Saturday, May 01, 2010
திரிபுவாதங்களுக்கு மறுப்புக் கூற..திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் (Dravidian Historical Research Centre)
திராவிடர் இனம்பற்றியும், திராவிடர் இயக்கம் குறித்தும் ஆய்வுகள் மேற்-கொள்ளவும், இவற்றிற்கு எதிரான திரிபுவாதங்களுக்கு மறுப்புக் கூறவும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் (Dravidian Historical Research Centre) என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் (Dravidian Historical Research Centre) எனும் அமைப்பை உருவாக்குவதற்கு 25 ஏப்ரல் 2010 காலை 11 மணிக்கு பின்வருவோர் சென்னை பெரியார் திடலில் கூடினர்.
கி. வீரமணி (கூட்டத் தலைமை), கவிஞர் கலி. பூங்குன்றன், முனைவர் அ. இராமசாமி, முனைவர் பி. ஜெகதீசன், பேராசிரியர் எ. கருணானந்தன், கு.வெ.கி. ஆசான், முனைவர் ப. காளிமுத்து, வீ. குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:
செய்யவேண்டிய காரியங்கள்_
1. திராவிடர் வரலாற்று ஆய்வுக்கு ஊக்கமளிப்பது
2. திராவிடர் வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பாராட்டு
3. திராவிடர் வரலாறு பற்றிய தவறான கருத்துகளுக்கும், திரிபுவாதங்களுக்கும் மறுப்பு
4. திராவிடர் வரலாறுபற்றிய கருத்தரங்குகள்
5. திராவிடர் வரலாறு பற்றிய ஆவணத் தொகுப்பு
6. திராவிடர் வரலாற்றைக் கூறும் பருவ இதழ் நடத்துதல் (Quarterly Journal dealing with Dravidian History) இதழின் பெயர் Journal of Dravidian Historical Research
7. திராவிடர் வரலாற்றில் ஆர்வமும், ஈடுபாடும் உள்ள அனைவரையும் உறுப்பினர் ஆக்குதல்.
8. திராவிடர் வரலாறுபற்றிய அரிய நூல்களை மறுபதிப்புச் செய்தல், புதிய ஆய்வு நூல்களை வெளியிடல்.
பின்வரும் பொறுப்பாளர்கள் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டனர்.
1. புரவலர்: மானமிகு கி. வீரமணி
2. தலைவர்: முனைவர் ஏ. இராமசாமி
3. துணைத் தலைவர்: முனைவர் பி. ஜெகதீசன்
4. துணைத் தலைவர்: முனைவர் ந.க. மங்களமுருகேசன்
5. செயலாளர்: பேராசிரியர் அ. கருணானந்தன் (இதழ் ஆசிரியர்)
6. இணைச் செயலாளர்: முனைவர் பி.ஆர். அரங்கசாமி
7. தலைமையகச் செயலாளர்: மானமிகு கு.வெ.கி. ஆசான்
8. பொருளாளர்: மானமிகு வீ. குமரேசன்
நிருவாகக் குழுவினர்
1. முனைவர் ப. காளிமுத்து
2. முனைவர் பு. இராசதுரை
3. முனைவர் அ. கலியமூர்த்தி
2010 மே மாதம் இரண்டாம் வாரத்தில் தொடக்க விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சென்னை_ பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைமையிடத்தில் எத்தனை எத்த-னையோ சிறப்புமிக்க கருத்துகள், அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்-களின் தலைமையில் நேற்று நடைபெற்ற -பேரா-சிரியர்கள் பலரும் கலந்துகொண்ட ஆய்வுக்-கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும்.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் (Dravidian Historical Research Centre) ஒன்று உருவாக்கம் செய்யப்பட்டது.
இது உருவாக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? வரலாற்றில் மூத்த இனமான _-ஒரு காலத்-தில் இந்தியா முழுமையும் பரவியிருந்த இனமான திராவிட இனம் பற்றி சரியான வரலாற்றுத் தக-வல்களையும், ஆவணங்களையும் வெளிப்படுத்-துவது என்பது அதன் முதன்மையான நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
ஆரியராவது_ திராவிடராவது என்று பார்ப்-பனீயத்தை முதுகெலும்பாகக் கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். உள்-ளிட்ட சங் பரிவார் கும்பல் திட்டமிட்ட வகை-களில் ஒரு பக்கம் பிரச்சாரம் செய்துகொண்டு வருகின்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்களில் இத்தகைய தவறான தகவல்கள் பிஞ்சு உள்ளங்களில் திணிக்கப்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ் தங்களின் வசீகர கதாநாயகனாக பயன்படுத்திக் கொள்ளப்படுகிற விவேகானந்தரி-லிருந்து, ஜவஹர்லால் நேரு, பி.டி.சீனிவாச அய்யங்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் உள்பட வரலாற்றில் ஆரியர் இனம் பற்றிப் பலபடப் பேசி இருக்கிறார்கள், எழுதிக் குவித்தும் இருக்கி-றார்கள். இராமாயணம் என்பதே ஆரியர் _ திராவிடர் போராட்டத்தின் வெளிப்பாடே என்று எத்தனை எத்தனையோ பேராசிரியர்கள் ஆய்வுக் கண்-ணோட்டத்தில் மறுக்க முடியாத ஆதாரங்களோடு நிறுவியும் இருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, ஒரு சுயநல நோக்கோடு பல திரிபுவாதங்கள் நாட்டிலே தலைதூக்கும் வண்ணம் திட்டமிட்ட வகையில் காரியங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, திராவிட இயக்கத்தால் ஏற்பட்ட நலன்-களையும், மாற்றங்களையும், உரிமைகளையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களே திராவிடர் என்பது. - திராவிடர் இயக்கம் என்பது ஆகாத ஒன்று. கூடாத ஒன்று என்பது போல, ஆரியர்-களின் கைப்பிள்ளைகளாக சிலர் மழலை மொழி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
திராவிடர்கள் பற்றிய முறையான வரலாறு இல்லாமையாலும், திராவிடர் இயக்கம்பற்றி போதுமான தகவல்கள் வெளிவராமையாலும், சிலர் குழப்ப முயற்சிக்கின்றனர். இந்தப் படு-குழியில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் நம் இளைஞர்கள் வீழ்ந்து விடக்கூடாது என்ற பொறுப்-பான கடமை உணர்ச்சியோடு, இந்த அமைப்பு நேற்று பெரியார் திடலில் உருவாக்-கப்பட்டது.
இந்த அமைப்பு வரலாற்றால் வாழ்த்தி வரவேற்-கப்படும் என்பதில் அய்யமில்லை. மிக பொருத்-த-மானவர்கள், இந்தத் தத்துவத்தில் உயிர் மூச்சு வைத்திருப்பவர்கள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டிருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.
இதற்கு உலகம் முழுவதும் உள்ள பார்ப்பனர் அல்லாத திராவிட இனத்தைச் சேர்ந்த அத்த-னைப் பேரும் ஆதரவுக் கையை உயர்த்திக் காட்டு-வார்கள் என்பதில் அய்யமில்லை. பல வகை-களிலும் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்-கையும் உண்டு.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த அமைப்பு கூடி விவாதிக்கும், கருத்தரங்குகளை நடத்தும், காலாண்டு இதழ் ஒன்றையும் இரு மொழிகளில் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தொடங்-கவும் உள்ளது.
காலங்கருதி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பை உருவாக்கியவர்களுக்கு உள்ளங் கனிந்த பாராட்டுகளை, நன்றியினை உரித்தாக்கிக் கொள்வோம். இந்த அமைப்பு மேலும் மேலும் வலுப்பெற, ஒளிபெற கட்சிகளைக் கடந்த அனைத்துத் தரப்பு இன உணர்வாளர்களும் ஆதரவு அளிப்பார்களாக!
-------- விடுதலை தலையங்கம் மற்றும் செய்தி தொகுப்பு (26.04.2010)

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment