வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, May 07, 2010

எந்த கிறுக்குப் பிடித்த பார்பனர்களின் சூட்சமங்களையும் புரிந்து கொள்ள ஈரோட்டு நுண்ணாடி தேவை!

1) கேள்வி: 2011 இல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்று ஜெயலலிதா பேசியிருப்பது நிறைவேறுமா?


பதில்: இந்தச் சந்தேகத்தை மனதிலேயே வைத்துக் கொண்டு புழுங்குவது உங்கள் உடலுக்கு நல்லதல்ல. எதற்காக சந்தேகம்? பேசாமல் அ.தி.மு.க.விற்கே ஓட்டளித்து அக்கட்சி ஆட்சிக்கு வர வழி செய்துவிட்டால் _ ஜெயலலிதா பேசியது நிறைவேறுகிறதா_ இல்லையா என்று பார்த்துவிடலாமே! சந்தேகம் தீர அதுதான் வழி. தடையின்றி மின்சாரம் வந்தாலும் சரி, வராவிட்டால் ஜெயலலிதா பேசியது நிறைவேற வில்லை என்று புரிந்துகொண்டு விடலாமே!

- துக்ளக், 5-5-2010

பார்ப்பனர்கள்போல பம்மாத்துக்காரர்களை எங்கு தேடினாலும் கிடைக்கவே கிடைக்க மாட்டார்கள். கேட்கப்பட்ட கேள்வி என்ன? பதில் என்ன?

ஜெயலலிதாவால் முடியும் என்று சொல்ல வேண்டும்; அல்லது முடியாது என்று சொல்ல வேண்டும். அதையும் தாண்டி எங்கே போகிறார்?

ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடுங்கள், அதுதான் சரி. அவர் நிறைவேற்றாவிட்டால் ஜெயலலிதா பேசியது நிறைவேறவில்லை என்று புரிந்து கொள்ளலாமாம். புரிந்துகொண்டு என்ன செய்ய? நாக்கை வழித்துக் கொள்ளவா?

மின்தட்டுப்பாட்டுக்குக் காரணமே, ஜெயலலிதா ஆட்சியிலே தொலைநோக்கோடு மின் உற்பத்திக்குத் திட்டங்கள் தீட்டப்படவில்லை என்பதுதான். இது பற்றி முதல்வர் எழுப்பிய குற்றச்சாற்றுக்குப் பதில் இல்லை_- பேச்சு மூச்சு இல்லை. இந்த வெட்கம் கெட்ட நிலையில் பாப்பாத்தி அம்மா மட்டும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டுமாம்!

பார்ப்பனர்களின் இந்த இனப் பற்றைத் தமிழர்கள் என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ, தெரியவில்லை.

2) கேள்வி: உடல்நலம் குன்றிய நிலையில் இந்தியாவுக்கு வந்த பிரபாகரனது தாயாரைத் திருப்பி அனுப்பியது குறித்து?

பதில்: ஒரு தவறும் இல்லை. இந்தியாவுக்கு வரக்கூடாதவர்கள் பட்டியலில் அவர் பெயர் இருந்து, அதைக் கவனிக்காமல் அவருக்கு விசா கொடுத்த மலேஷியாவில் உள்ள இந்திய தூதரகம் செய்ததுதான் தவறு; இங்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டதுதான் சரி_ - - துக்ளக், 5.5.2010

எந்த கிறுக்குப் பிடித்த பார்ப்பானும் ஈழத் தமிழர்ப் பிரச்சினை பற்றி உளறுவதில் கூட ஒன்றாகவே உளறுவார்கள்.

மூப்படைந்த மூதாட்டி ஒருவருக்கு மருத்துவம் செய்வதில் கூட இந்தப் பார்ப்பனர்களுக்கு மனித நேயம் இல்லை என்பதைக் கவனிக்கவேண்டும்.

மூதாட்டி பார்வதி அம்மையார் பக்க வாத நோயால் பாதிக்கப்பட்டவர் . அவர் என்ன தீவிரவாதியா? அதுவும் இந்த உடல்நிலையில் இந்தியாவுக்கு எதிராக எந்தத் தீவிரவாத வேலையில் இறங்கப்போகிறார்? இதற்கு முன்புதான் அவர் தீவிரவாத செயல்களில் இறங்கியவர் என்பதற்கு ஆதாரம் உண்டா?

விடுதலைப் புலிகள் என்றால் அப்படி ஒரு வெறுப்பு! பிரபாகரன் தாயார் என்கின்றவரை அந்த வெறுப்பு வெறி ஓங்கிக் குரைக்கிறது.

இவர்களைச் சொல்லிக் குற்றமென்ன? இவர்களின் தலைவரான சங்கராச்சாரியாரே (சந்திர சேகரேந்திர சரஸ்வதி) நாத்திகர்களுக்கு வைத்தியம் பார்க்கக்கூடாது என்று சொன்ன மனிதநேய விரோதிதானே _ - அந்த ஜாதிப் புத்தி அவர்களை விட்டுப் போகுமா?

3) கேள்வி: ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பயணம், எதிர்பார்த்ததற்கு மாறாக இப்படி தோல்வியில் முடிந்துவிட்டதே?

பதில்: இந்த மாதிரி முயற்சிகள் உலகில் வேறு சில நாடுகளிலும் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன என்று செய்திகளிலிருந்து தெரிகிறது. ஆகையால் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக அமையாதது குறித்து இந்தியா அவமானப்படத் தேவையில்லை. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை இனித் தவிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

- துக்ளக், 5-5-2010

இஸ்ரோ என்ற அமைப்பின் தலைவராக இருப்பவர் ஒரு சூத்திரராக இருந்தால் இதுமாதிரி பதில் வந்திருக்காது பார்ப்பனர்களிடமிருந்து. இட ஒதுக்கீடு காரணமாக தகுதி_- திறமை எல்லாம் ஒழிந்துபோய்விட்டது என்று ஒப்பாரி வைப்பார்கள்.

அதுவும் திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் கொண்டு போய் வைத்து வணங்கிவிட்டுத்தான் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஏவினார்கள். தோல்வியில் முடிந்தது.

ஏழுமலையான் சக்தி என்னவாயிற்று என்ற கேள்வி கிளம்பும் அல்லவா_ அதற்குள் முந்திக் கொண்டு, இதுபோன்ற தோல்விகள் எல்லாம் சகஜம்தான் என்று பெரும்போக்காக எழுதும் பார்ப்பனத்தனம்.

பார்ப்பனர்களின் இந்தச் சூட்சமங்களைப் புரிந்து கொள்ள ஈரோட்டு நுண்ணாடி தேவை!

------ விடுதலை(06.04.2010) கருஞ்சட்டை

1 comment:

ttpian said...

pl.put CHO in calcium kiln:heat 3000 C
through the ashes in Pakisthaan

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]