வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, May 01, 2010

குடி குடியை கெடுக்கும் என்பது போல பக்தி ஒழுக்கத்தை கெடுக்கும்...

எனக்கு நிறைய நல்ல அறிவு பூர்வமான கட்டுரைகள் எளுதுவதர்க்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பது என்ன என்று கேட்டால் அது நான் நண்பர்களுடன் உரையாடுவது தான். அந்த வகையில் தான் இந்த கட்டுரையும் எழுத நேர்ந்தது அனால் ஒரு சிறு வேறுபாடு அது என்ன என்றால், என்னுடன் ஒத்த கொள்ளகை உடைய ஒரு நண்பர் அவருடைய அலுவலகத்தில் உள்ள ஒரு தோழருடன் பகுத்தறிவு கொள்கைக்கான விவாதத்தில் ஈடுபட்டபோது அந்த தோழரின் வினாவிற்கும் மற்றும் புரிதல் இல்லாத அவருடைய குழப்பமான பதிலுக்கும் விளக்கம் அளிக்கவே இந்த கட்டுரை எழுத வேண்டியதாகி உள்ளது. மேலும் இந்த தலைப்பை பார்க்கும் பொது உங்களுக்கு நினைவு வந்தது கல்கி ஆசிரம் தானே? ஆமாம், சன் தொலைகாட்சியில் சாராயக் கடையும் கல்கி ஆசிரமத்தையும் ஒப்பீடு வீடியோ பார்த்தல் எல்லோருக்கும் அதன் நினைவு வரும்.....சரி நாம் விசயத்துக்கு போவோம்...


அந்த விவாதத்தின் இறுதியில் அந்த தோழர் எப்படி முடிக்கின்றார் என்றால் "ஒன்றுமே இல்லாமல் இருந்த நம்மை, ஒரு தூளி விந்துதில் இருந்து , தாயின் கருவறை இல் உருவாகியவன் யார்?" என்ற இந்த வினாவோடு முடித்துகொண்டுவிட்டார். (இஸ்லாம் சார்ந்தவர்). இப்படி சொல்லித்தான் இஸ்லாமில் ....குடும்பக்கட்டுப்பாடு (family plan ) பண்ணாம ......? படிக்குற நீங்களே..................யோசித்துக்கொள்ளுங்கள்.

ஒன்றுமே இல்லாமல் நாம் இருந்தால் எப்படி குழந்த உருவாகும் .... ஆண்களுக்கு கீழே ஆண்குறி ...பெண்களுக்கு பெண் குறி ....இருந்தால் மட்டுமே அது சாத்தியம் (his question like this so we have to answer like this...sorry, no way to expose).....சாதாரண விஷயம் கூட யோசிக்க முடியாமல் எப்படி அந்த தோழர் இந்த வினாவை எழுப்புகிறார் என்று புரியவில்லை ...மேடும் பள்ளமும் இறைவனின் செயல் என்றால் மேட்டை வெட்டி பள்ளத்தில் போடுவது இறைவனுக்கு எதிரான செயல் என்று இவர் ஒப்புக்கொள்வாரா? மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு ஏன்?

பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் கடவுளுக்கு எதிரான செயல் தான். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கும்போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமே யாகும். அதாவது, கடவுளே நம்பாத - கடவுள் செயலை நம்பாத செயலே யாகும்.தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்கிற எவரும், கடவுள் நம்பிக்கையாளர்கள் என்கின்ற எவரும் கடவுளை நம்பி எந்தக் காரியத்தையும் கடவுளிடம் விடுவது கிடையாது. தலைவலி வந்தால்கூட டாக்டரிடம்தான் செல்கிறார்கள். இவர்கள் எப்படி உண்மையான கடவுள் நம்பிக்கைக்காரர்களாக இருக்க முடியும்?

உயிரினகளின் பரிணாம வளர்ச்சிக்கு கடவுளுக்கு போகவே தேவை இல்லை....சார்லஸ் டார்வின் உடைய "பரிணாம கோட்பாடு" (Darwin's Theory of Evolution) என்ற நூலினை படியுங்கள் ....புரியும் ..அப்படியும் புரியலன்ன .....பகுத்தறிவு வேலை செய்யவில்லை என்று தான் மற்றவர்கள் நினைக்க கூடும்.

அந்த விவாதத்தின் நடுவில், புரட்சி கவிங்கர் கேட்ட கேள்வி "கோவிலுக்கென்று கொடுத்திடல் அறமா? கோடிகொடுக்கும் கல்வி தேடிடல் அறமா? மாந்தரிற் சாதி வகுப்பது சரியா? மக்கள் ஒரேகுலமாய் வாழ்வது சரியா?" அவரிடம் முன் வைத்தபோது, அந்த தோழர் கூறியது என்ன என்றால் அது நல்ல சிந்தனைதான் என்று கூறிவிட்டு அவர் ஒரு கட்டுரை அனுப்பினார். அந்த கட்டுரையின் தலைப்பு "நாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாமா?" (சிரிப்பு வரும் கூடவே எரிச்சலும் வரும்..சிந்திக்க வேண்டாமா என்று கேட்டதற்காக அல்ல ....இப்படி நாத்திகம் மற்றும் ஆத்திகம் வேறுபாடு தெரியாம விவாதம் பன்னுரறேன்னு நினைத்து)

நாத்திகம் ஆத்திகம் குறித்து அறிவு ஆசான் அய்யா தந்தை பெரியார் அவர்கள் என்ன சொல்லுகிறார் பாருங்கள்.......இதோ

காரண காரியத்தைத் தெரிந்து அதன்படி நடப்பவன் நாத்திகன். வெறும் நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் சாத்திரம் சொல்லுகிறது, பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்பதை நம்பி அந்த நம்பிக்கையின் படி நடப்பவன் ஆத்திகன்.

நாத்திகன் என்பதற்குக் கடவுள் இல்லை யென்பவன் என்று பொருளல்ல; புராண இதிகாச வேத சாத்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே, அவற்றைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவர்களையே, பார்ப்பனர்கள் நாத்திகர்கள் என்று எழுதி வைத்திருக்கின்றனர். இராமாயணத்தில் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்த புத்தர் முதலானவர்களை நாத்திகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பகுத்தறிவுக்கும் நாத்திகத்திற்கும் உள்ள உறவு: சமுதாயச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொது உடைமை என்பதைப் போலவே நாத்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லையாகும்.

நாத்திகத்தின் பிறப்படம்: எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இட மில்லையோ அங்கெல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது. கிருத்துவையும், முகமது நபியையும் கூட நாத்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கு அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான் காரணமாகும்.

இப்பொழுதாவது தெரிந்துகொள்ளுங்கள் தோழரே .....நாத்திகம் என்றால் என்ன என்று. நாத்திகம் தொடர்பாக நான் ஒரு விளக்க உதாரணம் ஒன்றையும் பதிவு செய்கிறேன். நாத்திகம் என்பது மேல் சொன்னது போல சிந்தனையின் கடைசி முனை, அதாவது பகுத்தறிவை பயன்படுத்தி சிந்திபவர்கள் என்றுதான் பார்பனர்கள் கூறி இருக்கிறார்கள். எனவே நாத்திகம் என்றால் சிந்திப்பவர்கள் ...சிந்திப்பவர்கள் என்றல் நாத்திகர்கள். அப்படி இருக்க இவர் கொடுத்துள்ள தலைப்பே ("நாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாமா?") முற்றிலும் முரணாக இருக்கிறது...இதிலேயே அந்த கட்டுரையானது விளக்கமில்லாத ஒன்று என்று புலப்பட்டு விட்டது எனக்கு.

அந்த கட்டுரையில் இருந்து இதோ ஒரு விளக்கம் கொடுக்கிறார் நமக்கு..

நாஸ்திகர்கள் கூறக்கூடிய கொடுமைகள் அனைத்தும் சமுதாயத்தில் இடம் பெற்றுள்ளன என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம்.

அதை அனைத்தையும் அகற்றி ஏற்றத் தாழ்வுகளை அகற்றி சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை அவர்கள் கொடுக்கும் திட்டம்தான் மிகவும் தவறான ஒரு திட்டமாகும். ஆபத்தான திட்டமாகும். அவர்களின் திட்டம் குறிப்பாக

தமிழகத்தில் எப்படிப்பட்ட நிலையை உண்டாக்கி இருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். நாட்டில் மலிந்துகாணப்படும் கெடுதிகளுக்கு, இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே மார்க்கத்தை நேர்வழியை மதங்களாக்கி மக்களை பல பிரிவினர்களாக்கி அதன் மூலம் அற்ப உலக ஆதாயம் அடைந்து வரும் புரோகிதரர்கள் எந்த அளவு பொறுப்பாளர்களாக இருக்கிறார்களோ அதே அளவு அதில் எவ்வித குறையுமின்றி நாஸ்திகர்களும் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள்
என்பதை நாஸ்திகர்கள் உணரவேண்டும்.

கள் குடிப்பது கூடாது; குடி குடியைக் கெடுக்கும்; இது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. மக்களை இந்த உண்மையை உணரவைத்து அவர்களை குடியை விடச் செய்வதே அறிவுடையவர்கள் செய்யும் நல்ல முயற்சிகள். தென்னை மரத்திலிருந்துதானே கள் வருகின்றது, தென்னை மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டால், கள் குடி ஒழிந்துவிடும் என்று தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்துபவனை அறிவாளி என்று சொல்ல மாட்டார்கள். மாறாக, தென்னை மரத்தைக் கொண்டு மக்கள் பெறும் நல்ல பலன்களை மக்கள் இழக்க நேரிடும் என்பதே உண்மையாகும். குடிகாரன் தென்னை மரத்திலிருந்து கள் குடிக்கவில்லை என்பதற்காக குடியை விடப்போவதில்லை. ஸ்பிரிட்டைக் காய்ச்சி குடிக்க ஆரம்பிப்பான். அவனுக்கு வேண்டியது போதை. அந்தப் போதையை எப்படியெல்லாம் பெற்றுக்கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் பெற்றுக் கொள்ள முயல்வான். குடியை விடமாட்டான். இதே போல் மூட்டைப் பூச்சித் தொல்லைத் தாங்கமுடியவில்லை என்பதற்காக வீட்டைக் கொளுத்தி விட்டு காட்டில் போய் அவதிப்படமாட்டான். அறிவுள்ள மனிதன் வீட்டிலிருந்தே கொண்டே மூட்டைப்பூச்சித் தொல்லையைப் போக்க உரிய வழியையே பார்ப்பான்

இப்படிப்பட்ட ஒரு அறிவற்ற முயற்சிதான், இறைவனின் பெயரால் சிறு சாரார் பெரும் சாராரை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதற்காக இறைவனே இல்லை என்று நிலைநாட்டச் செய்யப்படும் முயற்சியுமாகும். கள்ளுக்கு பயந்து தென்னையை வெட்டி வீழ்த்தியதால், தென்னயிலிருந்து பெறப்படும் பயன்களை மனிதன் இழப்பதுபோல் சமூகத்தில் சிறு தொகையினர் மக்களை ஏமாற்றுகின்றனர் என்ற காரணத்தால் இறைவன் இல்லை என்று சொல்வது சமுதாயத்தில் பெரும்பான்மையினர் இறை நம்பிக்கையின் மூலம் அடையும் பெரும் பலன்களை இழக்கச் செய்வதாகும்..............

மேற்ச்சொன்னவை தான் அந்த கட்டுரையில் மிக பிரதானமாக வைக்கப்படும் உவமை. ஆனால் ஒன்று அதில் பத்தி என்பது ஒரு போதை என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார் என்பது மிக்க மகிழ்ச்சி......சரி நான் விவாதத்துக்கு வருகிறேன்... தலைப்பே சரியில்லை அப்போ எப்படி அவர்கள் கூறும் உவமை மட்டும் அறிவு பூர்வமாக இருக்க முடியும் (பத்தி வந்தால் புத்தி போய்விடும் என்று அய்யா அவர்கள் அடிகடி கூறுவார்கள் அது மிக மிக உண்மை). முதலில் ஒன்றுக்கும் உதவாத குத்துக்கல்லை (கடவுளை) தென்னை மரத்துடன் ஒப்பிடலாமா?. வேண்டுமானால் கருவை மரத்துடன் ஒப்பிடலமே ஒழிய தென்னை மரத்துடன் ஒப்பிட்டு எழுதி உள்ளது அறிவு வீழ்ச்சியை காண்பிக்கிறது. கருவை மரம் இருக்குற நிலம் பண்படாத நிலம். வேறு எந்த பயிரும் பண்ணமுடியாமல் உதவாக்கரை நிலமா மாறிடும். அதோடு மட்டும் அல்ல முதலில் அந்த மரத்தினால் எந்த பயனும் இல்லை ..அது போலத்தான் கடவுளும் .....கருவ மரம் இருந்தால் அதனுள் மனிதன் நடமாடவே முடியாது .....முள் குத்தும். அதுவே அதனை அடியோ வெட்டி அளித்தால் கரிக்கட்டைக்கு பயன் படும் இல்லை அடுப்பெரிக்க பயன்படும்...அது போலத்தான் கடவுள் என்பதை ஒழித்தால், ஒழித்தபிறகு நிறைய நன்மைகள் கிடைக்கும் (கருவ மரம் வெட்டிய பிறகு கரிக்கட்டைக்கு பயன்படுவது விட அதிகமான நன்மை கிடைக்கும் கடவுள் என்னும் கருவை மரத்தை ஒழித்தால்). எனவே தோழரே தயவு செய்து ஒப்பீடு என்பது அறிவு பூர்வமாக இருக்கட்டும். ஆத்திகர்கள் எப்படி ஒப்பீடு செய்வார்கள் என்பது இதன் மூலம் உங்கள் எல்லோருக்கும் விளங்கும்.

இன்னொரு சிறிய விளக்கமும் கொடுத்தாக வேண்டும் கள்ளை வேண்டுமானால் கடவுளுடன் ஒப்பீடு செய்யலாம் ஏனென்றால் கள்ளும் போதை கடவுளினால் ஏற்படும் பக்தியும் போதை (அவரே ஒப்புக்கொண்டுள்ளார்). எனவே அவரின் இந்த கட்டுரை முழுமையும் பத்தி போதை சூழ்ந்துள்ளதால் மப்பில் எழுதி விட்டார் போலும். குடி குடியை கெடுக்கும் என்பது போல பக்தி ஒழுக்கத்தை கெடுக்கும் என்று இனி எல்லா கோவிலின் நுழைவிலும் எச்சரிக்கை என்று போட்டு எழுத வேண்டும்.

மேலும் அதில் மூட்டை பூச்சி வீடு என்றெல்லாம் உளறி உள்ளார். அங்கேயும் ஒரு தவறு ...வீட்டை கொண்டு வந்து குத்துக்கல்லுடன் (கடவுளுடன்) ஒப்பீடு செய்துள்ளார். ரெண்டும் உயிரற்ற பொருள் என்று ஒப்பீடு செய்து உள்ளாரோ என்னவோ தெரியவில்லை. வீடு உயிரற்ற ஒன்றாக இருந்தாலும் நாம் உறைவிடம் அமைத்துக்கொள்ள பயன்படுகிறது. எனவே மூட்டை பூச்சி உடன் தான் ஒப்பீட வேண்டும். மூட்டை பூச்சி இருந்தால் எவளவு தொல்லையோ (இது கூட இருக்கும் வீட்டில் மட்டும் தான் தொல்லை) அவளவு தொல்லை இந்த சமூகத்துக்கு இந்த கடவுள் என்ற பாத்திரம் இருந்தால். எனவே அவர் சொல்லுவது போல முதலில் அந்த பூச்சியை (கடவுளை) அழித்து விட்டு சாதி,சமயம்,சாஸ்திரம்,மூடநம்பிக்கை இல்லாத ஒரு சமத்துவ சமூகத்தில் (வீட்டில்) வாழ்வோமே. அதற்க்கு உங்களால் ஆனா ஒத்துழைப்பை நம் எதிர்கால சந்ததியர்க்கு கொடுக்க வேண்டுகிறோம்.

கடைசியாக தந்தை பெரியார் அவர்கள் சொன்ன அறிவுரை இந்த நேரத்தில் நினைவு படுத்துவது மிகவும் சிறந்ததாகும் என்று நினைக்கிறேன்

எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-௧௯௭௩

பக்தி என்பது தனி சொத்து ஒழுக்கம் என்பது பொது சொத்து
பக்தி இல்லை என்றால் நட்டம் ஒன்றும் இல்லை
ஒழுக்கம் இல்லை என்றால் எல்லாமே பாழ்

மேற்சொன்ன அய்யாவின் அருமையான அந்த பொன்மொழிக்கு ஒரு உதாரணம். இப்போ நான் இருக்கேன்னு வச்சுகொங்கோ....பரணிதரன் இருக்காரே ரொம்ப சரியாய் வைகாசி வந்த ஐயப்பன் கோவில் மாலை போட்டு ரொம்ப பக்தியோடு அய்யப்பன் பார்க்க போய்டுவாருங்க. அதே மாறி புரட்டாசி ஆனா ஏழுமலையான் பாக்க போவாரு. அப்படி ஒரு பக்தியோடு இருப்பாருங்க....ஆனா என்ன சைக்கிள் பூட்டாம வச்சு இருந்த தூக்கிட்டு போய்டுவாரு அதாங்க ஒரு பெரிய கெட்ட பழக்கம்....எப்படி இப்போ சொல்லுங்க பக்தி முக்கியமா? ஒழுக்கம் முக்கியமா? எது அடுத்தவர்களை பாதிக்குது?......................

இந்த அடிப்படை விஷயம் பற்றி இன்னும் தேவைப்பட்டால் மேலும் எழுத நேரும்.........

மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்
வாழ்க பெரியார் ! வளர்க பகுத்தறிவு

5 comments:

விடுத‌லைவீரா said...

அன்புள்ள தோழர் அவர்களுக்கு... மிகச்சிறந்த உதாரணத்துடன் அனைவருக்கும் புரியும்படி விளக்கி இருப்பது அருமை. இதை படித்து திருந்த வேண்டியவர்கள் படித்து திருந்தினால் மிகுந்த மகிழ்ச்சிதான்... தொடரட்டும் உங்கள் பதிவு வாழ்த்துக்கள்.

சங்கமித்திரன் said...

விடுதலை வீரா அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி

ரம்மி said...

குடி குடியைக் கெடுக்கும்! பெரியார் சீடர் கலைஞரின் டாஸ்மேக் அரசை வாழ வைக்கும்! கலர் டி.வி கொடுக்கும்! சாத்தான் வேதத்தைத் திட்டும்! தன்னைத்தானே புகழும்!

ரம்மி said...

டாஸ்மேக்கை நீர் ஆதரித்தால், பார்ப்பன பெண்ணின் திட்டத்தை ஆமோதித்தவர்: அப்போது நீர் சுய மரியாதை அற்றவர்! எதிர்த்தால் நீர் தமிழின விரோதி! டாஸ்மேக்கை எதிர்ப்பது கலைஞரை/பெரியாரை எதிர்ப்பதைப் போல்!

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]