வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, January 26, 2010

கேக்கிறவன் கேணப்பயலா!

கதையளப்பு என்ற ஒரு சொற்றொடர் உண்டு. அது மற்றவற்றில் உள்ளதை விட கடவுள், மதம், பக்தி விட-யங்களில் மிக அதிகமாகவே உண்டு.


கேக்கிறவன் கேணப்-பயலா இருந்தா எருமை-மாடுகூட ஏரோப்பிளான் ஓட்டுவேன் என்று சொல்லு-மாம்.

சேலம் ஏற்காடு முக்கிய சாலையில், கலைக்-கல்லூரி-யருகே அடர்ந்த மரங்கள் உள்ள பகுதியில் முனியப்-பன் என்ற கோயில் ஒன்று இருக்கிறதாம். 16 வயதுள்ள ஒரு சிறுவன் சாமி கும்பிடச் சென்றானாம். அப்பொழுது அவன் முதுகில் ஏதோ ஒன்று விழுந்ததாம் _ அத-னைத் தட்டி விட்டானாம். அது பாம்பு போன்ற உருவத்தில் மரக்கட்டையாம்.

அவ்வளவுதான் சேதி நாலாத் திசைகளிலும் பரவியது. நம் பெண்களைக் கேட்கவேண்டுமா? சாமி ஆட ஆரம்பித்துவிட்டன-ராம். கிடாவெட்டிப் பூஜை-யாம். மரக்கட்டைக்கு மஞ்சள் தடவி, குங்குமப் பொட்டு வைத்து, பூஜைகள் நடக்க ஆரம்பமாகி விட்-டன-வாம்.

நம் பத்திரிகையாளர்-களுக்கு ஒரு தீனி கிடைத்து-விட்டதே _ சும்மா விடுவார்-களா? அந்தச் செய்திக்கு கை வைத்து, கால் வைத்து, மூக்கு வைத்து இறக்கை-களையும் கட்டிவிட்டனர்.

ஒரு பக்தர் சொல்லு-கிறார், நம்பவும் முடிய-வில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை; என்றாலும் கும்பிட்டு வைப்போமே என்று ஒரு கும்பிடு போட்டு வந்தாராம்.

அடேயப்பா, கடவுளைப்-பற்றி ஆன்மிகவாதிகள் எப்படியெல்லாம் உருகு-வார்கள் தெரியுமா? அவர் அரூபி_ கண்ணுக்குத் தெரி-யாதவர்; வேண்டுதல் வேண்-டாமை என்பதெல்லாம் கிடையவே கிடையாது என்று அப்படியே எண்-சாண் உடம்பை ஒரு சாணாகச் சுருக்கி நெக்குருக மெல்லிய சன்னமான குர-லில் உபந்நியாசம் செய்வார்-கள். அதற்கு முரணாக இது போன்ற சேதிகள் வரும்-போதோ கப்_சிப்பென்று அய்ம்பொறிகளையும் மூடிக்கொள்வார்கள்.

திருப்பதி கோயில் கர்ப்பக் கிரகத்திலே ஒரு பாம்பு நுழைந்தது _ உடனே அது பிராமணன் வடிவில் தோன்றியது (பாம்புக்கும், பிராமண விஷத்துக்கும் உள்ள ஒற்றுமையை இந்த இடத்தில் கவனித்துக் கொள்ளவும்).

நான் கலியுகத்தில் அவதாரம் எடுத்து அதர்மத்தை அழிப்பேன் என்று சொல்லி மறைந்ததாம். இதனைத் துண்டு அறிக்கை-யாகத் தயாரித்து நூறு பேருக்குக் கொடுத்தால் அய்ஸ்வர்யம் பொங்கி வழியுமாம். திருப்பதி தேவஸ்-தானத்துக்கே எழுதிக் கேட்ட-போது, அதெல்லாம் வெறும்-புரளி என்று அதிகாரப்பூர்வ-மாக சொல்லிவிட்டார்கள். இதே கதையை மேல்மருவத்-தூர் கோயிலிலும் நடந்ததாக அடுத்து அவிழ்த்துவிட்-டார்கள். அவர்களும் பிறகு மறுத்துவிட்டனர். அதன்பின் மேல்மலையனூர் கோயி-லிலும் இதே வேலையைச் செய்தனர்.

ஒரு கூட்டத்துக்கு இதே வேலைதான்.

இந்த புரூடாக்கள் எல்-லாம் இரண்டொரு நாள்-களில் தடபுடலாக விளம்-பரத்திற்கு வந்து, அதன்பின் சத்தம் போடாமல் அமுங்கிப்-போகிறதே ஏன்? சிந்திக்கக் கூடாதா?

- விடுதலை (26.01.10) மயிலாடன்

1 comment:

ஸ்ரீநி said...

/ / / / / / /திருப்பதி கோயில் கர்ப்பக் கிரகத்திலே ஒரு பாம்பு நுழைந்தது _ உடனே அது பிராமணன் வடிவில் தோன்றியது / / / / / / /
/ / / / / / செய்த சாதியின் பெயர் இங்கே இருக்கிறது.
சாமி ஆட ஆரம்பித்துவிட்டன-ராம். கிடாவெட்டிப் பூஜை-யாம். மரக்கட்டைக்கு மஞ்சள் தடவி, குங்குமப் பொட்டு வைத்து, பூஜைகள் நடக்க ஆரம்பமாகி விட்-டன-வாம். / / / / / / இதை செய்த சாதிப் / கூட்டம் / சமுகம் / குழுமம் பெயர் எங்கே

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]