வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, December 23, 2009

சிவனைப் பூஜிப்-பதன் மூலம் கடன் தொல்லை நீங்கும்...

நாளிதழ்கள் வாரந்-தோறும் ஆன்மிகச் சிறப்பு இதழ்களைப் போட்டி போட்டுக்-கொண்டு வெளியிடுகின்-றன. பண்டிகைகள் வந்து-விட்டால் அவற்றின் பெய-ராலும் சிறப்பிதழ்கள் வந்துவிடும். புத்தாண்டு பிறக்கிறதா? உடனே “புத்-தாண்டுப் பலன்கள்’’ என்ற தலைப்பில் தலை-காட்டும்.


இதில் என்ன வேடிக்கை என்றால், ஆங்-கிலப் புத்-தாண்டுக்கும்கூட இது-போன்ற சிறப்பிதழ்கள்; ஆங்கிலப் புத்தாண்டுக்-கும், இந்து மத ராசி பலன்-களுக்கும் என்ன சம்பந்தம்?

சங்கராச்சாரியார்கள்கூட சொல்லிப் பார்த்தார்கள் ஆங்கிலப் புத்தாண்டுக்-காக கோயில் நடையைத் திறக்காதீர்கள்; இரவில் இந்து மதக் கோயில்-களைத் திறந்து வைப்பது, சாஸ்திர விரோதம் -_ ஆகம விரோதம் என்று அவர்கள் கத்திப் பார்த்து என்ன பிரயோசனம்?

கோயில் நடைகள் திறக்கப்பட்டன; பட்டர்-களுக்கும், பார்ப்பனர்-களுக்-கும் வருவாய்க் குவியல்; சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடுவார்-களா, என்ன?

ஆன்மிக இதழில் கை சரக்குகளை அவிழ்த்துக் கொட்டுபவர்கள் சர்வ ஜாக்-கிரதையாக சில வார்த்-தைகளைப் பயன்படுத்து-வதைக் கவனிக்கவேண்-டும்.

மக்கள் நம்பிக்கை; .... என்பது புராணம்; ..... என்பது அய்திகம்; .... என்பது புராணம் என்று கழுவும் மீனில் நழுவும் மீனாக வார்த்தைகளைக் கையாளுவார்கள்.

இவர்கள் எழுதுவதை நம்பி பக்தர்கள் கடை-பிடித்து காரியம் ஆகா-விட்டால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாமே _ அல்-லது ‘நீ வெளியிட்டதை நம்பித் தானே இந்தக் காரியத்தில் இறங்கினேன்; கடைசியில் காரியம் கெட்டுப் போய்விட்டதே’ என்று பக்தர்கள் சண்-டைக்கு வந்தால் என்ன செய்-வது? அதற்காகத்தான் இத்தகைய ஏமாற்று வார்த்தைகள்.

ஒரு மாலை ஏட்டின் புத்தாண்டு சிறப்பிதழில் ஒரு செய்தி:

கடன் வாங்கி திரும்-பக் கொடுக்க முடியாமல் தவிப்பவர்களுக்கென்றே தஞ்சை மாவட்டம் திருச்-சேறையில் சாரபரமேஸ்-வர் கோயில் உள்ளது. இவர் ரண ருண ஈஸ்வரர் என்று அழைக்கப்படு-கிறார். ரணம் என்றால் நோய், ருணம் என்றால் கடன் என்று பொருள்.

இந்த சிவனைப் பூஜிப்-பதன் மூலம் கடன் தொல்லை நீங்கும் என்-பது பக்தர்களின் நம்-பிக்கை.

இப்படியாக எழுது-கிறது அந்த இதழ்.

கடன் தொல்லை எப்படி நீங்கும்? கடன் கொடுத்தவன் கேட்கமாட்-டானா? அல்லது கடன் வாங்கியவன் திருப்பிச் செலுத்த அவன் பீரோவுக்-குள் நோட்டுக் கத்தை-களை கொண்டு வந்து சிவன் திணித்துவிட்டுப் போய்விடுவாரா? (சிவன், கள்ள நோட்டு அடிப்-பாரோ!).

இன்னொரு வகையில் பார்த்தால், துணிந்து கடனை வாங்கிக்கொண்டு, திருப்பிச் செலுத்த வேண்-டியதில்லை; சிவன் பார்த்-துக் கொள்வான் என்கிற மோசடி எண்ணத்தைத்-தானே இந்த ஆன்மிகம் கற்றுக் கொடுக்கிறது? மக்-களை மோசடி செய்யத் தூண்டும் இதுபோன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்படவேண்டாமா?

- விடுதலை (23.12.09) மயிலாடன்

3 comments:

கோவி.கண்ணன் said...

//கடன் தொல்லை எப்படி நீங்கும்? கடன் கொடுத்தவன் கேட்கமாட்-டானா? அல்லது கடன் வாங்கியவன் திருப்பிச் செலுத்த அவன் பீரோவுக்-குள் நோட்டுக் கத்தை-களை கொண்டு வந்து சிவன் திணித்துவிட்டுப் போய்விடுவாரா? (சிவன், கள்ள நோட்டு அடிப்-பாரோ!).//

:) சிவலோகப் பதவி கிடைக்கும் என்று சொல்கிறார்கள் போல

R.Subramanian@R.S.Mani said...

Due to CHANDRA GRAGANAMthe coils on this New Year day (09-10) expected not to open the temple in the midnight =12 - on the new year day.
Suppamani

துளசி கோபால் said...

சுத்தமாத் தலையைக் கழட்டி வச்சுறணும் இந்த அட்டகாசங்களையெல்லாம் பார்த்தும் கேட்டும்(-:

என்னமோ போங்க.

ஜனங்கதான் எத்தைத் தின்னால் பித்தம் தெளியுமுன்னு கிடக்குதுங்களே!!!!!

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]