வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, July 11, 2010

தங்களுக்கு என்று நாடும், மொழியும் இல்லாத லம்பாடிப் பார்ப்பனர்கள்

 கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவுரையில் முதலமைச்-சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் 16 அம்ச திட்டங்களை அறி-வித்தார். அதில் முக்கியமான ஒன்று_ தமிழில் படித்தவர்-களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்பதாகும்.

சொன்னதைச் செய்வார் கலைஞர் என்பதற்கு அடை-யாளமாக_ - சென்னை சாந்-தோம் மாவட்ட தொழில்-நுட்ப வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாகப் பரிந்துரைக்கப்பட்டவர்களில், தொடக்கக் கல்வி முதல் தமிழிலேயே படித்த பொ.பேதுரு என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்-தில் நகல் பெருக்கியாளர் (ஜெராக்ஸ் ஆபரேட்டர்) பணிக்கான ஆணையினை முதலமைச்சர் கலைஞர் வழங்கியுள்ளார்.

இது ஒரு தொடக்கம்-தான், - இனி மளமளவென்று இந்தத் திசையில் தமிழ்நாடு அரசு தன் கடமையினைச் செய்யும் என்பதில் அய்ய-மில்லை.

இந்த நேரத்தில் நம் இன எதிரிகளின் மனப்பான்மை எந்தக் கிறக்கத்தில் இருக்-கிறது என்பதை முக்கிய-மாக நாம் தெரிந்து கொள்ள வேண்டுமே!

23.6.2010 நாளிட்ட துக்ளக் இதழ் பக்கம் 23 இல் துர்வாசர் என்பவர் கட்-டுரை ஒன்றைத் தீட்டியுள்-ளார்.

தமிழை நீஷப் பாஷை என்று நாக்கை நீட்டிப் பேசும் கூட்டமாயிற்றே! சொறி பிடித்த கையும்_- இரும்பு பிடித்த கையும் சும்மா இருக்காதே! இதோ எழுதுகிறார்:

தமிழில் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக் குக்கூட லாயக்காக மாட் டோம் என்பதைத் தெரிந்து கொண்டுதான், மாணவர் கள் ஆங்கில வழிக் கல்வி யில் விழுந்து விழுந்து படிக்கிறார்கள் என்று தன் பூணூல் கொடுக்கால் எழுதி-யுள்ளார்.

இன்னொரு இடத்திலோ தமிழ் சோறு போடாது என்று தமது சோற்றுத் துருத்தித் தனத்தையும் வெளிப்படுத்திக் கொண்டி-ருக்கிறார்.

தமிழ் மீது எவ்வளவு ஆத்திரமும், பகை உணர்ச்-சியும் இருந்தால் இத்தகைய வார்த்தைகளைக் கையாண்டி-ருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இவ்வளவுக்கும் இவர்கள் தமிழால் பிழைப்பு நடத்து-பவர்கள்தாம்.

இப்பொழுது தமிழில் படித்தவருக்கு முதல் ஆணையைப் பிறப்பித்து-விட்டாரே, முதல்வர் கலை-ஞர். எந்தச் சுவரில் போய் முட்டிக்கொள்வர் துர்-வாசர்கள்?

இரண்டாம் உலகப் போர் நடந்தபோது இட்லர் வெற்றி பெறுவார் என்ற நிலையில் ஜெர்மன் மொழி படித்ததும், அதன் பின் ஜப்பான் வெற்றி பெறும் என்று பேச்சு அடி-பட்டதும் ஜப்பான் மொழி-யைப் படித்ததும் இந்தப் பார்ப்பனர் கூட்டம்தானே! பார்ப்பனரான கல்கியே தமது அலை ஓசை நாவ-லில் இதனைக் குறிப்பிட்-டுள்ளாரே! தங்களுக்கு என்று நாடும், மொழியும் இல்லாத லம்பாடிப் பார்ப்ப-னர்கள் சீர்கொண்ட செந்-தமிழை நாக்கழுகப் பேசா-திருப்பரோ!

தமக்கு இல்லாதது தமிழர்களுக்கும் கிடைக்கக் கூடாது என்ற தாராள மனப்-பான்மை _ இந்தத் தர்ப்பைப்-புல் கூட்டத்துக்கு!

- விடுதலை (11-07-2010) மயிலாடன்

2 comments:

vanakkamradio said...

நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது காதில் தேன் வந்து பாய்கிறது .
ஆனால் ஒரு உண்மை தெரியுமா?
அப்படித் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு இந்தியச் சட்டத்தில் இடமில்லை .

கலைஞரைப் புகழ்வதற்கு வேறு ஒரு விடயத்தைக் கையில் எடுங்கள் .

நன்றி

நம்பி said...

//தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு இந்தியச் சட்டத்தில் இடமில்லை //


மாநில சட்டத்திற்கு இடமிருக்கிறது...ஒவ்வொரு மாநிலத்திலும் வேலை வாய்ப்புகள் இருக்கிறது...அரசு வேலை வாய்ப்புகள் இருக்கின்றன...இதற்கான சட்டம் இயற்றிக்கொள்ள அரசியலைமைப்பு அனுமதிக்கிறது...புதிய வலியுறுத்தும் சட்டமும் இயற்றிக்கொள்ள முடியும்.

இந்திய நாட்டில் மாநில அரசு, மைய அரசு சட்டம் இரண்டு சட்டங்கள் இயற்றிக்கொள்ள சட்டப்பேரவைகள், பாராளுமன்றங்கள் இடமளிக்கின்றன...அரசியலமைப்பு இடமளிக்கிறது.

//கலைஞரைப் புகழ்வதற்கு வேறு ஒரு விடயத்தைக் கையில் எடுங்கள் ...//

கலைஞரை புகழாவிட்டால் போகிறது..புகழ்ந்து ஒன்றும் ஆகப்போவதில்லை...அதற்கு நிறைய பேர்கள் இருக்கிறார்கள்......தமிழ் படித்த மக்களுக்கு, தமிழ் பயிற்று மொழியில் படித்த லட்சோபலட்ச ஏழை மாணவர்களுக்கு...பயனளிக்குமா? என்பதை மட்டும் பாருங்கள் போதும். தமிழ் வழிக்கல்வியை பயில்பவன் ஏழை? வேறு எவனும் படிப்பதில்லை...அந்த நிலை படிப்படியாக மாறிவருகிறது. அதை வலியுறுத்தும் திட்டங்கள் தான் இதெல்லாம். தமிழக அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தோருக்கு முன்னுரிமை...தமிழ் பயிற்று மொழி மேனிலை கல்வித் தேர்வுக்கான கட்ட்ணத்தில் முழு விலக்கு போன்றவைகள்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]