வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, May 06, 2010

ஹிட்லர் வெற்றி தெரிந்து தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் ஜெர்மன் மொழி படிக்கத் தொடங்கினர்

இரண்டாம் உலக யுத்-தத்தில் ஜெர்மனியின் ஹிட்-லரை முறியடித்த வெற்றியின் 65 ஆம் ஆண்டு விழா சென்னை ருசிய கலாச்சார மற்றும் அறிவியல் மய்யத்தில் 4.5.2010 மாலை நடைபெற்றது.


அதில் சிறப்பு விருந்தின-ராக அழைக்கப்பட்டு இருந்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்-கள் தமது உரையினூடே ஒரு தகவலைப் பதிவு செய்தார்.

இரண்டாம் உலகப் போரின்போது சென்னையில் மயிலாப்பூர் வாசிகள் ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான் அந்தத் தகவ-லாகும். அது ஏதோ போகிற போக்கில் சொல்லப்பட்ட தகவல் அல்ல.

இரத்த வெறியன் இட்லர் தொடங்கிய இரண்டாம் உலகப் போரில் (1939_45) உயிர் இழந்தோர் எண்-ணிக்கை 5 1/2 கோடியாகும். அது போக அவன் சித்-திர-வதை செய்து அநியாயமாகக் கொன்ற அப்பாவி யூத மக்கள் எண்ணிக்கை 60 லட்சமாகும். இரக்கமென்று ஒரு பொருள் இலாத அத்தகைய கொடிய-வன் அப்போரின் முற்பகுதியில் பெற்ற வெற்றிகளை வரவேற்று இந்திய நாட்டிற்குள் எப்-பொழுது ஜெர்மன் படைகள் நுழையும் என்று நடை பாவாடை விரிக்கத் துடித்துக் கொண்டு இந்தியாவில் ஒரு தேசத் துரோகக் கூட்டம் இருந்திருக்குமா என்று ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம், இருந்தது! அக்கூட்டத்தி-னர்தான் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள். இரண்டாவது உலகப் போரின் தொடக்க ஆண்டுகளில் அவர்கள் விழுந்து விழுந்து ஜெர்மன் மொழி படித்ததை தந்தை பெரியார் அவர்கள்அடிக்கடி கூறி வந்துள்ளார். இச் செய்-தியை அப்பொழுது இந்திய அரசில் அதிகாரியாகப் பணி-யாற்றிய பெர்சிவல் ஸ்பீயர் என்பவர் 1981 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள தமது இந்-திய நினைவுகள் என்ற நூலில் பின்வருமாறு கூறு-கிறார்:

(1940 ஜூன் மாதம்) பிரான்ஸ் வீழ்ந்தபொழுது தென்னாட்டில் சில தந்திரக்-காரப் பார்ப்பனர்கள் ஜெர்-மானியர்கள் விரைவில் இந்தியாவைப் பிடித்துவிட விருப்பதால், அதற்குத் தங்-களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக (வேறு எதற்கு? ஜெர்மானியருடைய கைக்கூலிகளாக, கங்காணி-களாக இருக்கத்தான்!) ஜெர்மன் மொழியைக் கற்று வருவதாகச் சொல்லப்பட்டது.

1பின்னர் 1942 முற்பகுதி-யில் இட்லரின் கூட்டாளி-களா
ன ஜப்பானியப் போர் வெறியர்கள் சிங்கப்பூர், பர்மா ஆகியவற்றையெல்லாம் பிடித்து முன்னேறி வருகிறார்-கள் என்றவுடன் அந்த ஜெர்மன் பார்ப்பனர்கள் ஜப்பானிய மொழியையும் படிக்கத் தொடங்கி விட்டன-ராம்.2 பாவம் பார்ப்பனர்கள்! அவர்களுடைய கூட்டாளி-களான ஜெர்மானிய ஜப்பா-னியப் போர் வெறியர்கள் இரண்டாம் உலகப் போரில் தோற்றுப் போய்விட்டனர் கடைசியாக! அவர்கள் சரியாக யக்ஞங்கள் நடத்தவில்லை போலும்!

1 “When France fell . . . some clever Brahmins in the south were said to be learning German to be ready for the forthcoming takeover.”

PP/ 74-75 of “India Rememberd” by Percival and Margaret Spear,Orient Longman: 1981
2 The “German Brahmins” of Madras were indeed said now to be learning Japanese (after Pearl Harbour and fall of Singapore and Burma.)

P.78 of the above book.

இந்தக் கருத்தை கல்கி தமது அலை ஓசை நாவ-லிலும் குறிப்பிட்டுள்ளார்.

ஹிட்லர் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தபோது தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் ஜெர்-மன் மொழி படிக்கத் தொடங்கினர் என்று கல்கி குறிப்பிட்-டுள்-ளதும் குறிப்பிடத் தக்க-தாகும். இந்தப் பார்ப்பனர்-கள்-தான் நாட்டுப்பற்றைப் பற்றியும், இந்திய தேசியத்துக்காக உயிர் வாழ்வது போலவும் பம்மாத்து அடிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

- விடுதலை மயிலாடன் (06.05.2010)

4 comments:

ரம்மி said...

ஹிட்லரை ப(கு)த்தறிவு வாதிகள் திட்டலாமா? நீவீர் தற்போது செய்துவரும் கோயபல்ஸ் வேலைகளுக்கு நதிமூலம் ஹிட்லர் தானே!

ரம்மி said...

பார்ப்பனர்களை ஆங்கிலேய அரசு ஆதரித்தது! ஆங்கிலேய அரசை உங்கள் நீதிக்கட்சி சுதந்திரத்திற்கு பிறகும் ஆதரித்தது! அப்ப உங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன உறவு?

ttpian said...

let me know: why THE HINDU RAM praising Veeramnoey swamigal?

நம்பி said...

//ரம்மி said...

ஹிட்லரை ப(கு)த்தறிவு வாதிகள் திட்டலாமா? நீவீர் தற்போது செய்துவரும் கோயபல்ஸ் வேலைகளுக்கு நதிமூலம் ஹிட்லர் தானே!//

அப்ப காந்தியும் இதே கோயபல்ஸ் வேலைகளுக்காகத்தான் ஆதரித்தாரா? இல்லை காங்கிரசில் இருந்த ஆரிய பார்ப்பன வெறியினரின் வற்புறுத்தலுக்காக ஆதரித்தாரா?

என்ன பண்ணுவது...தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்...ஆரிய வெறியைத் திட்டினால் ஆரிய வெறிக்குத்தானே கோப்ம் வரும்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]