வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, December 08, 2009

வீண் வம்பை விலைக்கு வாங்க-வேண்டாமே!

சென்னை கடற்கரை_ வேளச்சேரி, சென்னை கடற்கரை _ தாம்பரம் மற்-றும் அரக்கோணம் புற-நகர் பகுதிகளில் காலை, மாலை மிக முக்கிய நேரங்-களில் “மகளிர் மட்டும்’’ மின் தொடர்வண்டி (ரயில்) இயக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 12 முதல் மேற்-கொள்ளப்பட்ட இந்த சேவை பொதுமக்கள் மத்தியில் நல்ல அளவு வரவேற்பினைப் பெற்றுள்-ளது.


“மகளிர் மட்டும்’’ என்று நல்ல தமிழில் அனைத்துப் பெட்டிக-ளி-லும் பளிச்சென்று பொறிக்-கப்பட்டுள்ளது, மகிழ்ச்சி!

இப்பொழுது இதில் இன்னொரு இடைச்செரு-கல் “மாத்ரி பூமி’’ என்ற இந்தி வாசகம் அடங்கிய தகடு பொறிக்கப்பட உள்ள-தாம்.

தமிழ்நாட்டுக்குள் குறிப்-பிட்ட சில இடங்-களில் மட்டும் ஓடும் மின் தொடர்வண்டியில் (லிஷீநீணீறீ ஜிக்ஷீணீவீஸீs) இந்த இந்தி எழுத்து தேவைப்படுவ-தன் அவசியம் என்ன?

பொதுமக்கள் யாரே-னும் முறையிட்டார்களா? தமிழில் எழுதி இருப்ப-தால் எங்களுக்கு ஒன்-றுமே புரியவில்லை _ கண்-களைக் கட்டி காட்-டில் விட்டதுபோல இருக்-கிறது; இந்தியில் எழுதா-விட்டால் எங்கள் கதி என்-னாவது என்று மக்கள் மறியல் செய்தார்களா? நாளொன்றுக்கு இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டபெண்கள் ஆயி-ரக்கணக்கில் இவற்றில் பயணம் செய்கிறார்களா?

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லாத நிலை-யில், இந்த வீண் வேலை ஏன் இரயில்வே துறைக்கு?

சில ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்-சாலை-யில் எல்லைக் கற்களில் தேவையில்லா-மல் இந்தியைத் திணித்து, நன்கு வாங்கிக் கட்டிக்-கொண்டனர். ‘விடுதலை’ படத்துடன் செய்தி வெளி-யிட்டது, உடனடியாக அது அகற்றவும்பட்டது.

1990 ஜனவரி 25 ஆம் நாள் ஓர் அறிவிப்பு வெளி-வருகிறது. சென்னைத் தொலைக்-காட்சி-யில் இரவு 8.40 மணிக்கு இந்திச் செய்தி அறிக்கை இடம்பெறும் என்பதுதான் அந்த அறி-விப்பு. முதலமைச்சர் கலை-ஞர் அவர்களிடம் உடனே தொடர்பு-கொண்டு இதனைத் தெரி-வித்தார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி. எதையும் விரைந்து செய்-யும் திறன் வாய்ந்த முத-லமைச்சர் கலைஞர் அவர்-கள், அன்றைய மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் உபேந்திரா-வுடன் தொடர்புகொண்டு, அதனை முறியடித்தார்.

எதையும் முளையில் கிள்ளும் துடிப்பு என்பது திராவிடர் கழகத்திற்கு உண்டு.

இந்தக் காலகட்டத்தில் தமிழர்கள் எப்படி இருக்-கின்றனர் என்று மத்திய அரசு வாலை விட்டு (Feeler)ப் பார்ப்பதாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் ரயில்வே துறை செய்ய-வேண்டிய பணிகள் ஏரா-ளம் உள்ளன. வீண் வம்பை விலைக்கு வாங்க-வேண்டாமே!

-விடுதலை (08.12.09) மயிலாடன்

6 comments:

திருவாரூர் சரவணா said...

மற்ற நாடுகளைப் போல் நாடு முழுவதும் ஒரே பொது மொழி இந்தியாவில் இல்லை. அதனால் எல்லா இடங்களிலும் அந்தந்த தாய் மொழி மற்றும் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருந்தால் பயணம் செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும். மற்ற வேலைகள் வேண்டாம். சரண்

பரணீதரன் said...

சரணின் வருகைக்கும் பிநூடதிர்க்கும் நன்றி

புதியவன் said...

ayya sangamithirare hindi theriyavittal evvalau kastum entru neengal gulfil vanthu velai parthal puruiyum, Hindi ellarum padikka vendum

Unknown said...

tamil nadu thanee nadu. hindi theeva ellatha ondu...muthalil tamilai olunga padigaparunga appuram english..... hindi no way...

என் நடை பாதையில்(ராம்) said...

தமிழ்நாட்டில் ரயில்வே துறை செய்ய-வேண்டிய பணிகள் ஏரா-ளம் உள்ளன. இது சரி தான். ஆனால் உங்கள் கருத்தினை நான் ஆட்சேபிக்கிறேன். ஹிந்தி நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியமொழி.

நம்பி said...

என் நடை பாதையில்(ராம்) said..

//ஹிந்தி நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியமொழி. //

உலகில் உள்ள எல்லா மொழிகளும் நாம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய மொழிதான்...கட்டாயமாகத் தெரிந்து கொள்ளவேண்டிய தாய் மொழி, ஆங்கிலம் இரண்டிற்குப் பிறகு அவரவர் விருப்பத்தின்பால் தெரிந்து கொள்ளவேண்டியது. கட்டாயப்படுத்த முடியாது. திணிக்க கூடாது.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]