பெரியார் என்கின்ற தனி மனிதரின் பங்கு இதில் இருக்கிறது என்பது மறுக்க முடியாது. ஆனால் நீங்கள் சொல்லும் உயரங்களில் வைத்துப் பார்க்க முடியாது.

Samuthran said...
பெரியார் சொன்னது நல்ல கருத்தாகவே இருந்தாலும் அவரை இந்த அளவு தூக்கி வைத்துக் கொண்டாட அவர் ஒன்றும் கிழித்துவிடவில்லை.

*************/

நாடாளுமன்றத்தில் 1951 முதலாவது அரசியல் சட்ட திருத்தும் வருகிறது..அம்பேத்கார் இதை முன்மொழிகிறார்..இதற்க்கு சிலர் ஆட்சேபனை செய்கிறார்கள்..விவாதம் நடை பெறுகிறது ...அன்றைய பிரதமர் நேரு அவர்கள் கீழ் காணும் கருத்தை பதிவு செய்கிறார்...

"சென்னையில் நடை பெற்ற போராட்டங்கள் தான் எங்களை இந்த முதல் அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வரும் படியாக ஆக்கி இருக்கிறது .சென்னையில் நடந்த போராட்டத்திற்காக எதற்க்காக இந்தியா முழுவதற்கும் உள்ள அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்று நினைக்கிறிர்கள்?நாளைக்கு இந்திய முழுமைக்கும் வரக்கூடிய சூழல் ஏற்படும்.அதை எதிர்பார்த்துதான் பின்னாளில் இத்தகைய போராட்டத்திற்கு இடம் கொடுக்க கூடாது என்பதை நினைத்து இந்த அரசியல் சட்ட திருத்தத்தை செய்கிறோம் " என்று நேரு அவர்கள் தெளிவாகவே சொன்னார்.

பெரியாரின் சாதனையில் இது ஒரு சிறு துரும்பு தான்...

இதற்க்கு மேல் PREKG,LKG,UKG STUDENTS பொழிப்புரை எல்லாம் கொடுக்க முடியாது...

கபிலன் said...

"சித்திரபுத்திரன் said...
..

பெரியாரின் சாதனையில் இது ஒரு சிறு துரும்பு தான்...

இதற்க்கு மேல் PREKG,LKG,UKG STUDENTS பொழிப்புரை எல்லாம் கொடுக்க முடியாது..."

அம்பேத்கரின் சாதனைகளை, பெரியார் செய்ததாக சொல்வது அபத்தம். நீங்கள் சொல்கின்ற இட ஒதுக்கீட்டிற்கு வித்திட்டவர் அம்பேத்கர், அதற்காக அகில இந்திய அளவில் குரல் கொடுத்தவர் அம்பேத்கர். அதைச் செயல்படுத்தியும் காட்டினார். சுதந்திரத்திற்கு முன்னரே, இந்தியாவில் தாழ்த்தப்பட்டோரின் நிலை தொடர்பான மாநாட்டிற்கு, அனைத்து தேசத் தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி கலந்து கொண்டு, தாழ்த்தப்பட்டவரின் நிலையை எடுத்துரைத்த பெருமைக்குரியவர் அம்பேத்கர்.

ஆனால் பெரியார் அப்படி அல்ல. இந்தியா சுதந்திரம் பெரும் தருவாயில் கூட, மெட்ராஸ் மாகாணத்தை மட்டும் ஆங்கிலேயரே வைத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து அற்புத தேச பற்றாளர்.

Pre-KG,LKG,UKG students கேட்கிற கேள்விகளுக்கே இப்படி தடுமாறுகிறீர்களே, டிகிரி படித்தவர்கள் வந்தால் ரொம்ப கஷ்டப் படுவீங்க போல : )

சித்திரபுத்திரன் said...

கபிலன் said...
/*****
அம்பேத்கரின் சாதனைகளை, பெரியார் செய்ததாக சொல்வது அபத்தம்.***********/

சட்ட வரைவு குழு தலைவர் அம்பேத்கர்..அவர் அந்த சட்டத்தை இயற்றும்போதேஇட ஒதுக்கீடு சட்டங்களை அதில் புகுத்தி இருக்கலாமே..எதற்கு பின்னாளில் அதை மாற்ற குரல் கொடுக்க வேண்டும்....

அம்பேத்கர் சொல்கிறார்..."அரசியல் சட்ட வரைவு குழுவில் நான் ஒரு வாடகை குதிரையாகவே பயன் படுத்தப்பட்டேன் "என்று....

அரசியல் சட்டத்தை உருவாக்கியது 6 பேர் கொண்ட குழு அதில் இருவர் மட்டுமே சிறுபான்மையினர் .
1.அல்லாடி கிருஸ்ணசாமி அய்யர்..
2.டி.டி.கிருஷ்ணமாச்சாரி
3.கே.எம்.முன்ஷி (குஜராத் பார்ப்பான்)
4.கோபாலசாமி அய்யங்கார்
5.முஹமது சாதுல்லா
6.அம்பேத்கர் -தலைவர்


இதில் அம்பேத்கரை விட்டால் வேறு சட்ட நிபுணர் இல்லை என்கிற நிலையில் தான் அவர்களை பயன்படுத்தினார்கள்.

பெரும்பன்மையோனர் கருத்துதான் இறுதி வடிவம் பெரும்.சிறுபான்மை யினர் கருத்து எடுபடாது.

அம்பேத்கர் அவர்கள் எந்த அளவு பகுத்தறிவு,முற்போக்கு கருத்துகளை புகுத்த முடியுமோ அந்த அளவு புகுத்தினர்...


இந்த அல்லாடி கிருஸ்ணசாமி அய்யர்...இட ஒதுக்கிடு வழக்கு ஒன்றில் சீனிவாசன் என்ற பார்ப்பன மாணவனுக்காக பொறியியல் இடம் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் வாதாடினர் பிற்காலத்தில் என்றார் செய்தி தெரியுமா...

அல்லாடி கிருஸ்ணசாமி அய்யர் அரசியல் சட்டத்தை எழுதியவர் .சாதரணமாக ஒரு குறிப்பிட கட்டத்திற்கு மேல் போய்விட்டால் பிரபல சட்ட நிபுணர்கள் யாரும் நீதிமன்றத்திற்கு வந்து வாதாட மாட்டார்கள்.அதுமட்டுமல்ல சீனியர் வழக்கறிங்கராக இருப்பார்.இவருடைய ஜூனியர் நீதிபதியாக இருப்பார்.எனவே அவர் முன்னால் நான் வந்து வாதாட மாட்டேன் என்று சொல்லுவார்கள்.அவர்கள் நாணயமுள்ளவர்கள்.

அல்லாடி கிருஸ்ணசாமி அய்யர்க்கு எண்ணமெல்லாம் அவருடைய இனம் தான் முக்கியம்.இதில் கவுரவம் பார்க்கதேவை இல்லை.

பார்ப்பன சமுதாயத்திற்கு இலாபம் உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் இலவசமாகவே வாதாடினர்.

இந்த கம்யூனல் ஜீ.ஓ செல்லாது என்று அரசியல் சட்டத்தை இயற்றிய அல்லாடி அய்யர் வாதாடினர்.

பெரியார் அவர்கள் தான் துணிச்சலாக இறங்கினார்.திராவிடர் இயக்கத்தில் ஒரு பெரிய எதிர்ப்பு கிளம்பியது.

தந்தை பெரியார் அவர்கள் இந்த பிரச்சனையை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்றார்கள்.அல்லாடி அய்யர் சட்டத்தின் சந்து பொந்து ஓட்டைகளை பயன்படுத்தி வாதாடினார்.


தந்தை பெரியார் அவர்கள் மக்களை ஒன்று திரட்ட வேண்டும் என்று நினைத்தார்கள்.

கம்யூனல் ஜீ.ஒ. ஏன் என்று 1950 இல் பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு இப்பொழுது புத்தகமாக கிடைக்கிறது.இதில் நிறைய செய்திகள் இருக்கிறது.

தந்தை பெரியார் அவர்கள் சென்னை பெரம்பூரில் ஆற்றிய சொற்பொழிவில் இந்த வரலாறு பூராவையும் எடுத்து சொல்கிறார்கள்.

இதற்க்கு தான் நான் ஆரம்பத்திலே சொன்னேன் .

இதற்க்கு மேல் PREKG,LKG,UKG STUDENTS பொழிப்புரை எல்லாம் கொடுக்க முடியாது...என்று....

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]