வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, July 16, 2010

சீ... இப்படியும் சில மனிதர்களா? மனிதநேயம் என்றால் கிலோ என்ன விலை?

பொதுவாகவே தமிழர்கள், தமிழ் என்ற சொற்களைக் கேட்டாலே பார்ப்பனர்களுக்குக் கடும் வெறுப்பும், எதிர்ப்பும் ஏற்படும்.

அதிலும் குறிப்பாக ஈழத் தமிழர்கள் என்றால் அவை இரட்டிப்பு மடங்காவதைத் தமிழர்கள் உணரவேண்டும்.

பார்ப்பன ஊடகங்கள், குறிப்பாக இந்து, துக்ளக் போன்றவை கக்கும் நஞ்சு அவாள் மொழியில் சொல்லவேண்டும் என்றால் ஆலகால விஷமாகும்.

இலங்கையில் தமிழர்கள் ஈவு இரக்கமற்ற வகையிலும், யுத்த நெறிகளுக்கு மாறாகவும் இலங்கை இராணுவம் மேற்கொண்ட மனிதப் படுகொலை (நிமீஸீஷீநீவீபீமீ)யைத் தொடர்ந்து, அத்-தீவின் அதிபர் ராஜபக்சே போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்படவேண்டும் என்ற போர்க் குரல் உலகில் பல நாடுகளிலிருந்தும் வெடித்துக் கிளம்பியது.

காலந்தாழ்ந்த நிலையில் அய்.நா. இதுபற்றி விசாரணை நடத்திட மூவர் கொண்ட ஒரு குழுவினை நியமித்தது.

இந்தக் குழுவின் நியமனத்தை எதிர்த்து இலங்கை அமைச்சர் உண்ணாவிரதம் இருந்தார். கொழும்பில் உள்ள அய்.நா. அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கொழும்பில் உள்ள அய்.நா. தூதரைத் திரும்ப அழைத்துக் கொண்ட-தோடு, அங்குள்ள அலுவலகத்தையும் மூடும் நடவடிக்கையை அய்.நா. பொதுச்-செயலாளர் பான் கீ மூன் எடுத்தார்.

ஆனால், இதுபற்றி இவ்வார துக்ளக் (21.7.2010) ஏட்டில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தைப் படிப்போருக்கு சீ... இப்படியும் சில மனிதர்களா? மனிதநேயம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக் கூடியவர்கள் இன்னும் இருக்-கிறார்களே! என்றுதான் எண்ணத் தோன்றும்.

இலங்கையில் நடந்ததைவிட சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மனித உரிமை மீறல்கள் நடக்கவில்லையா? பெரிய நாடுகள் என்றால் ஒதுங்கிக் கொள்வது; இலங்கை போன்ற சிறிய நாடுகள் என்றால் அதிகாரத்தைக் காட்டுவது என்றால் அய்.நா.வின் நடவடிக்கைக்கு என்ன மரியாதை கிடைக்கும்? என்று கேள்வி கேட்கிறார் திருவாளர் சோ ராமசாமி அய்யர்.
இலங்கை அரசு மனித உரிமையை மீறியிருக்கிறது என்பதை சோவாலேயே மறுக்க முடியவில்லை. இவருக்கு உண்மையிலேயே மனித உரிமைகள்மீது அக்கறை இருந்திருக்கு-மேயானால், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மனித உரிமை மீறப்பட்டபோது அதனைக் கண்டித்ததுண்டா? விசாரணை நடத்து-மாறு அய்.நா.வை வலியுறுத்தித் தலையங்கம்தான் தீட்டியதுண்டா?

பொதுவாகப் பார்ப்பனர்கள் தங்கள் இனத்தைத் தவிர வேறு எங்கு அநீதி நடந்தாலும் அதனை வரவேற்கவே செய்யும் பாசிச மனப்-பான்மையைக் கொண்டவர்கள்தானே!

இலங்கையைவிட சீனா போன்ற நாடுகளில் மனித உரிமைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்று தலையங்கத்தின் முற்பகுதியில் குறிப்பிட்ட திருவாளர் சோ தலையங்கத்தின் பிற்பகுதியில் ஈழத் தமிழர்களை சிங்கள அரசு படுகொலை செய்ததற்கான நியாயங்களைத் திணிக்கிறார்.

விடுதலைப்புலிகள் பொதுமக்களை கேடயங்களாகப் பயன்படுத்தியதால் _ வேறு வழியின்றி இலங்கை இராணுவம் அவர்களைப் படுகொலை செய்ய நேர்ந்ததாகக் கூறுகிறார்.

இவர் கூற்றில் உண்மை இருக்கிறதா_ இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இலங்கை இராணுவமே பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, அங்கே வந்துவிடவேண்டும் என்று அறிவித்த நிலையில், அங்கு வந்த மக்களையும் ஒட்டுமொத்தமாகக் கொன்று தீர்த்தார்களே _ அதற்கு என்ன நியாயத்தை வைத்துள்ளார்?

முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வசதிகளையே செய்து கொடுக்காமல் அவதியுறச் செய்ததே இலங்கை அரசு_ அதற்கு என்ன காரணத்தைக் கண்டுபிடித்துச் சொல்லப் போகிறார்?

இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே நேரில் பார்த்து முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் ஈழத் தமிழர்கள் குறித்துக் கண்ணீர் வடித்ததற்கு எந்த கெட்ட நோக்கத்தினை துக்ளக் வட்டாரம் திணிக்கத் திட்டமிட்டுள்ளது?

தமிழின இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து துப்-பாக்கியால் சுட்டுக்கொன்ற கோரக் காட்சிகளை லண்டன் தொலைக்காட்சி ஒளிபரப்பியதே _ பார்ப்பனக் கூட்டத்திற்குப் பால் பாயாசம் அருந்தியதுபோல் இருந்ததோ! இதற்குமேலும் பார்ப்பனர்கள்பற்றி தமிழர்கள் தெரிந்துகொள்ளா-விட்டால், அது பரிதாபப்பட வேண்டிய துக்க நிலையேயாகும்.

--------- விடுதலை தலையங்கம் (16.07.2010)

12 comments:

ஆட்டையாம்பட்டி அம்பி said...

வணக்கம் நண்பரே! எனது புதிய பதிவு:

கருணாநிதி ஹிந்தி படிக்க விட்டு இருந்தால் மூணு வேளை பிரியாணியும் ஒரு குவார்ட்டரும் ஒவ்வொரு தமிழனக்கும் தினமும் கிடைத்து இருக்கும்!

http://tamilkadu.blogspot.com/

or

http://tamilkadu.blogspot.com/2010/07/blog-post.html


என்றும் அன்புடன்,
ஆட்டையாம்பட்டி ஆம்பி!?

நெருப்பு said...

அய்யா. நம் ஆட்சியாளர்களால் ஈழப்பிரச்சனையை தமிழர்களுக்கு சாதகமா கொண்டு வந்திருக்கலாம். அதை செய்யாதது மத்திய, மாநில அரசுகளே. பார்ப்பானை குற்ற சொல்வதில் என்ன இருக்கு. அவனை பத்தி தான் தெரியுமே. இங்க அகதி மூகாம்ல தடியடி நடந்தது தெரியாதா. அங்க முள்வேலி இங்க திறந்த வெளி சிறைச்சாலை. தமிழனுக்காக குரல் கொடுத்தவர்கள சிறையில் வைச்சது பார்ப்பானா... ஈழத்தமிழர்களுக்காக உண்மைல குரல் கொடுங்க. குரல் கொடுக்கிற மாதிரி நடிக்காதிங்க.

சங்கமித்திரன் said...

/* ஈழத்தமிழர்களுக்காக உண்மைல குரல் கொடுங்க. குரல் கொடுக்கிற மாதிரி நடிக்காதிங்க. */

அய்யா நாங்க நடித்து மக்களிடம் ஒட்டு பொறுக்கவா போறோம்..திராவிடர் கழகம் என்றைக்கும் உண்மையை உரைக்கும்...அதற்காக போராடும்....நடிக்க வேண்டிய அவசியம் திராவிடர் கழகத்திற்கு என்றைக்குமே கிடையாது...அதன் கொள்கை வழியில் எந்தனையும் உற்று நோக்கும்...துக்ளக் சோவை யார்தான் கண்டிப்பது?

தேசிய தலைவரை தமிழகத்திற்கு அடையாளம் காட்டிய இயக்கம்..எம் இயக்கம்...அதன் பிரச்சனையில் நடிக்க வேண்டிய அவசியமே இல்லை அய்யா.

சங்கமித்திரன் said...

தமிழ்காடு வலைத்தளம் மிக நன்றாக உள்ளது அம்பி......முகப்பு வாசகம் அருமை..வாழ்த்துகள்

Dharmarajkumar said...

இந்த பார்பன நாய்கள் இருக்கும் வரை தமிழ் போராட்டம் கொச்சை பட்டு கொண்டே இருக்கும். சோ போன்ற பார்பன அயோகியர்கள் நம்மை அருகாமையில் இருந்து நம்மை இழுவு படுத்துகிறார்கள். நாம் என்னதான் அவர்களை விமர்சித்தாலும் அவர்கள் கொள்கை இருந்து விடுபடுவதில்லை. நாம் ஏன் இப்டி இருக்கிறோம் தமிழா உனக்கான உரிமை நோக்கி நகர முற்படுகிறார்கள் சிலர் . உதாசின படுத்தாதே ஆதரிகவிட்டலும்.

Vimal said...

நன்றி உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்

ராசராசசோழன் said...

இவர்களை மதிக்காமல் இருப்பதே...நம் கோபத்தை குறைக்க வழி செய்யும்

கே.ஆர்.பி.செந்தில் said...

அண்ணே துக்ளக் படிக்கிறீங்களா? அந்தக் குப்பையை முதலில் நிராகரியுங்கள் அண்ணே...

சங்கமித்திரன் said...

/* அண்ணே துக்ளக் படிக்கிறீங்களா? அந்தக் குப்பையை முதலில் நிராகரியுங்கள் அண்ணே... */

மக்கள் யாரும் அதனை வாங்கவும் கூடாது படிக்கவும் கூடாது.......அதன் உண்மையை தோலுரிக்க பெரியார் திடல் அதனை உற்றுநோக்கிய ஆகவேண்டும்...எனவே விடுதலை,உண்மை,பெரியார் பிஞ்சு,தி மாடேர்ன் ரேசனலிஸ்ட் வாங்கி படியுங்கள்...

KANTHANAAR said...

//றிப்பாக ஈழத் தமிழர்கள் என்றால்///
What is wrong in it...?
In fact Cho has indirectly supported Karunanidhi..
In another indirect way, he supported Veeramani also... Why you worry?

நியோ said...

சோ வை தோலுரித்து தோலுரித்து உங்களுக்குத் தான் அலுத்து போய் விட்டது ...இருந்தாலும் எந்த நம்பிக்கையில் தான் திருவாளர் சோ அவர்கள் இன்னமும் எழுதுகிறாரோ தெரியவில்லை ... தொடர்ந்து அவர் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே இருங்கள் தோழர் ... வரலாற்றை மிக எளிதாக திரித்து விடுவார் அவர் ... மிக அருமையான பதிவு தோழர் !

நியோ said...

"தேசிய தலைவரை தமிழகத்திற்கு அடையாளம் காட்டிய இயக்கம்..எம் இயக்கம்..."
மிக அருமையாக சொன்னீர்கள் தோழர் !பலருக்கும் இது மறந்து விட்டது... நாம் தமிழர் என்று திடீர் குரல் கொடுப்போர்க்கேல்லாம் கசப்பான உண்மையும் கூட தோழர் !

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]