வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, July 01, 2010

ரவிசுப்பிரமணியத்தின் இங்கே பிராமணன் (காஞ்சிமட மர்மங்கள்) - 1

எங்கே பிராமணன்? எங்கே பிராமணன்? என்று சோ ராமசாமி தேடிக்கொண்டிருக்குபோதே, ரவிசுப்ரமணியன் என்பவர் இங்கேதான் பிராமணர்கள் இருக்கிறோம் என்று நக்கீரன் பதிப்பகத்தாரின் வழியாக 2005 ஆம் ஆண்டே பார்ப்பனர்கள் பற்றி அடையாலப்படுத்திவிட்டார். சோ எப்படி தொடர் போடுகிறாரோ அதே போல ரவிசுப்பிரமணியமும்   "நானும் அவரும் - காஞ்சிமட மர்மங்கள்" என்று நக்கீரனில் தொடராக எழுதினார். பிறகு இதனை நக்கீரன் பதிப்பகத்தார் புத்தகமாக வெளியிட்டு காஞ்சிமட மர்மங்களை, பவளவிழ கண்ட "மகா பெரியவாளின்" முகத்திரையை கிழித்து இங்கேதான் பிராமணன் என்று மக்களிடம் அம்பலப்படுத்தியுள்ளனர். முதலில் நக்கீரன் பதிப்பகத்தாருக்கு நன்றி.

எங்கே பிராமணன் என்று இரண்டாவது எபிசோடு போடும்போது நாம் ஏன் இங்கே பிராமணன் என்று ரவிசுப்பிரமணியத்தின் "நானும் அவரும்" தொடரை என்னுடைய வலைப்பதிவில் ஏன் வெளியிடக்கூடாது என்று நினைத்தேன். அதன் படி இன்று முதல் என்னுடைய வலைப்பதிவில் "ரவிசுப்பிரமணியத்தின் இங்கே பிராமணன்" என்று பகுதி பகுதியாக இந்த நூலினை இணையதள நண்பர்களின் பார்வைக்கு தருகிறேன். படியுங்கள்! தெளிவு பெறுங்கள்!

முதலில் யார் இந்த ரவிசுப்பிரமணியன்?

கஞ்சி மடத்தில் எந்த நேரத்திலும் ஜெயந்திரரின் அறைக்குள் நுழையும் செல்வாக்கு பெற்றவரான காண்ட்ராக்டர் ரவிசுப்பிரமணியன். 1944 முதல் சங்கரராமன் கொலைவரை ஜெயந்த்திரரிடம் நெருக்கமாக இருந்தவர். கஞ்சி மட நிர்வாகம், ஜெயந்திரரின் தனிப்பட்ட குணங்கள், ஆன்மிக யானம், அரசியல்வாதிகள் தொடர்பு, பொதுநல ஈடுபாடு, அயோத்தி அனுபவம், பக்த்தர்களை அணுகும் முறை உள்ளிட்ட அனைத்தையும் அறிந்த ரவி சுப்பிரமணியம், பெண்களை ஜெயந்திரர் எப்படி வசியப்படுத்துவார் என்ற ரகசியத்தையும் அறிந்து வைத்திருப்பவர். சங்கரராமன் கொலைவழக்கில் அப்புருவராக வாக்குமூலம் அளித்துள்ள ரவிசுப்பிரமணியம், தான் அறிந்த காஞ்சி மடத்தின் அனைத்து மர்மங்களையும் வாசகர்களிடம் வெளியிடுகிறார்.  [பக்கம் 8 நானும் அவரும் - கஞ்சி மட மர்மங்கள்]

அவர் என்ன எழுதியுள்ளார் என்பதை பகுதி - 2 இருந்து பார்ப்போம்......அதற்க்கு முன்பாக ரவிசுப்பிரமணித்தின் இங்கே பிராமணன் தொடர் என்ன சொல்ல போகிறது என்று ஒரு விரைவு பார்வையாக "நானும் அவரும்" நூலில் இருந்து இதோ ரவிசுப்பிரமணியம் உதிர்த்த சில பகுதிகள்.....

நான் சாஸ்டாங்கமா பெரியவா காலுலே விழுந்து நமஸ்காரம் பண்ணினேன் .
அப்பத்தான் அவர் குனிஞ்சு ,என் காதோட சொன்னார் :
"ரவி ...எனக்கு அவ வேணும் ..."
'அவள்னா ...எவ...'
நான் பதறிபோய் பார்த்தேன் .ஆனா,அவரோ,முகத்துல எந்த ஒரு சலனமும் இல்லாமல் சொன்னார்.
"அவதான் விஸ்வநாதன் பெண்டாட்டி சரஸ்வதி ...அவ வேணும் .."

இந்த அளவுக்கு பச்சைய கேட்பார்னு நான் நினைக்கல
"நீ என்ன செய்வியோ ..எப்படி சொல்லி அழைச்சிட்டு வருவியோ எனக்கு தெரியாது நீ சொன்ன அவ கேட்பா..."
--பக்கம் 25 -26 --"நானும் அவரும்" நூலில் ---

நான் ரொம்ப சாதாரண மாக தான் சரஸ்வதி கிட்ட சொன்னேன் ."பெரியவா ,ஸபர்டங் ரோட்ல ,மேயர் ராமநாதன் வீட்டுக்கு வந்திருக்கார் ...பார்த்திட்டு வரலாம்... வர்றியா?"
"அப்படியா ...வந்தா போச்சு "
அலட்சியமா பதில் சொன்னா அவ.என்னால எதையும் கணிக்க முடியல ...
ஒரு நாள் போனோம் ..
நாங்க வந்திருகிறதை தெரிவிச்சோம் ..மாடியில இருந்தார் பெரியவா..
எல்லாருக்கும் பிறசாதத்த கொடுத்து அனுப்பிட்டு கடைசியா தான் எங்களை கூப்பிட்டார் ...
நான் பிறசாதத்தை வாங்கிட்டு மெதுவா ஒதுங்கிட்டேன்.அறையை விட்டு வெளியேறி விட்டேன் .
அடுத்த அஞ்சாம் நிமிஷத்துல சரஸ்வதி அலறி அடிச்சிண்டு ஓடி வர்றா ...
'கடங்கார பாவி உன்ன விட்டேனா பார்னு 'கத்துறா..
எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிடுத்து.
அவ்வளவுதான் ...தொலைன்ச்சொம்னு  தீர்மானம் செஞ்சுட்டேன் நான்.
என் எதிர்ல வந்து நின்னு காச் மூச் நு கத்தினா ...முகம் சிவக்க 'ஒ' னு அழுதா..
"சந்த்நியாசியா அவன் ..சண்டாளன் "
இப்படி கத்தினா ....அதுக்குள்ள பெரியவா என்னை உள்ளே கூப்பிட்டார்....
போனேன் ..
"என்னடா இது இவ இந்த கத்து கத்துறா ....வெறுமனே தொட்டதுக்கே இப்படியா சாக் அடிச்சாப்ல கத்துவா ஒருத்தி ..."
'நீங்க அவளை எங்க தொட்டேல்னு தான் கேக்கணும்னு நெனச்சேன் ...
பேச்சே வரல .என்னமோ ,நான் தப்பு பணிட்ட மாதிரி நாக்கும் பல்லும்  ஒட்டிடுத்து...
"சும்மா ..ஒரு ஏலக்கா மாலைய கழுத்துல போட்டேண்டா ...அப்படியே மாரை பிடிச்சேன் ...அதுக்கு .."
இதை சொல்லிட்டு ,என்னோட  ரீஆக்சன் என்னங்கற மாதிரி கீழ் பார்வை பார்த்தார்..
நான் ஒன்னும் சொல்லலே ..அவரே ரெண்டு லட்ச ரூபாய  தூக்கி என் எதிர்ல போட்டார் .
"இந்தா இதை எடுத்துட்டு போய் எப்படியாவது அவ வாயை அடை.வெறுமே தொட்டதுக்கே ரெண்டு லட்ச ரூபா அபரதண்டம்....ரொம்ப ஜாஸ்தி ...ஆனா அவ கோபமா போய் யார்கிட்டயாவது உளறிட போறா..முதல்ல போய் பிடிச்சு சமாதானம் பண்ணு .."
--பக்கம் 29 -30 --"நானும் அவரும்" நூலில் ---

என்னை விடவும் பெரியவா கணக்குல புலி .எதை செஞ்சாலும் அதுல லாபம் எவ்வளவு னு தான் பார்ப்பார்.பச்சையா என் பங்கு என்னனு கேட்பார்.
ஒரு சந்நியாசி இப்படியெல்லாம் கேட்கலாம்னு நீங்க கேட்பேள்.
அவருக்கு multiple faces.

இந்தா பக்கம் வேதம் ,உபநிஷத் ,வேதாந்தம்னு பேசுவார்.
இன்னொரு பக்கம் மலிவா விலைக்கு வர நிலங்களை எல்லாம் பிடிப்பார் .பக்தர்கள் அதுவும் பணக்காரர்கள் கிட்ட ஒரு மாதிரி ...ஏழைகள் கிட்ட ஒரு மாதிரி ,பொம்மனாட்டிகள்லே பணக்கார விதவைகள் கிட்டே சிநேகம் .அழகான பெண்கள் கிட்ட சரசமான பேச்சு ,ஒரு பக்கம் என்கிட்டே காண்ட்ராக்ட் லோகாயத சமாச்சாரங்கள் ,நடுவுல பால பெரியவா என்ன பண்றார்,,எந்த ரூட்ல போறார்னு ஒரு கண்
--பக்கம் 33 -34 --"நானும் அவரும்" நூலில் ---.

போதும் போதும் இன்று ....மறு பகுதியில் சந்திக்கிறேன்.......

6 comments:

Unknown said...

புத்தகம் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.. பொறுக்கிகளை புனிதர்களாக கொண்டாடும் பொறுக்கிகளுக்கு உரைக்கட்டும்...

KANTHANAAR said...

அதெல்லாம் சரி அய்யா... அதே ரவி சுப்பிரமணியன் தற்போது பிறழ் சாட்சியாகிவிட்டதாக சில நாளேடுகள் கூறியுள்ளதே.. நம்ம தலைவர் ஆட்சியில்... அதையும் சற்று விளக்கமாக போடலாமே...

தமிழ் ஓவியா said...

லோக குருவின் லொள்ளு தாங்க முடியவில்லை. ஆபாசமா அசிங்கமா அருவருப்பா இருக்குங்க. இன்னும் இந்த அயோக்கியர்களை கடவுளாக நினைத்து ஆசி வாங்கும் சூத்திர முண்டங்களை எதைக் கொண்டு அடிக்க?

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///KANTHANAAR said...

அதெல்லாம் சரி அய்யா... அதே ரவி சுப்பிரமணியன் தற்போது பிறழ் சாட்சியாகிவிட்டதாக சில நாளேடுகள் கூறியுள்ளதே.. நம்ம தலைவர் ஆட்சியில்... அதையும் சற்று விளக்கமாக போடலாமே...///

முதலில் இதைப் படியுங்கள் அப்புறம் அதைப் பற்றி எழுதுவார். என்ன அவசரம் அதுக்குள்ளே? விவாதத்தை திசை திருப்ப ஏன் அம்பி அப்படி அலையறேளே!!!

பரணீதரன் said...

/* விவாதத்தை திசை திருப்ப ஏன் அம்பி அப்படி அலையறேளே!!! */
நன்றாக சொன்னீர்கள்

பரணீதரன் said...

/* லோக குருவின் லொள்ளு தாங்க முடியவில்லை. ஆபாசமா அசிங்கமா அருவருப்பா இருக்குங்க. */

அய்யா ஆரம்பிக்கவே இல்ல...நீங்க இப்படி சொல்லிடிங்களே....பாருங்க சொச்சத்தையும்......இதுல பாருங்க இப்படிப்பட்ட பிராமணர இங்கே வச்சுட்டு....சோ தேடிட்டு அலையுற பாருங்க...அவர ...............?

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]