வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, December 06, 2009

திராவிடர் கழகமும்-வி.பி. சிங்கும்...ஒருவரலாற்றுப்பார்வை


இந்தியச் சமுதாயம் - பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்-படுத்தப்-பட்ட சமுதாயம் என்றென்றும் நினைவில் நிலைத்திருக்குமாறு கொள்ள வேண்டிய மறக்கக் கூடாத மகத்தான பெயர்; - மன்னர் குடும்பத்தில் பிறந்து மக்க-ளோடு, மக்களாக உழவர்களோடு உழவராக வாழ்ந்து உயர்ந்து, சமூக நீதிக்காக - இந்தியத் திருநாட்டின் உயர் பதவியாம் தலைமை அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறிய மாவீரர் வி.பி.சிங்.

அந்த மாவீரர் மறைந்து ஓராண்டு உருண்டோடி விட்டது. அவருக்கு- அவருடைய மறைவிற்கு - மறைந்த 26.10.2008 இல் தலைவர் கலைஞர், தமிழர் தலைவர் வீரமணி ஆகியோர் வீரவணக்கம் செலுத்தினர். அன்று மட்டுமில்லை. அவர் மறைந்த அடுத்த ஆண்டாம் இந்த ஆண்டிலும் வீர வணக்கம்- இனி எதிர்வரும் ஆண்டுகளிலும் வீர வணக்கம் செலுத்துவேன்.

எப்போதெல்லாம் சமூக அநீதி துடைக்கப் பெற்று சமூக நீதி எழுகிறதோ அப்போதெல்லாம் வீர வணக்கம். சமீபத்தில் நடைபெற்ற மருத்துவக் கல்லூரிச் சேர்க்கை-யில், 425 பேரில் 50 பேர் மட்டும் உயர் ஜாதியினர் என்று கேள்விப்படுகையில் நம் பிற்படுத்தப்பட்ட பெற்ற சமூகம் ஏற்றம் பெற்று வருகிறது என்று கேள்விப்-படுகையில், தந்தை பெரியாரை நினைக்கிறோம், பேரறிஞர் அண்ணாவை நினைக்கிறோம், தலைவர் கலைஞரை நினைக்கிறோம், தமிழர் தலைவர் வீரமணி அவர்களை நினைக்கிறோம்.

நம் நெஞ்ச நினைவுகள் எனும் தேரின் உருளைகள் அத்தோடு நின்று விடுவதில்லை. வி.பி.சிங் எனும் மாமனி-தரை_ வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு வழங்கியவர்_- கல்வியிலும் அதைத் தொடர முடியாமல் - அப்பாவி மாணவர்களைத் தூண்டி விட்டு ஆரியம் தடைக் கற்கள் பாவியதை எண்ணு-கையில் வி.பி.சிங்கின் வீர உரைகளை எண்ணுகிறோம்.

கடந்த ஆண்டு வீர வணக்க நாளில் தமிழர் தலை-வர் குறிப்பிட்டதை இங்கே மீண்டும் நினைவலை அடித்துச் சென்றுவிடாமல் வி.பி. சிங்கின் இந்த வீரவணக்கத்தில் சுட்டிக் காட்டுவோம்.

ஆயிரம் முறை பிரதமர் பதவியை இழக்கத் தயார்

இந்தக் காலத்திலே ஒரு சாதாரண பஞ்சாயத்து போர்டு பதவியைக் கூடப் பிறர் இழக்கத் தயாராக இல்லை. ஆனால் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த பொழுது இட ஒதுக்கீட்டுக்காக மண்டல் பரிந்துரையை அமல்படுத்துவேன் என்று அறிவித்ததற்காக ஒரு கொள்கைக்காகத் தம்முடைய பதவியை இழந்தவர் அவர். அது மட்டுமல்ல; அவர் சொன்னார், இந்த மண்டல் கமிசனுக்காக, சமூக நீதித் தத்துவத்திற்காக நான் ஒரு முறை அல்ல, ஆயிரம் முறை பதவியை இழக்கத் தயார் என்று அன்றைக்கு மாபெரும் அறிவிப்பைச் செய்து பதவியைத் துறந்த ஒரு கொள்கை வீரர் அவர்.

ஒரு நல்ல பொருளை வாங்கவேண்டுமா? அதற்கு ஒரு நல்ல விலை கொடுக்க வேண்டும். நான் நல்ல பொருளை வாங்குதற்காக நல்ல விலை கொடுத்-திருக்கிறேன் என்று துணிச்சலுடன் சொன்னார்.

டாக்டர் வி.பி. சிங்கிற்குத் திராவிடர் கழகம் பிடித்தது, தி.மு.கழகம் பிடித்தது, தலைவர் கலைஞர் அவர்களைப் பிடித்தது, தமிழர் தலைவர் வீரமணி அவர்களைப் பிடித்-தது. ஆனால் பிடிக்காத ஒருவராக விளங்கியவர் யார் தெரியுமா? சாட்சாத் ஜெயலலிதா அம்மையார்.

ஏன் துரோகக் கும்பலுக்குத் தலைமை வகித்து - சந்திரசேகர் அவர்களுடன் சேர்ந்து வி.பி.சிங் அரசுக்கு எதிராக வாக்களித்தாரே, அந்தத் துரோகம் - வி.பி.சிங்கிற்கு எதிரான துரோகம் என்பதால், அல்ல, மண்டல் கமிஷனுக்கு எதிரான துரோகம் என்பதால், - நல்லாட்சி புரிந்து பெண்களுக்குப் பரம்பரைச் சொத்தில் உரிமை பெறச் சட்டம் இயற்றிய நம் கலைஞர் அரசைக் கலைக்-கத் துரோகத் துணை போனதால்,- அம்மையார் வேம்-பாகக் கசந்தது அவருக்கு என்று கேள்வியுறுகையில் நாம் அவருக்கு வீர வணக்கம் தவறாமல் செலுத்தத்தான் வேண்டும்.

திராவிடர் கழகம் வி.பி.சிங் ஆற்றிய அரும் பணி-களை அகிலம் அறிந்திடச் செய்ய திராவிடர் கழகத்தின் சார்பிலே அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதற்காக நம்முடைய முதல்வர், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களை அழைத்து, வி.பி.சிங் என்று அவர் தமிழிலேயே கையெழுத்திட்ட படத்தினைத் திறந்து வைத்திடச் செய்தார் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள்.

வி.பி.சிங்கிற்கு வீரவணக்கம் என்று தந்தை பெரியாரைப் பார்க்காமலே தந்தை
பெரியாரின் கொள்கையைத் தம் கொள்கையாக ஏற்ற காரணத்தினால்.மண்டல் கமிஷன் பற்றி நாடாளுமன்றத்திலே வி.பி.சிங் பேசும்போது இட ஒதுக்கீட்டிற்காகப் பாடுபட்ட சமூக நீதித் தலைவர்களான தந்தை பெரியார் அவர்-களையும், அண்ணல் அம்பேத்கர் அவர்களையும், ராம்-மனோகர் லோகியா ஆகியோர்களுடைய பெருமை-களையும், அவர்களுடைய தொண்டுகளையும் பாராட்டிப் பதிவு செய்தார்கள். அப்படிப்பட்ட பெரும் புரட்சியாளர் என்பதால் அவருக்கு வீரவணக்கம்.

1980 இல் காங்கிரசுத் தலைமை அமைச்சரான இந்திரா காந்தியிடத்திலே அறிக்கை அளிக்கப்பட்டது என்றாலும் மண்டல் குழு பரிந்துரைகளை நடை-முறைப்படுத்தும் பணியிலே இறங்காமல் அதை ஓர் ஆண்டு, ஈராண்டு அல்ல பத்து ஆண்டுகள் கிடப்பிலே போட்டு வைத்தார்கள். 1990 ஆம் ஆண்டு வாக்கில் வி.பி.சிங் அவர்கள் மண்டல் குழுவின்பரிந்துரைகளை வெளியிட்டு ஆணை பிறப்பித்து இதை நாடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியபோது எத்தனை கிளர்ச்சிகள் தூண்டுதலால் நடைபெற்றன, எத்தனை பேர் அறியாமையில் தீக்குளித்தார்கள்_- கலைஞர் அவர்கள் கூறியது போல், தீக்குளிக்க வைக்கப்பட்டார்கள். இந்த கிளர்ச்சிகளின் விளைவாகப் பதவியைத் துச்சமாகக் கருதி தூக்கி எறிந்துவிட்டு வெளியேற்றப்பட்ட வி.பி.-சிங்கிற்குச் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்து அவரை வரவேற்று அன்றே வீரவணக்கம் செய்து-விட்டது தலைவர் கலைஞர் தலைமையில் அமைந்த திராவிடர் முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கம்.

தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னது போல் அவர் அதில் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே அது சாதாரணமானது அல்ல. அவர்கள் சென்னைக்கு விமானத்திலே வந்து இறங்கியபோதும் சரி, பிறகு தமிழ்நாடு முழுவதும் அவரோடு கழகத்தவர் இணைந்து தூத்துக்குடி வரையில், கன்னியாகுமரியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிகள் பாராட்டு நிகழ்ச்சிகள் தமிழகத்தின் மூலை முடுக்குகளிளெல்லாம் பட்டிதொட்டி பட்டணக்-கரையெல்லாம் நடத்தியபோது நெகிழ்ந்து போய்விட்டார்.

அதிகாலையில் மூன்று மணிக்குப் பொதுக் கூட்டம் _அதிலே பேசும்போது வி.பி.சிங் அவர்கள் சொன்-னார்கள். மண்டல் கமிஷன் ஆணை பிறப்பிக்கப்பட்டு அதனுடைய விளைவாக நான் பதவியை இழந்தபிறகு என்னோடு இருந்தவர்களை யெல்லாம் திரும்பிப் பார்க்கிறேன். யாரையும் காணவில்லை. ஆனால் என்னோடு இருந்தால் இப்படிப்பட்ட ஆபத்து வரும், ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் என்னோடு இருப்பவர் கருணாநிதி ஒருவர்தான்.

அவர் சொன்னது போல் ஆபத்து வந்தது. ஆனால் அதைப் பற்றிக் கவலை கொள்ளாது மண்டல் கமிஷன்ஆணையைக் கலைஞர் ஆதரித்தார், கலைஞர் அரசு ஆதரித்தது - எங்களுக்குக் கோட்டையோ, கொலு-மண்டபமோ அல்ல - கோலோச்சுவது அல்ல பெரிது. கொள்கைதான் பெரிது என்று அண்ணா வழியிலே அண்ணாவின் அன்புத் தம்பியாம் கலைஞர் அறிவித்தார்.

அண்ணா அவர்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் சொன்னார்கள் - அண்ணாதுரையின் ஆட்சிக்கு ஆபத்து என்று சொல்கிறார்கள். என்னுடைய அரசு நிறை-வேற்றியுள்ள சுயமரியதைத் திருமணம் செல்லும் எனும் சட்டம், தமிழகத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர், இந்தி ஆதிக்கத்தை நுழைய விடாது இருமொழிக் கொள்கை ஆகியவற்றை எந்தக் கொம்பனாலும் என்றும் மாற்ற முடியாது. அண்ணாதுரையின் ஆட்சி போனாலும் அண்ணாதுரை வாழ்வான். எவ்வளவு உறுதியான உயர்ந்த மொழிகள். இந்த மொழிகளின் சாயலைக் கலைஞரிடத்து மேலே கண்டோம். அதையேதான் வி.பி. சிங் அவர்களிடத்தும் கண்டோம்.

கவிஞன் வாக்குப் பொய்க்காது என்பார்கள். நம் தமிழினத் தலைவர் தமிழக முதல்வர் கவிஞர் ஆவார். அது போல் இந்தியத் தலைமை அமைச்சர் வி.பி.சிங்கும் கவிஞர்.அந்தக் கவிஞரை நம் கவிஞர் - முதல்வர், தம் கவிதை வரிகளால் அழகுற மாலை சூட்டி ஆராதிக்கிறார்.



தேடக்கிடைக்காத தெள்ளமுதாய்த்
தேமதுரக் கீத இசையாய்த்
தேன்பாகும் தினைமாவும் இணைந்ததொரு
தெவிட்டாத சுவை விருந்தாய்த்
திக்கற்ற மக்களுக்குத் திசை காட்டும் நிலவொளியாய்
வாய்த்திட்ட நற்பேறு
வாராது வந்த மாமணி வி.பி.சிங்
வகுப்புவாரி விகிதாச்சாரம் - பிற்படுத்தப்பட்டோர்
வாழ்வுக்கு ஒரு வரப்பிரசாதம்

என்று பாடிய கவிஞர் கலைஞர் கூற்று இவை:

ஆட்சி வரும் போகும்! நிலையன்று
அய்யா அண்ணா வகுத்த கொள்கை
போகாது வாழும்! நிலையாக! எனவே
ஆட்சியில் இருப்பினும் இல்லாதிருப்பினும்
தன்மானம் உயிரென மதிப்போம்!
தமிழர் இனமானம் என்றுமே காப்போம்!

வி.பி.சிங் அவர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்திலே பிறந்திருந்தாலும் கூட, அவர் தமிழ் நாட்டை, தமிழ் நாட்டு மக்களைத்தான் நேசித்தார். ஏன்?

வி.பி.சிங்கிற்கு - அவருடைய கொள்கைக்கு இங்கே பெரியாரின் இயக்கமும், பெரியாரின் இயக்க வழி ஆட்சி நடத்தும் கலைஞரும் ஆதரவு. ஏன் என்றால் அவர் இந்த நாட்டில் 80 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட மக்களைக் கைதூக்கி விட வந்த காவலர் என்பதை இந்தியத் திரு-நாட்டிலேயே தமிழ் நாட்டிலே வாழ்ந்த மக்கள்தான் உணர்ந்தனர்.

சிறுநீரகக் கோளாறினால் பத்து ஆண்டுகள் டயாலிசிசில் இருந்த அவருக்கு சிறுநீரகத்தைக் கொடை-யாக அளிக்க முன் வருபவர்கள் உள்ளனரா என்று தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்தபோது நான், நீ என்று போட்டி போட்டுத் திராவிடர் கழகத் தொண்டர்கள் முன் வந்த போது உள்ளபடியே நெகிழ்ந்து போன அவர் தமிழ் மக்களை நேசித்த அவர் மேலும் மேலும் தமிழர் அன்பைத் தம் இதயச் சிறையில் பூட்டிக் கொண்டார்.

கவிஞர் வி.பி.சிங்கின் கவிதை உள்ளத்திற்குக் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், கவிஞர் தலைமை அமைச்சர் வி.பி.சிங்கிற்குக் கவிதை-யால் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வரிகள் இவை:

பெரியாருக்குள்ள சிறப்பு - நேரில்
அறியாதவரையும் ஆட்கொள்வார்
காற்றுக்கு எல்லை ஏது?
பெரியார் கூற்றுக்குத்தான் தேசம் ஏது?
சரியானஎடுத்துக்காட்டு நீயன்றோ?
மன்னர் குடும்பத்தில் மலர்ந்தாய்
மண்குடிசை மக்களிடத்தே குடியிருந்தாய்
உன் சிறுநீரகம் பழுதடைந்து
கருஞ்சட்டைக் கண்மணிகள் ‘நான்’ ‘நீ’ என்று
தான் கொடுக்க முன் வந்தனரே
நீ நெகிழ்ந்து போனாய்; நினைத்தாலும்
நெக்குருகிப் போகின்றோமே
தன் குடும்பத்து இழப்பாகக்
கருஞ்சட்டையெல்லாம் கலங்குகின்றது
நாடே அழுகிறது எங்கள்
நாகம்மை இல்லமும் கதறுகிறது

கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் கவிதை வரிகள் காணும் நாடே அழுகிறது, எங்கள் நாகம்மை இல்லமும் கதறுகிறது என்பதில் ஒரு வரலாற்று உண்மை இருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களை நேசித்த வி.பி.சிங் சிறந்த கவிஞர், சிறந்த ஓவியர். அவர் எழுதிய கவிதை நூலினை - அப்படியே தமிழில் மொழி பெயர்த்து திருச்சி-யில், திராவிடர் கழகம் சார்பில் வெளியிட்டனர்.

அந்நூலின் பெயர்தான் ‘‘ஒரு துளி பூமி ஒரு துளி வானம்’’ அவர் கவிதையில் பகுத்தறிவுக் கருத்து-களும் மிளிர்கின்றன. அந்த நூலின் விற்பனையில் கிடைக்கும் தொகையை நாகம்மையார் சிறுவர் விடுதிக்கு வழங்கியவர் அவர்.

தம்முடைய நூலைச் சென்னைக்கு வந்து கலைஞர் அவர்களுடைய கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து அவரிடம் வழங்கினார்.வி.பி.சிங் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களிடம் காட்டிய பேரன்பும், பெருமரியாதையும், திராவிடர் கழகத்திடமும் அது நடத்தும் கல்வி நிலையங்கள் மீதும், தமிழர் தலைவர் வீரமணி அவர்களிடமும் காட்டிய வற்றாத மதிப்பும், பாசமும் என்றும் மறக்கமுடியாதவை. டில்லி பெரியார் மய்யம் இடிக்கப்பட்டதைக் கேட்டு மருத்-துவமனையில் இருந்த அவர் துடியாய்த் துடித்த-தோடு சென்னையில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில், தந்தை பெரியாரை நேரில் பார்த்திராத, அவருடைய கொள்கையால் மட்டுமே ஈர்க்கப்பட்ட அந்த மாபெரும் தலைவர் இவ்வாறு முழங்கினார். ‘‘நான் அன்று அங்கிருந்திருந்தால் புல்டோசரின் முன்னே நின்று என் உயிரையும் தந்து தடுத்திருப்பேன் என்று கூறியதோடு அமையாமல், இன்றைக்கு டெல்லியிலே முதன்மையான இடத்திலே அமைந்து வடபுலத்திலும் பெரியாரின் நிலைத்த பெருமை கூறும் பெரியார் மய்யம் உருவாக வி.பி.சிங் அப்போதைய தலைமை அமைச்சர் வாஜ்-பேயிடம் பேசிப் பெற்றுத் தந்ததை திராவிடர்கள் மறக்க-முடியுமா?

காலமெல்லாம் ஊழலை ஒழிக்கப் போராடியஅவர் காலமானதையும் ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை என்பதோடு, ஓராண்டு நிறைவு நாளைக் குறித்து ஒரு வரி கூடச் சொல்லாதது, நன்றி மறந்த சிலரின் செயல்கள் என்ற போதிலும், திராவிடர் கழகம் வி.பி.சிங்கிற்கு வீர வணக்கம் செலுத்தியது போற்றப்பெற வேண்டிய ஒன்று.

வி.பி.சிங் மண்டல் கமிஷன் சாதனையாளர் மட்டு-மல்லர். தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழினத் தலைவர் அவர்கள் தம் இரங்கலுரையில் குறிப்பிட்டது போல் வழங்கிய கொடைகள் வரலாற்றுச் சிறப்புடையவை.

கருநாடகத்தில் அவருடைய ஜனதாதளம் ஆட்சியில் இருந்த போதிலும், காவிரி நடுவர் மன்றம் அமைத்-ததையும் நன்றியோடு தமிழகம் நினைவு கூர வேண்டும்.

சென்னை மீனம்பாக்கத்திலுள்ள வெளிநாட்டு விமான தளத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரும், ஏழைப் பங்காளர் காமராஜர் பெயரும் சூட்ட வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். அதனை விழா மேடையிலேயே வி.பி.சிங் சிவப்பு நாடா முறையோ, சாக்குப் போக்கோ சொல்லாமல் அறிவித்தார் என்பது மறக்கக் கூடியதா?

1989 இல் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று 27.1.1989 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பதவிப் பிரமாண உறுதி மொழி எடுத்துக் கொண்ட மாபெரும் விழாவில் வி.பி.சிங் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அன்று மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரி-விக்கும் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் கலந்து வாழ்த்தினார்.

வி.பி.சிங் தலைமை அமைச்சராகப் பதவிப் பொறுப்பை ஏற்றதற்குப் பின்னர், தலைவர் கலைஞரின் அழைப்பின் பேரில் சென்னைக்கு 1990 பிப்ரவரித் திங்கள் வந்தபோது, தமது நிகழ்ச்சி நிரலையே மாற்றி தலைவர் கலைஞரின் இல்லத்திற்கு வந்து தலைவர் கலைஞரைப் பெருமைப்படுத்தினார்.

கொட்டும் மழையிலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் டில்லி சென்று வி.பி.சிங் உட-லுக்குக் கண்ணீர் மல்க மலர் வளையம் வைத்து அவ-ருடைய துணைவியார், மகன்களுக்கு ஆறுதல் கூறித் திரும்பி கழகம் தன் நன்றியறிதலை நன்கு பதிவு செய்தது.

வி.பி.சிங் அவர்களுக்கும், தலைவர் கலைஞர் அவர்களுக்கும் உள்ள தொடர்புகள், உறவுகள், நட்பின் ஆழம் ஆகியன உலகம் அறிந்ததே.

12.12.2008 இல் சென்னை பிட்டி தியாகராயர் கலை அரங்கில் வி.பி.சிங்கின் படத்தைத் திறந்து வைத்து தலைவர் கலைஞர் புகழுரை ஆற்றினார்.

இவ்விழாவிற்குத் தலைமை வகித்து உரையாற்றிய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தம் உரையை நிறைவு செய்தபோது, வி.பி.சிங் அவர்களுக்கு ஒரு நினை-வுச் சின்னம், என்றென்றும் தமிழ்நாட்டு மக்க-ளுடைய நெஞ்சிலே நிலைக்கக் கூடிய சின்னம் அமைத்-திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதற்குப் பதில் அளித்த தலைவர் கலைஞர், ‘‘தந்தை பெரியாரின் வழி நின்று உழைக்கின்ற ஓர் அருமைத் தொண்டர். அவருடைய மாணவர், என்னுடைய நண்பர் என்பதால் மட்டுமல்ல, தந்தை பெரியாருக்கு, அவருடைய கொள்கைகளை, எண்ணங்களை இன்றைக்கும் காப்பாற்றி வருகின்ற அவருடைய உண்மையான வழித்தோன்றல் என்கிற முறையில் இந்த ஆணையை எனக்குப் பிறப்பித்திருக்கின்றார்’’ என்று குறிப்பிட்டார்.

மேலும் தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டது:

 ‘‘இதை நான் இங்கேயே அறிவிப்பது, என்னைப் பொறுத்த வரையில் ஒரு விளம்பரமாகத்தான் ஆகும் என்பதால் அல்ல. நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடன் கலந்து பேசி, அந்த நினைவுச் சின்னம் எப்படி அமையவேண்டும், எங்கே அமைய வேண்டும், எத்தகைய நினைவுச் சின்னமாக அது இருத்தல் வேண்டும் என்பது பற்றி விரைவில் அறி-விப்பேன் என்பதை_- மன்னிக்கவும், விரைவில் அறிவிப்-போம் என்பதை இந்த நிகழ்ச்சியிலேயே நான் கூறிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.’’

கலைஞர் அரசின் கொள்கையே சொல்வதைச் செய்-வோம், செய்வதைச் சொல்வோம் என்பது மட்டுமல்லாது, சொல்லாத பயன்களையும் செய்பவர். அது போல் கலைஞர் அவர்கள் யாருக்கு எதை எப்படி வழங்க வேண்டும் என்பதை உணர்ந்து தெளிந்தவர் என்பதன் பயனாகத்தான் தமிழர் தலைவருக்கு முரசொலியிலிருந்து ‘தந்தை பெரியார் விருது’ வழங்கிச் சிறப்பித்தார்.

எனவே, தலைவர் கலைஞருக்கு யாரும் நினைவூட்ட வேண்டிய நிலையில் இல்லாத மாபெரும் தலைவர் அவர் என்பதை அறிவோம். கலைஞரின் மன உலையில் தயாராகிக் கொண்டிருக்கும் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கிற்குத் தக்க நினைவுச் சின்னம் நிச்சயம் காலம் காலமாக நினைத்துப் போற்றத்தக்கதாக அமையும்.

ஏன் என்றால், எவரையும் விட சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களை உணர்ந்து தெளிந்து உள்ள நினைகளைப் போற்றுபவர். அதனாலேதான், அவரிடம் ஒரு முறை உங்களுக்குப் பிடித்த தலைமை அமைச்சர் யார் என்று வினா தொடுக்கப்பட்ட போது,

இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் அமைதிப் புறா நேருவையோ, உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்று போற்றிய பெண் தலைமை அமைச்சர் இந்திராவையோ, ஜெய்கிசான் என்று முழங்கிய சாஸ்திரியையோ சுட்டிக் காட்டவில்லை. அப்பழுக்கில்லாத மனிதர் சமூக நீதிக் காவலர் என்ற சொற்றொடருக்குப் பொருத்தமானவர், ஜாதிமுறை திறமைக்கு எதிரானது. திறமை வெளிப்-படுவதற்கு உரிய இடத்தை அது சுருக்கி விடுகிறது. இந்த இடத்தை விரிவாக்கும்பொழுது நாடு முழு-மைக்கும் மறைந்துள்ள திறமை வெளிப்படுவதற்கான வாய்ப்பைத் திறந்து விட்டவர்கள் ஆகிறோம். மக்களில் 20 விழுக்காட்டினர் இந்தஅளவுக்கு சாதிக்க முடியும் என்றால் 100 விழுக்காட்டினர் பங்கேற்பதால் உருவாகும் வளர்ச்சியை எண்ணிப் பாருங்கள். இட ஒதுக்கீடு திறமைக்கு எதிரானது அல்ல. திறமையை வெளியில் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சிதான் அது (‘தி இந்து’, 15.7.2006) என்று பெரியார் வழியில் தகுதி, திறமைக்கு விளக்கம் அளித்திட்ட,

‘‘இந்த நாட்டிலே இருக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட மக்களை, சூத்திரன் என்று சொல்லப்படுகின்ற பிற்-படுத்தப்பட்ட மக்களை, வருணம் என்று சொல்லக் கூடிய சாத் என்கிற அமைப்பு அவர்களுடைய உள்ளங்-களிலே விலங்கை மாட்டி, அவர்களை வெறும் எந்திர மனிதர்களாக்கியது. அதனால்தான் தந்தை பெரியார், சுயமரியாதை என்ற ஆணியை, அந்த ஜாதி அமைப்பின் தலையைப் பார்த்து மிகச் சரியாக அடித்தார்கள்’’ என்று உரைத்திட்ட,

‘‘அரசியலிலேயே என்னுடைய தோழர் ராம் விலாஸ் பஸ்வானிடமிருந்து நான் உணர்ச்சியைப் பெறுகிறேன். அதே போல் சமுதாயப் பணியில் நண்பர் வீரமணி அவர்களே, உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன்’’

என்று உரைத்திட்ட, அரசியல் உலகில் பண்பட்ட, மும்பையில் நடந்த கலவரத்தைக் கண்டிக்கும் வகையில் உண்மையாகவே தண்ணீர் கூட அருந்தாமல், சிறுநீரகப் பாதிப்புக்கு ஆளான,

வாரம் இரு முறை ரத்த சுத்திகரிப்பு செய்து கொண்டு அதே நேரத்தில் பொதுத் தொண்டையும் தொய்வின்றி மேற்கொண்டு வந்த,

அன்னை மணியம்மையார் சிலையைத் திறந்து வைத்த,
நடிகவேள் ராதா மன்றத்தைத் திறந்திட்ட,டில்லி பெரியார் மய்யம் இடிக்கப்பட்ட போது எதிர்த்து இடி முழக்கம் செய்திட்ட,மாண்புமிகு வி.பி.சிங்தான் தனக்குப் பிடித்த தலைமை அமைச்சர் என்று ஏழரை கோடி மக்களின் இதய நாயகர் கலைஞர் எடுத்துரைத்தார்.

தாம் போற்றிய, தாம் மதித்துப் போற்றிய, தாம் என்றும் தன் உள்ளத்தின் அடித்தளத்தில் வைத்தி-ருக்கும் மாபெரும் மனிதர் வி.பி. சிங் அவர்களைக் குறித்துப் பெருமை பொங்கக் கூறுவதை எடுத்துக் கூறி, வி.பி.சிங் அவர்களுக்கு நாமும் நம் வீர வணக்கத்தைச் செலுத்துவோம்.

சமூக நீதிக் காவலர் என்ற இந்தச் சொற்றொடர் இந்தியாவிலே இன்றைக்கு ஒருவருக்குப் பொருந்தும் என்றால், அவர் வி.பி.சிங் அவர்கள்தான். நான் அதைச் செல்வதற்குக் காரணம், அவர் ஒரு சாதாரண மனிதராக இருந்து பதவிப் பொறுப்புகளிலே இல்லாதவராக இருந்து, தன்னுடைய தியாகத்தால், உழைப்-பால், ஆற்றலால், சமூக நீதிக்குப் பாடுபட்டிருப்பாரே யானால், அது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல; போற்றப்-படத்தக்க ஒன்றாக இருக்கலாம். ஆனால் இது ஆச்-சரியப்படத்தக்கதும், போற்றப்படத் தக்கதுமான இரண்டு காரணங்களுக்காக அவருக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.      - தலைவர் கலைஞர் உரை 12.12.2008

-விடுதலை(06.12.2009) தொகுப்பு முனைவர் ந.க.மங்களமுருகேசன்.

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]