வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, May 23, 2010

மாணவர்களின் பிறந்த நேரத்தில் குரு மற்றும் சனிகளின் நிலையை ஆராயப் போகிறார்களாம்

உத்தரப்பிரதேசம் லக்-னோவில் ராம் மனோகர் லோகியா பெயரில் உள்ளது சட்டப் பல்கலைக் கழகமா அல்லது சாமியார்கள் கூத்-தடிக்கும் சோம்பேறிகளின் மடமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


அப்பல்கலைக் கழகத்-தில் சேரும் மாணவர்கள் தங்கள் பிறந்த தேதி, நேரம் ஆகிய விவரங்களைக் கொடுக்க-வேண்டும்.

இதுகுறித்து துணை-வேந்தர் பல்ராஜ் சவுகான் கூறியுள்ள கருத்து_ இவர்-களெல்லாம் துணை வேந்-தர்களாக வந்தால் நாடு சுடுகாடாகத்தான் மாறும்.

மாணவர்களின் பிறந்த நேரத்தில் குரு மற்றும் சனி-களின் நிலை குறித்துக் கணிக்கப்படுமாம்_- மாணவர்-களின் கிரக நிலை சரியாக இல்லாமல் இருந்தால், அவர்கள் ஜாதகத்திற்கு ஏற்ப வண்ண மோதிரக் கல் அணியவேண்டும்.

மனோதத்துவ ரீதியாக-வும் மாணவர்களின் நடத்-தையை அறிகிறோம். நகத்-தைக் கடிப்பது, கால் ஆட்டுவது போன்ற சுபாவம் உள்ள மாணவர்களுக்கு நம்பிக்கைக் குறைவாக இருக்கும் என எடை போடு-கிறோம் என்கிறார் துணை-வேந்தர்.

இந்த அடிப்படையில் எல்லாம் அணுகுவதற்கும், எடை போடுவதற்கும் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்?

இதற்கான விஞ்ஞான அடிப்படை என்ன? மக்களிடம் அறிவியல் மனப்பான்மையைத் தூண்ட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51-ஏ) கூறுகிறதே லக்னோ பல்கலைக் கழகம் அரசமைப்பு சட்டத்துக்கு அப்பாற்பட்டதா?

பா.ஜ.க. மத்தியில் ஆட்சி செய்த காலகட்டத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த முரளி-மனோகர் ஜோஷி பல்-கலைக்கழகங்களில் சோதி-டத்-தைப் பாடமாக வைக்க-வேண்டும் என்று சுற்ற-றிக்கை வெளியிட்டார். அந்த மிச்சசொச்சங்கள் இன்னும் ஒட்டடையாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது போலும்!

மாணவர்களின் பிறந்த நேரத்தில் குரு மற்றும் சனிகளின் நிலையை ஆராயப் போகிறார்களாம்  யார் அந்தக் குரு? இவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த அந்தக் குருவும், சனியும் யாரோ?

இவர்கள் கூறும் கிரகங்-கள் முனிவர்களுக்குப் பிறந்தவை என்பதெல்லாம் எத்தகைய சிறுபிள்ளைத்-தனக் கிறுக்கனின் உளறல்! ஒன்பது கிரகங்களுக்குத்-தானே ஜோதிடம் சொல்லிக் கொண்டுள்ளனர்? இதுவரை மேலும் நான்கு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவே. அவைகளுக்கு சோதிடப் பலன் என்ன? நட்சத்திர-மான சூரியனை கிரகத்தின் பட்டியலில் வைத்துள்ளார்-களே_- இவர்களின் கிரகப்-பலன் சரியில்லையோ!

மாணவர்களுக்கு மனோதத்துவ சோதனை தேவையில்லை தேவை துணை வேந்தருக்கும் பல்கலைக் கழகப் பேராசிரியர்களுக்கும் தான்!

- மயிலாடன் விடுதலை(18.05.2010)

3 comments:

நியோ said...

"மாணவர்களுக்கு மனோதத்துவ சோதனை தேவையில்லை தேவை துணை வேந்தருக்கும் பல்கலைக் கழகப் பேராசிரியர்களுக்கும் தான்!"
மிகச் சரியாக சொன்னீர்கள் தோழர் !

ஷிர்டி.சாய்தாசன் said...

ஜோதிடம் உங்கள் அறிவுக்கு அப்பாற்பட்டது என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.

நம்பி said...

//ஷிர்டி.சாய்தாசன் said...

ஜோதிடம் உங்கள் அறிவுக்கு அப்பாற்பட்டது என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.//
11:05 AM

நிச்சயமாக அனைவரது அறிவிற்கும் அப்பாற்பட்டது...மூடநம்பிக்கைக்கு உட்பட்டது.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]