வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, May 04, 2010

அண்ணாவோ, கலைஞரோ,பேராசிரியரோ, நாவலர் அவர்களோ ஒருவனே தேவனை தேடி போனவர்கள் அல்லர்

டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழா பல வகை-களிலும் சிறப்புக்குரியதாகிவிட்டது. விழாவில் தேசிய பெருமக்கள் அனைவரும் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைச் செறிவையும், சமுதாயத்திற்கு அவை தேவைப்படும் அவசியத்தையும் வலியுறுத்தினர்.


பெரியார் தேசம் ஆகவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் முத்தாய்ப்பாகத் தம் கருத்தைப் பதிவு செய்தார். அது ஒன்றும் சொல்லழகுப் பூமாலைத் தொடுப்பல்ல. நாடு செழிக்க, சமதர்மமும், சமத்துவமும் தழைக்க அந்த நிலை உருவானால்தான் மீட்சிக்கு இடம் உண்டு.

பெரியார் திடலில் மாணவர் பருவத்தை ஒப்படைத்த அந்தப் பாங்கும், செறிவும் அந்தச் சொற்களின் வாயி-லாகத் தெறித்தன என்று கருதவேண்டும்.

ரூபாய் 5 லட்சம் குரு காணிக்கை என்று மானமிகு மாண்புமிகு சுயமரியாதைக்காரரான முதலமைச்சர் கலைஞர் அறிவித்தது _ பணம் என்ற அளவில் பார்க்கத்-தக்கதல்ல _ இந்தத் தன்மான, பகுத்தறிவுக் கொள்கை நிறுவனத்தில் தனக்குரிய ஈடுபாட்டின் கனத்தைச் செதுக்கும் செயல்பாடு அது.

அந்தக் கொள்கை உரத்தின் அடிப்படையில்தான் தி.மு.க. தொண்டர்களுக்கு முக்கிய கட்டளை ஒன்றைப் பிறப்பித்தார்!

எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்த விழாவில் அந்தக் கட்டளையைப் பிறப்பிக்கவேண்டுமோ, அந்த நேரத்தையும், இடத்தையும் தேர்ந்தெடுத்து மிகச் சரியாக அறிவித்தது _ கலைஞர் அவர்களுக்கே உரித்தான தனித்தன்மையாகும்.

பெரியார் பெயரை மாத்திரம் சொல்லிக்கொண்டு கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தால், அது பெரியாருக்குச் செய்யும் நன்றி ஆகாது. பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு வாஸ்து பார்த்துக் கொண்டிருந்தால், அது பெரியாருக்குச் செய்கின்ற நன்றி ஆகாது. பெரியாருடைய கொள்கையை உண் மையிலே மனதிலே பதியவைத்துக் கொண்டிருந்தால், அவன் நாத்திகவாதியாக இருந்தாலும், அவன் பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், யாராக இருந் தாலும் இரட்டை மனிதனாக இருக்கக் கூடாது. இதுதான் இந்த பெரியார் மய்ய திறப்பு விழாவிலே கண்டிப்பாக அரசியல் துறையிலே இருக்கின்ற என்னுடைய கழக தோழர்களுக்கும் நான் சொல்லுகின்ற வேண்டுகோளாகும். இன்னும் சொல்லப்போனால் கட்டளையாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்று மானமிகு கலைஞர் அவர்கள் மிகவும் கண்டிப்பான தொனியில் கூறியுள்ளார்.

முதல்வர் கலைஞர் அவர்கள் தமது கழகத் தோழர்-களுக்கு நேரிடையாக இத்தகு கட்டளையைப் பிறப்பித்தாலும்கூட  இதற்கு முன்பும் பல்வேறு சந்தர்ப்பங்-களில் தமது உள்ளக் கிடக்கையை இந்த வகையில் வெளிப்படுத்தித்தான் வந்திருக்கிறார்.

தி.மு.க. என்பது வெறும் அரசியல் கட்சி மட்டும் அல்ல_ சமுதாயக் கொள்கை உடைய அரசியல் கட்சி என்று பரப்புரை செய்ததுண்டு.

பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்புவதில் தி.க.வுக்கு அடுத்தபடியாக உள்ளது. தி.மு.க.தான் என்றும் உரிமை கொண்டாடியதுண்டு. பகுத்தறிவுப் பாசறை என்ற ஒரு அமைப்பைக்கூட அறிவித்ததுண்டு!

திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. திருப்புமுனை மாநாட்-டிலும் நாம் வந்த பாதையை மறந்துவிட்டு வேறு திசையில் செல்லக்கூடாது என்பதை அழுத்தந்-திருத்-தமாகக் கூறியுள்ளார்.

ஒருவனே தேவன் என்பது தேர்தலில் ஈடுபடும் ஓர் அரசியல் கட்சியின் ஒட்ட ஒழுகல் வகையைச் சார்ந்-ததாக இருக்கக்கூடும். நடைமுறையில் அறிஞர் அண்ணாவோ, கலைஞர் அவர்களோ, பேராசிரியர் அவர்-களோ, நாவலர் அவர்களோ எந்த ஒரு தேவன் மீதும் நம்பிக்கை வைத்து முழங்கால் தண்டனிட்டுக் கும்பிடுத் தண்டம் போட்டவர்கள் அல்லர்.

இதனைத் தொண்டர்கள் புரிந்துகொள்ளவேண்டும் _ இன்னும் சொல்லப்போனால், தன்மான இயக்கத்தின் அடிப்படைப் பகுத்தறிவுக் கொள்கைகளைக் கழகத்தின் புதிய தலைமுறையினருக்குக் கற்பிக்கும் முகாம்களை நடத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

கட்சியின் தலைவர் கட்டளையிடத்தான் முடியும். மற்ற மற்ற பொறுப்பாளர்கள் அதனை நுணுக்கமாகப் புரிந்துகொண்டு ஒல்லும் வகைகளில் திட்டமிட்டு செயல் தளத்தில் கால் பதிக்கவேண்டும்.

தலைவர் முன்மொழிந்ததை செயல்பாடுகள்மூலம் வழிமொழிவது அவசியமாகும். ஒருமுறை கரிகாலன் பதிலில் கலைஞர் அவர்கள் திராவிடர் கழகம் நடத்துவது போல தி.மு.க.விலும் பயிற்சி முகாம்கள் நடத்-தப்படவேண்டும் என்று கூறியதுண்டு.

அடிப்படைக் கொள்கைகளில் பலமாக இருக்கும்-பொழுதுதான் எந்த ஊசலாட்டத்திற்கும் இடம் இல்லாத உறுதியான ஒரு நிலை ஒரு கட்சிக்கு ஏற்பட முடியும்!

அண்மைக் காலமாக மானமிகு கலைஞர் அவர்கள் இந்தத் திசையில் தொடர்ந்து கருத்துகளை வலியுறுத்திக் கூறிக்கொண்டே வருகிறார்.

இதனைத் தி.மு.க. தோழர்கள் புரிந்துகொண்டு செயல்படவேண்டியது மிகவும் அவசியமாகும்.

சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம், பெண்களுக்குச் சொத்துரிமை, தைமுதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை தமிழுக்குச் செம்மொழித் தகுதி  சிதம்பரம் கோயில் தீட்சதர் ஆதிக்கத்திலிருந்து விடுபடச் செய்தது என்பதெல்லாம் தி.மு.க.வைத் தவிர வேறு எந்த ஆட்சியில் செயல்பட்டு இருக்க முடியும்? இதற்கான அடிப்படை என்ன என்பதைப் புரிந்து-கொண்டால், டில்லியில் கலைஞர் பிறப்பித்த கட்டளையின் அருமை புரியும்.

----- விடுதலை தலையங்கம் (04.05.2010)

1 comment:

vijayan said...

என்னடா ஓட்ட ஒழுகல்,தேர்தல்ல நின்னு பதவிக்கு வரணும் சில்லறை அடிக்கணும்,இன்னொரு பக்கம் பகுத்தறிவு பேசி அதிலேயும் முடிஞ்ச அளவு சில்லறை பாக்கணும் அதுதாண்டா உங்க கொள்கை.வெண்டக்காய் நெடுஞ்சுலியன் கடைசி காலத்தில் பங்காரு காலில் குடும்பத்தோடு விழவில்லையா,ராசாராம் என்ன ஆனார்,மூனாகானா தோளுக்கு மஞ்ச துண்டு எப்படி வந்தது, குரோடன்ஸ் தலையன் என்று உங்களால் வர்ணிக்கப்பட்ட சாய்பாபா மூனா கானா வீட்டுக்கு ஏன் வந்தாரு.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]