வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, July 17, 2010

எது தலைமை? எது கழகம்? சாதிக்கும் சக்தி யாரிடத்தில்?

சமூகநீதியில் கழகம் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல.

சமூகநீதிக்காகத்தான் தந்தை பெரியார் காங்கிரசை விட்டே வெளியே வந்தார்.

அதே காங்கிரசைக் கொண்டே சமூக நீதிக்காக அரசமைப்புச் சட்டத்தை முதன்முதலாகத் திருத்தவும் செய்தார்.

மத்திய அரசுத் துறைகளிலே இடஒதுக்கீடு கிடையாது; 1940-இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டிலேயே இதுகுறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றாலும் செயலுக்கு வரவில்லை. ஜனதா அரசு அமைத்த மண்டல் குழு பிற்படுத்தப்பட்ட மக்-களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்-கீட்டைப் பரிந்துரை செய்தாலும் (31.12.1980) அதனை நடைமுறைக்குக் கொண்டுவர பார்ப்பன ஆதிபத்தியம் அனுமதித்து விடவில்லை.

திராவிடர் கழகம் அதற்காக 42 மாநாடுகளை நடத்தவேண்டியிருந்தது; 14 போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. டில்லி வரை சென்று போராடியது திராவிடர் கழகம் -_ தமிழர் தலைவர் மானமிகு வீரமணி தலைமை யில்.

அதன் விளைவாக இந்தியா முழு-மையும் உள்ள அனைத்துப் பிற்படுத்தப்-பட்ட மக்களுக்கும் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு வழி செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் சமூகநீதியின் ஆணி வேரையே வெட்டும் பொருளாதார அளவுகோலைத் திணித்தார். அதனை எதிர்த்தும் திராவிடர் கழகம் போரிட்டது; இறுதி வெற்றி கழகத்துக்கே! மேலும் ஒரு புதிய வாய்ப்பு _ யாரும் எதிர்பார்க்காதவகையில் பிற்படுத்தப்பட்டோருக்கு அதுவரை இருந்து வந்த 31 விழுக்காட்டை 50 ஆக உயர்த்தி ஆணை பிறப்பித்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்.

தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு 69 விழுக்காடு இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் என்னும் நிலை உறுதியாயிற்று.

50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடுப் போகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தன் போக்கில் ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. அதனை எதிர்த்து 69அய் நிலை கொள்ளச் செய்யும் பொறுப்பும் திராவிடர் கழகத்தின் தோள்மீதுதான் விழுந்தது. தமிழர் தலைவர் உருவாக்கிக் கொடுத்த சட்டம்தான் 31-_சி பிரிவு என்பது. அது ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாதுகாப்பு வசதி செய்யப்பட்டது.

அதனை எதிர்த்தும் ஆதிக்கவாதிகள் உச்சநீதிமன்றம் சென்றனர். 1994 முதல் இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் உச்சநீதிமன்ற ஆயம் (ஙிமீஸீநீலீ) சமூக நீதியாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. (13.7.2010)

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீடு தொடரப்படுகிறது. அதனை நிலை நிறுத்த சில யோசனைகளையும் உச்சநீதிமன்றம் தந்திருக்கிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நீதியரசர் திரு. எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்கள் தலைமையில் உள்ளது. அதனைக் கலந்து கொண்டு, தக்க புள்ளி விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தந்து வெற்றி பெறும் வைர ஒளி மின்னுகிறது. இதன் மூலம் இந்திய அளவுக்கே நல்வழி காட்டும் பாதை திறந்து விடப்பட்டுள்ளது.

ஒன்றை இந்த நேரத்தில் குறிப்பிடுவது மிக மிக முக்கியம்.

தந்தை பெரியார் இல்லாத கால கட்டத்தில் சமூக நீதித்திசையில் இவ்வளப் பெரிய சாதனை களைச் செய்து வந்தது திராவிடர் கழகம் தான். அதன் தன்னிகரற்ற தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தொலை நோக்குச் சிந்தனைகள், சட்டப் பேரறிவு, நுண்மான் நுழைபுலம் இவற்றிற்கெல்லாம் அடித்தளமாக இருந்து வருகின்றன.

கல்லெல்லாம் மாணிக்கக் கல் அல்ல
கழகம் எல்லாம் திராவிடர் கழகம் அல்ல.
தலைவர் எல்லாம் தமிழர் தலைவர் வீரமணியும் அல்ல.

தந்தை பெரியார் அவர்கள் தந்த சமூகநீதியா கட்டும்; பகுத்தறிவுக் கொள்கையாகட்டும்; எந்த முற்போக்கு எண்ணங்கள் ஆகட்டும்; அவை எல்லாம் இந்தக் கழகத்தாலும், தலைமையாலும் தான் சாத்தியம் என்பது காலத்தின் கல்வெட்டாகும் - நடைமுறை உண்மையுமாகும்.

பெரியார் கொள்கைகளை நாங்களும் சொல்கிறோம் செய்கிறோம் என்று சொல்லக் கூடியவர்களிடத்தில் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருப்பார்களாக!

இவர்களால் இவற்றைச் சாதிக்க முடியுமா என்று ஒரு கணம் ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்த்தால் எது தலைமை? எது கழகம்? சாதிக்கும் சக்தி யாரிடத்தில்? என்பதில் தெளிவு பெற்று விடலாமே!


---------- விடுதலை ஞாயிறு மலர் (17.07.2010)

9 comments:

Thamizhan said...

பெரியார் இன்னும் தேவையா?
பெரியாரின் உண்மைத் தொண்டர்கள் யார்? எவ்வளவு பேர் ? பார்ப்பனீய எதிர்ப்பு இன்னும் வேண்டுமா?அவர்கள் தாம் மாறிவிட்டார்களே.
விவரந் தெரியாதவர்களும், விவரந்தெரிந்து குழப்ப வேண்டும் என்று செயல் படுபவர்களும் இதே வேலையாகத் திரிகிறார்கள்.

அன்று முதல் இன்று வரை ஆக்க பூர்வமாகத் தமிழின முன்னேற்றத்திற்குப் பாடு பட்டு வரும் கருப்பு மெழுகு வர்த்திகளும், அவர்களுக்குத் தலைவராகத் தனது உடல் நலத்தைவிட இன நலந்தான் பெரிது என்று எளிமையாக வாழ்ந்து, கடுமையாக உழைத்த தந்தை பெரியார்,அதே வழியில் தனது உடல் நலத்தைவிட இன நலந்தான் முக்கியம் என்று உழைக்கும் தலைவரும் நன்றி எதிர் பார்த்தோ ,பாராட்டுக்காகவோ உழைப்பவர்கள் அல்லர் என்பதை உணர்ந்தவர்கள் உண்ராதவர்களுக்குப் பொறுமையாக எடுத்துரைப்போம்.

ரம்மி said...

//கல்லெல்லாம் மாணிக்கக் கல் அல்ல
கழகம் எல்லாம் திராவிடர் கழகம் அல்ல.
தலைவர் எல்லாம் தமிழர் தலைவர் வீரமணியும் அல்ல.//
தனி மனித வழிபாடு, பகுத்தறிவுக்கு உகந்தது அல்ல!

சங்கமித்திரன் said...

அய்யா இது தனிமனித பெருமை அல்ல..எதிர்ப்பு,துரோகம் என்று வரும்போது எம்மை யார் என்று வெளிப்படுத்தியே ஆகவேண்டும். அதுதான் இந்த கட்டுரை.

நியோ said...

உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி ;ஒடுக்கப் பட்ட மக்களுக்கு கிடைத்த ஆறுதல் ;முன்னேறிய வகுப்பினர் என்று தங்களை தாங்களே பிரஸ்தாபித்துக் கொண்டோருக்கு கிடைத்த சம்மட்டி அடி!

இவையெல்லாம் யாராலே சாத்தியமாகியது ?எந்த இயக்கத்தால் சாதிக்கப்பட்டது ?ஆசிரியர் வீரமணி அவர்களாலும் கருஞ்சட்டைப் படை திராவிடர் கழகத்தினால் தானே ...?சாதிக்கும் சக்தி மட்டுமல்ல சாதிக்க வேண்டுமென்ற உணர்வும் சமத்துவத்தை கொணர வேண்டுமென்ற கனவும் உள்ளவர் உள்ளது ஆசிரியரும் திராவிடர்கழகமும் தான் என்பதை அனைவருக்கும் உரக்கச் சொல்கிறது உங்கள் பதிவு ...

பெரும் நன்றிகள் தோழர் சங்கமித்திரன் !

smart said...

ஒதிக்கீடு வங்கிக் கொடுத்தீர்கள் சரி, அந்த ஒதிக்கீட்டை திரும்பப் பெறும் நாள் என்று ஒன்றுயிருந்தால் அது எப்போது என்றுக் கூறுங்கள்.

சங்கமித்திரன் said...

என்றைக்கு நூலின் ஆதிக்கம் குறைகிறதோ அன்று தானாகவே அழிந்துவிடும்...... smart அய்யா.

smart said...

//என்றைக்கு நூலின் ஆதிக்கம் குறைகிறதோ அன்று தானாகவே அழிந்துவிடும்...... smart அய்யா//
இப்படி மொட்டையாக பதில் அளிக்கக் கூடிய நிலையில் தான் ஒதிக்கீடு நடைமுறையுள்ளது. இதனால் எந்தவித ஆரோக்கியப் பயனும் கிட்டப்போவதில்லை. என்று மாறும் என்று உறுதியாக கணிக்க முடியாத ஒரு நிலையில் இதை பயன் படுத்துவதை விட இதற்குப் பதிலாக சாதியை யாரும் அரசு அல்லது தனியார் அல்லது எங்குமே சான்றிதழில் சேர்க்க வேண்டாம் என ஒரு ஆணைப் போட்டால் போதுமே! மிகச் சரியாக ஒரு தலை முறைக் கழித்து நாட்டில் பிறக்கும் குழந்தைக்கு தான் என்ன சாதியென்று தெரியாமலே வளருமே
எப்படி இந்த யோசனை?

சங்கமித்திரன் said...

முல்லை முள்ளலாதான் எடுக்க முடியும்....... சாதி பெயர் தெரியாமல் இருப்பது முக்கியம் அல்ல...அதனால் இழிவு பெறாமல் இருக்க என்ன வழி? ஒரே வழி கல்வி மற்றும் வேலை வாய்ப்பு........இவை அனத்தும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் அனைவருக்கும் போய் சேர்ந்தால் (பார்ப்பனர்களில் எப்படி ஒருவர் கூட கல்லுடைக்காமல்,உழுவாமல்,செருப்பு தைக்காமல், சாலை ஓர வியாபாரி இல்லாமல்....சாய்ந்த திண்ணை உட்கார்ந்து அங்கில பத்திரிகை படிக்கிறார்களோ அப்படி வர வேண்டும் எங்கள் பிள்ளைகளும்) பிறகு யோசிக்கலாம் சாதி சான்றிதல் வேணுமா? வேண்டாமா? என்று...

நம்பி said...

//இப்படி மொட்டையாக பதில் அளிக்கக் கூடிய நிலையில் தான் ஒதிக்கீடு நடைமுறையுள்ளது. இதனால் எந்தவித ஆரோக்கியப் பயனும் கிட்டப்போவதில்லை. என்று மாறும் என்று உறுதியாக கணிக்க முடியாத ஒரு நிலையில் இதை பயன் படுத்துவதை விட இதற்குப் பதிலாக சாதியை யாரும் அரசு அல்லது தனியார் அல்லது எங்குமே சான்றிதழில் சேர்க்க வேண்டாம் என ஒரு ஆணைப் போட்டால் போதுமே! மிகச் சரியாக ஒரு தலை முறைக் கழித்து நாட்டில் பிறக்கும் குழந்தைக்கு தான் என்ன சாதியென்று தெரியாமலே வளருமே
எப்படி இந்த யோசனை? //

இப்படி சட்டம் போட்டால் தான் சரியாக வரும்...சாதிய அடையாளங்களை...காட்டும் மனிதன் எவனாயிருந்தாலும்...சுடவேண்டும்...உயர்வுதாழ்வு பார்ப்பவன் அனைவரையும் சுட்டுத்தள்ள வேண்டும...வர்ணாசிரமதர்மம் என்று வாயைத்திறந்தாலே வாயிலேயே பொட் பொட் என்று சுடவேண்டும்...புராண இதிகாசங்களை தூக்கி கொண்டு வந்து மனிதனை மூடனாக்குபவனை சுடவேண்டும், மதத்தை கொண்டு மனிதனை பிரிப்பவனை அந்த நிமிடமே சுட்டுத்தள்ளவேண்டும், கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு காமலீலை பண்ணுகிறவனை அந்த இடத்திலேயே வைத்து சுடவேண்டும், சோம்பேறியாக இருந்து கொண்டு எனக்கு மட்டும் தான் இந்த தொழில் என்பவன் அனைவரையும் சுடவேண்டும், மதக்கலவரம் உண்டு பண்ணுபவனை அந்த நிமிடமே சொறி நாயை சுடுவது போல் சுட்டுத்தள்ளவேண்டும், தீண்டாமை பார்ப்பவனை சுடவேண்டும், சமத்துவம், சமதர்மம் பார்க்காதவனை சுடவேண்டும், இல்லாதவனை ஏங்கவிட்டு இருப்பவன் வேடிக்கை பார்ப்பதை கண்டவுடன் சுடவேண்டும், தொழில்களில் வேறுபாடு காட்டுபவரை சுடவேண்டும் என்று சர்வாதிகார சட்டம் போட்டால் (இது இப்படித்தான் கூப்பாடாக வரும்) பலன் பலமாக உண்டு...அந்த தலைமுறையிலேயே முக்கால்வாசியை ஒழித்துவிடலாம்...அது என்ன கால்வாசி...அது தான் சஸ்பென்ஸ்...அது எதிர்ப்பலை..எந்த ஒரு செயலுக்கும் ஒரு எதிர்ப்பலை உண்டு...அது வயலன்சாக கூட இருக்கலாம். இந்த யோசனை தான் சூப்பர்...அடுத்த தலைமுறைக்கு போகவே தேவையில்லை...இந்த தலைமுறையிலேயே மொத்தத்தையும் இப்பவே குளோஸ் பண்ணிடலாம்.

மொத்த பேரும் அமைதியா ஆயிடுவாங்க...ஜாதி....இவன் ஜாதி..மதம் என்று சொல்லிகிட்டு திரியறான்...வாங்க வந்து சுடுங்க...என்று ஆளாளுக்கு போட்டு கொடுப்பாங்க...

சரி இந்த சட்டத்தை போடறவ எந்த ஜாதி...அவன் உஷாரா அவன் ஜாதிக்காரனைத்தவிர மத்த ஜாதிக்காரனுங்க எல்லோரையும் சுட்டுத்தள்ள உத்தரவு போட்டுட்டான்னா...ஆமா இல்லை...ஆமாவா...இல்லையா...?

இந்த ஜாதி சான்றிதழ் பற்றி, இடொதுக்கீட்டுக்கு எதிராக குரல் கொடுப்பவர் அனைவருமே மேல்ஜாதி...ஏன்? இந்த ஐடியா...பட்டியலினத்தவருக்கோ...பிற்பட்ட சமுதாயத்தினருக்கோ....சிறுபான்மையினருக்கோ....நலிந்த பிரிவின்ருக்கோ வரமாட்டேங்குது...ஏனென்றால் இவன் நாட்டாமை இவங்க வந்ததாலே தடை படுது...அதான் அங்க சூட்சுமம். இவன் ஜாதி சாக்கடையில் இருந்து கொண்டே இதை வலியுறுத்துகின்றான். இதை எடுத்திடலாமே...இதை எடுத்திடலாமே...தாராளமா எடுத்திடலாம்...ஆனா நிறைய மனதிலிருந்து எடுக்க வேண்டுமே...நாட்டிலிருந்து எடுக்கவேண்டுமே.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]