Monday, July 05, 2010
எதிரிகளும், துரோகிகளும் வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்?
கரூர் _ திராவிடர் கழக வட்டார மாநாடு பெரிய எதிர்பார்ப்புடன் நடைபெற உள்ளது.
இந்தக் காலகட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் முட்டி மோதி நிற்கின்றன.
ஆட்டம் போடும் இந்துத்துவாவாதிகளுக்கு முதல் எச்சரிக்கை மணி ஒரிசாவில் ஒலித்திருக்-கிறது. காந்தமால் கொலை கார இந்துத்துவாவாதி-களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்-திருக்கிறது.
பாபர் மசூதி இடிப்புமுதல் பல்வேறு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கும் தண்டனைகள் கிடைக்கப் பெறும்; கிடைக்கப் பெறாவிட்டால் கிடைக்கும் வகையில் மக்கள் சக்தியை ஒன்று திரட்டவேண்டிய கடமை நம்மைப்போன்ற இயக்கங்களுக்கு இருக்கவே செய்கிறது.
மிகப்பெரிய அநாகரிகமான குற்றங்களில் நேரிடையாக ஈடுபட்டவர்கள் இந்தியாவின் பிரத-மராகவே ஆசைப்பட்டார்கள் _ முன்னிறுத்-தப்-பட்டனர் என்பது எவ்வளவுப் பெரிய கேவலம் _ தலைக்குனிவு.
சிறைக் கொட்டடியில் கிடக்கவேண்டியவர்கள் சீலர்களாக வெட்கமின்றி உலாவருகின்றனர். இத்தகையவர்களை அம்பலப்படுத்துவோம், கரூருக்கு வாருங்கள்!
சமூகநீதியைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டவர்கள், அதில் ஏகப்பட்ட குளறுபடி முடிச்சுகளைப் போட்டு வருகிறார்கள். சாண் ஏறினால் முழம் சறுக்கவேண்டும் என்கிற சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு செய்யவேண்டும் என்பதைவிட, அரசைச் செய்விக்க மக்கள் மன்றத்திற்குச் செ()ல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். தமிழர் தலைவர் பல தீர்மானங்களைத் தரவிருக்-கிறார் _ கூடுங்கள் கரூரில்!
கரூரில் மாநாடுகள் நடக்கும்பொழுதெல்லாம் நாட்டில் முக்கியமான நிகழ்வுகள் தலைசுற்றி நிற்கின்றன.
போதும் போதாதற்கு எதிரிகளும், துரோகிகளும் சில கைங்கர்யங்களைச் செய்திருக்-கின்றனர்.
கரூரில் இந்து முன்னணி மாநாடு கூட்டி கழிசடையாகக் கத்தித் தீர்த்துள்ளனர். செம்மொழி மாநாட்டுத் தட்டிகளைக் கொளுத்தியிருக்கின்றனர். மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களின் உருவத்தை அசிங்கப்படுத்தி-யுள்ளனர்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையும் கடித்ததுபோல கடைசியில் தி.மு.க. தோழர்களையே தாக்கி இருக்கின்றனர். தி.மு.க. தோழர்கள் ஒன்று திரண்டு திருப்பித் தாக்கியிருப்-பார்களேயானால், அந்தக் கூட்டம் ஒண்டுவதற்குக்-கூட இடம் இருந்திருக்காது.
கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தங்கள் கைத்திறனை(?) தமிழர் தலைவர் கார்மீது காட்டியிருக்கின்றனர். இந்தக் காரில்தானே ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்கிறார் என்ற ஆத்திரத்தில் இந்தக் கோழைத்தனமான வேலையில் இறங்கி இருக்கின்றனர்.
வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்? அவர்களிடத்தில் என்ன சரக்கு இருக்கிறதோ அதைத்தானே விநியோகம் செய்வார்கள்.
நம்மைப் பொறுத்தவரை கழகத்திற்கென்று ஓர் அணுகுமுறை உண்டு.
யாரையும் விளம்பரப்படுத்தி பெரிய மனுஷர்-களாக ஆக்கிக் காட்டுவதில்லை.
நமது தனித்தன்மையான இயக்கச் செயல்-பாடுகள்மூலம் முறியடித்து முரசு கொட்டியவர்கள் நாம்.
இதற்கு முன்பும் பல காலகட்டங்களில் இந்த வழியில்தான் வெற்றி பெற்று வந்திருக்கிறோம்.
முதுகில் குத்தியவர்கள் முகவரி இழந்துபோன வரலாறு நமக்கு முன் நன்றாகவே தெரிந்த ஒன்று!
அதே அணுகுமுறைதான் இப்பொழுதும், எப்பொழுதும்!
நமக்குக் கோபம் சீறிக்கொண்டு வருகிறது என்றால், அதனைச் செயல் வடிவமாக்கிட செம்மாந்து எழுவோம்!
நமக்கு ஆத்திரம் வருகிறது என்றால், அதனை அய்யாவின் கொள்கைகளை அவனி முழுவதும் பரப்பிட ஆர்ப்பரித்து எழுவோம்.
அதன் தொடக்கத்தைக் கரூரில் காட்டுவோம்; கருஞ்சட்டைத் தோழர்களே, குடும்பம் குடும்பமாக வாருங்கள்! வாருங்கள்!!
இளைஞர் சேனையே எக்காளமிட்டுப் புறப்படு!
மாணவப் பட்டாளமே மார்தட்டி வா!
யாரும் முன்னெடுக்காத பிரச்சினைகளை நாம் முன்னெடுப்போம்!
யாரும் சிந்திக்காதவற்றை நாம் சீர்தூக்கி முடிவெடுத்து முன்னேராகப் புறப்படுவோம்! வழிகாட்டுவார் கழகத் தலைவர்!
பல முக்கிய தீர்மானங்களை மாநாடு முன்மொழிய இருக்கிறது; அதனை வழிமொழியும் செயல்பாட்டில் களம் இறங்கும் காலாட்படையாகப் புறப்படுக! புறப்படுக!!
---------------------- விடுதலை மின்சாரம் (05.07.2010)

Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சிறைக் கொட்டடியில் கிடக்கவேண்டியவர்கள் சீலர்களாக வெட்கமின்றி உலாவருகின்றனர். இத்தகையவர்களை அம்பலப்படுத்துவோம், கரூருக்கு வாருங்கள்!/////
கவுன்சிலர் லீலாவதிய கொன்றவர்களை சொல்கிறிர்களா. தா.கிருஷணன் கொன்றவர்களை சொல்றிங்களா. தினகரன் அலுவலகத்தை தாக்கி மூணு பேரை கொன்ற ஆதிக்க கும்பலை சொல்றிங்களா. துணிச்சல் இருந்தா அம்பலப்படுத்துங்க.
Post a Comment