வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, July 04, 2010

ரவிசுப்பிரமணியத்தின் இங்கே பிராமணன் (காஞ்சிமட மர்மங்கள்) - 2

பகுதி 1 ல் ஒரு விரைவு பார்வை பார்த்தோம் ...இந்த பகுதியில் இருந்து ரவிசுப்பிரமணியம் இங்கே பிராமணர்கள் என்று பார்ப்பனர்களின் தனி குணம் என்ன என்பதனை அடையாளம் காட்டியதை பகுதி பகுதியாக பார்ப்போம்......இதோ...."நானும் அவரும் (காஞ்சி மட மர்மங்கள்)" நூலில் (பக்கம் 9 - 13 ............)

என் மனசு மாதிரியே வெளிலையும் இருட்டு பரவி கிடக்கு.தூக்கமும் இல்லாத விழிப்பும் இல்லாத நிலையில் புரள்கிறேன்.
கடவுளே..கடவுளே..இப்படியொரு வேதனையை ,அவஸ்தையை எனக்கு கொடுப்பாய்ன்னு நான் கனவுல கூட நினைக்கலையே...
எனக்கு ஏன் இந்த நிலைமை?
முன்பின் தெரியாத எதோ ஓரிடதுல,அழுக்கும் அசுத்தமும் பரவி கிடக்கும் லாட்ஜ் ரூம்லே..
ஐயோ!
எத்தனை நாள் இப்படி..எங்கே போறது ..கைல இருக்கிற பணமும் கரைஞ்சுடுசின்னா என்ன செய்றது..
என்னை மீறி அழுதேன் ..கன்னத்துல வழிஞ்ச கண்ணீர் உதட்டுல உப்பை கரிக்கிறப்ப...
அந்த முகம் மனசுக்குள்ள வந்து நிற்கிறது..
"இந்த ரவி பிரசாதம்.."
புறச இலைல கற்கண்டையும் குங்குமத்தையும் கலந்து அவர் தர்றார்.
என் அப்பா சொல்லி இருக்கார்.
"எத்தனை கஷ்டம் வந்தாலும் மகா பெரியவா ஓரக்கண்ணால நம்மை கடாசித்து ,குங்கும பிரசாதம் தந்தா போதும்டா ..நம்ம கஷ்டம்

எல்லாம் விடிஞ்சு போயிரும்னு...
இப்ப எனக்கு குங்குமன் தர்றது மகா பெரியவர் இல்லே .ஆனா இவரையும் நாம எல்லாரும் பெரியவான்னுதானே சொல்றோம் .
பிரசாதம் தர்றாரே..என் வேதனை புரிஞ்சு..
நான் குங்குமத்தை எடுக்கிறேன்.
என்னது இது..விரலெல்லாம் பிசுபிசு என்கிறது ரத்தமா..
நான் மிரண்டு பொய் பெரியவரை பார்கிறேன்..அவர் விகாரமாக சிரிக்கிறார்.
குலை நடுங்குகிறது எனக்கு.மெதுவாய் புரண்டு படுக்கிறேன்.
அம்மா ,தாயே,காளிகாம்ப என்னை கொஞ்ச நேரம் தூங்க செய்யேன்.ராபகல் பார்க்காம துரத்துறியே..
எங்கே இருக்கேன்.காளிகாம்பல் கோயிலா.என் பக்கத்துல யாரு.சித்ராவா?சித்ரா என்னை மன்னிச்சுடு சித்ரா.ஏன்,என்னை திரும்பியே பார்க்க

மாட்டேன் என்கிறாய்.இந்த ஒரு தடவை மன்னிச்சுட்டேன்,எங்கே முகத்தை காட்டு.
ஐயோ ..இது சித்ரா இல்லையா ..சங்கரராமன் சம்சாரமா?
"பாவி..பாவி ..குருவிக்கூடு மாதிரி இருந்த என் குடும்பத்தை சிதற அடிச்சுட்டியேடா.நீ நன்னாஇருப்.."அந்த அம்ம்பல் திட்றாங்க.
அம்மா..அம்மா..நான் வேணும்னு இதை செய்யலம்மா...பெரியவா சொல்லித்தான் அம்மா,உங்க காலுல விழுந்து மன்னிப்பு .
கேட்கறேம்மா. அன்னிக்கு அந்த சம்பவம் நடந்ததுல இருந்து போட்டுத் தூக்கமில்லே. படுத்தா என்னென்னமோ பயம் செத்துருவேனொன்னு

பயமா இருக்கு.செத்துட்டாலும் பரவாயில்ல போலிருக்கு.

அந்தம்மால் அழுதபடியே ஓடறாங்க. இப்ப ஏன் சித்ரா வந்து நிற்கிறா.
ஏங்க அப்படிச் செஞ்சிங்க.
"இனிமே நீ ஜெயிலுக்கு போயிடுவியாப்பா....." என் பசங்க அண்ணாந்து என் முகம் பார்த்து கேக்குறப்ப, என் நெஞ்சே வெடிச்சிடும் போல

இருக்கு.
"கடவுளே"
நான் வாய்விட்டு அலர்றேன்.
"சாமி .....சாமின்னு சொல்லுவிங்கலேப்பா அந்த பெரியவரை சாமி, கொலைகூட செய்யச் சொல்லுமா."
என் ரெண்டாவது பையன் கேட்கறப்ப...கண் காணாம பாசை புரியாம, எங்காவது ஓடிடலாமான்னு தோணுது.
ஆமா இப்ப ஓடித்தானே வந்து இருக்கேன்.
'கிணிங்...'
எங்கயோ கோயில் மணி ஓசை.
அம்மா தாயே நான் உன்னிடம் தான் இருக்கே னா
இப்பவும் லோ வாய்ஸ் லே  பெரியவர் சிரிக்கிறார்
அசடு அது கோயில் மணி ஓசை இல்லேட நாம இப்ப ஜெயில்ல இருக்கோம் .போலீஸ் ஜெயில் கம்பிய லத்தியால அடிச்சுட்டு போறாங்க
எனக்கு உச்சந்தலை வரிக்கும் குபு குபுன்னு சூடு ஏற நான் பெரியவரை பிடிச்சு உலுக்குறேன்
நான் என்ன செஞ்சேன்னு என்னையும் உங்க கூட உள்ளே கொண்டு வந்திங்க
மற்படியும் சிரிக்கிறார்

ரவி நீ எனக்காக எவ்வளவு செஞ்சிருக்கே இப்பவும் நீதானேடா எனக்கு எல்லாம் செய்யனும்.எழுந்திரு எழுந்திரு பொய் குளிச்சுட்டு வா.நான்

ஏற்கனவே குளிசுட்டேன்.பூ பழம் எல்லாம் எடுத்து வை."
"எதுக்கு என்னால முடியாது .நடந்து நடந்து கால ரெண்டும் வலியில பின்றது"
அவர் அப்பாவும் சிரிக்கிறார்
சரி பூ பழம் எல்லாம் நான் ஜெயிலர் கிட்ட கேட்டு வாங்கிப்பெண்டா.ஆனா மத்த தெல்லாம் எனக்கு என்னென்ன தேவைன்னு உனக்கு

தானே தெரியும் எழுந்திருடா.
நான் அழுக்கு தலையணையில் முகத்தை புதைக்கிறேன்
இது மாதிரி ஒரு அழுக்குள ,நாற்றதுல நான் படுத்ததே இல்லை.
எங்கேயோ நாய் ஊளை இடரது .
விருட்டுன்னு எழுந்து உட்கார்ந்தேன் .வியர்வில் உடம்பு தெப்பமா நினைஞ்சுட்டு .
இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா நினைவுக்கு வர்றது
ஜெயந்திரர் அவர்தான் அந்த பெரியவர்.பக்கத்துல இல்லேன்கிறதே பேரு மூச்சை இறக்க ..அவரை போல் நானும் போலீஸ் கிலே சிக்க

கூடாதுங்கிறதுக்காகதானே  இந்த ஓட்டமும் ஒழியலும்
செத்து போன சங்கர ராமன் ஆவி ரூபமா என்னை மதிய பிரதேச தலை நகரான போபால் வரைக்கும் விரட்டி இருக்கார்.
செல் போன்லே ,என்னை போலீஸ் தேடுவதையும் என் குடும்பத்தாரிடமும் ,நெருங்கியவர்களிடமும் விசாரிப்பதை அப்பப்போ கேட்டு

தெரிஞ்சு கிட்டுதானிருக்கேன்.
நான் தற்கொலை செஞ்சு கிட்டதாக கூட ஒரு தகவல் பரவி இருக்கு .
நேற்று வரை வெறும் ரேஷன் கார்ட்லையும் ,கார் லைசென்சுலையும் , பாஸ் போர்ட்லயும் மாறுமே இருந்த என் பெயர் ..இப்ப

பத்திரிக்கை,டிவி எல்லாத்துலயும் இப பரபரப்பா பேசப்படறது .
எல்லாம் இந்த பெரியவர் ஜெயந்திரரால்தான்.
நான் யார்?அவர் யார்?
நானும் அவரும் எந்த புள்ளியில் சந்தித்தோம்
எல்லாத்தையும் யார்கிட்டயாவது சொல்லிட தேவலை போலிருக்கே
மனசு ஆற்ற மாட்டாமல் பொங்கி பொங்கி நிறைக்கிறதே
மணி ஓசை செல் போனேதான்
"ரவி நீ சூசைட் பண்ணிகிட்டதா ஒரே ரூமர் .உன்னை பத்தி தெருஞ்சுக்கனும்னு நக்கேரன்ல கேக்குறாங்க .பேசுறியா?
 நண்பனின் குரல்
அப்புறம் நானே பேசுறேன்னு கட் செஞ்சேன் .போலிசுக்கு தெரியக்கூடாதுன்னு தானே போபால் வரைக்கும் ஓடி வந்தேன்?
'இப்ப என்ன.. செத்து போய்ட்டதாகவே இருக்கட்டுமே .
அதுவும் நல்லது தானே ?"
ஆனா என் மேல எத்தனையோ கோபம் இருந்தாலும் எனக்காக அலற சித்ரா ,அப்பா செத்துட்டதா நினைச்சு எனக்கு கருமம் செய்யப்போற

என் குழந்தைங்க ..என்னை எண்ணி கதரப்போற என் குடும்பம் ..இதெல்லாம் மனசுக்குல வந்து நிற்க ..
நான் செல் போனின் நம்பர்களை அழுத்தினேன்
"ஹலோ நக்கீரன் நான்தான் ரவி சுப்ரமணியன் பேசுறேன்.."

--------- அடுத்த பகுதியில் சந்திப்போம்
                                                                                                                                                                      

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]