வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, December 16, 2009

பார்ப்பான் தந்திரம் சும்மாவா.........

மார்கழி மாதம் இன்று பிறந்ததையொட்டி பார்ப்பன ஏடுகளும், தமிழர்கள் நடத்தும் _ மூட-நம்பிக்கையை மூலதனமாக்கிப் பிழைக்கும் ஏடுகளும், ஊடகங்களும் வழக்கம்போல் மக்களை ஏய்க்க, மூடநம்பிக்கைச் சேற்றில் தள்ளத் தயாராகிவிட்டனர்!


ஆண்டாள் அருளிய திருப்பாவையிலிருந்து,

‘‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்...’’ என்று பாட்டு போட்டு, ‘மார்கழி வழிபாடு’ என்று தலைப்பிட்டு அன்றாட வியாபாரம் செய்கின்றவர்களுக்கு இரண்டு கேள்விகள்:

‘மார்கழி மாதம் பீடை மாதம்’, ‘திருமணம், வீடு குடிபோதல் (கிரகப்பிரவேசம்)’ முதலிய ‘‘சுப-காரியங்கள்’’ அம்மாதம் முழுவதிலும் நடைபெறவே கூடாது என்று கூறுவது இதே பக்தகோடிகள் _ மதவாதிகள்தான்.

இவை இரண்டில் எதை நம்புகிறீர்கள்?  பக்த பஜனையாளர்களே பதில் கூறுங்கள்.
அது மட்டுமா?

திரு. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், ஆண்டாள் என்று ஒரு பக்தை இருக்கவே இல்லை; அது முற்றிலும் கற்பனைப் பாத்திரம் என்று குறிப்பிட்டுள்ளாரே _ அதுபற்றி புலவர்களே, பக்தர்களே! உங்கள் பதில் என்ன?

- ‘சர்ச்லைட்’  விடுதலை 16.12.2009
ஒருவேளை இந்த மாதத்தில்தான் பார்பனர்கள் தங்களுக்கு திருமணம், வீடு குடிபோதல் போன்ற காரியங்களை எளிதாக செயிதுகொல்வர்கள் போலும். தமிழர்களை  இதுமாரி ஒரு பொய்யை சொல்லி ஏதும் செய்ய விடாமல் தடுத்துவிட்டு பார்பன புத்தியோடு தந்திரமாக மிக குறைந்த செலவில் திருமண மண்டபங்களை பிடித்து போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், தங்கள் காரியங்களை எளிதாக நிறைவேற்றிகொள்கிறார்கள். இது போலவே வீடு கட்ட இலுப்பை மரத்தை பயன்படுத்தாதீர்கள் அது ஆகாது வீட்டுக்கு என்று கூறிவிட்டு அவர்கள் வீட்டில் இலுப்பை மரத்தால் ஆனா உத்திரம் மற்ற அனைத்தும் செயிது இருப்பார்கள். பார்பான் தந்திரம் சும்மாவா.........

6 comments:

passerby said...

நான் ஒரு பக்த பஜனையாளன்.

இரண்டில் எது சரி?

முதலே சரி.

மார்கழி மாதம் is akin to Sabbath day for Christian. Sabbath should be used in acts that are spiritual like prayers, attending masses in chruches etc.

இதைப்போலவே, மார்கழி மாதம் should be spent in solemnity in acts of spirit. Prayers, meditations, singing bhajans, attending upanyaasams and the like.

எனவே, இம்மாதத்தில் தன் மனத்தை இறைநினை செயல்களிலிருந்து விலக்கயியலும் தூண்டல்களிலிருந்து தள்ளிப்போகவேண்டும் என, நீங்கள் நகையாடும், பக்த பஜனையாளன் நினக்கிறான்.

என்வே திருமணம் போன்ற சடங்குகளைத் தவிர்க்கவேண்டியதாயிருக்கிறது. கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் தவிர்க்கப்படவேண்டும். தேர்வுக்கு படிக்கும்காலங்களில் சினிமா, பொழுதுபோக்கு போன்றவை தவிர்க்கப்படுகிறதல்லவா? அதைப்போல.

ஆண்டாளின் மார்கழி நோன்பு ஆதிகாலத்து தமிழர் வழக்கமான அம்மானை நோன்பிலிருந்து உருவெடுத்த பாவை விளையாட்டிலிருந்து வந்தது என்பர் தமிழறிஞர்கள். (இவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டுவது என கடன். தமிழறிஞர்கள் திருப்பாவையையும் திருப்பள்ளியெழுச்சியையும், பிள்ளைத்தமிழையும் ஆழ்வார்கள் உயிரூட்டியதாக மகிழ்ச்சியுடன் பகர்வர்)

இன்னும் நிறைய செய்திகள் இப்பாவை நோன்பின் அடிப்படையில் உள. ஒன்று மட்டும் சொல்லி அமர்கிறேன். அஃதாவது, இது ஒரு பழந்தமிழர் போற்றும் ‘கலவி’ வழக்குமாகும் என்பர் வைணவ அறிஞர்கள்.

passerby said...

இராசாசியை நீங்கள் உய்ரத்தூக்கிப்பிடித்து சாட்சிக்காக அழைப்பது போல வைணவர்கள் கொள்வதில்லை. அவர் ஒரு பொது ஜனத்தில் ஒருவர் எங்களுக்கு. அவரின் வேட்டல் தெய்வம் கண்ணன். அவ்வள்வே.

ஆண்டாள் என்று ஒருவர் இல்லை எனவும், பெரியாழ்வாரே ஒரு பெண்பாவனையாக திருப்பாவை எழுதினார் என்றும் இராஜாஜி சொல்வதற்கு முன்னரே சிலர் சொன்னதுண்டு.

எங்கும் இருகருத்துகள் உள. அவரவர் விருப்பம். நீங்கள் ஏன் ஒரு பக்கக் கருத்தை திணிக்கப்பார்க்கிறீகள். இராச்சாசியைச் சாட்சிக்கழைத்து கற்றறிந்த நண்பரே?

பரணீதரன் said...

/*இவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டுவது என கடன். தமிழறிஞர்கள் திருப்பாவையையும் திருப்பள்ளியெழுச்சியையும், பிள்ளைத்தமிழையும் ஆழ்வார்கள் உயிரூட்டியதாக மகிழ்ச்சியுடன் பகர்வர்*/

தோழர் கள்ளபிரான் அவர்களே,

அந்தக் காலத்தில் ஊசி முனையில் நின்றும் ஒற்றைக் காலில் நின்றும் பற்பல விதமாக அகோரத் தவம் செய்த முனிவர்கள் அனைவரும் ஆண்டவனைப் பார்த்து எதைக் கேட்டார்கள்? மற்ற ஆழ்வார்களும் சரி, நாயன்மார்களும் சரி கடவுளிடம் எதைக் கோரினார்கள்.

மக்கள் வாழவேண்டும், உலகம் உருப்படவேண்டும், வறுமை ஒழியவேண்டும், உலகத்தில் உண்மை தழைக்கவேண்டும் என எந்த முனிவராவது எந்த பக்தனாவது, எந்த நாயன்மாராவது கேட்டிருக்கிறார்களா? இல்லையே! பொது நன்மைக்காகக் கடவுளை வரம்கேட்ட பக்தர்களை யாராவது காட்ட முடியுமா? ஒருவரும் கிடைக்கமாட்டார்கள்.

வைகுந்த பதவியும், சிவலோக வாசத்தையும் தங்களுக்காகக் கேட்ட அந்த முனிவர்களையும் அவர்கள் பாடிய பாடல்களை அழைப்பதும், பாடுவதும் பொருத்தமற்றது....

பக்தி உங்கள் அறிவை செயல்படவிடமால் தடுக்கிறது. கொஞ்சம் சிந்தியுங்கள்........புத்தி வந்தால் பக்தி போய்விடும்

passerby said...

நன்றி

Jawahar said...

//ஒருவேளை இந்த மாதத்தில்தான் பார்பனர்கள் தங்களுக்கு திருமணம், வீடு குடிபோதல் போன்ற காரியங்களை எளிதாக செயிதுகொல்வர்கள் போலும். தமிழர்களை இதுமாரி ஒரு பொய்யை சொல்லி ஏதும் செய்ய விடாமல் தடுத்துவிட்டு பார்பன புத்தியோடு தந்திரமாக மிக குறைந்த செலவில் திருமண மண்டபங்களை பிடித்து போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், தங்கள் காரியங்களை எளிதாக நிறைவேற்றிகொள்கிறார்கள். இது போலவே வீடு கட்ட இலுப்பை மரத்தை பயன்படுத்தாதீர்கள் அது ஆகாது வீட்டுக்கு என்று கூறிவிட்டு அவர்கள் வீட்டில் இலுப்பை மரத்தால் ஆனா உத்திரம் மற்ற அனைத்தும் செயிது இருப்பார்கள். பார்பான் தந்திரம் சும்மாவா......... //

அடாடாடா... பின்னால் ஜோதி தெரிகிறது! கண்ணெல்லாம் கூசுது. என்ன ஆராய்ச்சி, என்ன ஆராய்ச்சி!

http://kgjawarlal.wordpress.com

பரணீதரன் said...

ஜவகர் அவர்களே அராய்ச்சி என்பதை கண்டு பிடித்த உங்கள் அறிவு எவளவு பெரியது ......மெச்சுகிறேன்..........

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]