வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, May 06, 2010

ஆசிரமங்கள், சாமியார்கள்மீது புதிய பார்வை தேவை!

ஆசிரமங்கள் மீதும், சாமியார்கள் மீதும் கண்டிப்பான நடவடிக்கைகள் அவசரமாகவும், அவசியமாகவும் தேவைப்படும் காலம் கனிந்தே விட்டது. இதற்கு மேலும் எந்தக் காரணத்தைச் சொல்லியும் இத்தகைய நடவடிக்கைகளில் தயக்கம் காட்டுவது, இந்தப் பேர்வழிகளின், அமைப்புகளின் சமூகவிரோதச் செயல்கள் வளர்வதற்கு உரம் இட்டதாகவே ஆகும்.


இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இதுதான் சரியான சந்தர்ப்பமாகும். பொது-மக்களும், குறிப்பாகப் பக்த கோடிகளும்கூட குறிப்பிட்ட ஒரு மன நிலைக்கு வந்துவிட்டனர்.

காஷாயம் என்பது வெளிவேடம்; -அதற்குள் ஆபாசம் ஆயிரம்-; அதில் அசிங்கங்களும், அரு-வருப்புகளும் - குவிந்து கிடக்கின்றன என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் கோடிகோடியாகப் பணம் பறிக்கும் வேலை திட்டமிட்ட வகையில் நடந்துகொண்டு இருக்கிறது_- இந்தப் பணத்தின் மூலம், துறவு என்ற பெயரில் கற்பனைக்கு எட்டாத வகையில் உல்லாசத்திலும், சல்லாபத்திலும், நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் வெளிப்படை-யாகி விட்டது.

பாலியல் உறவு என்ற மென்மையான, மேன்மையான ஒன்றை மிகக் கேவலமான முறையில் கொச்சைப்படுத்தி விட்டனர் என்ற பொதுவான அபிப்ராயம் இன்னொரு பக்கத்தில்.

மனிதன் அறிவைப் பயன்படுத்தவேண்டும்; உரிய அளவில் உழைக்கவேண்டும்; முன்னேற்றத் திசையில் பயணிக்கவேண்டும் என்ற மிக நாகரிகமான கோட்பாட்டை நாசப்படுத்தி விட்டனர். சரணடை, சகல சவ்பாக்கியங்களும் கிடைக்கும் என்று உபதேசித்து மனிதனிடம் குடிகொண்டிருக்கும் அளப்பரிய மூளைச் சக்தியை விலங்கிட்டு விட்டார்கள். உழைக்கும் உன்னதப் பண்பாட்டின் கைகளைக் கட்டிப் போட்டு விட்டனர்.

இதன் காரணமாக குறிப்பிட்ட காவி வேட-தாரிகளின் சேவகர்களாக மாறி வருகின்றனர். பல மோசமான வகைகளிலும் சாமியாருக்கும், ஆசிரமங்களுக்கும் பயன்படும்படி மூளைச் சாயம் ஏற்றப்படுகின்றனர். - சுருக்கமாகச் சொல்லப் போனால் இயற்கையான மனித உணர்வுகள் அத்தனையையும் மரத்துப் போகச் செய்து, மன நோயாளிகளாக ஆக்கப்படுகின்றனர். பரிதாபத்திற்குரிய பெண்கள் பக்தியின் பெயரால் தங்களை எல்லா வகையிலும் தொலைத்து விடுகிறார்கள். கர்ப்பங்கள் கலைக்கப்படுகின்றன. பிணங்கள் ஆசிரம வளாகங்களுக்குள் இரவோடு இரவாகப் புதைக்கப்படுகின்றன. இதில் ஒரு வெட்கக்கேடு_ மருத்துவம் படித்த டாக்டர்கள்-கூட இந்தக் கபோதிகள் கொட்டிக் கொடுக்கும் பணக் கத்தைகளுக்குத் துணை போகிறார்கள்.

இதுபோல் இளைஞர்கள்கூட ஆசிரமங்களின் கொட்டடிகளில் மூளை விலங்கு மாட்டப்பட்டு தங்களின் விலை மதிக்க முடியாத எதிர்காலத்-தைப் பலி கொடுத்து விடுகின்றனர். பெற்றோர்கள் அழைத்தாலும் ஏற்கெனவே அவர்கள் கட்டப்பட்ட கட்டுத் தறியிலிருந்து விடுபட முடியாத மனநிலைக்கு ஆளாகி விடுகின்றனர்.

இவ்வளவும் நாட்டில் நாளும் நடந்து வரும்-போது, இதில் சட்டம், விதிமுறைகள் என்கின்ற ஓலைச் சுவடிகளைப் புரட்டிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை.

அந்நியச் செலாவணி மோசடியிலிருந்து, இளம் பெண்களை நாசப்படுத்தியதற்கு செக்ஸ் ஆராய்ச்சி என்று விபரீதப் பொருள் கொடுப்ப-திலிருந்து எல்லா வகையிலும் கிரிமினலாக நடந்துகொண்டிருக்கிற நித்யானந்தா விஷயத்தில், நடவடிக்கை எடுக்க, எத்தனை எத்தனை சம்பிரதாயங்கள், அலுவலக நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன? அதுவும் சனாதன பா.ஜ.க. ஆளும் கருநாடக மாநிலத்தில் சனாதனத்-துக்கும் சவக்குழியாக மாறப்போகும் ஒரு பிரச்சினையில் நேர்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கமுடியுமா? (இப்பொழுதே மருத்துவமனையில் படுத்துக்-கொண்டுள்ளார்).

இதுபோன்ற ஆசாமிகள் மிகக் கடுமையான வகையில் தண்டிக்கப்படும்போதுதான், நாட்டில் நல்ல சிந்தனைகள்_- ஆரோக்கியமான வழிமுறைகளுக்கு உத்தரவாதம் இருக்கமுடியும். மக்கள் நல அரசு (Welfare State) என்பதற்கு நல்ல அடையாளம் இதுவாகத் தானிருக்க முடியும்.


------- விடுதலை தலையங்கம் (27.04.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]