வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, December 26, 2009

பெரியாரியம்! தத்துவமும் விளக்கமும்..



உண்மை - நேர்மை - நியாயம் - நீதி இவற்றுக்காக பகுத்தறிவுடன் தொடர் போராட்டம் நடத்திய பெரியார் எந்த வெறிதனத்திர்க்கும் ஒத்துப்போகதவராக இருந்தார். தமிழர்களின் மொழியை சீராக்குவதிலும், எளிமைப்படுதுவதிலும் காட்டிய அக்கறையில் அவர் தமிழை தெயிவமாக்கவில்லை. வளர்ச்சியடையாத, மாற்றமும் முன்னேற்றமும் அடையாத எதுவும் காட்டுமிரண்டிதனமானவையே என்பதுதான் அவரது தத்துவ அணுகுமுறை.


தமிழர்கள் என்பதாலேயே கரிகார்ச்சோழனும்,நரசிமபல்லவனும்,ராஜராஜ சோழனும் போற்றுவதர்க்குரியவர்களாக பெரியார் ஏற்றுகக் கொண்டதில்லை.

தமிழ் என்பதாலேயே தேவாரமும்,திருவாசகமும்,கந்தபுராணமும் அவருக்கு பெருமிதமாக படவில்லை, அவர்களாலும் அவைகளாலும் மனுதர்மம் தழைத்ததா,சமதர்மம் தழைத்ததா என்பதுதான் அவரது அளவுகோல். சமத்துவத்தை மறுக்காத சமநீதி சொன்ன திருக்குறளை ஏற்றுக்கொண்டதும் தமிழன் மீதான பற்றினால் அல்ல சமதர்மத்திர்க்காகதான்.

ஒப்பற்ற மனிதப் பற்றாளரான பெரியார் எப்போதும் பாதிக்கப்படவர்களுக்காக சிந்தித்தார்,செயல்பட்டார் போராடினார். போலித்தனம் ஏதுமின்றிப் போராடினார்.

ஆதிக்க ஆரியத்திற்கு எதிராக
பாதிக்கப்பட்ட திராவிடர்களுக்கான விடுதலை.

தன்னல பார்ப்பனியத்திற்கு எதிராக
பார்பனரல்லதொரின் விடுதலை.

தேவமொழி சமஸ்கிருதத்திற்கு எதிராக
மக்கள் மொழி தமிழுக்கான விடுதலை.

மடமை மதவாதத்தின் கொடுமைகளிலிருந்து
பகுத்தறிவின் மூலம் பாமரர்களுக்கு விடுதலை.

ஆணாதிக்க மரபுகளிலிருந்து
பெண் விடுதலை.

மூடநம்பிக்கயிளிருந்து பகுத்தறிவுக்கு விடுதலை.

வன்மைங்களிருந்தும் வெறிதனன்களிருந்தும் விடுதலை
(வன்முறையின் - பயங்கரவாதத்தின் விதையே வெறித்தனம் அல்லவா?)

இவ்வாறு தந்தை பெரியாரின் சிந்தனைகளுக்கும் நெடிய போராட்டங்களுக்கும் உணர்வாக,உயிரோட்டமாக இருப்பது அவரது விடுதலை தத்துவமே.

அது வெறும் அரசியல் விடுதலை தத்துவம் அல்ல. சமுக விடுதலை தத்துவமல்ல

அது மனவிடுதலை முதல் சமுக பொருளாதார அரசியல் விடுதலை என அனைத்தையும் தழுவிய முழுவிடுதலை தத்துவம்.

அத தத்துவத்தின் பன்முகப் பரிமாணங்களையும், பரிணாமங்களையும் விவாதிப்பதும்,ஆராய்வதும் ஆரோக்கியமான சமுக மாற்றங்களுக்கு உதவிடும்.இளந்தளைமுறையினருக்காகவும் வருங்கால சமுகத்திர்க்காகவும் பெரியாரியத்தை தத்துவப்படுத்திநாம் தரவேண்டும்

வாழ்க பெரியாரியம்!
(பெரியாரின் 131 பிறந்தநாள் ஆண்டுமலரிலிருந்து.....)

8 comments:

கபிலன் said...

தமிழ் மொழியை பெரியார் அப்படி என்ன சீர் செய்தார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

தமிழ்ப்புலவர்களை சாதியை வைத்து அடையாளப்படுத்தி இழிவுபடுத்தியவர் பெரியார் என்பது ஊரறிந்த விஷயம்.

தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதற்கு யோசித்து அர்த்தம் கண்டுபிடித்திருக்கிறீர்கள் போலத் தெரிகிறதே : )

பரணீதரன் said...

சுயமரியாதை திருமணம் , திருக்குறள் , எழுத்து சீர்திருத்தம்... என்பது எல்லாம் தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு இலுதுசென்று ஆதிக்க மொழி, கடவுள் மொழி சம்ஸ்கிருத ஆதிக்கம் குறைந்தது.

கபிலன் said...

பிராமண எதிர்ப்பின் விளைவாக, இந்துக் கடவுள் எதிர்ப்பின் விளைவாக சுயமரியாதைத் திருமணங்களைத் தோற்றுவித்தாரே தவிர, தமிழை வளர்க்க அல்ல. பெரியாரின் நோக்கத்தை மாற்றாதீர்கள்.

நடுவில் திருக்குறளை எதற்கு எடுத்தீர்கள்? அதற்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம் ? பெரியார் திருக்குறளை எப்படி விமர்சித்தவர் என்று புரட்டிப் பாருங்கள்.

பெரியார் தமிழ் எழுத்து சீர்திருத்ததிற்காக குரல் கொடுத்தார் என்பது உண்மை. உனக்கு எதுக்குடா 247 எழுத்துக்கள் என கேட்டவர் பெரியார். கால்டுவெல், வீரமாமுனிவர், அகத்தியர் போன்றோர் வரிசையில் பெரியார் வந்தாலும், என்ன சீர்திருத்தம் கொண்டு வந்தார் என்று சொன்னால் நன்று!

பரணீதரன் said...

பார்பன எதிர்ப்புன்ன என்னனு புரியலையா கபிலன் அவர்களே....சுயமரியாதை திருமணம் வந்ததே பார்பான் சம்கிருததில் தமிழனுக்கு புரியாதா மொழியில் ஏதேதொ சொல்லுகிறான் என்றும் தான்...நீங்கள் கூறுவது மட்டும் அல்ல எல்லாத்துக்கும் சேர்த்துதான் சுயமரியாதை திருமணம் ..

பகவத் கீதை என்கிற வடமொழி ஆதிக்கம் நிறைந்த மக்களை இழிவு படுத்திய தமிழை ஒழிக்க உதவி புரிந்த அந்த நூலுக்கு பதிலா தான் அய்யா திருக்குறளை பரப்ப முதல் முதல் திருக்குறள் மாநாடே நடத்தி அதனை தமிழ் மக்களிடம் கொண்டு சென்றார். அதன் விளைவுதான் இன்று பேருந்தில் திருக்குறள். போபாண்டவர் கையில் திருக்குறள்...தினமலர்,தினமணி என்ற ஏடுகளில் திருக்குறள் (இவாள் இல்லன்னே திருக்குறளை எட்டிதான் பார்பால). இப்போ ஒப்புக்குதானும் போட்டுதான் ஆகணும்..இல்லேன்னா தமிழ்நாட்டுல பத்திரிக்கை விற்க முடியாது....இப்படி ஏராளம்....

பெரியாரின் எழுத்து சீர்த்திருத்ததிற்கு அங்கீகாரம் கொடுத்தவர் முன்னால் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அதன் விளைவு பல எழுத்துகள் சுரக்கப்பட்டு தமிழ்நாடு நூல் நிறுவனத்தால் பின்பற்றப்பட்டு வருகிறது.....

பரணீதரன் said...

http://paraneetharan-myweb.blogspot.com/2006/09/why-bhagavat-gita-when-there-is.html

தமிழ் said...

கடவுள் பாக்களை தமிழில் எழுதினால் மட்டும் அவர்கள் அனைவரும் தமிழன் ஆகிவிடமாட்டார்கள். அதனால் அவ்ர்களை சாதி கூறி(பார்ப்பான் என்றே) கூறியிருப்பார். வேறு எவரையும் அவர் சாதி கூறி இழித்து பார்ப்பனர்கள் போல கூறி இருக்க மாட்டார். ஒழுக்கம் என்பது என்ன என்று விளக்கம் கூறிய பெரியவர். கபிலன் அவர்கள் பார்ப்பனர் கண்கொண்டு பார்க்கிறார். அவ்வளவே.

கபிலன் said...

"தமிழ் said...
கடவுள் பாக்களை தமிழில் எழுதினால் மட்டும் அவர்கள் அனைவரும் தமிழன் ஆகிவிடமாட்டார்கள். "

ஹி ஹி...வேறு யாருங்க தமிழன் ? பெரியாரா?
கடவுள் பாக்களை புரிந்து கொள்ளமுடியாமல், இலக்கணம் தெரியாமல், அதன் பொருளையே உரை வாங்கிப் படித்து விமர்சிப்பவன் தான் உங்களுக்கு ஒரிஜினல் தமிழனா?

தமிழ்நாட்டுல பிறந்தவன் தமிழனா ?
தமிழ் பேசுறவன் தமிழனா?
தமிழ் இலக்கணம் தெரிந்தவன் தமிழனா ?
தமிழ்ச் செய்யுள் எழுதுபவன் தமிழனா ?
தாய் மொழி தமிழுடையவன் எல்லாம் தமிழனா ?

இப்படி கேட்டுகிட்டே போவீங்க...அதனால நீங்களே சொல்லிடுங்க....யாரு தமிழன் ? எங்கயாவது, யாராவது பெரியார் கும்பலில் எழுதி இருந்தால் அடியேனுக்கு விளக்க வேண்டுகிறேன். நான் தமிழனான்னு தெரிஞ்சிக்கணும்னு ஒரு ஆர்வம்!

ஆனா, உங்க கிட்ட நான் தமிழன்னு நிரூபிக்க ஒரு சூப்பர் ஐடியா இருக்கு....இதோ பாருங்க....
பார்ப்பனீயம், பகுத்தறிவு.
இப்போ ஒகேவாங்க... : )

பரணீதரன் said...

அய்யா கபிலன் இதன் பதிவிலேயே அதை பற்றி குறிபிட்டுள்ளேன்.....இங்கே ஒன்றும் மொழி , மதம் ,இனம் சார்ந்து ஏதும் போராட வில்லை......அந்த தத்துவத்தையும் விளக்கத்தையும் நன்றாக படியுங்கள்....

அது வெறும் அரசியல் விடுதலை தத்துவம் அல்ல. சமுக விடுதலை தத்துவமல்ல
அது மனவிடுதலை முதல் சமுக பொருளாதார அரசியல் விடுதலை என அனைத்தையும் தழுவிய முழுவிடுதலை தத்துவம்.

இதோ உங்களுக்கு புரியுற மாறி.............அந்தகாலத்து நாயன் மார்களும், ஆழ்வார்களும் தமிழுக்கு போராடியவர்கள் என்பதாலேயே அவர்களை தூக்கி வைத்து புகழ வில்லை..... அவர்களுக்கான எதிர்ப்பு குரலையும் பாருங்கள்.........

அந்தக் காலத்தில் ஊசி முனையில் நின்றும் ஒற்றைக் காலில் நின்றும் பற்பல விதமாக அகோரத் தவம் செய்த முனிவர்கள் அனைவரும் ஆண்டவனைப் பார்த்து எதைக் கேட்டார்கள்? மற்ற ஆழ்வார்களும் சரி, நாயன்மார்களும் சரி கடவுளிடம் எதைக் கோரினார்கள்.

மக்கள் வாழவேண்டும், உலகம் உருப்படவேண்டும், வறுமை ஒழியவேண்டும், உலகத்தில் உண்மை தழைக்கவேண்டும் என எந்த முனிவராவது எந்த பக்தனாவது, எந்த நாயன்மாராவது கேட்டிருக்கிறார்களா? இல்லையே! பொது நன்மைக்காகக் கடவுளை வரம்கேட்ட பக்தர்களை யாராவது காட்ட முடியுமா? ஒருவரும் கிடைக்கமாட்டார்கள்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]