Monday, May 24, 2010
மாணவர்கள் மத்தியில் தேவையான கட்டுப்பாடு!
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைந்த 15 மருத்துவக் கல்லூரி-களில் மாணவ, மாணவிகள் உடை அணி-வதற்குக் கட்டுப்பாடு கொண்டுவரப்படுகிறது.
இதன்படி மாணவிகள் பூ வைக்கவும், நகை அணியவும் தடை செய்யப்படுகிறது. மாண-வர்கள் டி ஷர்ட், ஜீன்ஸ் போன்ற உடைகளை அணியவும் தடை விதிக்கப்படுகிறது.
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் இந்தக் கட்டுப்-பாடுகளை விதித்துள்ளார்.
உடை அணிவது, தலையில் பூ வைத்துக் கொள்வது என்பதெல்லாம் தனிப்பட்ட பிரச்சினை; அதில் தலையிடக் கூடாது என்று சிலர் கூறக்கூடும்.
அந்தத் தனிப்பட்ட உரிமை பொது ஒழுக்கத்துக்கு இடையூறாகவும், ஏற்றுக்-கொண்ட பாத்திரத்துக்குப் பொருத்தமானதாகவும் இருக்கவேண்டுமே!
பொதுவாகவே, பூவும், நகைகளும் பெண்களுக்கு அணிகலன்கள் என்று ஆக்கி வைத்திருப்பதே அவர்களைக் குறிப்பிட்ட வாழ்க்கை வட்டத்துக்குள் அடைக்கும் வசீகரமான தந்திர ஏற்பாடேயாகும்.
இவைதான் பெண்களுக்கு அழகு என்று சொல்லிச் சொல்லி அவர்களின் மனநிலையை அந்தப் போதைக்கு ஆளாக்கி விட்டனர்.
இது ஏதோ பழைய பத்தாம்பசலிக் காலத்தோடு முடிந்துபோனால் சரி; அறிவியல் வளர்ந்த, அதுவும் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் பெண்களுக்கு இந்தப் பத்தாம் பசலி அடையாளம் தேவைதானா?
ஒருவர் ஆணா, பெண்ணா என்பதுகூட அவரவர்களின் தனிப் (றிமீக்ஷீஷீஸீணீறீ) பிரச்சினை! இன்னொருவர் அதைத் தெரிந்துகொள்ள-வேண்டும் என்று நினைப்பதே அதிகப் பிரசங்கித்தனமும், ஒழுக்கக் கேடும் ஆகும்.
தோற்றத்தைப் பார்க்கும்போதே இவர் ஒரு விஞ்ஞானி. மருத்துவத் துறையைச் சார்ந்த அறிஞர் என்ற எடுப்பான தோற்றம் இருக்கவேண்டுமே தவிர, இவர் மருத்துவக் கல்லூரி மாணவி. இவர் ஒரு பெண் _ இந்து சனாதன குடும்ப வழி வந்த பாங்கு உடையவர் என்று காட்டிக் கொள்வது பொருத்தமற்ற-தாகும்.
இதேபோல, காவல்துறையைச் சேர்ந்த பெண்கள் சடை பின்னல் போட்டுக் கொள்வது, பூ வைத்துக்கொள்வது, காலில் கொலுசு போட்டுக் கொள்கிறார்கள் என்றால், அந்தப் பெண்ணை ஒரு காவல்துறை அதிகாரி என்று மதிக்கும், நினைக்கும் எண்ணம் ஏற்படுமா?
அதேபோல, கல்லூரி மாணவர்களும் நவ நாகரிகம் என்ற பெயரில் கோமாளித்தனமாக உடை உடுத்திக் கொள்வது, முழுக்கால் சட்டைகளில் எங்கு பார்த்தாலும் தொங்கும் பைகள், கொத்துக் கொத்தாக நாடாக்கள் தொங்குவது, ஒற்றைக் காதில் கடுக்கன் மாட்டிக் கொள்வது போன்ற கோமாளித்தனமான காட்சிகளில் கல்வி நிறுவனத்துக்குப் போவது உயர் மதிப்பீடுக்கு உகந்ததுதானா?
காவல்துறையினர் என்றால் அவர்களுக்-கென்று ஒரு தோற்றமும், மிடுக்கும், ஆசிரியர்கள் என்றால், அந்த மரியாதைக்குரிய உடையும், போக்கும் இருக்கவேண்டும்.
மாணவர்கள் விருப்பமான உடைகளை, வண்ணங்களைத் தேர்வு செய்வதில் தாம் குறுக்கிடவில்லையென்றும், அதேநேரத்தில் மாணவ, மாணவிகளின் ஒழுங்கைக் குலைக்-கும் வகையில் அவை அமைந்துவிடக் கூடாது என்றும் துணைவேந்தர் கூறியிருப்பது கருத்தூன்றிக் கவனிக்கத்தக்கதாகும்.
துணைவேந்தரின் நன்னோக்கத்தை மனதிற்கொண்டு எந்தவித சர்ச்சையும் செய்-யாமல் மாணவர்கள், மாணவிகள் ஏற்றுக்-கொண்டு செயல்பட்டால் அது ஒரு சிறப்பான _ உயர்வானதோர் முடிவாக இருக்கும்.
-------- நன்றி விடுதலை தலையங்கம் (10.04.2010)

Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல வேலை எல்லோரும் கருப்பு சட்டை தான் அந்நிய வேண்டும் என சொல்லுவிர்கள் என நினைத்து பயந்து விட்டேன் . நல்ல வேலை அப்படி எதுவும் சொல்லவில்லை .
யார் உடலில் என்ன உடை இருக்க வேண்டும் (அது அடுத்தவரை நேரடியாக பாதிக்காத வரையில்) என்று தீர்மானிக்க நீங்கள் யார் என்பதுதான் கேள்வி. என் உடலில் நான் தாயத்து கட்டுவதும், குல்லா போடுவதும். முண்டாசு கட்டுவதும், தாலி அணிவதும், பான்ட் மேலே ஜட்டி போடுவதும், ஜட்டி மேலே பான்ட் போடுவதும் என் தனி மனித உரிமை. அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னிடம் வேண்டுகோள் விடுக்கலாம், அவ்வளவுதான். வேண்டுகோளை நிறைவேற்றுவதும், போடா போ என்பதும் என் இஷ்டம், என் உரிமை.
முதலில் பெரியாரை முழுமையாக படிங்க . அப்புறம் ப்ளாக் எழுத வரலாம்
தமிழுடன்
முத்துக்குமார்
Post a Comment