வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, January 01, 2010

இந்து மதத் தத்துவங்கள் படிப்பவனைக் குழப்பும்...

இந்து மதத் தத்துவங்கள் என்பவை-யெல்லாம் படிப்பவனைக் குழப்பும். எதுவும் தெளிவாக இருக்காது. இந்து மதம் மிகவும் ஆழமாக வலியுறுத்தும் ஆத்மா என்பதற்கான விளக்கங்களைப் பார்த்தால் கற்றாழைச் சாற்றை விளக்கெண்ணெயோடு சேர்த்து அதில் கிரீஸ் போட்டுக் கலக்கினாற் போன்று இருக்கும்.


கேண உபநிசத் கூறுவது போல் இதற்குப் பிறப்புமில்லை, இறப்புமில்லை. எங்கிருந்தும் வரவில்லை, வேறு ஒன்-றாக மாறவில்லை. ஆதிக்கும் முதலான ஆத்மா உடல் அழியும்போது கூடவே அழிவதில்லை என்கிறது. செத்துப் போன-வனின் ஆத்மா வேறொன்றின் உடலுக்குள் புகுந்து கொள்கிறது என்கிறார்களே, அப்படியானால் அந்தப் புது ஆளைப் பொறுத்த மட்டில் ஆத்மா எங்கிருந்தோ வந்ததுதானே! இந்த உண்மைக்கு மாறாக, கேணத்தனமாக கேண உபநிசத் கூறுகிறதே! ஆத்மாவிலிருந்து விண்வெளி தோன்றியது. விண்வெளியிலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து புவியும், புவியிலிருந்து செடி இனமும், செடி இனத்தில் இருந்து உணவுப் பொருளும், உணவுப் பொருள்களி-லிருந்து விந்தும், விந்திலிருந்து மானிட இனமும் தோன்றின என்கிறது தைத்ரிய உபநிசத். உலகமும், உயிர்-களும் எவ்வளவு எளிதாகத் தோன்-றின என்பதை விவரித்துவிட்டது பாருங்கள்! உயிர்கள் தோற்றம் பற்றி உலகத்தின் பாதிப் பகுதியை ஆறு ஆண்டுகள் சுற்றி ஆராய்ந்து அறிவித்தார் டார்வின். இவன் சுலபமாக எல்லாம் வானத்திலிருந்து வந்தவை எனக் கூறிவிட்டான்.

அதனால்தான் சார்வாகர்கள் வானத்தை விலக்கி நான்கு தனிமங்கள் மட்டுமே உள்ளன எனக் கூறினரோ?

யாகத்தில் சாதுவான விலங்கு-களைப் பலியாகத் தருவது இந்து மதப் பழக்கம். குதிரை, பசு, காளை, ஆடு போன்றவை மனித குலத்துக்குப் பயன்படும் விலங்குகள். ஆண்டவ-னைத் திருப்தி செய்கிறேன் எனக்-கூறிக் கொண்டு இவற்றை யாக நெருப்பில் வெட்டிப் போட்டு வதக்கிப் பார்ப்பனர்கள் தின்றனர். உயிர்ப் பலி கூடாது என்று தடுத்தவர்களைச் சமாளிப்பதற்கு பார்ப்பனர்கள் சொன்ன சமாதானம் என்னவென்றால், யாகத்தில் பலி கொடுக்கப்பட்ட விலங்குகள் மோட்சம் (சொர்க்கம்) போகின்றன என்-றனர். சொர்க்க லோக வாழ்வு அவ்-வளவு சுலபத்தில் கிடைக்கக்கூடியதா? எவ்வளவோ உழைத்தாலும், தியாகங்-கள் செய்தாலும், இறப்புக்குப் பின் சொர்க்கம் கிடைக்கும் என்பதற்கு உத்-தர-வாதம் இல்லை. நரகம் கிடைத்து-விடலாம்.

ஆனால், யாகத்தில் பலியிடப்படும் விலங்குகளுக்கு உறுதியாகச் சொர்க்க லோகம் கிடைக்கும். அதைத் தடுக்க-லாமோ என்று சமாளித்துச் சாப்பிட்-டனர் பார்ப்பனர்கள்.

உலக வரலாற்றில் மலிந்திருந்த பல மூட நம்பிக்கைகளில் பலி தருவது ஒரு பெரும் மூட நம்பிக்கை ஆகும். செய்துவிட்ட தவறுக்குப் பரிகாரம் பலி தருவது என்று வலியுறுத்தப்பட்டது. நல்ல விளைச்சல் இல்லையா? மன்-னனின் தவறான ஆட்சிதான் கார-ணம், ஆகவே மன்னனை வெட்டிப் பலி கொடு! என்றெல்லாம் நம்பிக்-கைகள் விதைக்கப் பட்டு மன்னர்களே கூட பலியிடப்பட்டனர். அத்தகைய வலிமை புரோகித வர்க்கத்துக்கு உண்டு.

புத்திசாலியான மன்னர்கள் தாங்கள் பலி இடப்படுவதற்குப் பதிலாக வேறு ஆளை நியமனம் செய்து பலி-யிடுவது நடந்துள்ளது. இப்படிப்பட்ட பதிலிகள் பெரும்பாலும் சிறையில் வாடும் போர்க் கைதிகளாகவே இருந்-தனர். சண்டையில் சாகாமல் தப்பிப் பிழைத்தவர்களைப் பலிகடாக்களாக ஆக்கி விட்டனர்.

பலி கொடுக்கப்பட்ட விலங்கு, சொர்க்கம் போகிறது என்பது உண்-மையானால், உன் தந்தையைப் பலி கொடேன், அவர் நிச்சயம் சொர்க்கம் போவார் அல்லவா? என்று கேட்டு மடக்கினர் சார்வாகர்கள்!

தம் அடிமடியில் கை வைக்கி-றார்-கள் என்றவுடன் பார்ப்பனர்கள் சார்வாகத்தையே ஒழித்து விட்டனர்!

ஆவிகள் (Spirits) உண்டு என்கிற மூட நம்பிக்கை பல மதங்களிலும் குடி கொண்டிருக்கிறது. கிறித்துவப் பிரச்சாரகர்கள், அஞ்ஞானிகளே, நீங்கள் கெட்ட ஆவியின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவேண்டும்; நான் அதற்காக ஜெபிக்கிறேன் என்றுதான் ஆரம்பிக்கிறார்கள்.

பலவிதமான ஆவிகளை இதற்காக இவர்கள் கற்பித்து உலவவிட்டிருக்-கிறார்கள். சாவு நிகழப் போகிறது என்பதை அறிந்து ஓலமிடும் ஆவி, இதே காரியத்தைச் செய்யும் நாய் வடிவப் பேய், தூங்குபவனை படுக்கையில் அமுக்கி அச்சுறுத்தும் ஆவி, தூங்கிக் கொண்டிருக்கும் ஆணுடன் உடல் உறவு கொள்ளும் பெண் பேய், செத்துப் போனவர்கள் உலவும் ஆவி போன்று பல ஆவிகளை உலவ விட்டிருக்-கிறார்கள்.

ஒரு பெண் ஆவி, குளம் குட்டை-களில் இருக்குமாம். ஆண்களுடன் கூடிக் கலவி செய்து குழந்தை பெற்றுத் தருவதன் மூலம் ஓர் ஆன்மாவை அடையுமாம் அந்த ஆவி. இந்த மூட நம்பிக்கையின்அடிப்படையில் ஓர் ஆங்கில சினிமா கூட எடுக்கப்பட்-டுள்ளது. அந்த ஆவி அன்டைன் (Undine) எனப்படுகிறது.

ஸ்காட்லாந்து நாட்டு ஆவி, நீரில் மூழ்குபவரைக் காப்பாற்றுவதற்காகக் குதிரை உருக்கொண்டு வருமாம். இதனை கெல்பி (Kelpie) என்கிறார்கள்.

ஜெர்மனி நாட்டின் குறும்புக்கார ஆவி, புராதன வீடுகளில் குடிகொண்டு எதையாவது விசமமாகச் செய்து கொண்டு இருக்கும். இதற்கு கோபோல்டு (Kobold) என்று பெயர் வைத்திருக்-கிறார்கள்.

ரோமாபுரியினரின் வீடுகள் ஒவ்-வொன்-றிலும் ஆவி உண்டாம். அவை லார் (லிணீக்ஷீ) எனப்படும். அந்தக் குடும்-பத்தின் இறந்து போனவர்களில் நல்லவர்கள் இந்த வகை ஆவியாகிக் குடும்பத்தவர்க்கு நன்மை செய்வார்-களாம்.

ஆவி, எத்தனை ஆவியடா!

விடுதலை (1.1.2010)

5 comments:

கபிலன் said...

"Atom(ஆத்மா) can neither be created nor be destroyed, but can be transformed from one form to another"

: ) இதை ஒத்துக்குறீங்களா ?

நீங்கள் சொன்ன விஷயங்களான, ஆத்மா மற்றும் பிரபஞ்சத் தோன்றலின் தியரியாக உபநிஷதங்கள் கூறுகிறது. அறிவியலில் இதனை யாரும் மறுக்கவில்லை. ஏனென்றால்,இன்னும் பிரபஞ்சத் தோன்றலை (Source) அறிவியலால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மற்றபடி, பலி கொடுக்குறதெல்லாம் மூட நம்பிக்கை தான். அதுவும் அந்தக் காலத்துல எதற்காக இந்தப் பழக்கம் உருவாக்கப்பட்டது என்று ஆராய வேண்டும். இந்தக் காலத்துக்கு இது ஏற்புடையதான்னு பாக்கணும்.

எந்தக் கடவுள் எனக்கு பூ, பழம், தேங்காய் வைத்து சாமி கும்பிடணும்னு சொல்லுது சொல்லுங்க....அந்த அந்த ஊர்ல விளைகின்ற பொருளை, மக்கள் வாங்கவேண்டும், பலருக்கு வாழ்வியல் ஆதாரம் கிடைக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட பழக்க வழக்கங்கள். எல்லா ஊர்லயும் இது மாதிரி நிறைய இருக்கு....இதைத் தான் ட்ஸ் புஸ் பேருல மைக்ரோ எகானாமிக்ஸ்னு சொல்றோம்...

கபிலன் said...

"Atom(ஆத்மா) can neither be created nor be destroyed, but can be transformed from one form to another"

இது புரிஞ்சுதுன்னா.....அதுவும் புரியும்னு நினைக்கிறேன்... : )

நீங்கள் சொன்ன விஷயங்களான, ஆத்மா மற்றும் பிரபஞ்சத் தோன்றலின் தியரியாக உபநிஷதங்கள் கூறுகிறது. அறிவியலில் இதனை யாரும் மறுக்கவில்லை. ஏனென்றால்,இன்னும் பிரபஞ்சத் தோன்றலை (Source) அறிவியலால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மற்றபடி, பலி கொடுக்குறதெல்லாம் மூட நம்பிக்கை தான். அதுவும் அந்தக் காலத்துல எதற்காக இந்தப் பழக்கம் உருவாக்கப்பட்டது என்று ஆராய வேண்டும். இந்தக் காலத்துக்கு இது ஏற்புடையதான்னு பாக்கணும்.

எந்தக் கடவுள் எனக்கு பூ, பழம், தேங்காய் வைத்து சாமி கும்பிடணும்னு சொல்லுது சொல்லுங்க....அந்த அந்த ஊர்ல விளைகின்ற பொருளை, மக்கள் வாங்கவேண்டும், பலருக்கு வாழ்வியல் ஆதாரம் கிடைக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட பழக்க வழக்கங்கள். எல்லா ஊர்லயும் இது மாதிரி நிறைய இருக்கு....இதைத் தான் ட்ஸ் புஸ் பேருல மைக்ரோ எகானாமிக்ஸ்னு சொல்றோம்...

Sathiyanarayanan said...

/*நீங்கள் சொன்ன விஷயங்களான, ஆத்மா மற்றும் பிரபஞ்சத் தோன்றலின் தியரியாக உபநிஷதங்கள் கூறுகிறது. அறிவியலில் இதனை யாரும் மறுக்கவில்லை. ஏனென்றால்,இன்னும் பிரபஞ்சத் தோன்றலை (Source) அறிவியலால் கண்டுபிடிக்க முடியவில்லை.*/

கபிலன், இன்னும் பிரபஞ்சத் தோன்றலை (Source) அறிவியலால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அது எப்படி ஆத்மாவாக இருக்க முடியும்.

Sathiyanarayanan said...

/*நீங்கள் சொன்ன விஷயங்களான, ஆத்மா மற்றும் பிரபஞ்சத் தோன்றலின் தியரியாக உபநிஷதங்கள் கூறுகிறது. அறிவியலில் இதனை யாரும் மறுக்கவில்லை. ஏனென்றால்,இன்னும் பிரபஞ்சத் தோன்றலை (Source) அறிவியலால் கண்டுபிடிக்க முடியவில்லை.*/

கபிலன், இன்னும் பிரபஞ்சத் தோன்றலை (Source) அறிவியலால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அது எப்படி ஆத்மாவாக இருக்க முடியும்.

சங்கமித்திரன் said...

/* ஏனென்றால்,இன்னும் பிரபஞ்சத் தோன்றலை (Source) அறிவியலால் கண்டுபிடிக்க முடியவில்லை */

முதல்ல மூடநம்பிக்கை என்றல் என்ன என்று தெரிஞ்சுகோங்க தோழர் கபிலன்.

1 எது அறிவியல் பூர்வமாக நிருபிகபடவில்லையோ (மேலே நீங்கள் சொல்லுவது போல)
2 எது தனிமனிதனுக்கு , சமூகத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்து முன்னேற்றத்தை தடுக்கிறதோ
3 எதை கேள்வி கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு எற்றுகொள்கிராயோ
4 எதை பரிசீலித்து பார்க்காமல் ஒப்புகொள்கிறையோ.

அவை எல்லாம் மூடநம்பிக்கைகளே...

"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"

சத்திய நாராயணன் உங்களுக்கு விடையளித்துள்ளார் ...இருந்தாலும் உங்களுக்கு புரியாது அதன் மேலே நானும் சொல்லி இருக்கிறேன்......

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]