வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, July 08, 2010

கரூர் மாநாடு - பெரியார்தம் கந்தகப் பூமியின் வெப்பத்தை வெளிப்படுத்தினர்

6.7.2010 செவ்வாய் அன்று கரூரில் நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாடு _ அதனை-யொட்டிய பேரணி ஆகியவை பெரும் அதிர்வை அந்தப் பகுதியில் ஏற்படுத்தின என்பதில் அய்யமில்லை.

இயல்பாக மாநாடு ஒன்று நடைபெறுவதற்கும் _ இன எதிரிகளோ, மதவாத சக்திகளோ வாலாட்டம் காட்டும் சூழலில், அதனை எதிர்த்துப் போர்க்கோலம் பூண்டு கழகம் நிகழ்ச்சிகள் நடத்தும்போது _ அதற்கொரு தனித்துவம் இருக்கத்தான் செய்கிறது.

எதிர்நீச்சல் என்பது கழகத்தைப் பொறுத்தவரை இன்பத் தடாகத்தில் நீந்துவது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும்.

மதுரையில் கருஞ்சட்டைப் படை மாநாடு நடத்தப்பட்டபோது பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் மாநாட்டுப் பந்தல் எரியூட்டப்பட்ட நிலையில்கூட, தந்தை பெரியார் சற்றும் பதற்றம் அடையாமல், மதுரையைக் கண்டு பயந்தோமா _ எழுச்சிக் கொண்டோமா என்பதைச் செயல்கள்மூலம் காட்டவேண்டும்; எங்கும் கருப்புச் சின்னம் தோன்றச் செய்யவேண்டும் என்றுதான் கூறினாரே தவிர ஓய்ந்துவிடவில்லை.

தென்னகத்தில் சங் பரிவார் அமைப்பைக் கால் ஊன்ற வைத்திட பல்வேறு முயற்சிகளை பணப் பலத்துடன், ஊடகப் பலத்துடன் முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டும்கூட, அவர்களின் பருப்பு தமிழ் மண்ணில் வேகாததற்குக் காரணம் _ தந்தை பெரியார் அவர்கள் கண்ட இயக்கமும், இந்த மண்ணை உழுது செழுமைப்படுத்தியதும்தான்.

நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. பலத்த கூட்டணி-யோடு தேர்தல் களத்தில் இறங்கினாலும், அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெற முடியாமல் சிதறடிக்கப்படுவதற்குக் காரணமே தமிழ்நாடுதான். புதுவையைச் சேர்த்து தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் 40 என்றால், இவர்களால் தனித்து நின்று ஓரிடத்தைக் கூடப் பெற முடியாமல் போவதுதான் அவர்களின் ஆட்சிக் கனவின் கரு கலைந்து போவதற்கான அடிப்படைக் காரணம் ஆகும். இதனை பிரதமர் பதவி கனவு காணும் எல்.கே. அத்வானியேகூட வெளிப்-படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பா.ஜ.க. பக்தியைக் காட்டி பாமர மக்களின் கண்களில் மண்ணைத் தூவி, பதவிக் கரை ஏறிடலாம் என்று நினைத்துத் தூண்டில் போட்டுப் பார்த்ததுண்டு.

தமிழ்நாட்டில் பக்தி உணர்வுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லைதான்; வீதிக்கு வீதி கோயில்கள்தான் என்றாலும், அதனையும் தாண்டி _ பா.ஜ.க. _ அதன் பரிவாரம் என்றாலே அவை பார்ப்பன ஆதிபத்திய நோக்கம் கொண்டவை என்பதில் தமிழ்நாட்டு மக்கள் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பதால், அவர்கள் போடும் வேடம் எல்லாம், சாயமெல்லாம் கரைந்து போய்விடுகின்றன. இந்தத் தெளிவுக்குக் காரணம் நமது கழகமே!

பா.ஜ.க.வோ, அதன் பரிவார அமைப்புகளோ தமிழ்நாட்டில் மாநாடுகளையோ, பேரணி-களையோ, விநாயகர் ஊர்வலத்தையோ நடத்தி-னால், அவற்றிற்கான எதிர் விளைவைத்தான் அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

திருச்சியிலே விசுவ இந்து பரிஷத் மாநாட்டை நடத்தினர்; (பிப்ரவரி 8, 9_ 2003) அதன் அகில உலகப் பொதுச்செயலாளர் தொகாடியா மற்றும் முன்னணித் தலைவர்கள் பங்கு கொண்டு, பொதுமக்களுக்குத் திரிசூலம் வழங்கினர் என்றால், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதே திருச்சியில் திராவிடர் கழக மாணவரணி மாநாடும், பேரணியும் நடத்தப்பட்டு (2.3.2003), வட்டியும் முதலுமாக அறிவார்ந்த வகையில் பதிலடி கொடுக்கப்பட்டது. அதன் விளைவு சங் பரி-வாரங்களின் முதுகெலும்பு நொறுக்கப்பட்டதுதான் மிச்சம்; தமிழர்களிடையே இன உணர்ச்சி எரிமலை கொழுந்துவிட்டு எரியும் போக்குதான் தலையெடுக்கும்.

கரூரில் இந்து முன்னணி மாநாடு நடத்தி, ஊர்வலத்தை நடத்தி வம்பை விலைக்கு வாங்கும் வண்ணம் வன்முறை வெறியாட்டம் ஆடியதன் விளைவு _ திராவிடர் கழகத்தால் மண்டல மாநாடும், பேரணியும் நடத்தப்பட்டன. கட்சிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் அனைத்துத் தமிழர்களும், தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் அழைப்பை ஏற்று, ஓரணியில் திரண்டு நின்று, பெரியார்தம் கந்தகப் பூமியின் வெப்பத்தை வெளிப்படுத்தினர். கரூர் மாநாடு வெற்றியின் சிகரத்தில் ஒளிவிட காரணமாக இருந்த அனைவருக்கும் பாராட்டு! பாராட்டு!!

----------- விடுதலை தலையங்கம் (08.07.2010)

                                                                                                                                                                      


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]