Saturday, May 22, 2010
பெரியார் மண் ..இனவுணர்வு எரிமலையோடு விளையாட ஆசைப்பட வேண்டாம் எச்சரிக்கிறோம்!
தமிழர் கழகம் என்று பெயர் சூட்டாமல் திராவிடர் கழகம் என்று தந்தை பெரியார் பெயர் வைத்ததற்கு என்ன காரணம்?
திராவிடன் என்றால் எந்தக் கிறுக்குப் பிடித்த பார்ப்பானும் உள்ளே நுழைய முடியாது. தமிழர் கழகம் என்றால் நானும் தமிழ் பேசுகிறேன் என்று பார்ப்பனர்கள் ஊடுருவி விடுவார்கள்.
நாம் வைக்கும் பெயர் பார்ப்பனத் தூசுகூட உள்ளே நுழைய முடியாத வசதி இருக்க-வேண்டும் என்று தந்தை பெரியார் திட்டவட்ட-மாகத் தெரிவித்துள்ளார்.
மற்றும் தந்தை பெரியார் கூறும் ஒரு முக்கிய கருத்து அடிக்கோடிட்டுக் கவனிக்கத் தகுந்த-தாகும்.
‘தமிழ்’ என்பதும், ‘தமிழர் கழகம்’ என்பதும் மொழிப் போராட்டத்துக்குத்தான் பயன்படுமே-யொழிய, இனப் போராட்டத்துக்கோ, கலாச்சாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது. (‘விடுதலை’, 27.1.1950)
திராவிடர் என்பதையும் புறக்கணித்துவிட்டு, தமிழர் என்ற பெயரைத் தாங்கி யார் கட்சி நடத்தினாலும் அது பார்ப்பனர்களின் கைக் கருவியாக, பாதந்தாங்கியாகத்தான் ஆகமுடியும்.
வரலாற்று ரீதியாக ஆரியம் என்பதற்கு திராவிடம்தான் எதிர்ப்பாகும். ஆரியராவது_ திரா-விடராவது? இது வெள்ளைக்காரன் கட்டிவிட்ட கதை என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சொன்ன-தைத் தான் சிலர் இப்பொழுது நகல் எடுத்துப் பேசுகிறார்கள்.
உண்மையான எதிரியைத் தப்பிக்க விட்டு வேறொரு திசையில் தமிழர்களைக் கவனப்-படுத்தும் ஆபத்தான போக்காகும் இது.
பார்ப்பன எதிர்ப்பு உணர்ச்சி இல்லாத தமிழ் உணர்வு எதற்குப் பயன்படும்? பார்ப்பன எதிர்ப்பு உணர்ச்சிதானே தமிழர்களுக்கு இனவுணர்ச்சியை ஊட்டியது?
அந்த உணர்ச்சிதானே பார்ப்பனர்களின் சமஸ்கிருதத்தையும், அந்தக் குடும்பத்தைச் சார்ந்த இந்தியையும் எதிர்க்கச் செய்தது?
திராவிடர் என்ற உணர்ச்சியைக் கொச்சைப் படுத்துபவர்களையும், எதிர்க்கின்றவர்களையும் ஆரியப் பார்ப்பனர்களும், அவர்களின் ஊடகங்-களும் தூக்கிப் பிடிக்கும். தெரிந்தோ, தெரியா-மலோ அந்தக் குழியில் வீழ்பவர்கள், பார்ப்பனர்-களுக்குத் துணை போகிறவர்களும் விபீடணர்-களான குற்றவாளிகளே ஆவார்கள்.
தமிழர் பார்வையில் இந்தி எதிர்ப்பு என்பது ஒரு மொழி ஆதிக்கத்தை எதிர்ப்பதாகும். திராவிடப் பார்வையில் இந்தி எதிர்ப்பு என்பது பார்ப்பனியம்_- அதன் வருணாசிரமம் உள்ளிட்ட அந்நியக் கலாச்சாரத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகும்.
நன்னிலத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டில்கூட இதுபற்றி தீர்மானம் மிகத் தெளிவாகவே இருக்கிறது.
சென்னை மாநிலத்தில் பிரதம அமைச்சராக இருந்து (1937_39) ஆட்சி நடத்திய சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை லயோலா கல்லூரியில் பேசும்போது, சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தவே முதற்கட்டமாக இந்தியைப் படிக்கச் சொல்லுகிறேன் என்று பட்டவர்த்தனமாகப் பேசினாரே!
ஆரிய_ திராவிடப் போராட்டம் என்பது இந்நாட்டின் சமுதாயப் போராட்டமாக_ அரசியல் போராட்டமாக இருந்து வந்திருக்கிறது. பார்ப்பன வரலாற்று ஆசிரியர்களே வேறு வழியின்றி இந்த உண்மையை ஒப்புக்கொண்டு எழுதியுள்ளார்கள்.
ஆரிய திராவிடப் போராட்டத்தை மய்யப்-படுத்தியே இராமாயணம் உருவாக்கப்பட்டது. புராணங்களும் எழுதப்பட்டன என்கிற வரலாறு-களைத் தெரிந்துகொண்டிருந்தால், திராவிடத்தால் தமிழர்கள் மோசம் போய்விட்டனர் என்று புலம்பமாட்டார்கள்.
ஒன்று அறியாமையாக இருக்கவேண்டும்; அல்லது பார்ப்பனர்களுக்குத் துணைபோவதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கவேண்டும்.
இவர்கள் சுற்றிச் சுற்றி_ கடைசியாக எங்கே வந்து நிற்கப் போகிறார்கள்? தந்தை பெரியா-ரையும் அவரால் உருவாக்கப்பட்ட பார்ப்பன எதிர்ப்பு உணர்வையும், அதனால் விளைந்த மறு-மலர்ச்சி-களையும் எதிர்க்க வேண்டிய நிலைக்கு வரும்போது ஒட்டுமொத்த தமிழர்களும் நிராகரித்து ஊதித் தள்ளிவிடுவார்கள் என்பதில் அய்யமில்லை.
இது பெரியார் மண். பெரியார் சித்தாந்தம் விளைந்த மண்_ பக்குவப்படுத்தப்பட்ட மண்-_ இந்த இனவுணர்வு எரிமலையோடு விளையாட ஆசைப்பட வேண்டாம் எச்சரிக்கிறோம்!

Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
எல்லாம் சரி தான். பெரியாருக்கு பிறகு, ஏனைய திராவிட மொழி மாநிலங்களின் அக்ரமத்திற்கு எதிராக என்ன செய்தோம். சேலம் ரெயில்வே கோட்டம் பிரச்சனையாகட்டும் மற்றும் நீர் வள ஆதாரங்களுக்காக, அவர்களின் சுரண்டலை எதிர்த்து என்ன செய்தோம். கலைஞரே கை விரித்து விட்டார்.
திருவெறும்பூரில் பெல் நிறுவனம் தொடங்கப்பட்ட போதும் நெய்வேலியில் நிலக்கரி ஆலை உருவாக்கப்பட்ட போதும், பணிகளில் மலையாளிகளின் ஆதிக்கம் தென்பட்டபோது பொதுக்கூட்டம் போட்டு கண்டனம்_- எதிர்ப்புத் தெரிவித்தது தந்தை பெரியார் அல்லவா? திராவிடர் கழகம் அல்லவா
பெரியாரின் போராட்டம் அன்றைய தேவைக்காக. இன்றைய போராட்டம் இன்றைய சிக்கலுக்கு. அன்றே ஏனைய திராவிட மாநிலங்களுக்கு எதிராக போராட்டம் பண்ணிணோம் என்று சொல்வது வேடிக்கையாக இல்லை.
வேடிக்கை இல்லை அய்யா.....பெரியார் தமிழர்களுக்காக அவரிகளின் விடியலுக்காக யாரை வேண்டுமாலும் எதிர்த்தார் என்பதை பதிவு செய்யத்தான் அது. வேறு ஒன்றும் இல்லை அய்யா
இது பெரியார் மண். பெரியார் சித்தாந்தம் விளைந்த மண்_ பக்குவப்படுத்தப்பட்ட மண்-_ இந்த இனவுணர்வு எரிமலையோடு விளையாட ஆசைப்பட வேண்டாம் எச்சரிக்கிறோம்!
Good joke.DK is no volcano it is not even a pressure cooker which will at least hiss.What will Veeramani do-protest in Memorial Hall and issue statements.Everyone knows that DK is just a pet cat of the party in power and not a tiger. When a cat says it is a tiger it is just a joke.
Post a Comment