வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, July 09, 2010

மகா பெரியவாளுக்கு மணிமண்டபமா? திருக்குறள் தேசிய நூல் செய்தி முக்கியமா?

கரூர் மாநாட்டில் திராவிடர் கழகத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்ட முத்தான தீர்மானங்கள் இதோ...

திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடுக!
உயர்நீதிமன்றத்தில் தமிழ் பயன்பாடடு மொழியாக ஆக்குக!
அறிவியல் மனப்பான்மை வளர்த்தெடுக்கப்பட வேண்டும்
கோபுரச் சின்னத்தை அகற்றுக!
வேலைவாய்ப்பினை அடிப்படை உரிமையாக்குக!....இப்படி பல

இதில் முக்கியமான தீர்மானம்  திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி திராவிடர் கழகம் தீர்மானம் போட்டுள்ளது. இந்த பாழாய் போன பார்ப்பன ஊடகங்கள் அத்துணை செய்திகளையும், தீர்மானங்களையும் வெளியிட வில்லை என்றாலும்...தினமும் திருக்குறள் போடும் யோகிதை உள்ள ஊடகங்கள் திருக்குறளை தேசிய நூலாக்க நாங்களும் ஆதரவு என்று பாராட்டி செய்தி வெளியிட்டதா? இல்லை அதுகூட கொஞ்சம் அதிகம் என்றாலும் அந்த செய்தியாய் ஆவது வெளியிட்டதா? அப்புறம் என்ன இந்த பார்ப்பன ஊடகங்களுக்கு தமிழ் பற்றி பேச யோகிதை உண்டு. பணம் சம்பாதிக்கு தமிழ் தமிழ் என்று கலைஞர் கூவுகிறார் என்று கூறும் பார்ப்பன அடிவருடிகளே...இப்போ சொல்லுங்கள் யார் தமிழை வைத்து காசு சம்பாதிப்பது?...அதுவும் தமிழனிடமே?

பெரியாரின் கொள்கை, குடியரசு வெளியிடவில்லை என்று வரிந்து கட்டிக்கொண்டு வரும் பார்ப்பன ஊடகங்கள் இதனை ஏன் வெளியிடவில்லை? தினமும் ஒரு திருக்குறள் போட்டு தலையங்கம் எழுதி கிழிக்கும் ஒரு சங்கரமடத்தின் செல்லபிள்ளை பத்திரிக்கையின் யோகிதை இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள். தினமலம் தினம் ஒரு திருக்குறலாம்..என்னே உன் தமிழ் திருக்குறள் பற்று. சாவல் விட்டு கேட்கிறோம் இந்த பார்ப்பன பத்திரிக்கைகளுக்கு, திருக்குறளை தேசியநூலக்க சொல்லி செய்தி வெளியிட தில்லு உண்டா?

திருக்குறளை நாங்கள்  பல மொழிகளில் மொழிபெயர்த்திருகிறோம் என்று  கூவும் பார்ப்பனர்களுக்கும் இதே சவால். தேசிய நூலாக்க  உங்களின் ஆதரவு உண்டா?. பயமா இருக்கா? உங்க புராண புளுகு மூட்டை கீதைக்கு விழும் பேரடி என்று. சொல்லுங்கள்? அப்புறம் ஏன் தயக்கம்?

இதற்க்கெல்லாம் எங்கே தில்லு இருக்க போகிறது. ராமகோபாலன் மாநாடு நடத்தும் செய்தியும், ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடத்தினால் படத்துடனும், மகா பெரியவாளுக்கு மணிமண்டபம், லோக குருவுக்கு பாத பூஜை ..இத்துனை செய்திகள் வேண்டுமானால் வெளியிட தில்லு இருக்கும். வெட்கம் வெட்கம்....தமிழ்நாட்டில் செய்தித்தாள் நடத்திக்கொண்டு ...தமிழனின் பைசாவில் வயிறு கழுவும் கூட்டம், கொஞ்சம் கூட வேட்கள் இல்லாமல் இப்படி செய்கிறதே. தமிழர்களே குமுற வேண்டாமா? ரோசம் வர  வேண்டாமா? இது எதுவுமே இல்லை என்கிறீர்களா? வாருங்கள் கழகம் நோக்கி சானை பிடிக்கிறோம், இழந்த உங்களின் கூர்முனை கோபத்தை.

உண்மையில் திருக்குறளில் பற்று இருந்தால் இந்த செய்தியை எல்ல பார்ப்பன ஊடகங்களும்  கொட்டை எழுத்தில் முதல் பக்கத்தில் போட்டிருக்கவேண்டும்.போட்டால் அவாளின் கீதைக்கு விழும் ஆப்பு என்பது அவாளுக்கு தெரியும்...இந்த பார்ப்பன அடிவருடிகளுக்கு புரியுமா அது? .....யோசிங்க பார்ப்பன அடிவருடிகளே?No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]