பல்கலைக்கழக மானியக் குழு இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று கூறியிருக்-கிறது என்றாலும், அண்ணா பல்கலைக்-கழகத்தில் அதனைப் பின்பற்றப் போவதில்லை என்றும் அப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் கூறியுள்ளது, அதிர்ச்சி தரக்கூடியதாகும்.
அதுவும் அண்ணாவின் பெயரால் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், சமூகநீதிக்குச் சாவுமணியா? என்ற கேள்வி இப்பொழுது எழுந்திருக்கிறது.
எல்லாப் பிரிவுகளிலும் இட ஒதுக்கீடு உண்டு; முனைவர் பட்டத்திற்கு மட்டும் கிடை-யாது என்று சொல்லுவது எந்த அடிப்படை-யில்? அந்தப் பகுதி மட்டும் நெய்யில் பொரிக்கப்பட்டுள்ளதா?
மத்திய அரசுக்கு உட்பட்ட கல்வி நிறு-வனங்களில்கூட (அய்.அய்.டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ் போன்றவற்றில்) இட ஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது; மத்திய அரசு புதிய சட்டமே இயற்றியிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட-வர்களுக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு ஆண்-டுக்கு 9 விழுக்காடு வீதம் மூன்று ஆண்டு-களில் நிறைவேற்றப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அத்தகையதோர் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் கொள்கை இட ஒதுக்கீட்டுப் பிரச்-சினையில் என்பதை நன்கு தெரிந்தவர்தான் அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர். இருந்தும் இப்படி ஓர் அறிவிப்பு என்பது கண்-டிக்கத்தக்கதாகும்.
முனைவர் பட்டம் பெற தாழ்த்தப்-பட்ட-வர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் தகுதியற்றவர்கள் என்று முடிவுக்கு வந்துவிட்டாரா, அப்-பல்கலைக்கழகத் துணைவேந்தர்?
இட ஒதுக்கீட்டில் தகுதி, திறமை போய்-விடும் என்று ஒரு கூட்டம் ஒரு பக்கத்தில் கூக்குரல் போட்டுக் கொண்டிருக்கிறது. அந்தக் குரலையெல்லாம் புறக்கணித்துவிட்டு, இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதால் என்ன தகுதி, திறமை போய்விட்டது?
இன்றைக்குப் பிரபல மருத்துவர்களாக, பொறியாளர்களாக, நிருவாகிகளாக, விஞ்-ஞானிகளாகப் பலரும் இட ஒதுக்கீடு பெற்ற-வர்கள் மத்தியிலிருந்து முகிழ்த்துக் கிளம்ப-வில்லையா? வாய்ப்புக் கொடுக்காமலேயே கதவடைத்து-விட்டு, தகுதி, திறமைபற்றி மதிப்பிடலாமா? ஓர் ஆராய்ச்சி நிறுவனம் ஏன் இத்தகைய ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை?
கரண்ட் சயின்ஸ் என்னும் இதழில் கீழ்க்-கண்ட புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.
சிறந்த அறிவியலாளர் விருது வழங்கப்-பட்டதில் மேற்கு வங்காளத்தில் உள்ள 32 பேர்-களில் 26 பேர் கல்கத்தா நகரத்தைச் சேர்ந்த-வர்கள் என்றும், தமிழகத்தில் உள்ள 41 பேர்களில் 10 பேர்கள் மட்டுமே சென்-னையைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்-பிடப்பட்டுள்ளது. புறநகர்ப் பகுதிகளில் மேற்கு வங்கத்தில் 19 விழுக்காட்டினரும், தமிழ்நாட்-டில் 75 விழுக்காட்டினரும் விருது பெற்றுள்-ள-னர் என்ற தகவலையும் அந்த இதழ் தெரி-வித்துள்ளது.
இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள தமிழ்-நாட்டின் நிலையையும், இட ஒதுக்கீடு அளிக்-கப்படாத மேற்கு வங்க நிலையையும் ஒப்-பிட்டுப் பார்த்தால் இட ஒதுக்கீட்டின் தாக்கமும், செல்வாக்கும் எத்தகையது என்பதை இதன்மூலம் எளிதிற் புரிந்துகொள்ளலாம்.
பல்கலைக்கழக மானியக் குழு அறி-வித்திருந்தும், அதனைப் பின்பற்றப் போவ-தில்லை என்று அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் அறிவித்திருப்பது முறை-யானது-தானா? இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்கள் தலையிடுவார் என்று எதிர்பார்க்-கிறோம். சமூகநீதி, இட ஒதுக்கீடு பிரச்சினையில் அத்துபடியானவர் அவர் என்பதால், இந்தக் கோரிக்கையை
அவர் முன் வைக்கிறோம். --விடுதலை தலையங்கம் 3.12.2009
No comments:
Post a Comment