வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, January 19, 2010

தந்தை பெரியார் ஊட்டிய மொழிமான உணர்வு மறைந்துவிட்டதா?“திராவிட இயக்கத்தின் தாக்கம், தமிழ்ப் பற்று, தமிழ்மீது நாம் கொண்டிருந்த வேகம் இவையெல்லாம் ஒரு காலகட்டத்திற்குத்தான்; அடுத்தடுத்து வந்த தலைமுறையில் மகன், பேரன், பேத்தி என்று இவர்கள் எல்லாம் தாத்தாவினுடைய தமிழ் மொழிப் பற்றை, தமிழ் ஆற்றலை எங்கேயோ தள்ளிவிட்டார் களே!’’ என்று தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவரும், திராவிட இயக்கத்தின் முக்கிய மூத்த தலைவருமான மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற_ மறைந்த சுய-மரியாதைச் சுடரொளி தருமலிங்கம் இல்லத்துத் திருமண விழாவில் ‘சீற்றத்துடன்’ குறிப்பிட்டார். மானமிகு தர்மலிங்கம் அவர்களின் பேரனும், மணமகனுமான பிரதீப் அவர்களின் பெயரை அந்த மணமேடையிலேயே மதிவாணன் என்று மாற்றினார்.


கலைஞர் அவர்களின் ‘சீற்றமும்’, அறிவுரையும் மிகவும் கவனிக்கத்தக்கவையும், சிந்திக்கத்-தக்கவையும், செயல்படுத்தவேண்டியவையுமாகும்.

பெயரைக் கொண்டு, சம்பந்தப்பட்டவர் எந்த மொழிக்குச் சொந்தக்காரர், எந்த இனத்துக்குரிய-வர் என்றுகூட அடையாளம் காண முடியா-விட்-டால், அந்த இனம், அந்த மொழி வெகு-விரைவில் இறந்த காலத்துக்குச் சொந்தமுடைய-தாகவே ஆகிவிடாதா?

தந்தை பெரியார் கண்ட தன்மான இயக்கம் இத்திசையில் சாதித்தவை சாதாரணமானவை-தானா?

தந்தை பெரியார் ஊட்டிய தன்மான, மொழிமான உணர்வின் அடிப்படையில்தானே _ அன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்த நாராயணசாமி நெடுஞ்-செழியன் ஆனார்; இராமையா அன்பழகன் ஆனார்; சோமசுந்தரம் மதியழகன் ஆனார்.

இந்த உணர்வு தொடரப்படவேண்டாமா என்பது-தான் கலைஞர் அவர்களின் அர்த்தம் பொதிந்த கேள்வியாகும். எடுத்துக்காட்டாக, நாரா-யணசாமி நெடுஞ்செழியனாக பெயர் மாற்றப்பட்ட நிலையில், அவரது பேத்திக்கு ஸ்வப்பன விசாலாட்சி என்றல்லவா பெயர் சூட்டப்பட்டது. யாரையோ சங்கடப்படுத்தவேண்டும் என்பதற்காக அல்ல _ இதனை எடுத்துக்காட்டுவது!

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எடுத்துக்-காட்டியது துல்லியமானது _ அவர் சினம் அடைந்ததில் நியாயம் இருக்கிறது என்பதற்காக எடுத்துக்காட்டவே இது.

தன்மான இயக்கமான திராவிட இயக்கத்தின் தொண்டால்தான், ஊட்டிய உணர்வுதான் அக்ரா-சனாதிபதி தலைவர் ஆனதற்கும், உபந்நியாசம் சொற்பொழிவு ஆனதற்கும், நமஸ்காரம் வணக்கம் ஆனதற்கும், வந்தனோபசாரம் நன்றியுரையாக மலர்ந்ததற்கும் அடிப்படைக் காரணமாகும்.

ஆரிய சமஸ்கிருதம் தமிழில் ஊடுருவியதன் காரணமாக, தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்று மருவி ‘வேற்று மொழிகளாக’ உருப்-பெற்றன என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

பொருள் தெரிந்தா பெயர்களைச் சூட்டிக் கொள்-கின்றனர்? கேசவன் என்றும், ஆதி-கேச-வன் என்றும் பெயர் சூட்டிக் கொள்கிறார்களே?

இதன் பொருளை அறிந்திருந்தால், இப்படி பெயர் சூட்டிக்கொள்வார்களா? ‘மயிரான்’, ‘பழைய மயிரான்’ என்றல்லவா பொருள்படுகிறது?

செழியன், நெடுஞ்செழியன், செங்குட்டுவன், இராவணன், இளங்கீரன், நச்சினார்க்கினியன், அறிவுடைநம்பி, பாரி, திருமாறன், இளங்கோவன், வளவன் என்றெல்லாம் செந்தமிழில் அழைக்-கப்பட்ட பெயர்களுக்குச் சொந்தக்காரர்களான தமிழர்களின் இன்றைய நிலை என்ன?

ரமேஷ், ப்ரனேஷ், சுரேஷ், கணேஷ், விக்-னேஷ் என்று கடைசி எழுத்து ‘ஷ்’ வருவது-போல வைத்துக் கொள்வது எனும் இன்றைய நாகரிகம் (திணீsலீவீஷீஸீ) என்ற நோய் தமிழர்களைத் தொற்றிக் கொண்டுவிட்டதே! இன்றைய திரைப்பட உலகமும் இதனை ஊட்டி வளர்க்கிறதே!

இது தடுத்து நிறுத்தப்படவேண்டாமா? தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறும் நிகழ்ச்சி இடம்பெறுவது உண்டு. அந்தப் பெயர்களை எல்லாம் பார்க்கும்-போது நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா _ தமிழ்க் குடும்பத்துப் பிள்ளைகள்தானா இவர்கள் என்ற அய்யப்பாட்டைத்தான் ஏற்படுத்துகிறது.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற-விருக்கும் இந்தக் காலகட்டத்தில், முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எழுப்பியிருக்கும் உணர்வு கூர்தீட்டப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

- விடுதலை தலையங்கம் (19/01/2010)

11 comments:

chinnappenn2000 said...

இவர் பெரிய புடுங்கி.வேண்டுகோள் வைப்பாராம்.உன் பெயரை முதலில் மாற்றி "கரும் பெரும் குண்டியோன்" என்ற தூய திராவிடப் பெயராக வைத்துக்கொள்ளவும்.

கபிலன் said...

"செழியன், நெடுஞ்செழியன், செங்குட்டுவன், இராவணன், இளங்கீரன், நச்சினார்க்கினியன், அறிவுடைநம்பி, பாரி, திருமாறன், இளங்கோவன், வளவன் என்றெல்லாம் செந்தமிழில் அழைக்-கப்பட்ட பெயர்களுக்குச் சொந்தக்காரர்களான தமிழர்களின் இன்றைய நிலை என்ன? "

இராமன், இராமசாமி....பெயர்களை தெரியாம விட்டுட்டீங்களா....உள் அர்த்தம் இருக்குங்களா?


மு.க.ஸ்டாலின் தமிழ்ப் பெயருங்களா ? சரி...அது ஒரு போராளியின் பெயர் என்று வைத்துக்கொள்வோம்...அதை எப்படி தமிழ் எழுத்துக்களில் எழுத முடியும் என்று விளக்கினால் நன்றாக இருக்கும் ஐயா : )

ஸ்ரீநி said...

STALIN - endra tamil peyarukku enna porul. ?
SUN PICTUREs, RED GIANT MOVIEs, SUN NETWORK ivatrin - pagupilakkanam yenna.

சங்கமித்திரன் said...

தோழர் ஸ்ரீ , கபிலன் அவர்களே முதல்ல பெரியரியல புரிஞ்சுகோங்க அப்புறம் கேள்வி கேளுங்க

இந்த லிங்க் படிங்க http://paraneetharan-myweb.blogspot.com/2009/12/blog-post_26.html

பெரியார் ரஷ்ய போய் வந்து குழந்தைகளுக்கு ரஷ்ய, ஸ்டாலின் அப்படின்னு வைகன்னு சொன்னார். அப்படி பகுத்தறிவு பெயர் புடிகல்யா குறஞ்சது தமிழ் வளர தமிழன் என்று காண்பிக்க தமிலயவது பேரு வைத்து நம் மொழியாவது காபதுங்கடா அப்படின்னார். முதல்ல பெரியரியல படிங்க...

பார்பனர்களுக்கு பெரியாரியல் அப்படின்னா வேப்பங்காய்...இருந்தாலும் படிங்க....

ஸ்ரீநி said...

Thozhar sangmithran,

Russia bathippil oru peyar tamil peyar illayendraal kooda vaikkalaam yendraal, avaravar muraimaip padi thannai badhiththa yendha mozhi peyarum saridhaney. ungalukku avargaluday sondha thakkangal patri therindhirukka vaippilayae.

Piraga tamilil peyar vaikka solvadhu thavirillai. aanal seyya villai yendraal kurai kooruvadhu nyaayamaa ?

yenakku periyar mela yendha bedhamum illai. veruppu vazhiyil yedhu bohikka padinum adhu yarukkum veppangaithaan.
http://sangadhi.blogspot.com/2010/01/blog-post_20.html

கபிலன் said...

"பெரியார் ரஷ்ய போய் வந்து குழந்தைகளுக்கு ரஷ்ய, ஸ்டாலின் அப்படின்னு வைகன்னு சொன்னார். அப்படி பகுத்தறிவு பெயர் புடிகல்யா குறஞ்சது தமிழ் வளர தமிழன் என்று காண்பிக்க தமிலயவது பேரு வைத்து நம் மொழியாவது காபதுங்கடா அப்படின்னார். முதல்ல பெரியரியல படிங்க..."


இதென்னா சின்னப் புள்ளத்தனமா இருக்கு....
ரஷ்யா போயிட்டு வந்த உடனே...ஸ்டாலின் பேரு வையுங்கன்னு சொல்றார். ரஷ்யா போறதுக்கு முன்னாடி ஸ்டாலின் யாருன்னு தெரியாதா ?

சரி..அப்போ சீனா போயிட்டு வந்தா மாவோ சே துங்..வியட்னாம் போயிட்டு வந்தா ஹோசிமின்...இப்படி பெயர் வச்சுக்க சொல்லி இருப்பாரா ?

இப்படி எவர் பெயரையும் வைக்கலாம்.....முப்பாட்டன் பேரு ஸ்ரீநிவாசன், ஹரி...ஆனா அதை புள்ளைங்களுக்கு வச்சா மட்டும் தமிழ் கெட்டுப் போயிடுதுங்களா ?

ஜோஸப், அகஸ்டின் ஷீபா, முஹம்மது, மஸ்தான்.....இதெல்லாம் எந்த கணக்குல வருதுன்னே புரியலியே....இந்தப் பெயர்களுக்கும், தமிழுக்கு இழுக்கா ந்னு கொஞ்சம் தெளிவு படுத்தினீங்கன்னா நல்லா இருக்கும்ங்க...

பெரியாரியலைப் படித்துக் கொண்டு தாங்க இருக்கேன்.......பார்ப்பனர்களுக்கு பெரியாரியல்னா வேப்பங்காயாக இருக்கலாம்...நான் மனுஷன்

சங்கமித்திரன் said...

தோழரே,
எல்லோருக்கும் சேர்த்துதான் சொல்லுது. பேரை வைத்து மதத்தை அடையாளம் கட்டாதே. பேரை வைத்து பகுத்தறிவை மொழியை பரப்ப செய். அதன் நோக்கமே லெனின், ரஷ்ய, மேலும் நீங்க சொன்ன சீன புரட்சியாளர் மாசெதுன்க் பேரல்லாம் வைக்க காரணம். எந்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் அதனை பகுத்தறிவு பணிக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே ஐயா அவர்களின் நோக்கம்.

அப்புறம் நீங்க பெரியாரியலை படிப்தற்கு ரொம்ப மகிழ்ச்சி தோழரே....

bala said...

//உன் பெயரை முதலில் மாற்றி "கரும் பெரும் குண்டியோன்" என்ற தூய திராவிடப் பெயராக வைத்துக்கொள்ளவும்.//

தோழர் சின்னப்பெண் 2000 அம்மா,

என்னங்க இது இந்த அருமையான திராவிட பட்டத்தை முண்டம் சங்கமித்ரனுக்கு தந்துட்டீங்க?இதற்கு தகுதியான பாசறை நாய் தானா இந்த சங்கமித்ரன்?இதற்கு முன்னால் "அரும் பெரும் கருங்குண்டியோன்" என்ற பட்டம் சூரமணியின் ஆஸ்தான ஜாதி வெறி பிடித்த நாயான சும்பை.இளங்கோவனுக்கு வழங்கப் பட்டது.அந்த ஜாதி வெறி நாயோட தகுதி என்ன,ஸ்டேடஸ் என்ன,இந்த கால் டிக்கட் ஜாதி வெறி பாச்றை நாயான சங்கமித்திரன் ஸ்டேடஸ் என்ன.தவறு செய்து விட்டீர்களே.திராவிடப் பட்டம் என்ன அவ்வளவு கேவலமாகப் போய்விட்டதா என்ன?

பாலா

பி எஸ்

வேண்டுமானால் "பெரும் பிரியாணி உண்டோன்" என்கிற பட்டத்தை வேண்டுமானால் முண்டம் சங்கமித்திரனுக்கு அளித்து விடலாம்.

சங்கமித்திரன் said...

யார் வெறி பிடித்தவர்கள் என்பது தோழர் பாலா பார்பானின் பின்னூட்டம் சொல்லும்.

நம்பி said...

கபிலன் said...

//மு.க.ஸ்டாலின் தமிழ்ப் பெயருங்களா ? சரி...அது ஒரு போராளியின் பெயர் என்று வைத்துக்கொள்வோம்...அதை எப்படி தமிழ் எழுத்துக்களில் எழுத முடியும் என்று விளக்கினால் நன்றாக இருக்கும் ஐயா : ) //

தமிழ்ல தானே தட்டச்சு பணிணியிருக்கு இங்கேயிருந்து வாசிக்க முடியுதே! எப்படி? எழுத முடியும் என்று கேட்டால் எப்படி?

"ஜப்பான்" "ஜனவரி" "ஜூன்" "ஆப்கானிஸ்தான்" "ஆக்சிஜன்" "ஜோசப் ஸ்டாலின்" எப்படி எழுத முடிந்தது!?

அதே மாதிரிதான் இதையும் எழுதலாம். ரஷ்யாவில இருக்கறவுங்களுக்கு தமிழ் எழுத்தை பற்றி என்ன தெரியும். உலக மக்களுக்காக, அறவியலுக்காக ஆக்சிஜனை கண்டுபிடித்தவர்களுக்கு, பெயர் வைத்தவர்களுக்கு, தமிழ் எழுத்து பிரச்சினைக்காக இங்கு சண்டை போடுவார்கள் என்பது எப்படி தெரியும்? அதற்காகவா? கண்டுபிடித்தார்கள்.

அது உச்சரிப்பிற்காக தமிழுக்காக உருவாக்கப்பட்ட (கிரந்த) எழுத்துக்கள் உச்சரிப்புக்காக சேர்த்துக்கொள்ளலாம். இந்த ஒலிகள் எல்லா மொழியிலேயும் ("JA") உள்ளது. பெயர் வைக்கும் பொழுது பிறநாட்டு, பிறமொழித் தலைவர்களின் பெயர்களை நினைவு கூறுவதற்காக வைத்து கொள்வதை தவிர, மற்றபடி தமிழில் இந்த உச்சரிப்பு வடிவ (கிரந்த)எழுத்துக்கள் சேராமல் தமிழ் எழுத்துக்களில் மட்டும் பெயர் வைத்துக்கொள்ளலாம். தமிழ் பொருள் தரும்படியான பெயர்களை சூட்டிக்கொள்ளலாம்.

அப்படி யாரும் இங்கு வைப்பதே இல்லையே! (சுரேஷ், ராமேஷ், சந்தோஷ்....குஷ், புஷ்...இப்படித் தானே)இந்த குறையை சொல்பவர்கள் கூட, இந்த கிரந்த எழுத்தில் பெயர்களை வைத்து கொண்டு தான் குறையை சொல்கிறார்கள்.

நம்பி said...

கபிலன் said...

//ஜோஸப், அகஸ்டின் ஷீபா, முஹம்மது, மஸ்தான்.....இதெல்லாம் எந்த கணக்குல வருதுன்னே புரியலியே....இந்தப் பெயர்களுக்கும், தமிழுக்கு இழுக்கா ந்னு கொஞ்சம் தெளிவு படுத்தினீங்கன்னா நல்லா இருக்கும்ங்க...//

இப்படி அடையாளப்படுத்திக்கொள்ள பெரியார் என்றுமே சொன்னதில்லை....தவிர ஜோசப் என்று வைத்தால் கிருத்துவர் என்ற அடையாளம் தெரியும் என்பது முற்றிலும் தவறான கண்ணோட்டம் தான். தமிழில் பொதுப்பெயர்கள் இருக்கிறது அதையே வைத்துக்கொள்ளலாம்.

ஜோசப், அப்துல் இவைகளெல்லாம் அந்தந்த நாட்டு மொழிகளில் அந்தந்த மக்களுக்கான உச்சரிப்புகளாக பயன்படுத்தப்பட்டவை.

கிருஸ்துவத்துக்கு முன்பே இந்த பெயர்கள் அங்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இஸ்லாம் மதம் தொடங்குவதற்கு முன்பே இந்த பெயர்கள் அங்கு பயனபடுத்தப்பட்டு வந்துள்ளன

இந்த பிறமொழிப்பெயர்களை மத அடையாளப் பெயர்களாக இங்குள்ளவர்கள் மாற்றிக்கொண்டார்கள். எல்லாம் அராபிய, எபிரேய மொழி உச்சரிப்பு பெயர்கள் அதை தமிழில் கொண்டுவரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதுதான் மத அடையாளம்.

தமிழ் பொதுப்பெயர்களை, (நவீனமாக எவ்வளவோ உள்ளது) நம்பிக்கை சாராதவர்கள் வைத்துக்கொள்ளலாம், நம்பிக்கை சார்ந்தவர்கள் தமிழ் நம்பிக்கை பெயர்களை சூட்டிக்கொள்ளலாம். இதை தான் பெரியார் வலியுறுத்தினார்.

தலைவர்கள் பெயர்கள் அவர்கள் நினைவிற்காக கொள்கைகள் போற்றப்படுவதற்காக..

அது மாசெ தூங், செகுவாரா, பிடல் காஸ்டோரோ, ஸ்டாலின் எவராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ரமேஷ், குஷ், புஷ் என்று எந்த தமிழ் தாத்தா பெயரும் இல்லை...ஸ்ரீ இது வடமொழி உச்சரிப்பு பெயர் இதை எதற்காக தமிழர்கள் வைக்கவேண்டும்.

இது தான் தாத்தா பெயரா? எது பார்ப்பன தாத்தாவா? வைத்துக்கொள்ளலாமே! யார் தடுத்தது?

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]