வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, May 18, 2010

ஏசுவானவர் எவ்விதத்திலும் மேம்பட்டவர் அல்லர் - பெர்ட்ரண்ட் ரஸல்

உலகப் புகழ்பெற்ற நாத்திகரான பெர்ட்ரண்ட் ரஸல் அவர்களின் பிறந்த நாள் இன்று (18.5.1872). 98 ஆண்டுகள் வாழ்ந்து காட்டி மத நம்பிக்கையாளர்களை பிரமிக்கச் செய்தவர்.


சிறுவயதில் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டு இருந்-தவர்தான். இதுபற்றி ரஸல் கூறுகிறார்:

இளம் பருவத்தில் இருந்தபோது நான் ஆழ்ந்த மத உணர்ச்சி கொண்டவ-னாக இருந்தேன். கணிதம் நீங்கலாகவோ என்னவோ மற்ற எந்த ஒரு துறையைக் காட்டிலும் அதிகமாகவே மத விஷயத்தில் ஆர்வ-முள்ளவனாகவே இருந்-தேன். அப்படிப்பட்ட ஆர்-வமே அதை நம்புவதற்குக் காரணம் உண்டா என்ற கேள்வியை ஆராயச் செய்தது. அதனால் அந்த ஆர்வம் அடிக்கடி அப்-படித் தூண்டுவதில்லை. கடவுள், மரணமற்ற தன்மை பற்றி ஆய்ந்தேன். ஒவ்-வொன்றையும் ஆய்வு செய்-ததில் இவற்றை நம்புவதற்-குக் காரணம் ஏதுமில்லை என்று உணர்ந்தேன் என்று குறிப்பிடுகிறார்.

மரணத்திற்குப் பிறகு நம் நிலை என்ன? மோட்சத்-துக்கா, நரகத்துக்கா? என்ற கேள்வி மனிதனை சஞ்-சலப்படுத்துகிறது. இது குறித்து ரஸல் கூறுகிறார்:

மரணத்திற்குப் பிறகு உடல் சிதைகிறது என்பதை நான் அறிந்துள்ளேன். அவ்-வாறு உடல் சிதைந்து அழிந்த பிறகும் மனம் மட்டுமே செயல்படுகிறது என்று எண்ணுவதற்குக் காரணம் இல்லை என்று கறாராகக் கூறுகிறார் ரஸல்.

நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல? (கீலீஹ் மி ணீனீ ஸீஷீ ணீ சிலீக்ஷீவீவீணீஸீ) என்ற நூல் உலகப் புகழ் பெற்றது. கிறித்துவ உலகத்தில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது.

இந்நூலை தமிழில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளி-யிட்டுள்ளது.

கிறிஸ்துவுக்குப் பசியாக இருந்ததாம். அத்தி மரம் ஒன்று தூரத்தில் தெரிந்ததாம். தின்பதற்கு ஏதாவது பழங்-கள் இருக்கும் என்று அதன் அருகில் போனாராம். ஆனால் இலைகளைத் தவிர அதில் ஒன்றும் இல்-லையாம். உடனே ஏசு என்ன செய்தார் தெரியுமா? உன்னுடைய பழத்தை ஒரு-வருமே இனிமேல் சாப்பி-டாமல் போகக் கடவது... என்று சாபமிட்டார். அந்த அத்தி மரமும் உடனே பட்டுப் போய்விட்டதாம்! எவ்வளவு வேடிக்கைக் கதை பார்த்தீர்களா? பழம் பழுக்கும் பருவ காலம் வராமல் இருந்ததற்காக மரத்தின்மீது கோபித்துக் கொள்வது நியாயமா? இதிலிருந்து ஏசு-வானவர் புத்தியிலாகட்டும், நற்குணத்தில் ஆகட்டும், சரித்திரத்தில் கூறப்பட்ட சில மனிதர்களை விட எவ்விதத்திலும் மேம்பட்டவர் அல்லர் என்று அந்நூலில் கூறுகிறார் ரஸல்.

வளமான சிந்தனை உள்ளவர்கள்தான் இப்படிப் பலமாக சிந்திக்க முடியும்_- அப்படித்தானே!

- விடுதலை(18.05.2010)  மயிலாடன்


3 comments:

வால்பையன் said...

இயேசு சொல்வதாக வரும் அந்த வசனம் என்ன அதிகாரம் என்று தெரிந்தால் நானும் பதிவில் பயன்படுத்தி கொள்ள வசதியாக இருக்கும்!

எம்.ஏ.சுசீலா said...

எல்லா மதங்களிலும் உள்ள தவறான நம்பிக்கைகளைத் துணிச்சலோடு எடுத்துக் காட்டுபவன்தான் உண்மையான பகுத்தறிவுவாதி.
அந்த வகையில் உங்கள் நேர்மைக்கு என் வாழ்த்துக்கள்.
http://www.masusila.blogspot.com/

சங்கமித்திரன் said...

நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல? நூலில் ரஸ்ஸல் அவர்கள் இந்த வசனத்தை மேற்கோள் காட்டி உள்ளார். அது எந்த அதிகாரம் என்று தெரியவில்லை அய்யா. அதனைத்தான் மயிலாடன் அவர்கள் குறுப்பிட்டுள்ளர். தெரிந்தால் தெரிவிக்கேறேன்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]