வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, July 15, 2010

பா.ஜ.க தலைவர்களின் நாகரிகமற்ற பேச்சுகள்

பாரதீய ஜனதா கட்சியின் புதிய தலைவரான நிதின்கட்காரி _ தொடக்க நிலையில் பார்ப்பன ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்டவர் _ துடிப்புமிக்க இளைஞர் _ மகாராட்டிர மாநிலத்தில் அமைச்சராக இருந்தவர் _ இவர் தலைமையில் பா.ஜ.க. பெரும் வளர்ச்சி அடையும் என்றெல்லாம் தூக்கி நிறுத்திப் பார்த்தனர்.

என்னதான் செயற்கைக் கால் கொண்டு தூக்கி நிறுத்திப் பார்த்தாலும், உண்மை அறிவுதான் மிஞ்சும் என்பது _ இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

கட்சிக்குள்ளேயேகூட அவரை மதிப்பார் இல்லை என்ற நிலைதான்; மூத்த தலைவர்களைப்பற்றிக் கேட்கவே வேண்டாம்.

கொள்கை அளவிலும் மாற்றம் ஒன்றையும் கொண்டுவர முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ். எப்படியோ இருந்தாலும் தேர்தலில் போட்டியிடும் கட்சியாக பா.ஜ.க. இருப்பதால், அதன் போக்குகளில் மாற்றம் வரவேண்டும் என்ற கருத்து கட்சிக்குள் புகைச்சலாக ஏற்பட்ட நிலையில், புதிய தலைவர் அதற்குப் பொருத்த-மாக இருப்பார் என்றெல்லாம் பேசப்பட்டது.

பழைய கள் புதிய மொந்தை என்ற நிலை-யில்தான் கட்சி இருக்கிறது _ பா.ஜ.க.வைப் பொறுத்தவரையில் அதற்கென்று தொண்டர்கள் கிடையாது. ஆர்.எஸ்.எஸை நம்பித்தான் கட்சியை நடத்த முடியும் என்ற பரிதாப நிலை. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸின் கட்டளைப்-படியும், நோக்கப்படியும், கொள்கைப் படியும் கட்சியை நடத்தியே தீரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் பா.ஜ.க.வுக்கு உண்டு. மீறினால் ஆர்.எஸ்.எஸ். காதைத் திருகிவிடும்.

ஆர்.எஸ்.எஸின் புதிய தலைவரும் சரி, பா.ஜ.க.வின் புதிய தலைவரும் சரி அடிப்-படைக் கொள்கைகளில் மாற்றம் இல்லை என்று ஒருமுறைக்குப் பலமுறை கூறி-விட்டனர்.

தொடர்ந்து பொதுத் தேர்தலில் கட்சி தோல்வியைச் சுமந்து வருகிறது. கட்சிக்-காரர்-களிடம் ஆர்வமற்ற போக்கு; பா.ஜ.க. கவிழும் கப்பல் என்று அவர்கள் உணர்ந்துவிட்டனர்.

வீண் வார்த்தைகளைக் கொட்டி வம்பில் மாட்டிக்கொள்ளும் சிறுபிள்ளைகளாக அவர்கள் நடந்துகொள்வதையும் அடிக்கடி காண முடிகிறது.

நேரு குடும்பத்தைச் சேர்ந்த _ சஞ்சய் காந்தியின் மகன் வருண்காந்தி மக்களவைத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கக்கிய அநாகரிக-மான பேச்சு பி.ஜே.பி.யினரை பெரும் தடு-மாற்றத்திற்கு ஆட்படுத்தியது. சிறுபான்மை-யினரின் நாக்கையும், கரங்களையும் துண்டிப்பதாக எல்லாம் பேசினார்.

பா.ஜ.க.வின் புதிய தலைவரான நிதின் கட்காரியோ நாடாளுமன்றத்தைத் தாக்கிய பயங்கரவாதி அப்சல்குரு காங்கிரஸ் கட்சியின் மருமகனா என்று நாகரிகமின்றிப் பேசினார்.

அவரை நல்ல மருத்துவரிடம் அனுப்பி வையுங்கள் என்று காங்கிரஸ் தரப்பிலிருந்து நாகரிகமான வகையில் விமர்சனம் வந்தது. பா.ஜ.க. தரப்பில் கட்காரியைக் காப்பாற்ற யாரும் முன்வர முடியாத பரிதாப நிலை.

முன்னாள் பா.ஜ.க. தலைவரும், மத்திய அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷி, கட்காரியின் பேச்சுபற்றி குறை கூறியுள்ளார். பா.ஜ.க. கூட்டணி கட்சியைச் சேர்ந்த அய்க்கிய ஜனதா தலைவர் சரத் யாதவ் பேச்சில் ஒழுங்கு தேவை! என்று நாகரிகமாக கட்காரியின் தலையில் குட்டியுள்ளார்.

பா.ஜ.க. விரக்தியின் விளிம்பில் இருக்கிறது. தொடர் தோல்விகள் அக்கட்சியைப் பெரிதும் பாதிக்கச் செய்துள்ளன. சங் பரிவார்கள்மீதான வன்முறைத் தொடர்பான வழக்குகள் அவர்களின் கழுத்தை நெரித்துக் கொண்டும் இருக்கின்றன.

இத்தகைய நிலையில் அவர்கள் உதிர்க்கும் சொற்கள் அவர்களின் விரக்திக்கான வெளிப்-பாடு என்றே கருதப்படவேண்டும்.

----------  விடுதலை தலையங்கம் (15.07.2010)
                                                                                                                                                              

5 comments:

ரம்மி said...

//பா.ஜ.க தலைவர்களின் நாகரீகமற்றப் பேச்சுக்கள்//

நாகரீகமற்றப் பேச்சுக்கள், திராவிடங்களுக்கே, உரித்ததா? மற்றக் கட்சியினர் அவ்வாறு பேசக்கூடாதா?
என்ன கொடுமை,ஐயா..! இது!

ஆட்டையாம்பட்டி அம்பி said...

வணக்கம் நண்பரே!

எனது புதிய பதிவு:

கருணாநிதி ஹிந்தி படிக்க விட்டு இருந்தால் மூணு வேளை பிரியாணியும் ஒரு குவார்ட்டரும் ஒவ்வொரு தமிழனக்கும் தினமும் கிடைத்து இருக்கும்!

http://tamilkadu.blogspot.com/

or

http://tamilkadu.blogspot.com/2010/07/blog-post.html


என்றும் அன்புடன்,

ஆட்டையாம்பட்டி ஆம்பி!?

Robin said...

பா.ஜ.க. என்ன வேடமிட்டாலும் அதன் பாசிச முகத்தை மறைக்க இயலாது.

Robin said...

//நாகரீகமற்றப் பேச்சுக்கள், திராவிடங்களுக்கே, உரித்ததா? மற்றக் கட்சியினர் அவ்வாறு பேசக்கூடாதா?// அதானே. திராவிடக் கட்சிகள் எத்தனை கொலைகளை செய்துள்ளார்கள், எத்தனை கலவரங்களை நடத்தியுள்ளார்கள்? ஆனால் பா.ஜ.க.வைப் பாருங்கள்! இத்தனை பெருமைகள்கொண்ட பா.ஜ.க.வை கேவலம் வெறும் நாகரீகமற்ற வார்த்தைகள் பேசியதற்காக விமர்சிக்கலாமா? கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக்கீறி சிசுவைக்கொன்ற பெருமைவாய்ந்த கட்சி அல்லவா அது!

..:: Mãstän ::.. said...

<<<
ஆனால் பா.ஜ.க.வைப் பாருங்கள்! இத்தனை பெருமைகள்கொண்ட பா.ஜ.க.வை கேவலம் வெறும் நாகரீகமற்ற வார்த்தைகள் பேசியதற்காக விமர்சிக்கலாமா? கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக்கீறி சிசுவைக்கொன்ற பெருமைவாய்ந்த கட்சி அல்லவா அது!
>>>

:)

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]