சென்னை - புரசைவாக்கம் தாணா தெருவில் வட-சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நேற்று (28.5.2010) நடைபெற்ற சிறப்புப் பொதுக்-கூட்டத்தில் பெரியாரும் வீரமணியும் என்ற தலைப்பில் தி.மு.க. சொற்பொழிவாளர் வெற்றி-கொண்டான் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
நான் எனது சொந்த வீட்டில், தாய் வீட்டில் பேசும் உணர்ச்சியோடு பேசுகின்றேன். இங்கு நான் உரையாற்-றும்போது புதுத் தெம்பும், புத்துணர்ச்சியும் பெறுகின்றேன்.
தந்தை பெரியாரும் வீரமணியும் என்று சொல்லும்போது இருவரையும் பிரித்துப் பார்க்கக் கூடாது. பெரியார் சிந்தித்தார்_- சொன்னார்_- செயல்பட்டார் - நம்மை மனிதராக்கினார். கொள்கைச் சொத்துக்களை விட்டுச் சென்றார்_-
நமக்கு வீரமணியையும் தந்தார்_- வீரமணியோ பெரியார் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். இதில் ஏன் இவர்களைப் பிரித்துப் பார்க்க வேண்டும்?
பிரித்துப் பேச ஆரம்பித்தால் உள்ளே எதிரி புகுந்துவிடுவான். இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்திய எல்லையில் இராணுவ வீரர்கள் நாட்டைப் பாதுகாப்பது போல ஒவ்வொரு கருஞ்சட்டைத் தோழனும் இந்த நாட்டைப் பாதுகாத்து வருகிறான்.
இன்றைக்கு நாம் பெற்றிருக்கிற வாழ்வு எல்லாம், வளம் எல்லாம் பெரியார் என்ற தலைவன் கொடுத்துச் சென்றது.
ஒரு காலத்தில் வடநாட்டான் நம்மை ஆண்டான். நம் ஆட்சியை இருமுறை கவிழ்த்தான். இன்றைக்கு இந்திய ஆட்சியைக் கவிழாமல் காக்கும் அதிகாரம் தமிழ்நாட்டிற்கு அல்லவா கிடைத்திருக்கிறது! இந்தப் பலம் நமக்கு எங்கே இருந்து கிடைத்தது? காரணம் பெரியார் அல்லவா!
இந்தியாவின் தலைநகரம் டில்லியா? தமிழ் நாடா? என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதே! நம்மைப் பெரியார் ஆளாக்கி வைத்து விட்டுச் சென்ற தன்மை-யில் கிடைத்த மரியாதை இது.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நம் நாட்டைத் தமிழ்நாடு என்று சொல்லுவதை விட தந்தை பெரியார் நாடு என்று சொல்லுவதுதான் சரியா-னது, - நமக்குப் பெருமை அளிக்கக்கூடியதும் ஆகும்.
பெரியார் என்ற ஒரு மாமனிதன் நம்மிடம் தோன்றியிருக்காவிட்டால் இந்தத் தமிழ் ஏது? தமிழன் ஏது? எதிரி நம்மை ஏப்பமிட்டிருக்க மாட்டானா?
எதிரியின் கைகளில் இருந்த ஆயுதங்களை யெல்லாம் பறிமுதல் செய்து தந்தவர் பெரியார்தான்.
உங்களுக்குப் பிறகு இந்த இயக்கத்துக்கு வாரிசு யார்? என்று பெரியாரைக் கேட்டார்கள். கொள்-கைதான் என்று பளிச்சென்று சொன்னார் . அந்தக் கொள்கைதான் நமக்குக் கிடைத்த ஆசிரியர் வீரமணி.
சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆதிக்க-வாதிகள் மிரட்டிய போது கூட தம் எழுத்தாலும் பேச்சாலும் அவற்றையெல்லாம் முறியடித்துக் காட்டியவர் பெரியார்.
உலகில் எத்தனையோ சீர்திருத்தவாதிகள் தோன்றினார்கள்; கருத்துகளை எடுத்துக் கூறினார்கள். அவர்கள் எல்லாம் விரட்டப்பட்டார்கள்_- ஒழிக்கப்-பட்டார்கள். ஆனால் நம் அய்யாதான் எல்லா எதிர்ப்புகளையும் பொடிப்பொடியாக்கிக் கொள்கை-யில் வெற்றி பெற்றார்.
உலகத்தில் எந்த கொள்கை அழிந்தாலும் நம் பெரியார் தந்த கொள்கைக்கு அழிவே இல்லை. அது நம்மிடம் இருக்கும் வரைக்கும்தான் நமக்குப் பாதுகாப்பு.
கடைசிக் கருஞ்சட்டைக்காரன் உள்ளவரை தந்தை பெரியார் கொள்கைக்கு அழிவே இல்லை.
பெரியார் இருந்த காலத்தில் இருந்த எதிர்ப்புக்கும் ஆசிரியர் வீரமணி காலத்தில் இருக்கும் எதிர்ப்புக்கு-மிடையே வேறுபாடுகள் உண்டு.
இப்பொழுது இருக்கும் ஊடகங்களும், தொலைக் காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு மூட-நம்பிக்கைகளைப் பரப்பி வருகின்றன. காலை முதல்
இரவு வரை மூடச் சரக்குகள்தான்.
நீ பிரதமராக வேண்டுமா? உன் பெயரோடு இரண்டு எழுத்துக்களைச் சேர்த்துக் கொள் என்-கிறான். அந்த ஜோதிடனை நான் தேடிக் கொண்டி-ருக்கிறேன். அட முட்டாளே! அடுத்தவனை ஏண்டா பிரதமராக்க ஆசைப்படுகிறாய்? உன் பெயரில் இரண்டு எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டு நீ ஜனாதிபதி-யாகப் போகவேண்டியதுதானே? என்று கேட்பேன். என் கண்களுக்கு அவன் சிக்க மாட்டேங்குறான்.
இராகு காலம் என்கிறான் _மரண யோகம் என்-கிறான். இப்படியெல்லாம் சொல்லி நாள் ஒன்றுக்கு நம்மை மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் படுக்க வைத்துவிட்டானே!
மரண யோகத்தில் அந்த ஒன்றரை மணி நேரத்தில் என்ன நடக்கிறது? ஒன்றரை மணி நேரத்தில் செத்துப் போய் மீண்டும் பிழைத்துக் கொள்கிறானா? இப்படியெல்லாம் கேட்கக்கூடிய பகுத்தறிவை நமக்குக் கொடுத்துச் சென்ற தலைவர்தான் நம் பெரியார். இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்கக் கூடிய ஒரு கூட்டம் உலகிலேயே தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அதற்குக் காரணம் தந்தை பெரியாரே.
நாம் கோயில் கர்ப்பக் கிரகத்திற்குள் சென்றால் தீட்டு என்கிறான். நீ செய்கிற வேலை என்ன? அந்தக் கடவுளுக்கு முன்னால்தான் எல்லாம் நடக்குது. பிரேமானந்தா என்ற சாமியார் செய்யாத அக்கிரமமே இல்லை. இந்தியாவிலேயே பெரிய வக்கீலைப் பிடித்-தான். அவர்தான் ராம் ஜெத்மலானி. கடைசியில் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்ததே. எங்கே போனான் கடவுள்?
டில்லி உச்ச நீதிமன்றத்துக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தலைமை நீதிபதியாக வந்தாரே_ பெரியார் மறைந்து வீரமணி காலத்திலே! - இது பெரியாருக்கும் வீரமணிக்கும் கிடைத்த வெற்றியல்லவா?
542 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையிலே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தலை-வராக வந்துவிட்டாரே! ராமன் பிறந்ததாகக் கூறும் உத்தரப் பிரதேசத்திலே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல் அமைச்சராக வந்து-விட்டாரே! இது பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியல்லவா? பெரியார் மறைந்திருக்கலாம் - ஆனால் அவர் கொள்கை மறையவில்லை. நாளும் வெற்றி பெற்றே வருகிறது.
இந்த நாட்டிலே முதல் கவர்னர் ஜெனரல் யார் என்றால் ராஜகோபாலாச்சாரி என்ற பார்ப்பனர்தான். கவர்னர் ஜெனரலாக இருந்தவர் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராகவும் வந்தார்.
பச்சைத் தமிழர் காமராசர் பார்த்தார் பெரியார். சுற்றிச் சுற்றிப் பார்ப்-பான்-தானே அதிகாரத்துக்கு வருகிறான். இதற்கொரு முடிவைக் கண்டுபிடித்தார் பெரியார். அந்தக் கண்டு-பிடிப்புதான் பச்சைத் தமிழர் காமராசர். காமராசரை நேருவா கண்டுபிடித்தார்? காங்கிரஸ்காரர்களா கண்டு-பிடித்தார்கள்? கண்டு பிடித்தது பெரியார்தானே?
பெரியார் கொடுத்த சீதனம்தான் காமராசர். காமராசர் தயங்கினார்; - தைரியம் கொடுத்தவர் பெரியார். குடியாத்தம் தேர்தலில் தானாகச் சென்று ஆதரித்தார். பெரியாரைத் தொடர்ந்து அண்ணாவும் ஓடோடிச்சென்று ஆதரித்தார். குணாளா,- குலக்-கொழுந்தே - அஞ்சாதே! என்று தைரியம் கொடுத்து எழுதினார் அண்ணா.காமராசரின் சாதனை தொட்டால் தீட்டு என்று ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரனை அல்லவா இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆக்கினார் பச்சைத் தமிழர் காமராசர்_ காரணம் பெரியார் அல்லவா?
தமிழுக்குச் செம்மொழி தகுதி கிடைத்தது. உலக உயர் மொழிகளின் வரிசையிலே நம் அன்னைத் தமிழ்.கோவை செம்மொழி மாநாட்டிலே
நமது தலைவர்கள் கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலே நமது முதல்வர் கலைஞர் அருகில் ஆசிரியர் வீரமணி அவர்களும் அமர்ந்திருக்கும் அந்த அழகிய காட்சியைக் காணவேண்டுமே!
மனிதாபிமானம் பெரியார் கற்றுத் தந்தது
தலைவர் கலைஞர் ஆட்சியிலே மனிதாபிமானத்-துக்கு முன்னுரிமை. உயிர் காக்கும் மருத்துவம், - அவசர உதவிக்கு 108,- தம் சொந்த வீட்டையே மருத்து-வமனைக்கு அர்ப்பணிப்பு;- தளபதி ஸ்டாலினோ தம் குடும்பத்தோடு மருத்துவ மனைக்கு உடல் ஒப்படைப்பு - இந்த மனிதநேயம் நம் அய்யா கற்றுக் கொடுத்த கொள்கையிலிருந்து கிடைத்த தல்லவா?
திருவள்ளுவர் தோன்றி இரண்டாயிரம் ஆண்டு-களாகிவிட்டது. இன்னொரு திருவள்ளுவர் வரவில்லை.
இன்னொரு தந்தை பெரியார் தோன்ற இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்-டுமோ தெரியவில்லை.
நம்மிடம் வாழும் நமது தலைவர்களை_ கலைஞரை, ஆசிரியர் வீரமணியை - நம் அனைவரின் உயிரையும் தந்து அவர்களின் ஆயுளை நீள வைப்-போம் என்று குறிப்பிட்டார்.
----- விடுதலை (29.05.2010)
9 comments:
அய்யா, வெ.கொண்டானுக்கு பழைய கதை ஒண்ணு தெரியாது போலும். தெரியாத்தனமா புரட்சி தலைவர், ஈரோடு மாவாட்டத்துக்கு, தந்தை பெரியார் மாவட்டம்னு பெயர் வைக்க, பிறகு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஜாதி தலைவர் பெயர் வைக்க போய், கடைசி கடைசியா " அதுவே பெரிய " ஜாதி கலவரத்துக்கு வித்திட, கடைசியா உங்க தலைவரு டாக்டரு கலைஞர், எல்லா தலைவர் பேரையும், மாவட்ட பேருல இருந்து கழட்டி தூக்கி போட்ட பிறகு தான், தமிழ்நாடு பெரிய கண்டத்துல இருந்து தப்பிச்சு நிம்மதியா இருக்குது
நம் அனைவரின் உயிரையும் தந்து அவர்களின் ஆயுளை நீள வைப்-போம்
//
இது என்னவகையான நம்பிக்கை பீடை நம்பிக்கைன்னு சொல்லாம
நட்சத்திர வாழ்த்துகள்.
வீரமணிக்கு வெற்றிகொண்டான் ஓவராக மணி அடிக்கிறாரே.
நடத்துங்க. கொள்கைன்னு வந்தாலே தலைவன் செய்வதை சகித்துக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படதாக கொள்கை தானேன்னு மக்கள் விளங்கிக்குவாங்க.
:)
திருக்குறள் தமிழர் வேதம்
http://cyber-mvk.blogspot.com/2010/05/blog-post_11.html
'' சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆதிக்க-வாதிகள் மிரட்டிய போது கூட தம் எழுத்தாலும் பேச்சாலும் அவற்றையெல்லாம் முறியடித்துக் காட்டியவர் பெரியார். ''
முறியடித்துக் காட்டிக் கொண்டிருப்பவர் நமது ஆசிரியர் இளவல் வீரமணி அவர்கள் !
@ கணபதி
வெற்றி கொண்டான் அவர்கள் மேடையில் உணர்ச்சிவசப்பட்டு கூறிய வார்த்தைகள் அவை ...
உள்ளர்த்தங்கள் காண தேவையில்லை ...
அவற்றை ஏற்றுக் கொள்ளவும் தேவையில்லை தாம் ...
உங்கள் பகுத்தறிவுக்கு வணக்கங்கள் தோழர் கணபதி ...
அனைத்திலும் அது தொடரட்டும் ...
நன்றி கணபதி
//தம் சொந்த வீட்டையே மருத்து-வமனைக்கு அர்ப்பணிப்பு;- தளபதி ஸ்டாலினோ தம் குடும்பத்தோடு மருத்துவ மனைக்கு உடல் ஒப்படைப்பு - இந்த மனிதநேயம் நம் அய்யா கற்றுக் கொடுத்த கொள்கையிலிருந்து கிடைத்த தல்லவா?
நம் உயிரைக் கொடுப்போம்!//
இனிப்பை எடுத்துக்கொண்டு சக்கையை கொடுப்பதற்கே இப்படி என்றால்......
சிரிப்பு வருகிறது தோழரே, செயலலிதாவை வீரமணி ஆதரித்தபோது வெற்றிகொண்டான் எங்கே போனாரோ தெரியவில்லை. பாவம் தி.மு.கவில் வேலை கொடுக்கவில்லையோ அல்லது யாருக்காவது கல்வி வியாபாரத்திற்காகவோ நண்ப்ர் போயிருப்பார்.அதற்கு இதெல்லாம் தேவைப்படுகிறது.கல்விவியாபாரத்திற்காக வழக்கு நிதி சேற்பதை ஏற்றுக்கொள்ளும் அப்பாவி பகுத்தறிவு {அறிவிழிகள்] இருக்கும் வரை விலங்கவே விளங்காது.பரிதாபம் தி.கவின் தொண்டர்கள்.
//இனிப்பை எடுத்துக்கொண்டு சக்கையை கொடுப்பதற்கே இப்படி என்றால்...... //
சரியாக் சொன்னீர் நண்பரே.
//உங்களுக்குப் பிறகு இந்த இயக்கத்துக்கு வாரிசு யார்? என்று பெரியாரைக் கேட்டார்கள். கொள்-கைதான் என்று பளிச்சென்று சொன்னார்.//
கொள்கைகளைத் தூக்கிப்பிடிப்போம்
தலைவர்களை அல்ல.
Post a Comment