வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, December 26, 2009

“அறுத்தெறி பூணூலை’’ என்று அண்டம் நடுங்க ஆவேசக் குரல் கொடுக்க வேண்டாமா ஆரியப் புத்திரர்கள்?




பாரதீய ஜனதாவா? அது தேசியக் கட்சி! அதன் பார்வை ஏகப் பாரதம்! மாநிலங்கள் என்ற அமைப்பே கூடத் தேவையில்லை; கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை ஒரே தேசம்! பாகிஸ்தான் _ பர்மாவைக்கூட இணைத்து அகண்ட பாரதத்தை உருவாக்குவதுதான் அவர்-களின் கட்டுக்கடங்கா ஆர்வம்.


காந்தியாரைப் படுகொலை செய்ததால் தூக்கலிடப்பட்ட நாதுராம் கோட்சே-யின் அஸ்திகூட கலசத்தில் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருவது எதற்காக? பாகிஸ்தானை இந்தியாவோடு இணைத்த பிறகு அந்தப் பகுதி சிந்து நதியில் அதனைக் கரைப்பதற்குத்தானாம்.

இப்படியெல்லாம் பேசுவதற்கு இவர்களுக்கு அருகதையுண்டா? இந்தியா ஒரே நாடு _ ஏகப் பாரதம் என்று பிலாக்கணம் பாடும் இவர்கள் இந்திய மக்கள் அனைவரும் ஒரு தாயின் மக்கள் என்று நெஞ்சார நினைப்பவர்கள்தானா?

பாரதத் தாயின் புதல்வர்கள் என்றால் இங்கு எல்லோரும் சகோதர சகோதரிகள்தானே! சரிசமம்தானே! அப்படியென்றால் எங்கிருந்து வந்து குதித்தது வர்ணாசிரமம் என்னும் நாகம் _ ஜாதி என்னும் புற்றுநோய்?

பதிலளிக்க வேண்டாமா _ பாரதீய ஜனதாவையும் ஆர்.எஸ்.எஸையும் ஆட்டிப் படைக்கும் பார்ப்பனர்கள்?

“அறுத்தெறி பூணூலை’’ என்று அண்டம் நடுங்க ஆவேசக் குரல் கொடுக்க வேண்டாமா ஆரியப் புத்திரர்கள்?

சங்கராச்சாரி மடத்தில் ஒரு சாம்பானை நியமிப்போம் என்று சங்கநாதம் செய்ய வேண்டாமா?

இதிகாசங்களை எரி தீயில்! வாட்டிட எழுச்சி கொள்ள வேண்டியதுதானே? மனுதர்மம் ஒழிப்பு மாநாடு கூட்ட வேண்டியதுதானே?

ஏன் செய்யவில்லை? ஏன் எழுத-வில்லை?
ஏன் குரல் கொடுக்கவில்லை?

ஏடுகள் என்ன இவர்களுக்குப் பஞ்சமா? ஊடகங்களும் இவர்களின் கையிருப்புதானே? உண்டு இல்லை என்று ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதானே?

ஏன் தயக்கம்? ஏன் மயக்கம்? இன்னும் புரியவில்லையா? எல்லாம் வெளி வேடம்தான் _ ஊராரை ஏமாற்றத்தான். உள்ளுக்குள். ஓங்கி ஒலிக்கும் நாதம் எல்லாம் “நாங்கள் பிராமணாள்!’’ ‘‘நீங்கள் எல்லாம் சூத்திராள்!’’ என்பதுதான்.

ஆர்.எஸ்.எஸை உருவாக்கிய-வர்கள் அத்தனைப் பேரும் பார்ப்-பனர்களே! மூத்த குரு-நாதரான பாலகங்காதர திலகரே பச்சைப் பார்ப்பனர்தான்

பிளேக் நோயை ஒழிக்க அதற்கு மூலாதாரமான எலியை வேட்டையாடினால், எலி விநாயகரின் வாகனம் என்று கூறி எலியை ஒழித்த வெள்-ளைக்-கார அதிகாரிகளை சுட்டுக் கொல்லத் தூண்டிய சூட்சும மனிதர் அவர்.

இவ்வளவு எழுச்சிக்குப் பிறகும்கூட.. இன்றளவில்கூட நிலைமை என்ன?
பாரதீய ஜனதா கட்சியின் புதிய தலைவர் நிதின் கட்காரி யார்? ஒரு பார்ப்பனர்.
நாடாளுமன்றத்தில் மக்கள-வை-யின் தலைவர் சுஷ்மா சுவராஜ் யார்? ஒரு பார்ப்பனர்.
நாடாளுமன்றத்தின் மாநிலங்-களவைத் தலைவர் அருண்-ஜேட்லி யார்? ஒரு பார்ப்பனர்.
பாரதீய ஜனதா என்ற கட்சியின் மூன்று முக்கிய பதவி-களின் மும்மூர்த்திகள் மூவரும் பார்ப்பனர்களே!
ஆர்.எஸ்.எஸின் அகில இந்-தியத் தலைவர் மோகன் பகவத் யார்? ஒரு பார்ப்பனர்
விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவர் அசோக் சிங்கால் யார்? ஒரு பார்ப்பனர்.
அகில இந்திய விசுவ ஹிந்து பரிஷத்தின் செயல் தலைவர் வேதாந்தம் யார்?

ஒரு பார்ப்பனர் இப்படி சகலமும் பார்ப்பனமயமாகித் திமிரிக் கொண்டிருக்கும் ஒரு கட்சிதான் பாரதீய ஜனதாவும் அதன் பரிவாரங்களும்.

இந்த அமைப்புகளில் உள்ள பார்ப்பனர் அல்லாதார் குறிப்பாக “சூத்திரர்கள்” “பஞ்சமர்கள்’ இப் பொழுது இவர்களை அடையாளம் காணாவிட்டால் வேறு எப்போது?

கிலுகிலுப்பையைக் குழந்தைகளி டம் காட்டி கழுத்துச் சங்கிலியைக் களவாடும் திருடர்களுக்கும், சிறுபான்மையினர்களைக் காட்டி, இந்தியாவில் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை வருணா சிரமத்தின் பெய ரால் ஆதிக்கம் செலுத்தும் இந்தப் பார்ப்பனர்களுக்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு?

பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் ஒன்றும் தந்தை பெரியாரின் சீடரல்லர் _ ‘வகுப்புத் துவேஷியும்’’ அல்லர். அவரே என்ன கூறுகிறார்? ‘‘முன்னாள் ஜனசங்கம் மற்றும் பா.ஜ.க.வின் அனைத்துக் கூட்டங் களையும் கருத்தரங்குகளையும், பேச்சுகளையும் கடந்த நாற்பதாண்டு காலமாக நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இந்த இந்துக்களின் கட்சி ஏன் எப்போதுமே தீண்டாமைபற்றிய கேள்வியை எழுப்பியதேயில்லை? இந்துக்களிடையே உள் ஜாதி நடைமுறை மிகவும் அடக்குமுறை நிறைந்த ஒன்றாக உள்ளது. பா.ஜ.க.வைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ். பார்ப் பனர்களின் அமைப்பு என்பது இதன் காரணங்களுள் ஒன்றாக இருக்க லாம்.’’

(‘டெக்கான் கிரானிக்கல்’ 4.2.2008)

உமாபாரதி யார்? பாரதீய ஜனதா கட்சியின் அனல் பறக்கும் பேச்சாளர் ஆயிற்றே! கட்சியின் இளைஞர் பிரிவின் செயலாளராகவும் இருந்தவர் ஆயிற்றே! பாபர் மசூதி இடிப்பில் துள்-ளிக் குதித்து ஆனந்த வெள்ளத்தில் நீந்தியவராயிற்றே!

பா.ஜ.க.,வைப்பற்றி அவரைவிட அதிகம் தெரிந்தவர் வேறு யாராவது இருக்க முடியுமா? அவர் என்ன சொல்லுகிறார்?

“பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தங்கள் கொள்கைகளில் நிலையற்றவர் களாக இருக்கிறார்கள். கட்சியின் தலைமை மேல்ஜாதி பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்குள்ளேயே இருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த தலைவர்கள் கட்சியில் புறக்கணிக்கப்படுகிறார்கள். தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சரியாக வழங் கப்படவில்லை. வேறுபாட்டுக் கண்ணோட் டத்தோடு பார்ப்பனர் மற்றும் முன்னேறிய ஜாதியினருக்கே அதிக வாய்ப்புகள் தரப்படுகின்றன. இது மிகப் பெரிய சமூக அநீதியாகும். தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமா?’’

(பா.ஜ.க.வின் இளைஞர் பிரிவு செயலாளராக விருந்த உமாபாரதி மத்தியப் பிரதேசம் போபால் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி -_25.4.1996) இதற்கு என்ன பதில்?

கல்யாண்சிங் யார்?

பாரதீய ஜனதா கட்சி யின் சார்பில் உத்தரப்பிரதேச மாநில முதல் அமைச்சராக யிருந்தவர், பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அம்மாநில முதல் அமைச் சரும் அவர்தான். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கள் பட்டியலிலும் இடம் பெற்றவர். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

அவர் என்ன சொல்லுகிறார்?

‘‘பாபர் மசூதிக்கு ஒன்றும் ஆகாது என என்னிடம் பா.ஜ.க., தலைவர்கள் தெரி வித்தனர். அயோத்தியில் அடையாள கரசேவை மட்டுமே செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள். இருவர் எழுத்துப் பூர்வ மாகத் தெரிவித்தனர்.

அவர்களது வாக்குறுதியை நம்பியே மசூதி பாதுகாக்கப்படும் என நானும் உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி அளித் தேன். நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால் என்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்க பா.ஜ.க., தலைவர்கள் இந்த விஷயத்தில் சதி செய்தனர் என்றே தோன்றுகிறது’’

(‘தினமணி’ 3.5.2009)

இதற்கு என்ன பதில்?

பங்காரு லட்சுமணன் யார்?

பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலை-வ-ராக கொண்டு வரப்-பட்ட தாழ்த்-தப்-பட்ட சமூ-கத்தைச் சேர்ந்-தவர் அதுகூட பா.ஜ.க. என்பது பார்ப்பனர் கட்சி என்ற முத்திரை விழுந்-துள்ளதே _ அதைத் திசை திருப்புவ-தற்கான _ ஒரு தற்காலிக ஏற்பாடுதான் _ அவரை வெளியேற்றிய விதமும் அத்தன்-மையைச் சேர்ந்ததுதான் _ அவர் ஒரு முறை (1.4.2002) சொன்ன கருத்து மிகவும் முக்கியமானது.

“அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் பி.ஜே.பி. மரண அடி வாங்கியதற்குக் காரணம் _ தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்-பட்டவர்கள், சிறுபான்மையினர்-களைக் கட்சி அலட்சியப்படுத்தியது-தான்’’ என்று கூறினாரே _ இதற்கு என்ன பதில்?

கிருபாநிதி யார்?

தமிழ்நாட்டு மண்ணில் தந்தை பெரியார் ஊன்றியிருக்கும் உணர்-வின் அலைகளிலிருந்து தப்பிக்க, பா.ஜக.. என்ன செய்தது? ஒரு தாழ்த்-தப்பட்டவரை தமிழகத் தலைவராக நியமித்தது. அவர்தான் டாக்டர் கிருபாநிதி.

அவரின் கண்ணீர்ப் பேட்டி இதோ:

“தேசிய கவுன்சில் கூட்டம் இந்தூரில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காகச் சென்றேன். இல. கணேசனும் வந்திருந்தார். கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, நான் தங்கியிருந்த தாஜ் ரெசிடென்-சியல் ஹோட்டலுக்குக் கிளம்ப வேண்டும். காருக்காக போர்டிகோ அருகில் காத்திருந்தேன்.

அப்போது அங்கு இல. கணேசன் அவசரமாக வந்தார். ‘நீ என்ன பெரிய ஆளா? உன்னை ஒழிச்சுடுவேன்’ என்றெல்லாம் பேசியவர் ஜாதி ரீதியாகவும் என்னை இழிவாகப் பேசினார்.

நான் அவர்கிட்ட பொறுமையா பேசுங்கன்னு சொன்னேன். ஆனா அவர் எதையும் கேட்கிற நிலையில் இல்லை. நிதானம் இழந்து காணப்-பட்டார். யார்கிட்டப் பேசறோம், என்ன பேசறோம்னு உணருகிற நிலை-மையில் இல்லை. ஒரு கட்டத்துல என் கையைப் பிடிச்சு முறுக்கி அடிச்சுட்டார்.

கேள்வி: இல. கணேசன் உங்கள்மீது அவ்வளவு கோபமாவதற்கு என்ன காரணம்?

டாக்டர் கிருபாநிதி: என் பதவிக் காலம் முடியப் போகிறது. அதற்குமுன் கட்சி கணக்கு வழக்குகளை ஒப்படைக்கணும். அதனால் கணக்கு வழக்குகளை ஆராய்ந்தபோது பல இழுப்படிகள் நடந்திருப்பது புரிந்தது. மாநிலச் செயலாளராக இருந்த இல. கணேசன் தேசிய செயலாளராக ஆன பிறகும் மாநிலக் கட்சி நிதியைக் கையாண்டு கொண்டிருந்தார். இதை நான் தடுத்ததால்தான் ஆத்திரப்பட்டு என்னை அடிக்கும் அளவுக்குப் போய்விட்டார்.

கேள்வி: நீங்கள் தமிழகத் தலை-வராகப் பதவியேற்றதிலிருந்தே பலவித அவமானங்களை சந்தித்து வந்தீர்கள் அல்லவா?

டாக்டர் கிருபாநிதி: ஆமாம் _ தலை-வர் என்கிற முறையில் கட்சிப் பணிகளைக் கவனிக்க எனக்கு அடிப்படை வசதிகள்கூட செஞ்சுத்-தரலை ஃபேக்ஸ் மிஷினை நானே சொந்தமா வாங்கினேன். டைப் அடிக்கணும் என்றால் வெளியில் கொடுத்து அடிச்சுக்கிட்டேன். இப்படிக் கட்சிப் பணிகளுக்கு சொந்த பணத்தைச் செலவழித்தேன். கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்திலேயே (கமலாலயம்) ரங்கநாதன் மற்றும் ராஜசிம்மன் ஆகிய இருவரும்தான் ஆட்டிப் படைக்கிறார்கள்.

இவர்களை இயக்கும் சூத்திரதாரி இல. கணேசன் தான். கமலாலயத்துக்கு வரும் கட்சிக்காரர்கள் தலைவர் இருக்கிறாரா என்று கேட்டால் சரியான பதில்கூட சொல்ல மாட்-டார்கள். எவ்வளவோ அவமானங்கள்.

கேள்வி: உங்கள் கட்சியில் சாதீய உணர்வுகள் தலை விரித்து ஆடுகிறது என்று பலகாலமாக செய்திகள் வருகின்றன. நீங்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதால் தான் அவமானப்படுத்துகிறார்களா?

டாக்டர் கிருபாநிதி: (சற்று மவுனத்திற்குப்பிறகு) நடக்கிறதை எல்லாம் பார்க்கும்போது அப்படித்-தான் நினைக்க வேண்டியிருக்கு. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருத்தன் தலைமைப் பதவியில் இருக்கிறதை அவங்களால் ஜீரணிக்க முடியலை. (“தமிழா தமிழா’’ ஏப்ரல் 2003). இந்தத் தகவல்களை கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கும் டாக்-டர் கிருபாகரன் எழுதியிருப்ப-தாகவும் இதே பேட்டியில் வெளி-யாகியுள்ளது.

இதற்கு என்ன பதில்?

‘‘தமிழ்நாட்டில் கூட மிக வெளிப்-படையாக நடந்த ஒரு தகவல். அப்பொழுது மாநில பா.ஜ.க., தலை-வராக இருந்தவர் கே. நாராயணராவ். மாநில பா.ஜ.க., செயலாளராகவும், மாநில விவசாயி அணித் தலைவ-ராகவும் தேசியப் பொதுக்குழு உறுப்-பினராகவும் இருந்தவர் பொ. நந்த-குமார், கோவை மாவட்ட பா.ஜ.க., இளை-ஞரணி தலைவராகயிருந்தவர் ந. லட்சுமணகுமார் இருவரும் பா.ஜ.க.வை விட்டு விலகியபோது மாநிலத் தலைவர் நாராயணராவுக்-கும், அகில இந்திய பா.ஜ.க,. தலைவர் ஏ.பி. வாஜ்பேயியிக்கும் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விவரம் மிக முக்கியமானது. ‘‘தமிழக பாரதீய ஜனதா தொடர்ந்து மற்றொரு பிரா-மணர் சங்கமாக செயல்படுவதை எதிர்த்து வெளியேறுகிறோம்’’ என்று எழுதினார்களே _ இதற்கு என்ன பதில்? பாரதீய ஜனதா கட்சித் தலை-வர்-களின் பார்ப்பன மனப்பாங்கு எத்தகையது? தாழ்த்தப்பட்ட மக்கள்மீது அவர்களின் பார்வை எந்தத் தரத்தைச் சார்ந்தது?

முரளி மனோகர் ஜோஷி, பவுதி-கத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்-தானே _ அக்கட்சியின் தலைவராக அலங்கரித்தவர்தானே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தவர்தானே!

படிப்பும் பதவியும் வளர்ந்த அளவுக்குப் பார்ப்பனர்களின் மனப்-பாங்கு பக்குவப்பட்ட ஒன்றுதானா? வளர்ச்சியை நோக்கிப் பயணம் செய்வதுதானா?

ஒரு தகவல்: நாடாளுமன்ற மக்கள-வைத் தலைவர் தேர்தல், காங்கிர-சுக்கும், பா.ஜ.க.வுக்கும் தொடக்கத்தில் உடன்பாடு எட்டப்படாத நிலை; பா.ஜ.க., சார்பில் வேட்பாளர் நிறுத்-தப்-படுவார் என்ற அறிவிப்பும் வெளிவந்தது. இந்த நிலையில் முரளி மனோகர் ஜோஷி அளித்த பேட்டி ஒன்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்-டில் வெளிவந்தும் உள்ளது (11.7.1991)

Nobody can take the BJP as a pariah and then expect it to support you’’

“பாரதீய ஜனதாவை தங்கள் வசதிக்கேற்ப யாரும் பயன்படுத்திக் கொள்ள முடியாது. பா.ஜ.க.வை நீங்கள் ஒரு பறையனைப் போல் நடத்தக் கூடாது. இதைச் செய்து-விட்டு நாங்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது’’ என்று ‘மெத்தப் படித்த மேதாவி’ ஒருவர் -_ பேசுகிறார் என்-றால் அவர் படித்த படிப்பும்கூட அவ-ரின் பார்ப்பனத் திமிருக்கு முன் மண்-டியிடுகிறது என்றுதானே பொருள்!

ஜோஷியின் இந்தச் சொல் பிரயோகத்தை எதிர்த்து பல அமைப்புகள் குடியரசு தலைவருக்குத் தந்திகளைக்கூட அனுப்பின என்-பதும் மறக்காமல் சுட்டிக் காட்டப்-பட வேண்டிய ஒன்றாகும்.

இந்தப் பார்ப்பன ஜனதா (பா.ஜ.க.,) கட்சியில் பாதந்தாங்கிக் கிடக்கும் பஞ்சமர்களே விழிமின்!

அடியாள்களாக சேவகம் செய்யும் பிற்படுத்தப்பட்டோரே விழிமின்! விழிமின்!

-விடுதலை (26.12.09) ஞாயிறு மலர்

9 comments:

Muthukumara Rajan said...

In easy can be applicable for most of the parties.

DK is ignoring the Bharmin. is there any barmin in DK higher position. then what is means. to abolish caste is the treat all of them equal. only reason they born in upper caste u can stop them.

whatever caste or religion it may all of them treat equally.

as per current situvation tamilnadu moving towards so called upper class suppression.it is also UNtouchablity.

பரணீதரன் said...

பகுத்தறிவாளர் கழகத்தில் பார்ப்பானைச் சேர்க்காதீர் என்று கூறுவது ஏன்?


http://paraneetharan-myweb.blogspot.com/2009/12/blog-post_4324.html

Muthukumara Rajan said...

நாத்திகர்கள் இவ்வளவு மூடர்களாக இருபேர்கள் என நான் என்ன வில்லை

ஜீவாவின் உரை வாசிக்கவும்

http://muthukumararajan-subramaniam.blogspot.com/search/label/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE



இந்த நாட்டில் பறையனாக, சூத்தி-ரனாக இருப்பதைவிட துலுக்-கன் நாட்டில் வாழ்வதில் பெரு-மைப்படுகின்றேன். கிறிஸ்தவன் நாட்டில் வாழ்வதில் பெரு-மைப்-படுகிறேன்.
சுதந்திரநாடு என்றால் அங்கு பார்ப்பான், பறையன், சூத்திரன், மற்ற எந்த ஜாதி-யுமே இருக்கக் கூடாது. மனி-தன் தான் இருக்க வேண்டும். எப்படிக் கடவுளும், மதமும், கோயிலும் நம்மை மடையர்-களாக்கி இழிமக்-களாக்கி வைத்திருக்கிறதோ, அது போன்று தான் சுய-ராஜ்யம், சுதந்திரம், ஜனநாயகம் என்பது நம்மை இழிவு-படுத்தி வைத்தி-ருக்கிறது. இதனை நான் சாதா-ரணமாகச் சொல்லவில்லை, 50 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டே சொல்கிறேன். உங்களிடம் மட்டும் சொல்ல-வில்லை. காந்தி, நேரு ஆகிய-வர்களிடமே சொல்லி இருக்-கின்றேன். அவர்கள் உணர ஆரம்பித்தது மிக மிகப் பின்னாலேயே ஆகும்.

----
பறையனாக, சூத்தி-ரனாக இருப்பதைவிட சுன்னியாக, ஷியவகவோ protestentgavo,RC
ஆகவோ இருக்க பெருமை படும் குட்டம் தான தாங்கள். இந்திய விடுதலை அடைத்த நேரத்தில் பார்பனர் கால்களை கழுவுவதை விட வெள்ளையர் கால்களை கழுவுவது மல் என சொன்ன பகுததறிவு மக்கள் அல்லவே


கடவுள், மதம், ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் என்பவை யாவும் மனிதனை மடையன் ஆக்கு-வ-தற்காகப் பார்ப்பானால் கற்-பிக்கப்பட்டவையே ஆகும். கடவுள் நம்பிக்கையுள்ள முஸ்-லிம்கள் 50 கோடிக்கு மேலிருக்-கிறார்கள், அவர்கள் கடவு-ளுக்கு உருவ-மில்லை. அதே-போல் 100 கோடி கிறிஸ்த-வர்கள் இருக்கிறார்கள். அவர்-கள் கடவுளுக்கும் உருவ-மில்லை; அவர்கள் கடவுளை வணங்குவது நம்மைப்போல் காட்டு-மிராண்டித்தனமாக அல்ல. மனத்தால் நினைப்ப-தோடு சரி. நம்மைப் போல் பூசை- படையல்கள் செய்வது கிடையாது.

---
கிருத்துவ மதத்தில் உருவ வழிபாடு உண்டு .
-----
கடவுள், மதம், ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் என்பவை யாவும் மனிதனை மடையன் ஆக்கு-வ-தற்காகப் பார்ப்பானால் கற்-பிக்கப்பட்டவையே ஆகும்
-----
எல்லா மதத்திலும் இந்த நம்பிக்கை உண்டு
------
கடவுளை ஒழித்த கோயில்-களை, இடித்த பார்ப்பனர்-களை (கடவுள் பிரசாரகர்களை, மதப் பிரசாரகர்களை) எல்லாம் வெட்டி வீழ்த்திய நாடுகள் பல இருக்கின்றன. அந்நாடுகளில் எல்லா மனிதர்களும் சம அந்தஸ்துள்ளவர்களாக இருக்கி-றார்கள். பணக்காரன் ஏழை என்கின்ற பேதமில்லை.

முதலாளி, தொழிலாளி என்கின்ற பேதமில்லை. அந்த நாட்டில் போலீஸ் அய்.ஜி.க்குள்ள மதிப்பு சாதாரண கான்ஸ்-டேபிளுக்கும் உண்டு. கலக்டெரும், பியூனும் ஒரே மதிப்புடையவர்கள் என்கின்ற மதிப்போடு வாழ்-கின்றார்கள். எந்தப் பேதமும் அவர்களுக்-கிடையில் இல்லை. இவ்வள-வுக்கும் காரணம் அந்த நாட்-டில் கடவுள் இல்லாததா-லேயே ஆகும்
----
எந்த நாடு
-----
நம் நாட்டில் பேதங்களிருப்-பதற்குக் காரணம் கட-வுளே-யாகும். இந்தப் பேதங்கள் ஒழிய இன்று கடவுளைச் செருப்பால் அடிக்கின்றோம். இவற்றில் மாறவில்லை என்றால் நாளைக்கு மனிதர்களையே கொல்ல நேரலாம். சமுதாய மாற்றம் என்றால் கொலை, கொள்ளை, தீவைப்பு, நாசம் யாவும் நடந்து தான் தீரும்.

----
நல்ல பகுததறிவு
----

இன்றைக்கு இருப்பதை விட மோசமான நிலை 2500 ஆண்டுகளுக்கு மேலிருந்து அப்போது ஒரே ஒரு மனிதன் சித்தார்த்தன் என்பவன் தோன்றி, தற்போது நாம் செய்வது போன்று அறிவுப் பிரசாரம் செய்த மக்கள் யாவ-ரையும் மாற்றிவிட்டான். வேதங்களை எல்லாம் நெருப்-பில் இட்டுக் கொளுத்தினான். அவன் கொள்கை நாடு முழு-வதும் பரவி மக்கள் எல்லாம் அவன் கொள்-கையைப் பின்-பற்ற ஆரம்பித்தனர். பார்ப்ப-னர்களை எல்லாம் கொலை செய்ய ஆரம்பித்தனர்.

இதைக் கண்டு பார்ப்பான் புத்த கொள்கையை ஏற்றவன் போல் நடித்து, அதில் சேர்ந்து பிரசாரகனாகி புத்த மடங்-களை எல்லாம் கொளுத்தி-னார்கள். பவுத்த கொள்கை-களை ஏற்றவர்களை எல்லாம் நாசம் செய்து அக்கொள்கை-களைத் தடுத்து விட்டனர். அதனால் தான் இன்றைக்குப் பார்ப்பானை பகுத்தறிவாளர் கழகத்தில் சேர்க்கக் கூடாது என்று சொல்கிறேன். அவனைச் சேர்த்-தால் புத்த இயக்கத்தில் சேர்ந்து புத்த கொள்கையைப் பரவவிடாமல் தடுத்தது போல் தடுத்து விடுவான். எனவே நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பார்ப்பானை நுழையவிடவே கூடாது.
-----
ஆதாரம

பரணீதரன் said...

தோழர் முத்துகுமார்,

எல்லா மதத்திலும் இருக்கு அனால் இந்து மதத்தில் தான் அதிகமாக அதை பயன்படுத்தி பலன் அனுபவ்கீரர்கள். இந்து என்று சொல்லிகொள்ளும் பார்பனர்கள் மற்ற மதத்தை விட ஒரு படி மேல போய் இந்த அகிரமன்களை உருவாகியுள்ளனர். உலகில் மற்ற மதங்கள் அழியும் போது எல்லாம் நீங்கள் சொல்லும் மதமும் அழியும். முதலில் கொசு எங்கு அதிகமா இருக்கோ அங்கு சாக்கடை சுத்தமா ஆக்குன அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மற்ற சாகடைய சுதபடுதாலம்.

எந்த மதத்தையும் ஆதரித்தவர் அல்ல பெரியார்.......அவர் நோக்கம் மக்கள் விடுதலை http://paraneetharan-myweb.blogspot.com/2009/12/blog-post_26.ஹ்த்ம்ல்
அடிமை தனம் ஒழிக்கப்பட ........என்னவெல்லாம் வலியோ அதில் ஒன்று தான் நீங்கள் குருபிட்டு உள்ளது. மதங்கள் ஒழிக்கப்படும் போது எல்லா மதம் ஒழிக்கப்படும்...பட்டே ஆகவேண்டும்.

கபிலன் said...

சாதி வெறி பிடித்தவர்கள் யார் என்பது இந்தத் தலைப்பின் மூலம் அம்பலமாகியுள்ளது.

பரணீதரன் said...

நிச்சயமாக கபிலன் யார் வருணாசிரம பேதம் பேசி சூத்திரனாகி வைத்துள்ளனர் என்பது விளங்கும். மேலும் அந்தன பார்பானின் பின்னூட்டம் இனூம் மிக சிறந்த எடுத்துகாட்டு.....பார்பனன் எவ்வாறு ஒழுக்கம் இல்லாமல் வருணாசிரம் பேசி சூத்திரன் ஆக்குகிறான் என்று.

Muthukumara Rajan said...

நாத்திகர்கள் ஒரு குழப்பவாதிகள் என்பது மற்றும் ஒரு முறை நிருபணம் ஆகி விட்டது

கடவுள், மதம், ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் என்பவை யாவும் மனிதனை மடையன் ஆக்கு-வ-தற்காகப் பார்ப்பானால் கற்-பிக்கப்பட்டவையே ஆகும்
------------
இதில் ஹிந்து மதத்தில் அதிகமாக இருப்பதாக சொல்லவில்லை. இந்து மதில் மட்டும் இருப்பதாக சொல்ல பட்டு உள்ளது. எல்லா மதத்தின் அடிப்படைய கடவுள், மதம், ஆத்மா, மோட்சம், நரகம் தான்
------------


எந்த மதத்தையும் ஆதரித்தவர் அல்ல பெரியார்.......அவர் நோக்கம் மக்கள் விடுதலை http://paraneetharan-myweb.blogspot.com/2009/12/blog-post_26.ஹ்த்ம்ல்
அடிமை தனம் ஒழிக்கப்பட ........என்னவெல்லாம் வலியோ அதில் ஒன்று தான் நீங்கள் குருபிட்டு உள்ளது. மதங்கள் ஒழிக்கப்படும் போது எல்லா மதம் ஒழிக்கப்படும்...பட்டே ஆகவேண்டும்.

------
இந்த நாட்டில் பறையனாக, சூத்தி-ரனாக இருப்பதைவிட துலுக்-கன் நாட்டில் வாழ்வதில் பெரு-மைப்படுகின்றேன். கிறிஸ்தவன் நாட்டில் வாழ்வதில் பெரு-மைப்-படுகிறேன்.
இதற்கு பொருள் என்ன
------

Unknown said...

"""""""இந்த நாட்டில் பறையனாக, சூத்தி-ரனாக இருப்பதைவிட துலுக்-கன் நாட்டில் வாழ்வதில் பெரு-மைப்படுகின்றேன். கிறிஸ்தவன் நாட்டில் வாழ்வதில் பெரு-மைப்-படுகிறேன்.
இதற்கு பொருள் என்ன """""""""""""
இதற்கு பொருள் கிறித்தவராகவோ (அ) முஸ்லிம்களாகவோ மாறுவதில் தவரில்லையென்று அர்த்தம்.
ஏன் அந்த மதங்களில் மட்டும் தீண்டாமைகள் கிடையாதா? என்று நீங்கள் கேட்கலாம்.
தீண்டாமைகள் இருக்கிறது.அவையெல்லாம் இடையில் ஏற்ப்பட்டவைதான்.ஆனால் அவர்களுடைய வேதத்தில் எழுதப்பட்டிருக்கின்றதா என்றால் இல்லை.
எந்தளவுக்கு அவர்களிடத்தில் தீண்டாமை இருக்கிறதென்றால் கொள்கையளவில்தான்.
சன்னி முஸ்லிம்கள் ஷியா முஸ்லிம் பள்ளிவாசலுக்கு சென்று தொழ அனுமதியுண்டு.சன்னி முஸ்லிம் பள்ளிவாசலில் ஷியா முஸ்லிம்களுக்கு தொழ அன்மதியுண்டு.
அதேபோல ரோமன் கத்தோலிக்க சர்ச்சில் புராடஸ்டண்டு கிறித்தவர்கள் வழிபட அனுமதியுண்டு.புராடஸ்டண்டு சர்ச்சில் கத்தோலிக்கர்கள் வழிபட அனுமதியுண்டு.
ஆனால் கோவிலில் தலித்துகள் வழிபட அனுமதியுண்டா (அ) கோயிலுக்குள்தான் அனுமதிக்கிறார்களா?
அன்புடன்
ஸ்ரீநிவாஸ்

Muthukumara Rajan said...

ஸ்ரீநிவாஸ் :
-------------------
"""""""இந்த நாட்டில் பறையனாக, சூத்தி-ரனாக இருப்பதைவிட துலுக்-கன் நாட்டில் வாழ்வதில் பெரு-மைப்படுகின்றேன். கிறிஸ்தவன் நாட்டில் வாழ்வதில் பெரு-மைப்-படுகிறேன்.
இதற்கு பொருள் என்ன """""""""""""
இதற்கு பொருள் கிறித்தவராகவோ (அ) முஸ்லிம்களாகவோ மாறுவதில் தவரில்லையென்று அர்த்தம்.
-------------------
கிறித்தவ (அ) இஸ்லாமிய மதங்களை ஆதரிப்பது தன்ன இதன் பொருள்
இந்தியாவில் நாத்திகம் என்பது இந்து மதத்தை மட்டும் எதிரிப்பது

நல்லதொரு பகுத்தறிவு



ஏன் அந்த மதங்களில் மட்டும் தீண்டாமைகள் கிடையாதா? என்று நீங்கள் கேட்கலாம்.
தீண்டாமைகள் இருக்கிறது.அவையெல்லாம் இடையில் ஏற்ப்பட்டவைதான்.ஆனால் அவர்களுடைய வேதத்தில் எழுதப்பட்டிருக்கின்றதா என்றால் இல்லை.
------------------------
தீண்டாமை இந்து மத வேதங்களில் இல்லை . எங்க பிராமணன் புத்தகத்தையோ தொலைகாச்சி தொடரையோ பார்க்கவும்
------------------------


எந்தளவுக்கு அவர்களிடத்தில் தீண்டாமை இருக்கிறதென்றால் கொள்கையளவில்தான்.
சன்னி முஸ்லிம்கள் ஷியா முஸ்லிம் பள்ளிவாசலுக்கு சென்று தொழ அனுமதியுண்டு.சன்னி முஸ்லிம் பள்ளிவாசலில் ஷியா முஸ்லிம்களுக்கு தொழ அன்மதியுண்டு.
அதேபோல ரோமன் கத்தோலிக்க சர்ச்சில் புராடஸ்டண்டு கிறித்தவர்கள் வழிபட அனுமதியுண்டு.புராடஸ்டண்டு சர்ச்சில் கத்தோலிக்கர்கள் வழிபட அனுமதியுண்டு.
ஆனால் கோவிலில் தலித்துகள் வழிபட அனுமதியுண்டா (அ) கோயிலுக்குள்தான் அனுமதிக்கிறார்களா?



------------------------
ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்கள் மற்றும் புராடஸ்டண்டு கிறித்தவர்கள் வழிபடுமுறைகள் வேறு .
அதனால் ஒருவர் ஆலயத்துக்கு மாற்றுவர் செல்ல மாட்டார். ( Ireland a country seperated two part(Northern Ireland(UK - Protestent) and Republic of Ireland - RC) due to this. )
------------------------

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]