வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, July 02, 2010

பகுத்தறிவாளர்கள் மத்தியில் சங்கடத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபடவேண்டாம்

 முதலமைச்சர் மானமிகு, மாண்புமிகு கலைஞர் அவர்கள், பகுத்தறிவு, தன்மான, இனமானக் கருத்துகளைத் தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்தாலும், அண்மைக்காலமாக அதற்கு மேலும் முக்கியத்துவம் கொடுத்து, அழுத்தம் கொடுத்துச் சொல்லி வருகிறார்.

தன்னைப் பற்றி ஒரு வரியில் சுயமதிப்பீடு என்று சொல்லும்போது மானமிகு சுய-மரியாதைக்காரன்! என்று திட்டவட்டமாகவே தெளிவுபடுத்திவிட்டார்.

டில்லியில் பெரியார் மய்யத் திறப்பு விழாவில் தி.மு.க. தோழர்களுக்கு வேண்டு-கோள் அல்ல_கட்டளையாகவே தெரி-வித்தார்.

பெரியார் _ அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு கோவிலுக்குப் போவது, வாஸ்து பார்ப்பதெல்லாம் கூடாது என்றே தெளிவுபடுத்தியும் விட்டார்.

இந்தச் சூழலில் வேலூர் பகுதியில் தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் ஒருவர் மானமிகு கலைஞர் அவர்களுக்குக் கோவில் எழுப்பி, மூன்று வேளை பூஜைக்கும் ஏற்பாடு செய்துள்ளார் என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சிக்குரியது; கண்டிக்கத்தக்கதுமாகும்.

தி.மு.க. தலைவராகவும், 5 ஆம் முறை-யாகத் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவும் விளங்கக் கூடிய மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களை மதிப்பது, பாராட்டுவது, நன்றி காட்டுவது என்பது இது போன்ற மூடநம்பிக்கைச் செயல்களால் அல்ல!

அவரைப் பொறுத்தவரை பாராட்ட எத்தனையோ பரிமாணங்கள் உண்டே! 87 ஆண்டுகளில் 75 ஆண்டுகளுக்கு மேலான பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான அவர் பன்முகப் பேராற்றல் கொண்டவர். அவர்தம் நூல்களைப் பரப்பலாம்; அவர் முரசொலியில் எழுதி வரும் அறிக்கைகளை அச்சிட்டுப் பொது மக்களுக்கு_ குறிப்பாக இளைஞர்களுக்குக் கொடுக்கலாம்.

பகுத்தறிவு சார்ந்த நூல்களில் இடம் பெற்ற பகுதிகளை அச்சிட்டு வழங்கலாம். கலைஞர் பெயரில் படிப்பகத்தை ஏற்படுத்தி திராவிடர் இயக்கக் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லலாம்_தெரு முனைப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்த-லாம். கலைஞர் அவர்களின் பிறந்த நாளை-யொட்டி பள்ளிகளில், கல்லூரிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளை நடத்திப் பரிசளிக்கலாம்.

பகுத்தறிவு அடிப்படையில் கலைஞர் அவர்களின் புகழை, சாதனைகளைப் பரப்பி அதன்மூலம் அவரை மதித்திட ஆயிரம் ஆயிரம் வழிகள் இருக்கும்போது, தன்மான -_ பகுத்தறிவுக் கொள்கைக்கு விரோதமாக கோயில் எழுப்பி அதில் கலைஞர் அவர்-களைக் கடவுளாக ஆக்குவது என்பது_-நினைத்துப் பார்க்கப்பட முடியாத ஒன்றாகும்.

ஒருவருடைய கொள்கையை ஒழிக்க வேண்டுமானால், அவரை மகானாகவோ, கடவுளாகவோ ஆக்கினாலே போதும் என்பார்கள்.

கலைஞர் என்பவர் திராவிடர் இயக்-கத்தின் கருவூலம்! தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கத் தனிப் பெரும் தளகர்த்தர்! இன்றைக்கு நம்மிடையே வாழும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்.

அவர் மனிதர்  மாபெரும் மனிதர் மதிக்கத்தக்க போராளி. அவரைக் கடவுளாக்கி, பகுத்தறிவாளர்கள் மத்தியில் சங்கடத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபடவேண்டாம். அது சிலையாக இருக்-கட்டும்_அதன் கீழ் கலைஞர் அவர்களின் பகுத்தறிவுப் பொன்மொழி கல்வெட்டாகச் செதுக்கப்படட்டும். கோயில் _ பூஜை என்ற முயற்சியை உடனடியாகக் கைவிடுக!

------------ நன்றி விடுதலை தலையங்கம் (02.07.2010)

25 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பெரியார் _ அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு கோவிலுக்குப் போவது, வாஸ்து பார்ப்பதெல்லாம் கூடாது என்றே தெளிவுபடுத்தியும் விட்டார்.
//
அவரு குடும்பத்துக்கு மட்டும் சொல்லமாட்டாரா? அங்கேயிருந்து தொடங்குனாத்தானே சிறப்பு!

பரணீதரன் said...

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தொடங்க....சுயமரியாதை என்ன எங்கள் அப்பன் வீட்டு சொத்தா?
http://paraneetharan-myweb.blogspot.com/2010/04/blog-post_3519.html

குழலி / Kuzhali said...

இப்படியெல்லாம் செய்தால் கட்சியின் கொள்கைக்கு எதிராக நடந்துகொண்டதாக கூறி முதலில் கட்சியிலிருந்து நீக்கி அவரின் பஞ்சாயத்து தலைவர் பதவியை பிடுங்கி கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் கட்சிக்காரர்கள் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது என்றால் அவருக்கே அதை செய்ய துணிவு வருமா? உண்மையில் துதிபாடிகளுக்கு தானே வாய்ப்புகள் அளிக்கப்படும் அதனால் இவர்களே அதை ஊக்குவிக்கிறார்கள் கருணாநிதிக்கு மட்டுமல்ல கருணாநிதியின் வீட்டின் நாய்க்கு கூட பவர் இருப்பது நக்கி திண்பவர்களுக்கு தெரியாதா என்ன? கோயில் கட்டியதால் அடுத்தடுத்து பெரிய பதவிகளுக்கு போகப்போகிறார் எனவே இன்னும் பல கோயில்கள் நாக்கை அறுத்துக்கொண்டு பூசை என இன்னும் பல திமுக உடன்பிறப்புகளிடமிருந்து எதிர்பார்க்கலாம்

பரணீதரன் said...

/* முதலில் கட்சியிலிருந்து நீக்கி அவரின் பஞ்சாயத்து தலைவர் பதவியை பிடுங்கி கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் கட்சிக்காரர்கள் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது என்றால் அவருக்கே அதை செய்ய துணிவு வருமா? */

--------------------------?

குழலி / Kuzhali said...

//குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தொடங்க....சுயமரியாதை என்ன எங்கள் அப்பன் வீட்டு சொத்தா?
//
ஓ எல்லாத்துக்கும் ஒரு பதில்... சரிசரி இங்கே இந்த வலைதளத்தில் எத்தனை முறை பராசக்தியின் பக்தையான துர்க்கா ஸ்டாலினுக்கு பகுத்தறிவாளர்களுக்கு சங்கடம் தராதீர்கள் என்று பதிவெழுதியுள்ளீர், மஞ்சள்துண்டு (ம் செம்(கனி)மொழி மாநாட்டில் வரவேற்க்க தரப்பட்ட ரோசாப்பூ கூட மஞ்சள் வண்ணம்) என்று மஞ்சள் ராசி பார்க்கும் கருணாநிதிக்கு எத்தனை முறை பகுத்தறிவாளர்களுக்கு சங்கடம் தராதீர்கள் மிஸ்டர் கருணாநிதி என்று எழுதியுள்ளீர்கள், சாயிபாபாவை வீட்டுக்கே கூப்பிட்டு பாதபூசை செய்த மிஸ்ஸஸ் கருணாநிதியை பகுத்தறிவாளர்களுக்கு சங்கடம் தராதீர்கள் என்று எத்தனை முறை எழுதியுள்ளீர்கள்... பதவிக்காகவும் காசுக்காகவும் கருணாநிதியின் கருணைக்காகவும் கோயில் கட்டியவனை கண்டிக்கும் முன் இவர்களை கண்டித்திருந்தால் ஒரு நியாயம் இருக்கும்... தலைவருக்கு மட்டுமில்லை தொண்டர்களுக்கும் கூட பெரிய இடம் எதுவேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் அடிமட்ட தொண்டன் உங்கள் கொள்கைகளை காப்பாற்றும் வீரனாக இருந்து சாகவேண்டும்... போங்கய்யா நீங்களும் உங்க பகுத்தறிவும்.

குழலி / Kuzhali said...

///* முதலில் கட்சியிலிருந்து நீக்கி அவரின் பஞ்சாயத்து தலைவர் பதவியை பிடுங்கி கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் கட்சிக்காரர்கள் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது என்றால் அவருக்கே அதை செய்ய துணிவு வருமா? */

--------------------------?
//
இதைத்தான் சொல்ல வந்தேன்
தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் ஒருவர் மானமிகு கலைஞர் அவர்களுக்குக் கோவில் எழுப்பி, மூன்று வேளை பூஜைக்கும் ஏற்பாடு செய்துள்ளார் என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சிக்குரியது;

குழலி / Kuzhali said...

/* முதலில் கட்சியிலிருந்து நீக்கி அவரின் பஞ்சாயத்து தலைவர் பதவியை பிடுங்கி கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் கட்சிக்காரர்கள் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது என்றால் அவருக்கே அதை செய்ய துணிவு வருமா? */

--------------------------?

தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் ஒருவர் மானமிகு கலைஞர் அவர்களுக்குக் கோவில் எழுப்பி, மூன்று வேளை பூஜைக்கும் ஏற்பாடு செய்துள்ளார்
----------
மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் என்பதற்க்கு பஞ்சாயத்து தலைவர் என்று சொல்லிவிட்டேன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

7:45 PM
சங்கமித்திரன் said...
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தொடங்க....சுயமரியாதை என்ன எங்கள் அப்பன் வீட்டு சொத்தா?
http://paraneetharan-myweb.blogspot.com/2010/04/blog-post_3519.html//

உங்க தொடுப்பைப் படிச்சிட்டேன் ஐயா,


நான் கீழே கொடுத்திருக்கும் தொடுப்பைப் பாருங்கள்,
பயபக்தியுடன்,அடுத்த முதல்வர்,துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தார் மண்டபத்தை கட்டி (சொந்தமாக) கோவிலுக்கு அற்பணிக்கிறார்கள்! (அற நிலையத்துறையுடையது அல்ல)

நீங்கள் நினைக்கும் அளவுக்கு அவர்கள் இல்லை!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை என்று சொன்னான் நம் கவி. கொஞ்சம் விசாலமா பாருங்க!

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=33717

பரணீதரன் said...

@ அத்திவெட்டி ஜோதிபாரதி ...

பகிர்ந்ததுக்கு நன்றி......நான் தினமணி பத்திரிக்கையில் அந்த செய்தியை படித்து விட்டேன் அய்யா...நம்மால் முடிந்தவரை எடுத்து சொல்லுவதை விடமுடியதுன்களே......

குடும்ப உறுபினர்களாக இருந்தாலும் ஓரளவுக்குத்தான் நாம் அவர்களின் செயல்பாட்டில் ஈடுபடமுடியும்........என்னை போன்றவர்கள் பெரியாரின் கொள்கையில் ஈர்க்கப்பட்டது பெற்றோரினால் அல்லவே...என் தாய்,தந்தை இருவரும் பக்தி...நான் அப்படி அல்லவே...அனால் அவர்கள் என்னில் ஈடுபடுவது கிடையாது.....அது எல்லா இடத்திலும் இருக்குமுங்க...

பரணீதரன் said...

/*சாயிபாபாவை வீட்டுக்கே கூப்பிட்டு பாதபூசை செய்த மிஸ்ஸஸ் கருணாநிதியை பகுத்தறிவாளர்களுக்கு சங்கடம் தராதீர்கள் என்று எத்தனை முறை எழுதியுள்ளீர்கள்... */

அய்யா நீங்கள் ஒருபக்கமவே பார்குரிங்க......சாயிபாபாவை பார்க்க அப்துல்கலாம்,மன்மோகன் சிங்க்,பிரதிபா பாட்டில் எல்லோரும் அவர் வீடு தேடி சென்றார்கள்.....அனால் கலைஞர் அப்படி அல்லவே... கலைஞரை தேடி அவர் வீட்டுக்கு சாயிபாபா வந்தார்......எங்காவது சாயிபாபா யார் (VIP இருந்தாலும் கூட நீங்கதான் அவரை தேடி போகணும்) வீட்டுக்காவது போனதுண்ட...சொல்லுங்கள் ....ஏன் பகுத்தறிவாதிகளிடம் வந்து பகுத்தறிவை பெற்று செல்லுவதாக நினைக்க கூடாதா?....விவாதம் பண்ணினால் முற்றும் அய்யா...திசையே மாறி போகும் ....விடுங்கள் ..

Unknown said...

ஊருக்குத்தான் உபதேசம்!ஊட்டுக்கு அல்ல! என்பதை ஒப்புக் கொண்டதற்கு வாழ்த்துக்கள்!
ஊட்டைத் தன் வழிக்குத் திருத்த முடியாதவன், ஊரைத் திருத்த என்ன வேர்த்தா வடிகிறது! (மன்னிக்க- உம் வார்த்தைகளிலேயே பதில் அளித்தமைக்கு)

Unknown said...

நான் கடவுளை திட்ட, அதற்கு பரிகாரம் செய்ய குடும்பத்தினரை அனுப்பி விடலாமா? அல்லது குடும்ப உறுப்பினர்களை, தொந்தரவு செய்யாமல் விடுவது, என்பது தான் சுயமரியாதை வழக்கமா? ஆம் எனில், மற்றவர்களையும் தொந்தரவு செய்யாமல், அவர்களையும் மரியாதை செய்யலாமே!

பரணீதரன் said...

/* ஊட்டைத் தன் வழிக்குத் திருத்த முடியாதவன் */

நன் எங்கே அய்யா ஒருமையில் வார்த்தைகளை சொல்லி இருக்கிறேன்......வேண்டாமே இந்த குழப்பம்....

பரணீதரன் said...

/* மற்றவர்களையும் தொந்தரவு செய்யாமல், அவர்களையும் மரியாதை செய்யலாமே! */

அய்யா, இதற்க்கு பதில் நீங்கள் தான் சொல்லவேண்டும்..உங்களை யாராவது தொந்தரவு செய்தார்களா?

Unknown said...

//என்ன எங்கள் அப்பன் வீட்டு சொத்தா? //
இது எப்படி இருக்கு?

//உங்களை யாராவது தொந்தரவு செய்தார்களா?//

தன் குடும்பத்தாருக்கு பிடிக்காதென்று, கட்டுபடுத்தாதவர்கள்- ஊரை கட்டுப்பாடு செய்ய நினைப்பது, தொந்தரவு தானே?

குழலி / Kuzhali said...

//.ஏன் பகுத்தறிவாதிகளிடம் வந்து பகுத்தறிவை பெற்று செல்லுவதாக நினைக்க கூடாதா?....விவாதம் பண்ணினால் முற்றும் அய்யா...திசையே மாறி போகும் ....விடுங்கள் ..
//
ஓ.... வீட்டுக்கு வந்து பகுத்தறிவை பெற்று செல்பவர்களுக்கு கருணாநிதி மனைவி பாதபூசை செய்துவிடுவாங்களோ... அடா அடா

பரணீதரன் said...

/* என்ன எங்கள் அப்பன் வீட்டு சொத்தா */

அது நான் சொன்னது இல்லங்க.....புதுவை முரசுல பாரதிதாசன் எழுதின மானுடம் போற்று கட்டுரை தொகுப்பில் உள்ளது ......சரி விடுங்க ....

பரணீதரன் said...

/* தன் குடும்பத்தாருக்கு பிடிக்காதென்று, கட்டுபடுத்தாதவர்கள்- ஊரை கட்டுப்பாடு செய்ய நினைப்பது, தொந்தரவு தானே? */

உங்களை யாரும் கட்டு படுத்தவில்லையே...இயக்கத்தில் உறுப்பினர் ஆனவர் மட்டுமே கொள்கைக்கு கட்டுப்பட்டவர்கள் ....மற்றபடி அனைவரும் விரும்பி ஏற்றுக்கொண்டால் மட்டுமே அய்யா.....ஏன் விவாதத்தை திசைதிருபுரிங்க....

இறைகற்பனைஇலான் said...

/....சரி விடுங்க .... /
பாவம்- தத்துவ நடிகர் -அறசியல்வாதி -முதல்வர் கருணாநிதி அவர்களைக் காப்பாற்றப்போய் நீங்கள் படும் துன்பம் பார்க்க சகிக்கவில்லை. சரிவிடுங்க...இனி ஜால்ரா போடாதீங்க.

பரணீதரன் said...

/* நீங்கள் படும் துன்பம் பார்க்க சகிக்கவில்லை. சரிவிடுங்க...இனி ஜால்ரா போடாதீங்க. */
உங்கள் பேச்சை கேட்டால்தான் எனக்கு பாவம் போல தெரிகிறது....சரி விடுங்கள் என்பதனை புரிந்துகொள்ளகூட பகுத்தறிவு எட்டவில்லையே என்று....கற்பனை என்று தானே உங்கள் பெயரில்
வைத்துள்ளீர்..அதனால் போலும்..பாவம் கூட்டத்தோடு கோவிந்த போடும் கோஷ்டி போல .....

Robin said...

நாத்திகவாதமெல்லாம் பெரியாரோடு போயிற்று. என்று அண்ணாத்துரை அரசியலுக்கு வந்து ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்று சமரசம் செய்துகொண்டாரோ, அன்றே நாத்திகம் என்பது மேடைக்காக மட்டுமே என்று ஆகிவிட்டது. உங்களுக்கு நாத்திகம் பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள் தவறில்லை. ஆனால் அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்.

நம்பி said...

//ரம்மி said...

நான் கடவுளை திட்ட, அதற்கு பரிகாரம் செய்ய குடும்பத்தினரை அனுப்பி விடலாமா? அல்லது குடும்ப உறுப்பினர்களை, தொந்தரவு செய்யாமல் விடுவது, என்பது தான் சுயமரியாதை வழக்கமா? ஆம் எனில், மற்றவர்களையும் தொந்தரவு செய்யாமல், அவர்களையும் மரியாதை செய்யலாமே!
8:12 AM //

அவங்க பரிகாரம் பண்ண அனுப்பினாங்களா? இல்லை பலகாரம் துண்ண அனுப்பினாங்களா என்பதை எல்லாம் இங்கேயிருந்து அதே மூடநம்பிக்கையோடவே ஆராய்ச்சி பன்றதை விட்டுறலாம்....இது மாதிரி பெரியாரையும் போலியா ஆராய்ச்சி பண்ணிட்டு தான் இருந்தாங்க..ஊருக்கு உபதேசம் பண்ணிட்டு புள்ளையாரை கும்பிடுறார் என்று...(அதில் 1 சதவீதம் கூட உண்மையில்லை...அவர்களுக்கு நாத்திகத்தின் மேல் லைட்டா ஆசை..கன்பார்ம் பன்னிக்கிறதுக்காக இந்த பிட்டை அப்பப்ப போடறது..இல்லைன்னா பெரியார் கும்பிட்டார்னா அப்படியே விட்டற வேண்டியது தானே..).

கலைஞர் குடும்பத்துல இருக்கற அனைவரும் பின்பற்றல சரி இந்த குற்றசாட்டை வைக்கிறவங்க குடும்பங்கள் அனைவரது குடும்ப உறுப்பினர்களும்...க்ட்டாயமாக பின்பற்றி வருகிறார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா...வலியுறுத்துபவரே நாத்திகவாதி கிடையாதே...சரி எதற்காக இந்த ஆராய்ச்சி...?

இதற்கு எம் ஆர் ராதா கூறியது...சும்மா ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்காதே..இந்த நொட்டை சொல்லிக்கொண்டு....அந்த நொட்டை சொல்லிக்கொண்டு இருப்பது எல்லாம் களங்கம் கற்பிக்கத்தான்...இஷடம் இருந்தா ஏத்துக்க இல்லை பாழுங்கிணத்தில போய் விழுந்துக்க...அதுல யாருக்கு நஷடம்...?


பெரியாரின் அப்பா, அம்மா எல்லாம் ஆத்திகவாதிகள் தான்...பெரியாரும் அந்த ஆத்திகத்தில் இளவயதில் ஆட்பட்டவர்தான்...ஆத்திகம் திணிக்கப்படுவது..அது எந்த மதக் கடவுளாகவும் மூத்தவர்களால் திணிக்கப்படும்...அந்த பரம்பரையை சார்ந்து அப்படியே திணிக்கப்பட்டுகொண்டே வருகிறது..பிறக்கும்பொழுதே ஒட்டிக்கொண்டு வருவதல்ல...சாதி..மதம் எல்லாம் அப்படித்தான்...

பகுத்தறிவுடன் பிறந்த குழந்தைக்கு திணிக்கப்படுவது தான் இந்த நம்பிக்கைகள் அத்ன கேள்விக்கு அறிவப்பூர்வமான, உண்மையான பதிலை சொல்லாமல், ஏதோ சொல்லவேண்டுமே என்று சொல்லி அதன் பயத்தை மேலும் தூண்டிவிட்டு விதைக்கும் நஞ்சு இந்த மூடநம்பிக்கைகள்...அது மேலும் மேலும் சமூகத்திடமிருந்தும் இன்னும் பல நஞ்சுக்களை தன்னுள் வாங்கி கொண்டு வளருகிறது. பின்னாளில் இன்னும் நிறைய பேரை தத்துவம் சொல்லிமுட்டாளுக்குகிறது. எங்கெங்கே என்னென்ன கத்துகுச்சோ அது மொத்தத்தையும் அப்படியே மற்றவரிடம் பிலடப் பண்ணி டிரான்ஸ்பர் பண்ணும்....இந்த திணிப்பு அப்படிய போகும்...

நீ கடவுளை மற இல்லாவிட்டால் சோறுகிடையாது என்று எந்த பகுத்தறிவுவாதியும் சொல்ல மாட்டர்ன்...


ஆனால் இப்படி சொல்லுவார்கள் சாமி கும்பிட்டாதான் சோறு, வடை... இல்லையென்றால் இப்படி..... சாமி சாப்பிட்டபிறகு தான் வடை, சோறு, பாயாசம் என்று எல்லாம்...

குழந்தை எதிர்த்தாலும்...

போட்டோவில இருக்கற சாமி எப்படி சாப்பிடும்...எனக்கு முதல்ல கொடு என்று குழந்தை சொன்னால் உதை கொடுத்து ஆத்திகத்தை வற்புறுத்துவது ஆத்திகம் மட்டும் தான்....இப்படி கும்பிடு அப்படி கும்பிடு...விழுந்து கும்பிடு கவுந்தடிச்சி கும்பிடு...புறண்டு புறண்டு கும்பிடு...எல்லா வன்முறையும், அராஜகமும் ஆத்திகத்தில் தான்.

இம்மாதிரி விஷயங்களை குடும்பத்தில் உள்ளவர்களிடம் பகிர்ந்தாலும் ஏற்றுக்கொளவதில்லை...அதே மாதிரி பொதுவிலும்....ஏற்றுக்கொள்வபவதும் ஏற்றுக்கொள்ளாததும் அவர்கள் உரிமை......கொள்கையை புரியவைப்பது நம் கடமை, பெரியாரிசம்.....எப்போது புரிகிறதோ புரிந்து கொள்ளட்டும்....காரணம் அவர்களுக்கும் மரணபயம் எல்லாம் உண்டு...இவர்களை பார்த்து சில மூடநம்பிக்கைகளை விலக்கி வைப்பார்கள்...அவ்வளவு தான்..

நீ கடவுளை மறந்தால் தான் என்னுடன் இருக்கமுடியும்...என்னுடன் வாழ முடியும் என்று எந்த குடும்பத்திலும் உறவுகளை வற்புறுத்த முடியாது...இதுவே ஒரு உரிமை மீறலாகும்...இதை பெரியாரும் செய்ததில்லை...எந்த ஒரு பகுத்தறிவாளரும் செய்ததில்லை....செய்யவும் மாட்டார்கள்...

நம்பி said...

//Robin said...

நாத்திகவாதமெல்லாம் பெரியாரோடு போயிற்று. என்று அண்ணாத்துரை அரசியலுக்கு வந்து ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்று சமரசம் செய்துகொண்டாரோ, அன்றே நாத்திகம் என்பது மேடைக்காக மட்டுமே என்று ஆகிவிட்டது. உங்களுக்கு நாத்திகம் பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள் தவறில்லை. ஆனால் அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்.
7:07 AM //

பெரியாரின் அத்துணை உறவினர்களுமா...? நாத்திகர்கள்...இல்லையே...அவர் முதல் மனைவி கூட ஆத்திகராயிருந்தவர் தான்..? வெளியில் காட்டிக்கொள்ளமாட்டர்கள். கொள்கை விமர்சிக்கப்டும் என்பதற்காக அவர் பிராயசப்பட்டு வெளிக்காட்டமால் இருந்திருக்கலாம்...அது மாதிரி அவரின் இதர உறவினர்கள் இருந்ததில்லை...வற்புறுத்தலில் எல்லாம் பகுத்தறிவுவாதியாக மாற முடியாது. அறிஞர் அண்ணாவுக்கு முன் நீதிக்கட்சியில் பெரியாருக்கு வலதுகரமாக இருந்த சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் ஆன்மீகவாதிதான்...பெரியாரைத்தவிர வேறொருவரைத் தலைவராக நினைத்துக் கூட பார்க்கவிரும்பாதவர். சுயமரியாதையுடன் நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள பெரியார் என்றுமே தடை செய்ததில்லை. கொள்கை கடவுள் மறுப்பு தான்.


பகுத்தறிவு வற்புறுத்தலில் வருவது அல்ல. அப்புறம் அதுவும் ஒரு திணிப்பாகிவிடும். ஆத்திகத்தை விட மோசமாகிவிடும் இதற்கும் அதற்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும். பகுத்தறிவு என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.
கத்தி முனையிலும், துப்பாக்கி முனையிலும், வன்முறையாலும் கடவுள் பிரச்சாரங்கள் தான் இதுவரை நடந்துள்ளன....சைவ, வைணவ கடவுள் மோதல்களே சாட்சி...மதக்கலவரங்களே சாட்சி....கரசேவையே சாட்சி.....இன்னும் நடந்து கொண்டுவருகின்றன. பகுத்தறிவு பிரச்சாரங்கள் அப்படி நடைபெறுவதில்லை. இனிமேலும் நடைபெற்ப்போவதில்லை.

அரசியலுக்காக மாற்றப்பட்டது தான்..ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது. அனைவரும் அறிந்த விஷயம் தான்..எல்லோரையும் இறை மறுப்பாளராக மாற்றமுடியாது..இதனால் தான் பெரியார் தனது இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றவில்லை...சமரசத்திற்கு ஆட்படவேண்டும் என்பதற்காக...அதறாகாக என்ன பெரியாரிஸ்டு எல்லோரும் வாக்களிக்காமலா இருக்கிறார்கள்?..அப்புறம் அவர்கள் அனைவரும் ஜனநாயக விரோதிகளாகத்தான் பார்க்கமுடியும்....அரசு, அரசியல் என்பது பொது எல்லோரையும் உள்ளடக்கியது....

மரணபயத்திலிருந்து எல்லோரையிம் விடுவித்துவிட முடியாது...(இந்திய சட்டமே மரணபயத்தை விரும்புகிறது...தூக்கு தண்டனை....இந்த சட்டம் இருந்தும் தான் அதிக குற்றம் இங்கு நடைபெறுகிறது அது வேறு விஷயம்) அதற்கு ஆதரவாக வைத்திருக்கும் மதநம்பிக்கையிலிருந்தும் உடனடியாக விடுவித்துவிட முடியாது...இப்படி எந்த நாட்டிலும் இல்லை...எல்லோரையும் ஒன்றிணைக்க இந்த ஒரு வழிதான் இருக்கிறது...இல்லையேல் இந்த கடவுள் சரி..அந்த கடவுள் சரி என்ற வீண் விவாதத்திற்கும், சண்டைக்கும் தான் வழிவகுக்கும்.

பெரியாரும் சுயமரியாதையுட்ன ஒருவர் வணங்க ஆயிரம் கடவுளைக்கூட உருவாக்கி கொள்ள சொன்னார். இன்னொருவனுக்கு அடிமைப்படாதே...கடவுளைக்காட்டி அடிமைப்படுத்தும் கூட்டத்திடம் சிக்கிக்கொள்ளாதே, அந்த கடவுளைக்கொண்டு உன் நம்பிக்கையை கொண்டு மூடநம்பிக்கையை பிறரிடம் வளர்க்காதே...பிறருக்கு அதை போதிக்காதே...உனக்கு பிடித்திருக்கிறதா...நீயே கும்பிட்டு கொள்.... என்று நம்பிக்கை தான் வாழ்க்கை என வாழ்வோருக்காக கூறினார்.

ஆணும், பெண்ணும் சமம், உணர்வுகள் சமம் எனப்படும் பொழுது...எப்படி குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை மதிக்காமல் இருக்கமுடியும்...இதை அவர்களும் சுட்டிக்காட்டிக் கொண்டே தான வருவார்கள். தனிமனித உரிமைகள், உணர்வுகள் போற்றப்படல் வேண்டும். அது மனிதவுரிமை சட்டம். தனிமனித சுதந்திரம்.


ஏன் ஜாதி ஒழிப்புக்காரர் பழகுகிற, நட்புக்கொள்ளுகிற அனைவருமா ஜாதி மறுப்புக்காரர்...இல்லையே...பார்ப்பனீயத்தை எதிர்க்கும் நபருக்கு நட்புக்கள் அனைவருமா? பார்ப்பனர் அல்லாதவர்கள்..பார்பனீயத்தை ஆதரிப்பவர்கள்...அனைவருக்குமா இதே மாதிரியான நிலைமை....இல்லையே...அதற்குரிய காலம் வரை காத்திருக்கத்தான் வேண்டும்...அதுவரை இது தொடரும்...

நட்புக்கும் தெரியும் இவர் நம் பார்ப்பனீயத்தை பார்ப்பனரை எதிர்ப்பவர்கள் என்று தெரியும்...அது அவர் கொள்கை...அதையும் மீறிய பிணைப்புகள் தான் சமூதாயம்.


தொடர்ச்சி...

நம்பி said...

தொடர்ச்சி....2

பெரியாரின் கொள்கை தெரிந்தவர் ராஜாஜி என்ன விலகியாவிட்டார். நட்பு தொடர்ந்தது..குன்றக்குடி அடிகாளரின் நட்பு தொடர்ந்தது...அவரை சந்திக்கும் பொழுது கூட பெரியார் விபூதி பூசிக்கொண்டு சென்றவர் தான்...ஏன் என்று குன்றக்குடி வினவியபோது உங்கள் நம்பிக்கையாளர்கள் உங்களை தவறாக எண்ணக் கூடாது என்பதற்காக..என்று கூறினார்.

கண்ணதாசணும் ஒரு பகுத்தறிவு கூட்டத்தில் பேசவேண்டிய நபர் வராதபொழுது தான் பூசியிருந்த விபூதியை அழித்துவிட்டு பகுத்தறிவு மேடையேறி பேசினார்...

ஆன்மீக இலக்கிய பேச்சாளரான் பேராசிரியை டாக்டர் சாராத நம்பி ஆரூரான் அவர்களை சமீபத்தில் பேட்டிக்கண்ட பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியது,,,,ஆன்மீகவாதியான நீங்கள் ஏன் நாத்திகரான பெரியார் பற்றி பேசவேண்டும். நீங்கள் பேசியிருக்க கூடாது. (கருத்து வைத்தவர் எழுத்தாளர் பவா அவருக்கு என்ன பெரியார் மீது அவ்வளவு கோபமோ தெரியவில்லை) என்றதற்கு பெரியார் கடவுள் மறுப்பாளர் அது அவர் கொள்கை ஆனால் பெண்ணியம் போற்றுபவர்...பெண் விடுதலைக்கு அவரைத்தவிர எந்த ஆன்மீகவாதியும் இந்தளவுக்கு குரல் கொடுத்ததில்லை..போராட்டம் நடத்தியிதில்லை....அவர் இல்லையேல் பெண்விடுதலையே அடைந்திருக்க முடியாது...அவரை பற்றி பேசுவதில் என்ன தவறு...நாத்திகவாதிகள் தீண்டத்தகாதவர்களா என்ன?

தீண்டாமையை எதிர்த்து போராடிய ஒரு நல்ல மனிதர் எப்படி தீண்டத்தகாதவராக இருக்கமுடியும். இந்த நற்பண்பு பகுத்தறிவுவாதிகளுக்கு நிறைய உண்டு. அவரை பற்றி பேசியதில் தவறு இல்லை...நாத்திகத்தை தொடாமல்..பக்குவமாக என் ஆத்திக கொள்கைக்கு இடர் வராமல் அவரை புகழ்ந்து பேசுவேன் இன்னும் பேசுவேன். என்று கூறினார்.

அது போலத்தான் குடும்பத்தில் உள்ளவர் அனைவரும் இதைத்தான் பின்பற்ற வேண்டும் என்று சர்வாதிகாரம் எல்லாம் காட்ட முடியாது. காட்டிவிட்டு மனிதவுரிமை பற்றி அளக்கமுடியாது.

ஆன்மீகம் மட்டுமே அந்த மாதிரி விஷயங்களை தயவுதாட்சயண்யமின்றி செய்யும் குண்டு வெடிக்கும்..பல பேரை ஈவு இரக்கமின்றிக் கொல்லும்....கேட்டால் மதத்தையும், சாதி சனத்தையும் காக்க என்று சொல்லும். மதமாற்ற தடை சட்டத்தை ஆதரிக்கும். எல்லா மனிதவுரிமைக்கும் தடை போடும்.

பகுத்தறிவு இது மாதிர எல்லாம் போடாது...அனைவரது உரிமையும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். பிரச்சாரமும் நடைபெறும்.

குடும்ப உறுப்பினர்களும் அவரைப்போல மாறவேண்டும்...அதை வற்புறுத்தலில் கொண்டு வரமுடியாது. அதை ஒரு பெரிய குற்றமாகவும் சுட்டிக்காட்டிக்கொண்டிருக்க முடியாது. எங்கேயாவது வேண்டுமானால் லேசாக இடிக்கலாம். இடிப்பவர் முதலில் பகுத்தறிவுவாதியாக இருக்க வேண்டும்...புறஞ்சொல்பவராக இருக்க்கூடாது. அவரு மட்டும் இவரு மட்டும்...எவரு மட்டும....நீ மட்டும் என்று திருப்பி கேட்டால் என்ன பதில் இருக்கிறது காட்டுவதற்கு...மதமும் மூடநம்பிக்கையும் தான் இருக்கிறது....நீ எந்த காலத்திற்கும் மாறப்போவதில்லை...அவரு குடும்பம் மாறினா என்ன? மாறாவிட்டால் என்ன...? இதைத்தான் எம்.ஆர் ராதா குறிப்பிடுவது...ஆராயாதே இஷ்டம் இருந்தா ஏத்துக்க..இல்லாட்டி போய்ட்டேயிரு...சும்மா ஆரய்ச்சி பண்ணிகிட்டே இருக்காதே...

நம்பி said...

//இறைகற்பனைஇலான் said...

/....சரி விடுங்க .... /
பாவம்- தத்துவ நடிகர் -அறசியல்வாதி -முதல்வர் கருணாநிதி அவர்களைக் காப்பாற்றப்போய் நீங்கள் படும் துன்பம் பார்க்க சகிக்கவில்லை. சரிவிடுங்க...இனி ஜால்ரா போடாதீங்க.
2:51 AM //

இப்போது இந்த பின்னூட்டம் யாரை காப்பாற்ற பாடுபடுகிறது?....இதே மாதிரி துன்பத்துடன் இருக்க எல்லோரையும் எப்படி வற்புறுத்த முடியும். அவரவர் ஜால்ரா அவரவர்க்கு உசத்தி, அதானே உண்மை....

பின்னூட்ட கருத்துப்படி பின்பற்றல், ஆதரவு, புகழ்தல் எல்லாம் ஜால்ரா என்றால்....நான் போடற ஜால்ராவையே நீங்களும் போடனும்னா எப்படி...? இது படா போங்கா இருக்கே...உடனே ஜால்ரா போடற என்பதை ஒத்துகிட்டதுக்கு நன்றி! என்று பின்னூட்டம் எல்லாம் போடப்படாது...

பின்னூட்ட கருத்துப்படி பார்த்தால் எல்லோருமே ஜால்ராக்கல் தான். யாருக்காவது ஆதரவு தெரிவிச்சுகிட்டுதானே இருக்கோம்...அப்புறம் என்ன...? ஜால்ராவுல கூட சர்வாதிகாரம்பா....நீ எங்கட்சிக்காரனுக்கு மட்டும்தான் ஜால்ரா போடனும், இல்லையேண்டால் அவ்வளவு தான்...

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]