வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, May 11, 2010

ஹமாம் சோப் விளம்பரம்...தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பார்களா?

ஹமாம் சோப் விளம்-பரம் ஒன்று தொலைக்-காட்சிகளில் வருகிறதே_- கவனித்-தீர்களா? கவனித்-தாலும் அதில் கேரம் விளை-யாடும் பார்ப்பனர் உச்சரித்த வார்த்தை-களைக் கேட்டீர்களா?

அப்படியெல்லாம்_- கூர்மையாக எங்கே கவனிக்கப் போகிறீர்-கள்? எதைக் கவனிக்க-வேண்-டுமோ அதைக் கவனிக்க மாட்டீர்கள்; வேறு ஏதா-வது அரை-குறைச் சமாச்சாரங்கள் என்றால் கவனம் வெகு ஜோராக இருக்-கும்.
ஒரு பார்ப்பனக் குடும்பம். குடும்பத்துச் சிறுமியின் கையில் சொறி ஏற்படுகிறது_- என்ன காரணம்? எப்-படி வந்தது என்று ஆராய்ச்சி. ஒவ்வொரு-வரும் ஒரு காரணத்-தைச் சொல்லுகிறார்கள்.

தெரு நாயோடு விளையாடினால் சொறி வரத்தான் செய்-யும் என்கிறார் பணிப்-பெண்! ஹமாம் சோப் இருக்க ஏன் பயம் என்று சொல்ல வரு-வது விளம்-பரம்.

சரி... அந்தப் பெரிய மனுஷாள் மாமனார் என்ன சொன்னா?
அதுதான் முக்கிய-மாகக் குறிப்பிடப்பட வேண்டியது.
ஆட்டோவில் அந்தக் குழந்தைகளோட ஒட்டிண்டு போறாளே அதுதான் காரணம்! என்று அந்தக் கொலம்-பஸ் கண்டுபிடித்துச் சொன்னார்.

அந்தக் குழந்தைக-ளோடு... அர்த்தம் புரி-கிறதா? அக்ரகாரத்துச் சிறுமி அந்தக் குழந்தை-களோட_-- அதாவது சேரிக் குழந்தை-க-ளோடு ஒட்டிண்டு போறாளாம்.

சேரிப் பொண்-ணுன்னா அவாள் கண்ணோட்டத்தில் சுகா-தாரம் அற்றவள், சொறி-பிடித்தவள். அப்படிப்-பட்ட அந்தப் பெண்-ணோடு ஒட்டிக்-கொண்டு போனதாலே-தான் நம்ப ஆத்துப் பொண்ணுக்கு இந்தச் சொறி என்பதைத்-தான் சொல்லாமல் சொல்ல வருகிறார்.

இந்த விளம்பரத்-தைத் தடை செய்ய-வேண்டும் என்பது ஒரு பக்கம்; இதற்குக் காரணமானவர்-கள்மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின்கீழ் ஏன் நடவடிக்கை எடுக்-கக்கூடாது என்ற கேள்-வியை எழுகிறதே! செய்வார்களா?

- மயிலாடன் விடுதலை (11.05.2010)

7 comments:

Unknown said...

உங்களின் வாத்தத்தை நானும் ஆமோதிக்கிறேன்! ( வரவேற்பு கிட்டுமா?)

tamil said...

If you want to challenge that ad go to court and file a case or file a police complaint.Why DK is not doing that.Why dont you protest against TV channels that are telecasting this ad.Will Veeramani stage a demonstration against all the TV channels which telecast this advt. by protesting before their offices.Does he has the guts to do that.TV channels make money from telecasting them.So DK should protest against them as much as the company and the ad film makers.Let Veeramani issue a statement against the channels.Will he do that.

thalivanirukiraan said...

//அப்படியெல்லாம்_- கூர்மையாக எங்கே கவனிக்கப் போகிறீர்-கள்? எதைக் கவனிக்க-வேண்-டுமோ அதைக் கவனிக்க மாட்டீர்கள்; வேறு ஏதா-வது அரை-குறைச் சமாச்சாரங்கள் என்றால் கவனம் வெகு ஜோராக இருக்-கும்.//

semma commady boss neenga... ungala mathiriae yellathum nenachitinga pola.

//அந்தக் குழந்தைக-ளோடு... அர்த்தம் புரி-கிறதா? அக்ரகாரத்துச் சிறுமி அந்தக் குழந்தை-களோட_-- அதாவது சேரிக் குழந்தை-க-ளோடு ஒட்டிண்டு போறாளாம்.//

boss.. ungaluku vaaipu kidicha nalla antha vilambaratha paarunga. 'antha kuzhanthaihaloda' nu solla maattanga, 'athanai kuzhanthaihaloda' nu solluvanga, apadinu yenna artham theriyuma??
theriyalana... veyil nerathula unga friends 6 peroda oru autola poi paarunga yepadi irukkunu.

yethavathu sollu aduthavangala yethi vidurathae velaya pochippa namma makkaluku

வஜ்ரா said...

http://www.youtube.com/watch?v=gZcfRyrPKog

அந்த பெரியவர், ஆட்டோல அத்தன கொளந்தைகளோட ஒட்டிண்டு போறதால இருக்கும் என்கிறார். தெளிவாகவே உச்சரிக்கிறார்.

அந்தக் குழந்தை என்று யாரையும் சுட்டவில்லை...


காமாலை வந்தவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதற்கு சிறந்த உதாரணம்...இந்தப் பதிவு.

Anonymous said...

டேய் உங்கள மாதிரி ஆளுகள திருத்தவே முடியாதுடா

புதிய கோணங்கி ! said...

சங்கமித்திரன்: ஐய்யோ வட போச்சே!

ஹா ஹா ஹா

Rangarajan said...

There is no such term as Slum Children in that advertisement. Just to get some additional clicks and publicity, you low life people are doing this way. There is absolutely nothing wrong in that advertisement.

Your views are wrong and thats why whatever you see is looking wrong for you.

Rangarajan

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]