வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, May 19, 2010

என்ன மிரட்டலா? பூச்சாண்டி காட்டுவதா? தினமல(ம்)ர் கூட்டத்துக்கு பொத்துக்கொண்டு வருகிறதோ?

அறிவியலைப் பரப்பினால் மதப் பூச்சாண்டி காட்டி மிரட்டுவதா? இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானவர்கள் மீது சட்டம் பாயவேண்டும். நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தி கூறியுள்ளார்.
அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு அரசின் அறிவியல் துறை

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் பெரியார் அறிவியல் மய்யத்தில் அறிவியல் சிந்தனை-களை மாணவர்களிடையே பரப்பிட ஒரு முகாம் (3 நாள்களுக்கு) தமிழக அரசின் அறிவியல் துறை நடத்திடும் நிலையில், நேற்று பார்ப்பன நாளேடு ‘தினமலரில்’ ‘இந்து மத உணர்வுகளைப் புண்படுத்த ஒரு முகாமா?’ என்று தலைப்பிட்டு, விஷமத்தனமான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்து மத ரீதியான அதிசயங்களாம்!

“அதில் உள்ள செய்தியின் ஒரு பகுதியில் இந்து மத ரீதியான அதிசயங்களை, அறிவியல் ரீதியான எதிர்-கால தலைமுறையினர் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக முகாம் நடத்தப்படுவதாக முகாம் ஒருங்-கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்’’ என்று போடப்-பட்டிருக்கிறது.

அந்த ‘பிரகஸ்பதி’மீது நடவடிக்கை

இது சரியான தகவலாக இருந்தால், முகாம் நடத்-துவதுபற்றி கூறிய அந்தப் ‘பிரகஸ்பதி’மீது சட்டப்படி, பள்ளிக் கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்தாக-வேண்டும்.

இந்து மத பெருமைக்காகவா முகாம்?

மத சார்பற்ற அரசில் அதுவும் பெரியார் அறிவியல் மய்யத்தில், இந்து மதப் பெருமைக்காகவா முகாம் ஏற்பாடு செய்திருப்பார்கள்? இது எப்படி சரியாகும்?
அதே செய்தியில்,

கீழே, “மேலும், மத ரீதியான அதிசயங்கள் உண்மை-யில்லை என்றும், பகுத்தறிவைக் கற்றுக்கொள்ள-வேண்டும் என்றும் மாணவ, மாணவியர் இடையே, புரிந்துணர்வு ஏற்படுத்தவே இந்த முகாம் என்றும் விளக்கம் அளித்தார்.’’

திருவிழாக்களில் எடுக்கப்பட்ட படத் தொகுப்பு

ஆனால், திருவிழாக் காலங்களில் நடக்கும் தீ மிதித்தல், கையில் தீப்பந்தங்களை வைத்து உடலில் சுட்டுக் கொள்ளுதல் போன்றவற்றை பல்வேறு திரு-விழாக்களில் எடுக்கப்பட்ட படத் தொகுப்பை திரையிட்டுக் காட்டுவதாகக் கூறி, சில மாணவர்களை மேடையேற்றியும் விளக்கம் அளித்தனர்.

பார்ப்பனர்கள் கொலை மிரட்டல்

இந்த முகாமின்போதே, இதில் கலந்துகொண்ட பள்ளி சிறுவர், சிறுமிகளிடம் பகுத்தறிவை ஏற்படுத்துவதாகக் கூறி, இந்து மதத்தையும், இந்து மதத் தலைவர்களையும் பழிக்கும் விதமாகப் பேசினர். மத ரீதியான உணர்வு-களைப் புண்படுத்திப் பேசியது அங்கிருந்தவர்கள் மத்தி-யில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது!’’ என்று எழுதிய-தோடு, இதை நடத்திட வந்த பேராசிரியர் நரேந்திர நாயக் (கருநாடக அறிவியல் அறிஞர்) அவர்களுக்கு சில பார்ப்பன மதவெறியர்கள் தொலைபேசிமூலம் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாகக் கேள்விப்-படுகிறோம்!

இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதென்ன?

இந்திய அரசியல் சட்டத்தின் 51_ஏ பிரிவு, ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படை கடமைகள் (Fundamental Duties) பற்றி கூறுகையில்,
‘‘It shall be the duty of every citizen of India to develop scientific temper, spirit of inquiry, humanism and reform’’ என்று கூறப்பட்டுள்ளதே!

அடிப்படை உரிமை போன்றதே அடிப்படை கடமைகளும்கூட!
அறிவியல் மனப்பான்மை முக்கியம்

இதன் அறிவியல் மனப்பான்மையை, கேள்வி கேட்டுத் துளைக்கும் பண்பை, மனித நேயத்தை, சீர்-திருத்தத்தைப் பரப்பி வளர்க்கச் செய்வதே அடிப்படைக் கடமையாகும்.
என்ன மிரட்டலா? பூச்சாண்டி காட்டுவதா?

இதனை அரசு, அதுவும் மதச் சார்பற்ற செக்யூலர் அரசு, அதன் அறிவியல் மய்யத்தில் தக்காரைக் கொண்டு நடத்தினால், அது மத உணர்வை _ இந்து மத உணர்வைப் புண்படுத்துகிறது என்று கூறி மிரட்டல் விடுவதா? பூச்சாண்டி காட்டுவதா?

அறிவியல் உண்மைகளைப் பரப்பி, மத, மூட நம்-பிக்கைகளை ஊசிகொண்டு, ஊதப்பட்ட பலூன்களைக் குத்தச் செய்வதுபோல் அவசியமாகச் செய்யவேண்டிய பணி அல்லவா இது?

சைபர் க்ரைம் குற்றப்பிரிவு

இந்த மிரட்டல் விட்டவர்மீது ‘செல்போனில்’ சைபர் க்ரைம் குற்றப் பிரிவினர் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க முன்வரவேண்டும்!

உலகம் தட்டை என்று கருதப்பட்ட மூட நம்பிக்கை அதனை அடிப்படையாக, இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலுக்குள் ஒளித்து வைத்தான் என்ற கதை, கற்பனை என்று விளக்கம் சொன்னால் தவறு என்ன?

குடும்பக் கட்டுப்பாடு மதத்திற்கு விரோதம்தான்!

அரசின் குடும்பக் கட்டுப்பாடு, கர்ப்பத்தடைகூட மதக் கருத்துக்கு விரோதம்தான். அத்திட்டம் மதவாதிகள் மனதைப் புண்படுத்துகிறது என்று கூறி, அரசைக் கைவிடச் சொல்ல முடியுமா?

கிரகணம் _ ராகு, கேது, பாம்பு விழுங்கும் கதையை அறிவியல், வானவியல் ஏற்குமா? இதை அம்பலப்-படுத்தி மூடநம்பிக்கையை மாணவரிடையே போக்க முயற்சித்தால், அது ‘மனம் புண்படும்’ என்றால், அவ்-வளவு மோசமான மனம் படைத்தோருக்கு சமூகத்தில், நாட்டில் எங்கே இடம் இருக்கவேண்டும்?

இன்னமும் கதை விடுவதா?

மனிதன், நிலா உலகிற்குச் சென்று வந்து பல ஆண்டுகாலம் ஆகிவிட்டது.
இன்னமும் ‘‘தாரை, குருபத்தினி’’, நிலா ஏன் தேய்-கிறது _ சாபம் _ நிலாவுக்கு _ சந்திரனுக்கு 27 மனைவி-கள் கதை கூறிட முடியுமா?

இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைப் போக்கத்தானே அறிவியல்! தி.க., ப.க. உடனே உரிய நடவடிக்கையில் இறங்கும்!

அம்மை குத்திக் கொள்வது ஆத்தாளுக்கு விரோதம் என்று நம்பும் வடிகட்டிய மூடர்கள் மனம் முக்கியமா? நாற்றங்கால் பயிர்களாக உள்ள மாணவர்-களை அறிவியல் ரீதியாகப் பக்குவப்படுத்துவது முக்கியமா?

பகுத்தறிவாளர் கழகமும், திராவிடர் கழகமும் வேடிக்கை பார்க்காது. உடனே உரிய நடவடிக்கைகளில் இறங்கும்!

------ நன்றி விடுதலை(19.05.2010)

3 comments:

ஆட்டையாம்பட்டி அம்பி said...

வருணாசிரமத்தின் ஆணிவேரே மத நம்பிக்கைகள் என்ற போர்வையுள் உள்ள மூட நம்பிக்கைகள் தானே? அவாள் கூறும் பொய்யை நம்பும் நமது சத்சூத்திர கண்மணிகளுக்கு புரியும்படி மேலும் விளக்கமாகவும் சொல்லுங்கள். நன்றாக கவனித்தால் இந்த மாதிரி மூட நம்பிக்கைகள் மற்றும் மடத்தனத்தை எந்த ஒரு பாப்பானும் பாப்பாதியும் செய்வதில்லை. ஏன் எந்த ஒரு பாப்பானும் பாப்பாதியும் இந்த மாதிரி மடத்தனத்தை செய்வதில்லை என்று என்றாவது அவாளுக்கு சொம்பு தூக்கும் நமது சத்சூத்திர கண்மணிகள சிந்தித்து இருக்கிறார்களா? சத்சூத்திர மூடர்கள். பாப்பானும் பாப்பாதியும் ஹிந்து தானே?

பாப்பானும் பாப்பாதியும் ஏன் இந்த மூட நம்பிக்கைகள் மற்றும் மடத்தனத்தை செய்வதில்லை என்று இந்த தினமலம பத்திரிக்கை கேட்டுள்ளதா? ஆடு நனைகிறதே என்று தினமலம் ஓநாய் அழுகிறது....மண்ணிக்கவும் ஊளை இடுகிறது. அதுக்கு வழக்கம் போல நமது சத்சூத்திர கண்மணிகள சொம்பு தூக்குகிறார்கள்.

பரணீதரன் said...

நம்மவர்களுக்கு புரிந்தால் ஏன் அய்யா தினமலரை நடுநிலை பத்திரிகை என்று வாங்கியா படிப்பான்? படிக்கும்போதே பார்பன இன ஏடு, வர்ணாசிரம் பேசும் ஏடு, எவளவோ பெரிய அயோக்கியர்களாக இருந்தாலும் லோக குருவை தலையில் தூக்கி வைத்து ஆடும் ஏடு என்பதை நம் மரமண்டைகள் புரிந்து கொண்டாலே போதுமே...

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Mr. சங்கமித்திரன்

////====>இந்த தேவதாசி கருமாந்திரத்தை நிலை நிறுத்த பாடு பட்ட கழிசடைகள் தான் Madam H.P.BLAVATSKY and Colonel H.S.OLCOTT. You can also add Dr. Annie Besant, Rukmani Arundlae to the list with H.P.BLAVATSKY and Colonel H.S.OLCOTT, and the GREAT Mr. Sathya Murthy Iyer—-இவர்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

இவாளப்பத்தி நன்னா தெரியும்னுன்னா நம்ம மதிமாறன், தமிழ் ஓவியா அப்புறம் சங்கமித்திரன் அவர்களைக் கேளுங்கள். இந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை பிச்சு எடுத்துடுவாங்க. அப்படியே கூடவே காயப்போட்டுறுவாங்க.

என்றும் அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?

PS: Shame on Congress to have the headquarters at Chennai in the name of Mr. Sathya Murthy Iyer who encouraged prostitution….Wait…wait…But NOT from his OWN Brahmin caste—-That is why he is called as GREAT Sathya Murthy ஐயர்….ர் .ர் .ர் .ர் .ர் ருங்கோ..ஓ..ஓ…ஓ…////.

மேலே கூறியது இந்த கீழ்க்கண்ட பதிவில் உள்ளது.

http://www.vinavu.com/2010/05/20/kushpu-dmk/


இந்த பதிவில் JAMES FRIEDRICH (மறுமொழி 12 ) என்று ஒருவர் தேவதாசி முறையைப் பற்றி உளறி இருக்கிறார். அதற்கு என் பதில் (மறுமொழி 16) மேலே அடைப்புக்குள் இருப்பது .

இது உங்களுக்கு:

Annie Besant ஒரு பார்பன சொம்பு தூக்கி. வருணாசிரமத்தை மற்றும் தீண்டாமையை வலியுறித்திய கழிசடை. உங்களிடம் ஆதாரம் இருந்தால் அவாளுக்கு பதில் அடி கொடுங்கள்.

உங்கள் ஈமெயில் விலாசம் இல்லாததால் உங்கள்;உடைய பதிவில் இந்த செய்தியை கொடுத்துள்ளேன். மன்னிக்கவும்...


என்றும் அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]