வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, January 06, 2010

இராமகோபாலன்-கள் காட்டுக் கூச்சல் போடுகிறார்

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் 2010 ஜூன் மாதம் நடைபெற உள்ளது. தமிழர்கள் என்று தங்களை உண்மையில் கருதிக் கொள்வோர் இதனை ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்-கின்றனர்.


இதன்மூலம் உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்கள் மத்தியில் இனவுணர்வும், தமிழ் உணர்வும், தமிழ் பண்பாட்டு உணர்வும் மேலும் சிறப்பாக மலர்ந்து மணம் வீசும் வாய்ப்பு ஏற்படும்.

தமிழைக் கால வளர்ச்சிக்கு ஏற்ப மேலால் எடுத்துச் செல்ல ஆக்க ரீதியான முடிவுகள் மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது. தமிழ் எழுத்துக்களை மேலும் எண்-ணிக்கையில் குறைக்கும் சீர்திருத்தம் குறித்தெல்லாம் சிந்திக்க முடியும். தமிழ்நாட்டுக்குள்ளும், வெளிநாடு-களில் வாழும் தமிழர்களிடையும் தமிழைத் தவிர்த்து வாழும் ஒரு மனப்பான்மை ஏற்பட்டு வருகிறது. நுகர்வுக் கலாச்சாரம் என்ற ஒன்று நெட்டி முறித்து எழுந்து அடிப்படை உணர்வுகளை மழுங்கடித்து வருகிறது.

தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்கு ஊடகங்கள், பொழுதையே போக்கடிக்கும்_ காவு கொள்ளும் இயந்திரங்களாக மாறிவிட்டன.

இவையெல்லாம் அடிப்படை உணர்வுகளைக் காயடிக்கும் தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன.

இந்த ஊடகங்கள் தமிழ் உணர்வுக்கும், முற்போக்குச் சிந்தனைக்கும் திருப்பி விடப்பட்டாகவேண்டும்; இதற்கான முயற்சிகளும்கூட செம்மொழி மாநாட்டில் மேற்-கொள்ளப்படவேண்டும். அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் அறிவியல் தமிழாக வார்த்து எடுக்கப்படவேண்டும்.

தமிழ்மீது அக்கறை உள்ளவர்கள் இந்தக் கோணத்-தில் சிந்தித்து செயல்படக் காத்துக் கொண்டிருக்கும்-போது, கிடந்தது கிடக்கட்டும்; கிழவனைத் தூக்கி மனை-யில் வை என்பதுபோல இந்து முன்னணிப் பிரமுகர் திருவாளர் இராம. கோபாலன் காட்டுக் கூச்சல் போடுகிறார்.

கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஒரு குறிப்பிட்ட கட்சி சார்ந்த-தாகவோ, பிரச்சாரம் செய்வதாகவோ இருக்கக்கூடாது. தமிழின் வளர்ச்சியையும், ஆன்மிகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஆற்றிய தமிழ்த் தொண்டை யாராலும் மறந்துவிட முடியாது. எனவே, செம்மொழி மாநாட்டில் சமய சான்றோர்கள் மற்றும் மடாதிபதிகள் ஆகியோரையும் கலந்து-கொள்ளச் செய்யவேண்டும். மேலும் இந்து இயக்-கங்களின் பிரதிநிதிகள் மாநாட்டுக்கு அழைக்கப்பட-வேண்டும் என்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்பட ஆன்மிகத் தலைவர்கள் அழைக்கப்பட்டுதானிருக்கிறார்கள். திராவிட இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் ஏராளமாகக் குழுவில் இடம்பெற்றிருக்கின்றனர்.

திருவாளர் இராமகோபாலன் தன்னை அழைக்க-வேண்டும் என்று நேரிடையாகச் சொல்லியிருக்கலாம்; இதற்கு ஏன் சுற்றி வளைத்து மூக்கைத் தொட ஆசைப்படவேண்டும்?

செம்மொழி மாநாடு திராவிட இயக்கக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்வதாக இருக்கக் கூடாது என்றும் புலம்பியிருக்கிறார்.

இதுவரை திராவிட இயக்க ஆட்சிகள்தான் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தியிருக்கின்றன. அப்பொழு-தெல்லாம் என்ன நடந்துவிட்டன?

உண்மையைச் சொல்லப்போனால், மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில்தான் பார்ப்பன அம்மையார் பத்மா சுப்பிரமணியம் என்பவர் தேவையில்லாமல் சமஸ்கிருதத்தை உயர்த்தித் தமிழைச் சீண்டினார். அதனால் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

கலைஞர் முன்னின்று உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்துகிறார் என்றவுடன் திராவிட இயக்கம்-பற்றியெல்லாம் குறை சொல்லும் இதே இராமகோபாலன்-கள், காஞ்சி சங்கராச்சரியார் சொல்லித்தான் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினேன் என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சொன்னாரே, அப்பொழுது மட்டும் அவாளுக்கு உச்சிக்குளிர்ந்ததோ!

கலைஞர் என்றதும், ஒரு கூட்டத்துக்குப் பச்சை மிளகாயைக் கடித்ததுபோல் இருப்பானேன்? திராவிட இயக்கம் என்றால் பஞ்சமா பாதகத்தில் ஒன்றா? திராவிட இயக்கம் தமிழுக்குத் தொண்டு செய்யாத கட்சியா? திராவிட இயக்க எழுத்தாளர்கள் தமிழுக்குச் செய்யாத தொண்டா? அவர்களின் படைப்புகள் காலத்தை வென்று நிற்கவில்லையா?

புரட்சிக்கவிஞர் யார்? அறிஞர் அண்ணா யார்? புலவர் குழந்தை யார்? திரைப்பட உலகம் மறுமலர்ச்சி பெற்றதற்கு அண்ணாவும், கலைஞரும் காரணகர்த்-தாக்-கள் அல்லவா! நமஸ்காரம் போய் வணக்கம் வந்ததும், அக்ராசனர் போய் தலைவர் வந்ததும், வந்தனோபசாரம் போய் நன்றி வந்ததும் எந்த இயக்கத்தால்?

மேடைத் தமிழ் மேன்மை பெற்றது எந்தக் கால-கட்டத்தில்? தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டும் உந்துதலுக்கு யார் காரணம்?

எழுத்துச் சீர்திருத்தம் யார் சொன்னது? செம்மொழி தகுதி வந்தது எந்த ஆட்சிக் காலத்தில்?

பூசை காலத்தில் நீஷ பாஷையில் (தமிழில்) சங்கராச்சாரியார் பேசமாட்டார் என்றும், கோயிலுக்குள் தமிழ் வழிபாட்டு மொழியானால், தமிழ் தீட்டுப் பட்டு-விடும் என்றும் கூறும் கூட்டம்; தமிழுக்கு ஒரு மேன்மை, சிறப்பு வருகிறபோது, உள்ளொன்று வைத்து வெளியில் இன்னொன்று பேசும் கூட்டத்தின் கூச்-சலையெல்லாம் முதலமைச்சர் பொருட்படுத்தவேண்டாம் என்பதுதான் உண்மையான தமிழர்களின் எதிர்பார்ப்பு, மாநாட்டு வெற்றியின்மீது கவனம் செலுத்தவேண்டுமே தவிர, திசை திருப்பும் கோணல் மாணல்கள் பக்கம் கவனம் சிதறத் தேவையில்லை.

விடுதலை தலையங்கம் (05.01.10)

7 comments:

கபிலன் said...

"உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் 2010 ஜூன் மாதம் நடைபெற உள்ளது. தமிழர்கள் என்று தங்களை உண்மையில் கருதிக் கொள்வோர் இதனை ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்-கின்றனர்."

அப்படியென்றால் தமிழன் என்று நான் சொல்லிக் கொள்ள முடியாது : )

ஈழத்தில் விழுந்த எழவுகளின் ஒப்பாரியே முடியல, அதுக்குள்ள கல்யாணப் பந்திக்கு ரெடி ஆயிட்டீங்களே.....எப்படி தான், மனசு வருமோ...திராவிட சிங்கங்களுக்கு ?

"தமிழின் வளர்ச்சியையும், ஆன்மிகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஆற்றிய தமிழ்த் தொண்டை யாராலும் மறந்துவிட முடியாது. "

இதை நீங்கள் மறுக்கிறீர்களா?

"கலைஞர் என்றதும், ஒரு கூட்டத்துக்குப் பச்சை மிளகாயைக் கடித்ததுபோல் இருப்பானேன்? "
ஹாஹா....டாப் க்ளாஸ் காமெடி...
உலகத் தமிழர்களிடத்தில் கலைஞர் என்று சொல்லிப் பாருங்கள்......அடுத்த அரை மணி நேரத்திற்கு காதைப் பொத்திக் கொள்ளும் அளவுக்கு....அன்பைப் பொழிவார்கள் : )

பரணீதரன் said...

ரொம்ப பொறுப்பு ஈழ பிரச்னையில் பார்பனர்களுக்கு...அதான் தெரியுமே தினமலம், தினமணி, ஹிந்து எல்லோரும் நடந்துக்கிற லட்சணம்...எல்லா பார்பனர்களுக்கும் ஒரு கொசுறு......ஈழ பிரைச்சனை.......ஊறுகாய தொட்டுக்க அது...ரொம்ப பொறுப்பு..

பரணீதரன் said...

/*தமிழின் வளர்ச்சியையும், ஆன்மிகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஆற்றிய தமிழ்த் தொண்டை யாராலும் மறந்துவிட முடியாது. */

அந்தக் காலத்தில் ஊசி முனையில் நின்றும் ஒற்றைக் காலில் நின்றும் பற்பல விதமாக அகோரத் தவம் செய்த முனிவர்கள் அனைவரும் ஆண்டவனைப் பார்த்து எதைக் கேட்டார்கள்? மற்ற ஆழ்வார்களும் சரி, நாயன்மார்களும் சரி கடவுளிடம் எதைக் கோரினார்கள்.

மக்கள் வாழவேண்டும், உலகம் உருப்படவேண்டும், வறுமை ஒழியவேண்டும், உலகத்தில் உண்மை தழைக்கவேண்டும் என எந்த முனிவராவது எந்த பக்தனாவது, எந்த நாயன்மாராவது கேட்டிருக்கிறார்களா? இல்லையே! பொது நன்மைக்காகக் கடவுளை வரம்கேட்ட பக்தர்களை யாராவது காட்ட முடியுமா? ஒருவரும் கிடைக்கமாட்டார்கள்.

கபிலன் said...

அந்தப் பத்திரிக்கைகள் பொறுப்பற்ற பத்திரிக்கைகள் என்றே இருக்கட்டும்........என்னங்க ஆட்சியே உங்க கையில இருக்கும் போது, பத்திரிக்கைக்காரனை திட்டுறது என்னாங்க நியாயம். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறீரே...!

/*தமிழின் வளர்ச்சியையும், ஆன்மிகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஆற்றிய தமிழ்த் தொண்டை யாராலும் மறந்துவிட முடியாது. */
"மக்கள் வாழவேண்டும், உலகம் உருப்படவேண்டும், வறுமை ஒழியவேண்டும், உலகத்தில் உண்மை தழைக்கவேண்டும் என எந்த முனிவராவது எந்த பக்தனாவது, எந்த நாயன்மாராவது கேட்டிருக்கிறார்களா? "
உடனே பல்டி அடிக்கிறீங்களே....டாபிக் என்ன....நாயன்மார்களும், ஆழ்வார்களும் தமிழுக்கு தொண்டாற்றினார்களா, இல்லையா ?
பல நூற்றாண்டுகள் தமிழ் செழித்தோங்கி வளர்ந்து கொண்டிருப்பதற்கு அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணிகளும் முக்கிய காரணம் தாங்க. திராவிட இயக்கங்கள் தோன்றியே கிட்ட தட்ட 70 ஆண்டுகள் தான் ஆகிறது ஐயா !
கடவுளைப் புகழ்ந்து பண் இயற்றுவதிலும் தமிழ் வளரும் ஐயா. பெரியாரின் கொள்கைகள் அதில் இல்லை என்பதற்காக அவைகளைப் புறக்கணிப்பது எவ்வகையில் நியாயம்? அவை அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழ் இலக்கியங்களைச் சொல்லுங்கள் பார்ப்போம்?

இல்லையென்றால்....உங்கள் கொள்கைகளுக்கு ஏற்றார் போல உள்ள 4 தமிழ் இலக்கியங்களையும் சொன்னால் நன்றாக இருக்கும்....

பரணீதரன் said...

“என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
பிரமணனும் மனுசந்தாங்க.
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?”

இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன்
பிணம் எரித்துக் கொண்டிருக
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.

பரணீதரன் said...

பாரதிதாசன் எழுதிய அனைத்தும் பகுத்தறிவு இலக்கியம் தான் தோழரே......குடும்பவிளக்கு, பாண்டியன் பரிசு ...etc
இதுபோல நிறையபேரு எழுதி இருகனாக ...நீங்க பார்ப்பனிய தோரணையில இருபதால இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது.

பரணீதரன் said...

/* முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறீரே...!*/

இதை படிங்க அப்புறம் தெரியும் யார் முழு பூசனிக்காய் மறைகிரங்கன்னு தெரியும்.....பார்பன பாசிசம் கண்ணை மறைக்குது உங்களுக்கு...கொஞ்சம் பூணூலை கழட்டிவிட்டு பாருங்கள் எல்லா உண்மையும் புரியும் தோழரே

http://paraneetharan-myweb.blogspot.com/2009/12/blog-post_04.html
http://paraneetharan-myweb.blogspot.com/2009/12/blog-post_6274.html

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]