வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, May 05, 2010

பகுத்தறிவு உலகு செய்வோம் என்று சூளுரைப்போம்! வாழ்க பெரியார்!

இரண்டாவது உலக யுத்தத்தில் பாசிச ஹிட்லரின் நாஜிப் படைகளைத் தோற்கடித்து, போரை முடிவுக்குக் கொண்டு வந்த _ அந்த வெற்றித் திருநாளின் 65 ஆம் ஆண்டு விழா _ சென்னை ருசிய கலாச்சாரம் மற்றும் அறிவியல் மன்றத்தில் நேற்று நடைபெற்றது.


இரண்டாவது உலகப் போரில் கொல்லப்பட்ட மக்கள் எட்டுக்கோடி; இதில் சோவியத் ருசியாவில் மட்டும் 2 கோடி மக்கள். ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டதில் கொல்லப்பட்டவர்கள் கொஞ்சமல்ல; அந்த அணுகுண்டின் பாதிப்பு இன்றுவரை ஜப்பானில் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. இந்த ஆண்டு விழாவைக் கொண்டாடுவதன் நோக்கம் _ இனி போர் என்பது நினைத்துப் பார்க்கக் கூடாத அபாய சக்தி. அடுத்து ஒரு போர் மூண்டால் அது ஒட்டு-மொத்தமான மனிதகுல அழிவாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு அழிவுக் கருவிகள் விஞ்ஞான ரீதியாக உருவாக்கப்பட்டுவிட்டன.

வெற்றி _ தோல்வி என்று நிரூபிக்கவும், கொண்-டாடவும் முடியாது; காரணம், மனிதர்கள் இருந்தால்தானே அத்தகு நிகழ்வுகள் நடை-பெறக்கூடும்.

ஹிட்லரின் பாசிசத்தை முறியடித்ததை மனித குலம் கொண்டாடத்தான் வேண்டும். ஹிட்லரின் சிந்தனைகள் எந்த ஒரு தனி மனிதனுக்கும் சரி, நாட்டுக்கும் சரி வரவே கூடாது என்கிற உணர்வை ஊட்ட பொதுமக்களின் கருத்து-களைத் திரட்ட இத்தகு விழாக்கள் பயன்படக்-கூடும்.

அதேநேரத்தில், இன்னொன்றையும் நிதானமாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

உலக அளவில் யுத்தம் நடைபெறவில்லை-யென்றாலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறுசிறு யுத்தங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஆபத்தான இரசாயன கருவிகள் ஈராக்கில் இருப்பதாகக் கூறி, பெரியண்ணனாக அமெரிக்கா ஈராக்கில் படைகளைக் குவித்து அந்நாட்டு மக்களையும், அதிபரையும் கொன்று குவித்ததை எந்தக் கணக்கில் வைத்துக்கொள்வது?

தீவிரவாதிகளை ஒழிப்பதாகக் கூறி ஆப்கானிஸ்தான்மீது குண்டு மழை பொழிவது எந்த அடிப்படையில்?

நேரடியாக இராணுவத்தின்மூலம் தாக்குதலைத் தொடுக்காமல், அந்நிய நாடுகளில் பயங்கரவாதி-களைத் தயார் செய்து அனுப்பி வன்முறை நட-வடிக்கைகளில் ஈடுபடச் செய்து அப்பாவி மக்கள் பலியாக்கப்படுவது நடந்துகொண்டுதானே இருக்கிறது!

மதத் தீவிரவாதம் என்ற பெயரில் இளை-ஞர்களின் மூளைகளில் சாயம் ஏற்றி, இராணுவப் பயிற்சி கொடுத்து, மனித உயிர்களைக் கொடூர-மான முறையில் கொன்று குவிப்பதும் பாசிசம்-தானே!

ஹிட்லர், முசோலினி போன்ற பாசிஸ்டுகள் உயிரோடு இன்று இல்லை என்பது உண்மைதான் என்றாலும், அந்த பாசிஸ்டுகளின் குணாம்சம் நாட்டில் செத்து ஒழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது என்பதற்கு எடுத்துகாட்டுகள்தான் இவை!

1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதி இடிக்கப்-பட்டதே _ அதனைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்-பட்-டனவே _ எத்தனை ஆயிரம் மக்கள் மாண்டனர்!

2002 இல் குஜராத்தில் என்ன நடந்தது? 2000_த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் வேட்டையாடப்பட்டனரே! குரூரமான முறை-களில் விறகுக் கட்டைகளை அடுப்பில் சொருகு-வதுபோல மனிதர்களை கொடுந்தீயில் தள்ளிக் குதூகலித்தனரே!

யுத்தமாவது ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டுக்கும் இடையில் நடப்பது! இந்த மதவாதம் ஒரு நாட்டுக்குள்ளேயல்லவா உள்நாட்டு யுத்தத்துக்குக் கத்தி தீட்டுகிறது!

இரண்டாம் உலக யுத்தத்தில் பாசிஸ்டுகள் முறியடிக்கப்பட்டதற்கான வெற்றி விழா கொண்டாடும் இந்தக் காலகட்டத்தில், இந்தப் புதிய வடிவங்களில் தலைதூக்கி நிற்கும் பாசிசத்தை முறியடிக்க என்ன செய்யப் போகிறோம்?

மதமான பேய் பீடியாத புதியதோர் பகுத்தறிவு உலகு செய்வோம் என்று சூளுரைப்போம்! வாழ்க பெரியார்!

---------- விடுதலை தலையங்கம் (06.05.2010)

1 comment:

Anonymous said...

இந்த கட்டுரையின் மூலம் ஒன்று தெரிகிறது. மதங்கள் குறித்த சிந்தனையில், பகுத்தறிவுகள் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]