வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, December 19, 2009

காஞ்சிபுரத்து அர்ச்சகர்...சிரியாய் சிரிக்கிறது


காஞ்சிபுரத்து அர்ச்சகர்

கதைதான்
சிரியாய் சிரிக்கிறது

அவனின்றி ஓர்
அணுவும் அசையாது என்றான்
தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான் என்றான்
கொட்டிக் கொடு கோயிலுக்கு
என்றான்
கட்டிக்கொடு கோயிலை
என்றான்
கட்டி விடு பொட்டுக்கு
பொட்டைப்பிள்ளையை என்றான்
உங்கள் வீட்டுப்பிள்ளைகளை
கொஞ்ச நாள்
பொட்டுக்கட்ட அனுப்புங்கடா
என்றவுடன் அம்முறையே
வேண்டாம் என்றான்
கடவுள் பற்றி
எத்தனை கதை சென்னான்
பார்ப்பான்
உன்னிடமும்
என்னிடமும்
ஒன்றுமில்லை என்பதை
அவனே நிரூபித்து விட்டானே
அனைத்து சாதியினரும்
அர்ச்சகர் ஆனால்
கோவிலின் புனிதம்
கெட்டுவிடுமாம்
கோவிலுக்கு வரும்
அனைவருக்கும்
புண்ணியம் கிட்டாதாம்
பெண்கள் அர்ச்சகர்
ஆனால் தீட்டால்
தீட்டாகி விடுமாம்
எத்தனை கதை சென்னான்?
உன்னிடமும்
என்னிடமும்
ஒன்றுமில்லை என்பதை
அவனே நிரூபித்து விட்டானே


தமிழில் பாடினால்
தீட்டாம்! கோயிலை
எட்டு நாள் கழுவணுமாம்
தமிழன் தெட்டால்
தீட்டாம் ! கோயிலை
பத்து நாள் கழுவணுமாம்
இவ்வளவு நாறியபின்பும்
கோயிலைக் கழுவிவிடத்
தோணலையே !
கேட்டாரே கவிஞர்
‘‘விடுதலை’’யில்!


கடவுளுக்கு முன்னால்
காமம் செய்தால்
சொர்க்கத்துக்கு நேரடி
டிக்கெட்டாம்
எல்லாம் அர்ச்சகர்
தேவநாதன் உபயம்
பிரச்சார உத்தியாய்
மதம் பரப்ப
மற்றவரும்
பயன்படுத்தலாம்


ஒரு பார்ப்பான்
செய்யும் தவறுக்கு
அர்ச்சகர்
அனைவரையும் பழிப்பதா ?
பால்குடி பாலகர்கள்போல்
அப்பாவியாய் சில
பார்ப்பனர்கள் எழுதுகிறார்கள் !
அனைத்து ஜாதியினரும்
அர்ச்சகர் ஆகலாம் என்று
எத்தனை பார்ப்பனர்கள்
எழுதுகோலை எடுத்தார்கள் ?
எந்தெந்த பார்ப்பன ஏடுகள்
எழுதின ?
புனிதம் கெட்டுவிடும்
புராணம்தானே
பத்திரிகைகள்முதல்
நீதிமன்றம்வரை
எங்கள் கேள்வி


தெள்ளத்தெளிவாய்!
அனைத்தும் அறிந்தவன்
ஆண்டவன் என்றாயே?
அர்ச்சகன்
தேவநாதன் செய்த
செயலெல்லாம்
ஆண்டவனுக்குத்
தெரிந்து நடந்ததா?
தெரிந்தே நடந்தால்
தண்டனை அர்ச்சகருக்கு
மட்டும்தானா?
அல்லது
அங்கு அமைதியாய்
இருந்து நீலப்படம் பார்த்த
ஆண்டவனுக்கும்
சேர்த்துத்தானா ?


தெரியாமல் நடந்தது
என்றால்
அவனின்றி
ஓர் அணுவும் அசையாதென்பது
பொய்தானே?
தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான்
என்பது பொய்தானே?
பார்ப்பனர்கள்
தீர்மானம் போடலாமா?
அவனின்றி அசையுமென்று
நாங்கள் சொல்லிவைத்தவை
அனைத்தும்
அபத்தக் குப்பைகள்
என்று!

வா.நேரு எழுதியது விடுதலை ஞாயிறு மலர் 19.12.09

3 comments:

muthukumar said...

i didn't under stand ur people. is he only person in the world who is being arrested in this related cases. he is one of the clupert that all.

As veramani and groups karunanithi and family
jayalalitha in your group.

human are same across. if the person from so called upper caste done something like this u people will shut otherwise u people will mouth and other parts closed.

First off all u people start treating the people equally and them come to others.

non-sense..

சங்கமித்திரன் said...

why we shut those guys..... other pepole are not telling we are upper class and we only doing god's pujas. pramaniyam only telling we are upper class people. we born from head. so that...those people are shut by us....still u want to improve about sex sense..if you get then u shouldn't tell non-sense word

நம்பி said...

muthukumar said...

// i didn't under stand ur people. is he only person in the world who is being arrested in this related cases.// he is one of the clupert that all.

இல்லை யார்? வேண்டுமானாலும் இந்த பிரச்சாரம் பண்ணலாம்...நீயும் லிங்கத்தின் முன்னாடி போய் வேட்டியைத் தூக்கி காட்டி ஆட்டி ஆட்டி காமிக்கலாம்..காமித்து படம் பிடித்து வைத்து பகுத்தறிவு பிரச்சரமாக காட்டலாம்...நான் காட்டினேன் ஆனால் லிங்கம் ஒன்றும் செய்யவில்லை என்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யலாம்.

மூட மக்கள் நாட்டிற்கு நல்லது செய்தாலும் பெரிய விஷயமாக பேசுகிறார்களே! என்று எண்ணத் தோன்றுகிறது.

சரிதான் என்ன பண்ணுவது? சட்டம் உனக்கு எதிராக இருக்கிறதே...மனுதர்மம் இங்கு வேலைக்கு ஆகாதே...!

இன்னும் வேறு பார்ப்பனர்களுடையது இருந்தாலும் நீயே பதிவிட்டு பிரச்சாரம் பண்ணலாம்.

இணையத்திலும் நிறைய இருக்கிறது..இனிமேல் நிறைய பதிவேற்றுவார்கள். எல்லா கைப்பேசியின் மூலமும் படம் பிடித்து கடவுள் ஒன்றும் செய்யமாட்டார் பாருங்கள்! பாருங்கள்! என்று பார்ப்பனர்களே பிரச்சாரம் பண்ணுவார்கள் காணலாம்.

ஒருவகையில் பாராட்டத்தான் தோன்றுகிறது. ஆனால் நீ பாராட்டவேண்டும்! நீயே பாராட்ட மாட்டேன் என்கிறாய்! ஆதங்கப்படுகிறாய்!

இந்த பக்கம் காட்டுகத்தலாய் கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை..! கடவுளை கற்பித்தவன் முட்டாள்!...என்று கூறி சண்டைக்கு ஆளானார்கள்...

அசல்ட்டா!...வேட்டியைத்தூக்கி டெமோ பண்ணி நிருபிச்ச பெருமை உங்களைத்தான் சாரும்!

ஆனால் இந்த அரசாங்கத்துக்கு அறிவே இல்லை! பாராட்டுகின்ற விஷயத்தை போய் கைது செய்து ஆரவாரம் செய்கிறார்கள்? என்ற ஆதங்கம் புரிகிறது...என்ன செய்வது? இவர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை?

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]