வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, July 28, 2010

வடலூர் வள்ளலாரை கற்பூரத்தை இட்டு எறித்த சமயவாதிகள்

வடலூர் வள்ளலார் என்று பெருமதிப்போடும், அன்போடும் போற்றப்படும் இராமலிங்க அடிகள் தொடக் கத்தில் மூடநம்பிக்கைப் பள்ளத்தில் விழுந்தவர்தான். சிறுதெய்வ வழிபாட்டுக் குழியில் சாய்ந்தவர்தான்.

ஆனாலும் ஆறாம் திரு முறை எழுதிய காலத்தில் அவர் தெளிவு பெற்றார். ஆரியத்தின் வேத, ஆகம, வருணக் கொள்ளிகளை அடையாளம் கண்டார். சாடு சாடு என்று சாடினார்.

தமது வாழ்வின் முதற் பகுதி குறித்து பிற்காலத்தில் அவர் எழுதி இருக்கும் முத்துகள் அவர் பகுத்தறிவு ஒளி பெற்றார் என்பதற்கான சான்றுப் பத்திரமாகும்.

நாம் நாமும் முன் பார்த்தும், கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனென்றால் அவைகளில் ஒன்றிலாவது குழுஉக் குறியின்றித் தெய் வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவி யச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார் கள்... இதுபோல் சைவம், வைணவம் முதலிய சம யங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்று கூறிவிட்டு, கடைசியாக வள் ளலார் சொல்லுகிறார். அப் பொழுது எனக்கு அற்ப அறிவுதான் இருந்தது - அத னால் நம்பினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

இதன் காரணமாகவே பார்ப்பனர்கள் திட்ட மிட்டு அவரைத் தீர்த்துக் கட்டினார் கள். வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன் அவர்கள் குறிப்பிடுகிறார்,

வள்ளலார் காலத்தில் தென்னாற்காடு மாவட்ட ஆட்சியாளராக விளங்கிய கார்ஸ்டின் என்பவர் , புராணம், சாத்திரம் முதலிய வற்றை வடலூர் இராமலிங் கனார் கண்டித்ததைப் பொறுக்காத சமயவாதிகள் கற்பூரத்தை இட்டு அவர் எலும்புகூடக் கிடைக்காத வண்ணம் எரித்து விட்ட னர் என்றும் கூறுகிறார்.

உண்மையெல்லாம் இவ்வாறு இருக்க, ஆன்மீக மலர் என்று வெளியிடும் தமிழ்நாட்டு ஏடுகள் சிறிது சிறிதாக இராமலிங்கனார் மீது அற்புதங்களைத் திணித்து, அவரை பார்ப்பனிய வைதீ கக் குட்டைக்குள் தள்ளப் பார்ப்பது வெட்கக்கேடு!

கூனன் நிமிர்ந்த அதிச யம் என்னும் தலைப்பில் ஒரு கட்டுக்கதை வெளி யிடப்பட்டுள்ளது. வடலூரில் தைப் பூச விழா நடந்ததாக வும், அதில் அதிர் வேட்டு வெடித்த கூனன் ஒருவன் காயம்பட்டுக் கருகி வீழ்ந்த தாகவும், நீ எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்! என்று வட லூரார் சொன்னதும், கூனன் முதுகு நிமிர்ந்து புத்தொளி பரவி எழுந்ததாகவும் ஆன் மிக இதழ் கதை விட்டுள் ளது.

எந்த மூடத்தனத்தை வள்ளலார் எதிர்த்தாரோ, அந்த மூடத்தனத்தையே அவர்மீது திணிக்கும் சில்ல றைத் தனத்தை எண்ணிப் பார்ப்பீர்!

- விடுதலை (28.07.2010) , மயிலாடன்
                                                                                                      



5 comments:

aandon ganesh said...

the sole tear the body and it feasible with universe.(vallalar use this way to leave his body)
its possible .if u dont know plz try to understand yoga.

அ.முத்து பிரகாஷ் said...

தோழருக்கு இனிய மாலை வணக்கங்கள்!

புத்தரையே விஷ்ணுவின் அவதாரமென திரித்தவர்களுக்கு வள்ளலார் எம்மாத்திரம்?! சில்லறைத்தனம் கோவில் கட்டி உயிர்வாழும் மடாதிபதிகளின் கூடப் பிறந்த ஒன்று!

பரணீதரன் said...

வணக்கம் நீயோ...வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

நம்பி said...

//singam said...

the sole tear the body and it feasible with universe.(vallalar use this way to leave his body)
its possible .if u dont know plz try to understand yoga.
6:08 AM //

இது மாதிரி எல்லாம் அவர் சொல்லாததை எல்லாம் நாம் கண்டது போல் சொல்வது அவருக்கு இழைக்கும் இழுக்கு....வள்ளலார் மரணம், சந்தேக மரணமாகத் தான் ஆங்கிலேய ஆட்சி அளுநரால் கையெப்பமிடப்பட்ட முதல் தகவல் அறிக்கை இன்னும் இணையத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. அவர் மரணத்தில் உலவும் சந்தேகம் ரொம்ப பழைய விஷயம்....இன்றைய காலத்திலேய பலமரணங்கள் கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையின் கோப்புக்களில் முடங்கி கிடக்கின்றன. 15..20 வருடங்கழித்து கூட குற்றவாளிகளை கண்டுபிடித்த சம்பவங்கள் செய்திகளில் வருகின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் பல பழைய வழக்குகள் தோண்டி எடுக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டன. இன்னும் சிலர் இரண்டாவது கொலை செய்யும் பொழுது பிடிபட்டு முதல் கொலை செய்ததையும் ஒப்புக்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளனர். இன்னும் துப்புதுலக்க முடியாத பலசந்தேக மரணங்கள் நாட்டில் இருக்கின்றன, மறைந்த நபர்கள், காணாமல் போனவர்கள் என நிறைய சந்தேக மரணங்கள் உள்ளன.


அதுவும் இந்த நவீன காலத்தில்...


அன்று அப்படிப்பட்ட புலனாய்வுக்கெல்லாம் சாத்தியமில்லை. ஆங்கிலேயனுக்கு அப்படி ஒன்றும் அதிக அக்கறை கிடையாது. அவன் பாதிக்கப்படாத எதிலும் அவன் அக்கறை காட்டியதில்லை...ஆதரவளித்ததும் இல்லை. தேவையில்லாத சர்ச்சையை அவன் ஏன் இழுத்துக்கொள்ளவேண்டும்.

தான் செய்வதை அனைவராலும் செய்யமுடியும் என்று சொல்வது தான் பெரிய மனிதர்களான மகான்களின் பண்பட்ட குணம். அதை திரிப்பது திருக்குசு வேலை....மாயமாய் மறைந்ததாய் காவல்துறை பதிவேடுகளில் இல்லை.

Sivamjothi said...

http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



Please follow

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

(First 2 mins audio may not be clear... sorry for that)

(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




Online Books
http://www.vallalyaar.com/?p=409 - Tamil
http://www.vallalyaar.com/?p=975 - English

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]