வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, July 13, 2010

துள்ளும் துரோகத்தின் முதுகெலும்பு தூள் தூளாகும்.

வன்முறையில் ஈடுபடும் துரோகிகள், அவர் களுக்கு விளம்பரம் கொடுக்கும் இன எதிரிகள் - எந்த வகையில் எதிர்ப்புகளும், துரோகங்களும் வந்தாலும் அவற்றை முறியடித்து நம் பணியைத் தொடர்வோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அறிவு ஆசான் தந்தை பெரியார்தம் கொள்கைகள், லட்சியங்கள் உலகளாவிய நிலையில் பரந்து விரிந்து பரவி வருகின்றன.

எதிர்ப்புக் காட்டிய பார்ப்பனராகிய இன எதிரிகள் _ மதவாத சக்திகள் மருண்டோடி ஒளியத் தொடங்கி, தோல்வியைத் தழுவும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.

அரசியலிலும் அய்யாவின் கொள்கை லட்சியங்கள் அணிதேர் புரவி ஆட்பெரும் படையுடன் அணி-வகுத்து அய்யிரண்டு திசைமுகத்தும் பாய்ந்து வருகின்றன.

என்றாலும், எப்போதும் எதிர்நீச்சல் அடித்தே வளரும் நம் இயக்கம் இப்போதும் அதனையே அன்றாட அறப்போராகக் கருதி, அலுப்பு சலிப்பின்றி, ஓய்ந்துவிடாமல் தன் பணியை தலை தாழாது செய்து ஆயிரங்காலத்துப் பயிராக இதனை நீடித்து நிலைக்கச் செய்துவிட்டது!

பிரச்சாரக் களங்களோ _ பீரங்கி முழக்கங்களாகவே மக்களின் செவிப்பறைகளைச் சென்றடைகின்றன.

என்றாலும், ஏடுகள், ஊடகங்கள், தொ(ல்)லைக்-காட்சிகள் நம் பணிகளை இருட்டடிப்புச் செய்வதில் திட்டமிட்டுச் செயல்பட்டே வருகின்றன!

சுழன்றடிக்கும் நமது பிரச்சாரம்

மக்கள் இயக்கமான நமது மகத்தான இயக்கம் தனது பிரச்சார சூறாவளியைச் சுழன்று அடித்த-வண்ணமே உள்ளது.

தெருமுனைப் பிரச்சாரம், மக்கள் நலப் பிரச்சினை, மனித உரிமை, சமூகநீதி _ பகுத்தறிவு போன்ற-வற்-றிற்கு வரும் ஆபத்தினைத் தடுத்திட அவ்வப்போது ஆர்ப்பாட்டம், அமைதி வழி மறியல் முதலிய அறப்-போராட்டக் களங்காணுதல், வீதி நாடகப் பிரச்சாரம், தேவைப்படும்பொழுதெல்லாம் மாநாடுகள், கருத்-தரங்-கங்கள், சுழலும் சொற்போர்கள், துண்டறிக்கை விநி-யோ--கங்கள் _ தொய்வின்றி நடைபெற்ற வண்ணம் உள்ளன.

தந்தை பெரியார்தம் உயர் எண்ணங்களின் தொகுப்-பான நூல்கள், அறிஞர் அண்ணா, கலைஞர், புரட்சிக்-கவிஞர், கைவல்யம், சிங்காரவேலர் போன்ற சிறந்த சிந்தனையாளர்கள் தம் நூற்களை வெளியிட்டுப் பரப்புதல் _ நாள்தோறும் நாடெங்கும் நகரும் புத்தகச் சந்தைகள், புத்தம் புதிய வெளியீடுகள் _ அய்யாவின் குடிஅரசு தொகுதிகள் 1933 ஆம் ஆண்டுவரைக்கும் உரியவை வெளியிடப்பட்டுள்ளன. மற்றவை வெகுவிரைவில் வெளியிடப்படும்.

காலவரிசைப்படி பெரியார் களஞ்சியம் 32 தொகுதிகள் கடவுள், மதம், பெண்ணுரிமை, ஜாதி _ தீண்டாமை என்கிற தலைப்புகளில் வெளிவந்து நாடு தழுவிய அளவில் பரப்பப் பட்டுள்ளன!

ஞானசூரியன், இராமாயண ஆராய்ச்சி, பாரத ஆராய்ச்சி, கீதையின் மறுபக்கம், புராணங்கள், மதவெறி அமைப்புகள் பற்றிய ஆதாரபூர்வ விளக்கம் _ சமூகநீதி, வகுப்புவாரி உரிமை; கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள் தொடங்கி வாழ்வியல் சிந்தனைகள் வரை பல்வேறு துறை-களின் கலங்கரை விளக்கமாக _ பல்லாயிரக்-கணக்கில் பரப்பப் பட்டு வருகின்றன.

பெரியார் மய்யம் புதுடில்லி தலைநகரில்; அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரியார் பன்னாட்டு அமைப்பு, வடபுலங்களில் _ தென்புலங்களில் நமது கொள்கை வீச்சு-கள். இவை தவிர பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் மற்றும் பெரியார் கல்வி நிறுவனங்கள்மூலம் ஆராய்ச்சிகள் _ கருத்தரங்குகள், இப்படி கனடாவரை எங்கெங்கும் பெரியார் பிரபலப்பட்டுள்ளார்கள்!


பொறுக்க முடியாத எதிரிகளும் - துரோகிகளும்!

நெஞ்சில் வஞ்சம் அறியாதோர் இதற்காக நம்மை வாழ்த்தாவிட்டாலும்கூட அறிவு நாணயத்துடன் ஒப்புக்கொள்ளவாவது செய்வார்கள்!

இதைக்கண்டு பொறுக்க முடியாத நம் இயக்கத்தின் _ இனத்தின் பிறவி எதிரிகளான பார்ப்பனர்கள், துரோகிகளுக்கு விளம்பர சடகோபம் சாத்தி, தூண்டி விட்டு தொல்லை கொடுத்து, நம் பிரச்சாரப் பணிகளி-லிருந்து நம்மை திசை திருப்பலாம் என்ற ஒரு கூட்டுச் சதித் திட்டத்தில் இறங்கி தலைகால் தெரியாமல் வன்முறை வெறியாட்டம்வரை இறங்கியுள்ளனர்!

ஜூலை 2 ஆம் தேதி தாக்குதல்

அதன் விளைவுதான் என் வீட்டில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி பிற்பகல் நடைபெற்ற தாக்குதல் _ எய்த-வர்கள் எவர், ஏவியவர்கள் எத்திட்டத்துடன் அதைச் செய்தனர் என்பதை அறியாதவர்கள் அல்லர் நாம்; காரணம் நமக்குள்ள பெரியார் தந்த புத்தியாகும்!

அய்யாவின் குடிஅரசு ஏடுகளை வெளியிடுவதில் தடை ஆணை நீக்கம் என்ற ஓர் ஆணை தங்-களுக்குச் சாதகமாக கிடைத்துவிட்டது என்பதைக் காட்டி ஏடுகள், சில தொலைக்காட்சிகள்மூலம் எகத்தாளம் போட்டு, இந்தத் துரும்பைப் பிடித்துக் கரையேறி வெளிச்சம் போட்டு _ வீரப்பன் காட்டில் பெய்த மழையில் நனைந்த-வர்கள் கனவுலகில் இப்போது ஆட்டம் போடுகின்றனர்.

நம்மால் விலக்கப்பட்ட விலாசமிழந்த வீணர்களைத் தேடித்தேடிச் சென்று உதிர்ந்தவைகளை ஒட்ட வைக்க முயலுகின்றனர்.

நமது இயக்கத்தில் உள்ள முதிய இளைஞர்கள் (95, 98 வயது ஆனவர்கள்) தொடங்கி, இளையர், மாணவர், மகளிர், பெரியார் பிஞ்சுகள்வரை எவரும் இந்த துரோகக் கண்ணிவெடியில் சிக்கமாட்டார்கள்.

காரணம் உழைப்பு எங்கே,

பிழைப்பு எங்கே என்பதைப் புரிந்த கொள்கை-யாளர்கள் அவர்கள்!

நயவஞ்சகத்தின் தொடர்கதை!

பெரியார் சொத்துக்களை இவர்கள் மீட்கப் போகிறார்களாம்; இப்படி ஒரு புரூடா மிரட்டல்மூலம் நம் பணிகளைத் தடுக்க, திசை திருப்பும் நப்பாசை கொள்ளும் முகவரி தேடும் முச்சந்தி நிற்போருக்குச் சொல்லுகிறோம்.

வருமான வரித்துறைமூலம் பெரியார் காலத்தி-லிருந்தே தொடங்கி அத்துறையே இதனை கையகப்-படுத்திடவேண்டும் என்று எழுதி, காட்டிக் கொடுத்த நன்றி கெட்ட நயவஞ்சகத்தின் தொடர்ச்சிதான் இது!

அதை உடைத்த வியூகம் இப்போது வேடிக்கையா பார்க்கும்? மக்களிடம் உண்மை போய்ச் சேரும்!


- - - - - - - - - -- -- - -- - -- - - -- - -- - -- - - --

பெரியார் சொத்துக்களை இவர்கள் மீட்கப் போகிறார்களாம்? இப்படி ஒரு புரூடா மிரட்டல்மூலம் நம் பணிகளைத் தடுக்க, திசை திருப்பும் நப்பாசை கொள்ளும் முகவரி தேடும் முச்சந்தி நிற்போருக்குச் சொல்லுகிறோம்.

வருமான வரித்துறைமூலம் பெரியார் காலத்திலிருந்தே தொடங்கி, அத்துறையே இதனை கையகப்படுத்திடவேண்டும் என்று எழுதி காட்டிக் கொடுத்த நன்றி கெட்ட நயவஞ்சகத்தின் தொடர்ச்சிதான் இது!

அதை உடைத்த வியூகம் இப்போது வேடிக்கையா பார்க்கும்? மக்களிடம் உண்மை போய்ச் சேரும்!

பெரியாரின் கொள்கைச் சொத்து- அறிவுசார் உடைமைமுதல் அசையும், அசையா சொத்துக்கள்வரை அத்தனையையும் பெருக்கிட அரணானவர்கள் அமைதியாகவா இதை வேடிக்கை பார்ப்பார்கள்?

துள்ளும் துரோகத்தின் முதுகெலும்பு தூள் தூளாகும்.

- - - - - - - - - -- -- - -- - -- - - -- - -- - -- - - --பெரியாரின் கொள்கைச் சொத்து அறிவுசார் உடைமைமுதல் அசையும், அசையா சொத்துக்கள்-வரை அத்தனையையும் பெருக்கிட அரணானவர்கள் அமைதியாகவா இதை வேடிக்கை பார்ப்பார்கள்?

துள்ளும் துரோகத்தின் முதுகெலும்பு தூள் தூளாகும்.

மீண்டும் ஒருமுறை அறைகூவல்கள் வந்தால்,அதைச் சந்திக்க உண்மைப் பெரியார் தொண்டர்கள் ஒருமுகப்பட்டு, ஓரணியில் திரண்டு மேலும் வேகமாகச் சுழலும் வாள்போல், கொள்கை வீச்சுகளை நடத்திடுவர்!

பழைய இராமாயணம் இப்போது நடக்காது; வாலி வதம் நடக்காது _ சுக்ரீவர்களும், இராமர்களும் மறைந்து நின்றாலும் பறந்தோடிடும்படி எம் பாசறை பாடம் கற்பிக்கும்.

பெரியார் பெயரை வைத்துப் பிழைக்கும் கூட்டம் அல்ல நாம்.

நம் பயணம் தொடரும்!

பெரியாரால் உருவாக்கப்பட்ட இயக்கத்தின் காவல் அரண்கள் _ தற்கொலைப் பட்டாளங்கள் என்பதை மீண்டும் நிரூபிக்க களங்களைச் சந்திக்க கடமை வீரர்களின் பட்டாளங்கள் காத்திருக்கின்றன!

பெரியாரை எதிர்த்தவர்கள் என்றும் வென்றதில்லை! மின்மினிகளுக்கும், மின்சார விளக்குக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்தவர்கள் நம் மக்கள். பிரச்-சினைகள் எந்த வடிவத்தில் வந்தாலும் அவற்றை விவேகத்தோடு சந்திக்க நம்மால் நிச்சயம் முடியும்.

பெரியார் பணி முடிப்போம்!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!
-------- விடுதலை (13.07.2010)

6 comments:

ரம்மி said...

வீரமணி அவர்களுக்கு எதிரான வன்முறை செயல்கள், கண்டிக்கத் தக்கவை! சகோதர யுத்தத்தின் பரிணாம வளர்ச்சி!

Anbusivam said...

பெரியார் பெயரை வைத்துப் பிழைக்கும் கூட்டம் அல்ல நாம். This statement seems to be a Great Joke....!!!

சங்கமித்திரன் said...

எதுவாக இருந்தாலும் நேரடியாக சொல்லலாமே அன்புசிவம்....

ஈரோட்டுக் கண்ணாடி said...

2006 ஆம் ஆண்டில் திருச்சி.திருவரங்கத்தில் திராவிடர் கழகத்தால் அமைக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை இந்து வெறியர்களால் சேதப்படுத்தப்பட்டது. பெரியார் திக வினர், அந்நிகழ்விற்கான எதிர்வினையை பார்ப்பன கேந்திரங்களில் நிகழ்த்தி காட்டினர்.

தமிழினத்தை இழிவுபடுத்தும் பூணூலை அறுத்து, தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் சிறை ஏகினர்.

பெரியார் மண்ணில்,பெரியார் தத்துவமாகவே எழுந்து நிற்கும் பெரியார் சிலைகளின் மீதான இந்து மத வெறியர்களின் வன்முறை வெறியாட்டத்திற்கு, பதிலாக திக வினரை அமைதி காக்க அறிவுறுத்தினார்.


பெரியார் சொத்து தன்னிடமிருந்து பறி போய்விடுமோ என்ற பதற்றத்தில், திக வினரை தற்கொலைப் பட்டாளங்களாக மாறச் சொல்கிறார் மானமிகு.

பெரியார் சொத்தென்றால் வாயை திற.
பெரியார் தத்துவம் என்றால் வாயை மூடு.
இது தான் கடலூராரின் அறிவு நாணய லட்சணம்.

சங்கமித்திரன் said...

நீங்கள் பார்ப்பனியத்தை எதிர்க்கும் லட்சணம் தான் நன்றாக உள்ளதே....ஒரு சில பார்பனிய பத்திரிகை களும், பார்ப்பனர்களும் உங்கள் குழுவை ஓகோ என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள்....அதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் நீங்கள் செய்யும் ஒன்றும் அவர்களிடத்தில் எடுபடாது என்பது அதனால் தான் திராவிடர் கழகத்தின் தாக்கத்தில் இருந்தும் ஆசிரியரின் பார்பனிய வேரருப்புக்கு ஏதேனும் இடைவெளி தேடி உங்களிடம் வருகிறாக்கள்....திராவிடர் கழகத்தையும் அதன் ஒப்பற்ற தலைமையும் எதிர்கொள்வது அவர்களுக்கு அவளவு சுலபமல்ல என்பது தெரியும். எப்படியாவது அவர்களை காலி செய்தால்..பிறகு இருக்கும் இந்த சுசிபி குழு எம்மாத்திரம் என்பது அவர்கள் கணிப்பு....எனவே இன எதிரிகளும், துரோகிகளும் திராவிடர் கழகத்தையும் அதன் தலைமையும் ஒன்றும் செய்ய முடியாது...சோவும், ராமகோபாலன்களும் ஊதினால் சத்தியமங்கலம் காட்டுக்கே போகவேண்டியது தான்.....முதலில் உங்கள் குழுவின் கொள்கையை சுயபரிசோதனை செய்து கொள்ளவும். முதலில் அதனை சரி செயுங்கள் பிறகு வரலாம் திராவிடர் கழகத் தோழர்களுடன் விவாதம் பண்ண.

சங்கமித்திரன் said...

இன்னொன்று உங்கள் குழுவில் இருந்து வரும் அனைவரிடம் கேட்கும் கேள்விதான்......மிகவும் யோகியர்கள் என்றால், ஆசிரியர் நடவடிக்கை பிடிக்க வில்லை என்றால் தானாக விலகி போய் குழுவாக செயல்பட வேண்டும். அதனை விட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இயக்கத்தில் இருந்து வெளியற்றபட்டதும் ஆகா, ஓகோ என்று கூச்சல் போடுவது எந்த விதத்தில் நியாம்...அப்போ மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்டு ஆசிரியர் மீண்டும் இயக்கத்தில் இனைத்துக்கொண்டிருந்தால் உங்கள் வீராப்பு என்ன ஆயிருக்கும்? வெட்கம் சொல்லவே கூசுகிறது. நம்மை வெளியற்றிவரை தொல்லை கொடுக்க வேண்டும் என்று ஒரு துரோக கும்பல் செயல் படுகிறது என்றால் என்ன சொல்ல? ஆசிரியரின் மாணவர்கள் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்ளத்தான் வேண்டும்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]